ஜூன் 22, 2011

ஏர்டெல்லும் நானும்

கால் சென்டரில் வேலை செய்யும் நான் , இன்னொரு கால் சென்டரைக் குறை சொல்லி ஒரு பதிவு எழுதுவேன்னு இதுவரைக்கும் நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை. ஒரு சில கால் சென்டரில் பீட்பேக் கேட்பாங்க அப்பக் கூட நல்லபடியாதான் சொல்லுவேன். கஸ்டமர் கேரில் கஷ்டமர்களால் ஏற்ப்படும் பிரச்சனை நல்லா தெரியும் அதே போல் இந்த பீட்பேக் மூலம் அங்க வேலை செய்யறவன் வேலை பாதிக்கப்படக்கூடாது அப்படின்னு எப்பவும் பாசிடிவ் பீட்பெக்க்தான் தருவேன். ஆனால் நேற்று நெகடிவ் பீட்பேக் கொடுக்க வேண்டிய  நிலை ஏற்பட்டது, .

வீட்டில் ஏர்டெல் கனெக்க்ஷன் வைத்துள்ளேன். வீட்டில் இணையம் வேண்டாம் என்று முடிவெடுத்து கேன்சல் செய்வதற்கு பத்து நாட்களுக்கு முன்னால் அவர்களோட டோல் ப்ரீ எண்ணுக்கு கால் செய்தேன். அன்னிக்கே எரிச்சல் உண்டு பண்ணாங்க.

எனக்கு கனெக்க்ஷன் வேண்டாம் என்றுதானே கூப்பிடறேன். அந்த கோரிக்கையை எடுத்துக்கிட்டு என்ன செய்யணுமோ அதைப் பண்ணனும். அதைவிட்டுட்டு இந்த லைனை வேற யாருக்காவது மாத்தித் தரட்டுமா என்று கேட்டால் கோபம் வருமா வராதா ? இது என்ன பரிசுப் பொருளா பிரெண்டுக்கோ இல்லை அக்கா தம்பிக்கோ கொடுக்கறதுக்கு ? அவங்களுக்கு வேண்டுமென்றால் அவங்களே அப்ளை பண்ணி வாங்கிக்கப் போறாங்க . ஒருவழியா இதெல்லாம் வேண்டாம் , மொத்தமா ரத்து பண்ணுங்கன்னு சொன்னப்புறம், என்னோட பேரு, முகவரி, பிறந்த தேதி, ஈ மெயில் எல்லாம் வாங்கிட்டு ஒரு புகார் எண்ணை கொடுத்தாங்க. ஒருவாரத்தில் லைன் கட் ஆகிடும் என்று சொன்னார்கள்.

ஒரு வாரம் இல்லை பத்து நாள் ஆச்சி கட் ஆகலை. இது வேலைக்கு ஆகாதுன்னு ,நேற்று மாலை ஒரு ஏழரை மணிக்கு கஸ்டமர் கேருக்கு கால் பண்ணேன். மறுபடியும் முதல்ல இருந்து எல்லா விவரத்தையும் சொன்னேன் . ஒரு நிமிஷம் லைன்ல இருங்க ,செக் பண்ணிட்டு வரேன்னு போனவன்தான் வரவே இல்லை லைன் கட் பண்ணிட்டான். சரின்னு மறுபடியும் பேசினேன். அப்பவும் கோபப் படலை . அவனும் ஹோல்டில் போட்டு லைனை கட் பண்ணான்.

அப்பதான் கொஞ்சம் டென்ஷன் ஆக ஆரம்பித்தேன். மூணாவது முறை போன் பண்ணப்ப பாவம் அந்தப் பையன் அவன் பண்ணாத தப்புக்கு என்கிட்ட நல்லா வாங்கிக் கட்டினான். ஒரு வழியா அவனோட மேனஜர்கிட்ட பேசினேன். அங்கதான் திருப்பமே ...நான் போன் பண்ணி லைன கட் பண்ண சொன்னப்ப அவங்க அதுக்கு உண்டான கோரிக்கையை எடுதுக்கலையாம். அதுக்கு நான் தவறான விவரங்களை தந்ததுக் காரணமாம் .  என் பிறந்த தேதி, முகவரி தப்பா சொன்னேனான். என்னக் கொடுமை இது ??

