ஜூன் 19, 2011

தந்தையர் தின வாழ்த்துக்கள்நான் விழிக்கும் முன்
நீ
சென்றிருப்பாய் வேலைக்கு.

நீ திரும்பும் முன்
நான் உறக்கத்தில் ...

விடுமுறை நாள் அன்றே
நமது விளையாட்டு ...

நீ கல்லாதது எனைப்
பயில வைத்தாய் ..
இவ்வுலகை எனக்குப்
புரிய வைத்தாய். ..

சிறு வயதில் ஆசானாய்
வாலிப வயதில்
 தோழனாய்...

அந்நேரத்தில் புரியவில்லை
உனது வார்த்தைகள்- இன்றோ
எனது  தாரக மந்திரம்..

அனைத்து தந்தைகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

அன்புடன் எல்கே

29 கருத்துகள்:

Rathnavel சொன்னது…

அருமை.
வாழ்த்துக்கள்.

சசிகுமார் சொன்னது…

தங்களுக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.
அண்ணே காலையிலையே dashboard ஓபன் செய்தா உங்களோட வாழ்த்துக்கள் தான் முதல்ல தெரிந்தது மிக்க மகிழ்ச்சி. உங்க பிளாக் முகத்துல முழிச்சா எப்படி இருக்குன்னு பார்ப்போம் ஹா ஹா

கலாநேசன் சொன்னது…

//விடுமுறை நாள் அன்றே
நமது விளையாட்டு//

உண்மை.
தந்தையர் தின வாழ்த்துக்கள் நண்பரே....

எல் கே சொன்னது…

நன்றி ரத்னவேல் அய்யா.

@சசி

தம்பி , நல்லா இருந்தா சொல்லு. இல்லாட்டி விட்டுடு.

kggouthaman சொன்னது…

தந்தையரை மதிப்பவர்களுக்கும், தந்தையானவர்களுக்கும், தந்தையாக்கியவர்களுக்கும், தந்தையாகவிருப்பவர்களுக்கும்
எங்கள் உளப்பூர்வமான தந்தையர் தின வாழ்த்துகள்.

FOOD சொன்னது…

தந்தையர் தின வாழ்த்துக்கள்.

பத்மநாபன் சொன்னது…

பாசத்தை உள்ளடக்கி நேசத்தை வளர்க்கும் தாயுமானவர் தான் தந்தை ... பொறுப்பு மிக்க நிலை .. அனைத்து தந்தையர்க்கும் வாழ்த்துக்கள் ..

RVS சொன்னது…

ஒங்களுக்கும் என் வாழ்த்தை சொல்லிக்கிறேன் எல்.கே. ;-))

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.

ஜீ... சொன்னது…

அருமை பாஸ்!
உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நற் தந்தையரே வாழ்க .

Karikal@ன் - கரிகாலன் சொன்னது…

நல்ல உணர்வுபூர்வமான கவிதை.
பகிர்ந்தமைக்கு நன்றி!

தந்தையர் தின வாழ்த்துக்கள் நண்பரே!

A.R.ராஜகோபாலன் சொன்னது…

உண்மையை சொல்லுவதென்றால் உங்களால் தான் எனக்கு இன்று தந்தையர் தினம் என்பதே தெரியும்
நன்றி பகிர்ந்ததற்கு,
உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

அருமை அருமை
இத்தனை அருமையாக இத்தனை எளிமையாக
தந்தையர் பெருமையை சொல்லிச் செல்லுதல் கடினமே
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். சொன்னது…

அம்மா என்பவள் சச்சின் டெண்டுல்கர் மாதிரி...அப்பாக்கள் கங்குலி, டிராவிட் மாதிரி...மதர்ஸ் டே களேபரத்தில் தந்தையர் தினம் கண்டுகொள்ளப்படாமலேயே போகிறது போலும்! வாழ்த்துகள்.

Priya சொன்னது…

அப்பா... சொல்லும் போதே இனிக்கிறது!அவர்களுக்கு ஒரு நாள் என்ன ஆண்டு முழுவதும் வாழ்த்து சொல்லி மகிழலாம். உங்களுக்கும் அன்பான தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்!

Lakshmi சொன்னது…

அருமையான தந்தையர் தின வாழ்த்துக்கள்.

middleclassmadhavi சொன்னது…

அனைத்து தந்தைகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

தந்தையர் தின வாழ்த்துக்கள்..

S.Menaga சொன்னது…

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!!

எல் கே சொன்னது…

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

அண்ணா உங்கள் கமெண்ட்டை நான் ரொம்பவே ரசித்தேன்,

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக்... அப்பாவின் பெருமையையும் பொறுப்பினையும் நாம் அப்பா ஆகும்போதுதான் முழுதுமாய் உணர்கிறோம்....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனிய வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL சொன்னது…

தந்தையர் தின வாழ்த்துகள்...

பெயரில்லா சொன்னது…

gud one Karthik

RAMVI சொன்னது…

வணக்கம் கார்திக். நான் பதிவுகளுக்கு புதியவள்.சில தினங்களாகவே உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். மிகவும் அருமையாக இருக்கிறது. பெரும்பாலனவர்கள் தாயை பற்றி மட்டுமே எழுதுகிறார்கள். நீங்கள் தந்தையை பற்றியும் எழுதுவது சிறப்பு. வாழ்த்துக்கள்.

சே.குமார் சொன்னது…

தங்களுக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

Really touching... too good..:)