என்னை பற்றி

என்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை . பிறந்தது சேலத்தில் , இப்பொழுது பிழைப்பின் காரணமாக இருப்பது சென்னையில் . பார்ப்பது கால் சென்ட்டர் வேலை . நிறைய படிக்க பிடிக்கும் . கல்கியின் பொன்னியின் செல்வன் , சிவகாமியின் சபதம் , சாண்டில்யன் எழுதிய கடல் புறா, யவன ராணி மிக மிக பிடிக்கும்,. சில சமயம் கவிதை எழுதுவேன்..(!!!) எனக்கு பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் , எனக்கு தெரிந்த சில விசயங்களை பிறருடன் பகிரவும் நான் தொடங்கியதே இந்த வலைப்பூ.

இந்த வலைப்பூ மட்டும் அல்லாமல் மேலும் இரண்டு வலைப்பூக்களில் எழுதுகிறேன். ஒன்று புகைப்பட தொகுப்பு . மற்றொன்று வேலை வாய்ப்புகளுக்கனது.
அவற்றின் சுட்டிகள்
http://lkspic.blogspot.com/
http://velaivaipu.blogspot.com/

LK