அப்புறம் ஒரு வழியா , மறுபடியும் அந்தக் கோரிக்கையை எடுத்துகிட்டு இருக்காங்க . இந்தப் பதிவை டைப் செய்யறப்ப அவங்கக்கிட்ட இருந்து போனும் வந்தது . பார்ப்போம் என்ன பண்றாங்கன்னு .25 கருத்துகள்:

raji சொன்னது…

இந்த மாதிரி கஷ்டத்தை அனுபவிச்ச பாக்கியசாலிகள்ல நாங்களும் ஒருத்தர்தான்

Madhavan Srinivasagopalan சொன்னது…

ஏணிந்த திடீர் முடிவு..
அதுல வெறும் 'காத்து'தான் 'பேசு'தா / வருதா ?

பத்மநாபன் சொன்னது…

இப்படித்தான் ஏர்டெல் டிஷ் டிவி கஸ்டமர் சர்வீஸில் படாத பட்டு செட்அப் பாக்ஸ் சரி செய்ய வைத்தேன் ...ஒரு நூறு காலாவது ஆகி இருக்கும் ... குரல் கேட்டவுடன் பெயர் சொல்லுமளவுக்கு ஆகிவிட்டது ... ஸோ...சேலத்துக்கே மாம்பழமா ....

Lakshmi சொன்னது…

ஓ, இதுபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கா. இது ஒரு தொடர்கதைதான் போலைருக்கு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பெரும்பாலும் இந்த பிரைவேட் கம்பெனிகளின் போக்கே இது தான். வேண்டாம் என்றால் எப்படியாவது நம் மீது திணிக்கத்தான் பார்க்கிறார்கள். கால் செண்டரில் பேசும்போது நாம் கேட்கும் சேவை இல்லை என்று சொல்லாமல் வேறு எதையாவது இருக்கிறது என்று தான் சொல்கிறார்கள்....

சுந்தர்ஜி சொன்னது…

இத்தனை வருஷத்தில் பி அண்ட் டி யா இருந்தது முதல் பிஎஸ்என்எல் தவிர யார் சேவையையும் நம்பியதில்லை.அதுவும் அவங்களோட சேவை பிஎஸ்என்எல் ஆக மாறியபின் படு க்ளாஸ்.

பிபில்-ஹட்ச்-டச்டெல்-ஏர்டெல்-வோடஃபோன்-ரிலையன்ஸ் எல்லார் கிட்டயும் கசப்பான அனுபவம் உண்டு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சிறுகதை தொடர்கதையாகாமல் பார்த்துக்கொள்ளுமா ஏர்டெல். பார்க்கலாம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6115.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.பார்த்து, தங்கள் கருத்துரைகளைத் தெரியப்படுத்துங்கள். நன்றி.

அமைதிச்சாரல் சொன்னது…

கஸ்டமர்களோட பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறதுல எல்லா நிறுவனங்களும் 'ஒத்துமை'யாத்தான் இருக்காங்க :-))

புதுகைத் தென்றல் சொன்னது…

இந்த மாதிரி பதிவுகளுக்கு நம்ம வலையுலகில் டெம்ப்ளேட் பின்னூட்டம் ஒண்ணு இருக்கு. ஏதாவது ஒரு வகையில் பல பேர் பாதிக்கப்பட்டிருப்பாங்க.

சேம் ப்ளட்!!

GEETHA ACHAL சொன்னது…

இது மாதிரி தான் நானும் ஊரில் இருந்து வந்த பொழுது ஆனது...இந்த customer careயிற்கு கால் செய்தே நான் டென்ஷன் ஆனாது தான் மிச்சம்...அப்பறம் எங்க் அப்பா பார்த்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டதால் நான் என்னுடைய மற்ற வேலையினை பார்க்க சென்றுவிட்டேன்...என்னுடைய vacationயில் 1 நாள் வீணானது தான் மிச்சம்...

