மே 23, 2015

காவிரியின் மைந்தன்

பலரும்  படிக்க சொன்ன புத்தகம் என்பதாலும்  பொன்னியின் செல்வனின்  தொடர்ச்சி என்று சொன்னதாலும் இதை தேடி கொண்டிருந்தேன். எதேச்சையா  வேறு ஒரு மின்னூல் தேடப் போய்  இது கிடைச்சது.

 இதை  படிக்க  சொன்ன சிலரைத் தேடிகிட்டு  இருக்கேன். இதை விட படு திராபையான புத்தகத்தை  இது வரை நான் படித்ததில்லை. . 

இந்தக் கதையின் நாயகனாக கந்தமாறனை முன்னிறுத்தி உள்ளார் ஆசிரியர். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கந்தமாறன்தான் அணைத்து செயல்களிலும் வெற்றிப் பெறுகிறார். வந்தியத் தேவரும் பொன்னியின் செல்வரும் கதையின் வரும் சில பாத்திரங்களாகவே  காட்டப்படுகிறார்கள்.

குந்தவைக்கு அருள்மொழிவர்மரை  நினைத்துக்  கவலைப் படும் வேலையை மட்டுமே கொடுத்துள்ளார். அதேப் போல் ஆழ்வார்க்கடியானின்  பாத்திரப் படைப்பு கல்கியின் எழுத்துத்திறனுக்கு சிறந்த எடுத்துக் காட்டு. ஆனால்  அந்தப் பாத்திரமும் இதில் வீணடிக்கப்பட்டுள்ளது. 

இதில் அருள்மொழி வர்மரும் கந்தமாறனும்  ஒரே பெண்ணைக் காதலிப்பதாய் ஒரு உபக்  கதை. இதனால் யாரிடமும் சொல்லாமல் நாடோடியாய் சிலமாதம் சுற்றும் பொன்னியின் செல்வர் பாண்டியன் ஆபத்து உதவிகளில் ஒருவனான இடும்பன்காரியுடன் சில மாதம் தங்கியும் இவரை அவன் அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தம்.

இறுதியில் ஆபத்து உதவிகளுடன் நடக்கும் சண்டையில் வானதி இறக்க , பழுவேட்டரையரின்  மகளைக் கரம் பிடிக்கிறார் பொன்னியின் செல்வன்.  

கந்தமாறன் காதலை தியாகம் செய்துவிட்டு ரவிதாசனை தேடி போவதோடு கதை முடிகிறது.

யாரவது இலவசமாய் தந்தாலும்  வாங்கிப் படிக்க வேண்டாம். 

அன்புடன் எல்கே

6 கருத்துகள்:

middleclassmadhavi சொன்னது…

//யாரவது இலவசமாய் தந்தாலும் வாங்கிப் படிக்க வேண்டாம்// :-)) கல்கியின் கதை மாந்தர்களோடு ஒன்றிப்போய், அவர்தம் குணாதிசயம் இதுதான் என்று மனதுக்குள் வரையறுத்திருப்போம். இப்படி கதை வகுத்திருந்தால் கஷ்டம் தான்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

நான் படிக்கலை!

Lic Sundaramurthy சொன்னது…

முதல் தரமான விமர்சனம் கல்கியை தலைமேல் தூக்கிவைத்து ஆடுபவர்கள் மத்தியில் இது போன்ற விமர்சனங்களை எழுதுவதற்கே ஒரு துணிச்சல் வேண்டும் தொடரட்டும் தங்களது பணி
salemscooby.blogspot.in & licsundaramurthy@gmail.com

geethasmbsvm6 சொன்னது…

படிக்கணும்னு ஆவலே வரலை. அவ்வப்போது பத்துப் பதினைந்து பக்கம் படிக்கிறேன். விறுவிறுப்போ சுவாரசியமான நிகழ்வுகளோ இல்லை என்பதோடு எழுத்தும் கொஞ்சம் இல்லை நிறைய இடங்களில் கல்கியை அப்படியே காப்பி அடித்திருக்கிறார். :(

எல் கே சொன்னது…

This is not written by Kalki.

geethasmbsvm6 சொன்னது…

ஹூம், கமென்டினேன், காக்கா கொண்டு போச்சு! இந்தப்புத்தகம் தரவிறக்கினதே மறந்துட்டேன். என்னோட பிரச்னைகளும் காரணம், புத்தகமும் படு அறுவை. முடிஞ்சாப் படிச்சுப் பார்க்கிறேன். :)