ஜூன் 24, 2012

புது வீடுஇதுவரை பிளாகர் என்ற வாடகை வீட்டில் எழுதிக் கொண்டிருந்த நான், இனி "பாகீரதி" என்ற சொந்த வீட்டிற்கு செல்ல இருக்கிறேன்.  www.bhageerathi.in தளத்தில்தான் இனி எனது பதிவுகளும்,கவிதையும் வரும். மீண்டும் தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன். அதன் முதல்கட்டமாக ப்ளாகரை விட்டு வெளியேறி இந்தத் தளத்தை துவங்கியுள்ளேன்.இதுவரை இங்கு நான் எழுதிய பதிவுகள் / கவிதைகள் அங்கும் இருக்கும் . இதுவரை எனக்கு இங்கு ஆதரவு தந்த நண்பர்கள் அங்கும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்

அன்புடன் எல்கே

ஜூன் 17, 2012

மீண்டும் விருது


சமீப காலமா எதையும் உருப்படியா எழுதறது இல்லை. எழுத ஆரம்பித்தக் கதையும் பாதியில் நிக்குது. திவ்வா பத்தி மட்டும் அப்ப அப்ப எழுதிக்கிட்டு இருக்கேன்,

என்னையும் மதிச்சு ஒருத்தங்க விருதுக் கொடுத்து இருக்காங்க. அவங்க கொடுத்த "Versatile Blogger " விருதிற்கு அவர்களுக்கு ரொம்ப நன்றி. எனக்கு விருது கொடுத்த அந்த நல்லவங்க இவங்கதான்

அவங்கக் கொடுத்த அந்த விருது

என்னைப் பத்தி எழுதனும்னு சொல்லி இருக்காங்க. ஏற்கனவே ஒருமுறை எழுதிய நினைவு . இதோ இங்க எழுதி இருக்கேன் 

இந்த விருதை பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்று இன்னொரு விதிமுறை ..என் பதிவை வந்து வாசிக்கும் அனைவருக்கும் இந்த விருதை பகிர்கிறேன்.
அன்புடன் எல்கே

பள்ளித் துவக்கம்

திவ்யாக்கு பள்ளித் திறந்து இரண்டு நாட்கள் ஸ்கூல் போயிட்டு வந்தாச்சு. எதுவும் ரகளை பண்ணாமல் சமத்தா போயிட்டு வந்துட்டாள்.

நேற்று , பள்ளிக்கூடம் திறந்த முதல் வாரத்திலேயே பெற்றோர் - ஆசிரியர்  மீட்டிங். முதல் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஆபீஸ்க்கு பர்மிஷன் போட்டதில் நேற்று என்னால் செல்ல இயலவில்லை. என் தங்கமணி மட்டும் போயிட்டு வந்தாங்க. பள்ளியின் செயல்பாடு எந்த மாதிரி வகுப்புகள் எடுப்போம், பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.  அவற்றில் பல எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.
அதில் எனக்கு ரொம்பப் பிடிச்சது இதுதான்...


கண்டிப்பா குழந்தைகளை எழுத சொல்லி கட்டாயப் படுத்தாதீங்க. அவங்க விரல்களில் அதற்கு உண்டான வலிமை இருக்காது. குறைந்தபட்சம் இன்னும் ஒரு வருஷம் ஆகும் . அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்கணும்.

இப்ப பல பெற்றோரின் நினைப்பே , பள்ளிக்கூடம் போகத் துவங்கியவுடன் எல்லாம் குழந்தை உடனே செய்யனும்னு எதிர்பார்ப்பதுதான்.

எல்லாவற்றையும் விட ஒரு குழந்தையின் தாய் கேட்டதுதான் டாப் கிளாஸ்

"என் குழந்தைக்கு டென்னிஸ் கோச்சிங்  தருவீங்களா ?"

அதற்கு தலைமை ஆசிரியை அளித்த பதில்

" பொறந்ததில் இருந்து உங்க குழந்தையின் கையை பார்த்திருக்கீர்களா ? டென்னிஸ் விளையாடற வயசா இது ?  இந்த வயதில் என்ன சொல்லித் தரவேண்டுமோ அதைக் கட்டாயம் சொல்லித் தருவோம் "

இறுதியாக , " என் மகன் சான்றோன் எனக் கேட்டத் தருணம் ".. இரண்டு நாட்கள் கவனித்ததில் அதிக வார்த்தைகளை சரியாக சொன்னக் குழந்தை திவ்யா என்று அவர்கள் கிளாஸ் டீச்சர் அனைவரின் முன் சொன்னது...அன்புடன் எல்கே

ஜூன் 10, 2012

அனைவரும் நலமா ?

எல்லோரும் நல்லா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். சமீப காலமா அதிகம் எழுதறதும் இல்லை. ப்ளாக் பக்கம் வருவதும் இல்லை. அதனால்தான் எந்த பதிவு பக்கமும் தலை காட்டறது இல்லை.

கூகிள் ப்ளஸ்ல கொஞ்சம் காலம் இருந்தாலும், இப்ப அங்க கூட அதிகம் போறதில்லை. ஆபிஸ்ல அவ்ளோ ஆணி. புடுங்க புடுங்க வந்துகிட்டே இருக்கு.

திவ்யாகூடவும் அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கே . மேடம் வர வியாலன்ல இருந்து ஸ்கூல் போகப் போறாங்க. இப்பவே ரெடி ஆகிட்டாங்க . புது இடம். புதிய நண்பர்கள் . நமக்குத்தான் படபடப்பா இருக்கு. இவ்ளோ நாள் வீட்ல சுதந்திரமா சுத்திகிட்டு இருந்தவங்க, அங்க போய்  எப்படி இருக்க போறாங்களோன்னு. இவங்ககிட்ட மாத்திகிட்டு டீச்சர் என்ன பாடுபடப் போறாங்கன்னு தெரியலை .

சமீபத்தில் திவ்யா சொன்னக் கதை ஒன்று உங்களுக்காக....

http://soundcloud.com/karthik-lakshmi-narasimman/story-telling-by-divya


அன்புடன் எல்கே