ஆகஸ்ட் 18, 2011

என்ன கொடுமை இது ?

எம் பி ஏ

அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி எம் பி ஏ படிப்பிற்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் . இப்பொழுது நடைமுறையில் இருக்கும் தனித் தனி நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து ஒரே நுழைவுத் தேர்வாக மாற்ற இது வழிவகுக்கும்.

ஆனால் இது பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு மேலும் பாதிப்பை உண்டுபண்ணும். தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தனியாக கோச்சிங் செல்வது என்பது அவர்களால் இயலாத காரியம். அவர்களும் எளிதாக எஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.


தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3s2kzca
 

9 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நுழைவுத் தேர்வு கண்டிப்பாக ஏழை மாணவர்களை பின்தங்க வைக்கும்....

Lakshmi சொன்னது…

இதுபடி பார்த்தா, எம். பி, ஏ. படிக்க ஆசைப்படும் குழந்தைகளுக்கு ரொம்ப
கஷ்ட்டமாச்சே.

சாகம்பரி சொன்னது…

இதனை எதிர்த்து வழக்கு பதிவாகும். இதுபோல் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. AICTEஐ பொறுத்தவரை எல்லா மட்டத்திற்கும் பொறுத்தமான முடிவுகளை எடுப்பதில்லை. உடனடி அறிவிப்புதான். பின்னர் வழக்கு தொடர்ந்தபின் மெல்ல பின்வாங்கிக் கொள்ளும். எனவே கவலைப் படவே வேண்டாம், திரு.எல்.கே

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மாணவர்கள் நிலைதான் பரிதாபம்.

RAMVI சொன்னது…

தேசிய அளவிலான நுழைவு தேர்வு தேவை இல்லாத ஒன்று.மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களை கொண்டு மேல் படிப்பிர்க்கு சேர வழிவகை செய்தால் நல்லது.இல்லை என்றால் நீங்கள் குறிப்பிட்டதுள்ளது போல் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களால் தனி பயிற்சி எடுத்துக்கொள்ள் இயலாது.

ஆமினா சொன்னது…

தேசிய அளவிலான நுழைவு தேர்வு தேவை இல்லாத ஒன்று.//

அமைதிச்சாரல் சொன்னது…

நுழைவுத்தேர்வுகளே தேவையில்லைன்னு நினைக்கிறேன். பன்னிரண்டாம் வகுப்புல எடுத்த மதிப்பெண்களை அடிப்படையா வெச்சு அனுமதிக்கலாமே. நுழைவுத்தேர்வுகள் நிச்சயமா மாணவர்களுக்கு சுமைதான்.

எல் கே சொன்னது…

அனைவருக்கும் நன்றி. கொஞ்சம் பிசி தான் உங்க ப்ளாக் பக்கம் வரதில்லை. கூடிய சீக்கிரம் வர முயற்சிக்கிறேன்.

@சாரல்

நான் பேசறது எம் பி ஏ . இஞ்சினியரிங்க்க்கு இல்ல

பத்மநாபன் சொன்னது…

நீங்க சொல்வது ஒரு பக்கம் சரி...மறுபக்கம் தரம் என்பது கொஞ்சம் கூட இல்லாத எம்.பி .ஏ க்களை நிறைய பார்க்கிறோம்.. எல்லோரும் சேர்க்கபடவேண்டும்.. படிக்க வேண்டும் .. அதே சமயத்தில் தரத்தை பல்கலைகழகங்கள் உறுதி செய்ய வேண்டும்....