A.R.ராஜகோபாலன் சொன்னது…

இதே மாதிரியான அனுபவம் எனக்கும் உண்டு
என்ன செய்வது குறைந்த சம்பளத்தில் திறமை இல்லாதவர்களை பணியில் அமர்த்துவதால் வந்த வினை
விளம்பரகளுக்கு செய்யும் செலவையும் நேரத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால் நலமாயிருக்கும்

கோவை2தில்லி சொன்னது…

இப்படித் தான் செய்து தொலைக்கிறார்கள்.

அமைதி அப்பா சொன்னது…

//விளம்பரகளுக்கு செய்யும் செலவையும் நேரத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால் நலமாயிருக்கும்//

என்னுடைய கருத்தும் இதுதான்.

S.Menaga சொன்னது…

என்னமோ நம்ம கோரிக்கையை உடனே செய்ற மாதிரி ஒரு நம்பரை ஒன்னு கொடுத்திறாங்க...

vanathy சொன்னது…

ஒரு கஸ்டமரை இழக்க மனமில்லை அவர்களுக்கு. இங்கே ஏதாவது service cancel பண்ணுவது எனில் phone call ஒரு போதும். ஒரு கேள்வியும் கேட்க மாட்டார்கள்.

பாலா சொன்னது…

நீங்களும் அனுபவிச்சாச்சா? நான் ஒரு வருடமா அனுபவிக்கிறேன். முன்பெல்லாம் கொஞ்சம் பதமாக பேசுவேன். இப்போதெல்லாம் வம்பாகவே பேசுகிறேன். அப்போதுதான் வேலை நடக்கிறது. இன்னும் இருக்கு. எஞ்சாய்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

Complaints of call center is like everyday thing now... the most irritating part is they put us on hold for hours to make you disconnect yourself. Too bad. But I have pleasant experiences too. Very few bad behaviours like this spoil the whole call center people's reputation... :((

Vasagan சொன்னது…

Same problem with Airtel, Oorulae pilaikal nonthu poi nanvantha pirakkuthaan sari seiyanumnu kathirkarkal.

ஸ்ரீராம். சொன்னது…

ஏர்டெல் எப்பவுமே, எல்லாத்திலயுமே ப்ராப்ளம்தானா...

நிரூபன் சொன்னது…

நொண்டிச் சாட்டுச் சொல்லி உங்களின் லைனை disconnect பண்ணாது தொடர்ந்தும் வைத்திருப்போம் என்று நினைத்திருப்பார்கள் போல இருக்கிறதே.

ஹுஸைனம்மா சொன்னது…

நாட்டில் எல்லாரும் இந்த சுகானுபவம் பெற்றிருக்கிறார்கள் போலும். நமக்கு இன்னும் கொடுத்துவைக்கலை.. ஊருக்கு லீவில் பயன்படுத்தும் மொபைலில் வரும் எண்ணற்ற எஸெமெஸ்களும், விளம்பர கால்களும்தான் தற்போதைய அனுபவங்கள்.

சாகம்பரி சொன்னது…

why blood same blood. for me Reliance.

எல் கே சொன்னது…

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. எதிர்பாராத திருப்பமாய் , சண்டைப் போட்டதின் விளைவாய் பல சலுகைககளை தந்துள்ளது ஏர்டெல் :))

நேரமின்மையின் காரணமாய் அதிக நேரம் பதிவில் இருக்க முடிவதில்லை .. நன்றி

மோகன்ஜி சொன்னது…

இம்மாதிரி கசப்பான அனுபவம் எனக்கும் உண்டு..
வாடிக்கையாளர் குறை தீர்க்கும் நடவடிக்கைகளை அறை மனதோடு தான் செய்கிறார்கள். பாரத் மாதாகி ஜே!