ஜூன் 05, 2011

வியாபாரம் 10அவள் மனதை பயம் கவ்வியிருந்ததை அவள் முகம் படம் போட்டுக் காட்டியது. நெற்றியில் ஆங்காங்கே தோன்றிய வியர்வை முத்துக்கள் அதற்கு சாட்சியம் கூறியது. அந்த கடையின் வெளியே நடைப்பாதையில் கடைக்கு எதிரே இருந்த இரும்பு தடுப்புக் கம்பிகளைப் பற்றி இருந்த அவளதுக் கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தது.

அவன் எப்பொழுது வருவான், வந்தால் அவனை எச்சரிப்பதா இல்லை வேண்டாமா என்று ஒரு போராட்டமும் அவள் மனதினுள் நடந்துக் கொண்டிருந்தது. சில நிமிட யோசனைக்குப் பிறகு , அவன் வரும்பொழுதே கண்ணால் சைகை செய்யலாம் என்று முடிவு செய்தாள். 

அவள் அப்படி முடிவு செய்யவும், அந்த தாழ்வாரத்தின் மறுபுறம் அவன் வரவும் சரியாக இருந்தது. ஆனால் நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிடுகிறதா என்ன ? நாம் நினைப்பது மட்டுமே நடந்தால் வாழ்வு நன்றாகத்தான் இருக்கும். 

ரமேஷ் நடந்து வரவும், சேகர் ஜூஸ் கடையில் இருந்து வெளியே வந்து போன் பேசிக் கொண்டே நடப்பவனைப் போல் ரமேஷை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 


**********************************************************************************
கிட்டத் தட்ட அதே நேரத்தில் ராஜு, ரமேஷின் நண்பர்கள் தங்கியிருந்த வீட்டை அடைந்து, ரமேஷ் கொடுத்த எண்ணுக்கு கால் செய்தான். 


"கார் ரெடி ."


"இவ்ளோ சீக்கிரமா ? ரமேஷ் எங்க ?"


"அவர் வேற ஒரு இடத்துக்கு போயிருக்கார். என்னை கொண்டுவந்து காரைக் கொடுக்க சொன்னார் ."


"சரி . எங்க இருக்கீங்க ?"


 "நீங்க இருக்கற வீட்டுக்கு எதிர்ல இருக்கறேன். "


"அப்படியே வண்டிய கொண்டுவந்து வீட்டுக்கு முன்னாடி விட்டுடுங்க. சாவியை ஜன்னல் வழியா உள்ள தூக்கி போட்டுடுங்க. "


"உங்களை உடனே இந்த இடல்தில் இருந்து கிளம்ப சொல்லி ரமேஷ் சொன்னார் ."


"எதவாது காரணம் சொன்னாரா அதுக்கு ?"
"அதெல்லாம் எதுவும் சொல்லலை. சீக்கிரம் கிளம்பசொல்லி சொன்னார். ஏற்காடுல ஏரிக்கு பக்கத்தில் உங்களை அவரோட நண்பர் மீட் பண்ணுவார்னு சொன்னார் "


"சரி ஓகே. வண்டியை கொண்டு வந்து நிறுத்திட்டு சாவியை தூக்கி உள்ள போடு "


மறுமுனையில் இருந்த குரல் சொல்லியவாறே வண்டியை நிறுத்திவிட்டு , சாவியையும் தூக்கி உள்ளே போட்டுவிட்டு அங்கிருந்து செல்லத் துவங்கினான். மனதிற்குள் நம் காரை இவர்களுக்குத் தருவதால் நமக்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று எண்ணமும் ஓடிக் கொண்டிருந்தது. ரமேஷ் அவனிடம், அவனோட நண்பர்கள் ஊரில் இருந்து வந்திருப்பதாகவும், ஏற்காடு போக கார் வேண்டும் என்றும் , டிரைவர் வேண்டாம், கார் மட்டும் கொடுத்தால் போதும் என்று சொல்லியிருந்தான். அதனால் வண்டியை விட்டுவிட்டு எதிரே இருந்த டீக்கடைக்கு சென்று டீ ஆர்டர் செய்துவிட்டு அங்கிருந்த பேப்பரை புரட்டத் துவங்கினான். 


"சார்! டீ எடுத்துக்கோங்க என்ற மாஸ்டரின் குரல் கேட்டு டீ கிளாசை வாங்கிக் கொண்டு திரும்பியவனின் கண்ணில் எதிர் வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் பட்டனர். ஒரு பெரியவரை தூக்கி வந்து உள்ளே வைத்து கதவை சார்த்தி வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றனர்.


கண்டிப்பா இது எதோ பிரச்சனையான விவகாரம்தான் என்று நினைத்தவன் , தன் செல்லை எடுத்து ரமேஷை அழைத்தான். அவன் பல நிமிடங்கள் முயற்சி செய்தும் அவனது லைன் கிடைக்கவே இல்லை.


அவன் செய்வதறியாது முழித்தான். அவனை காரில் இருந்தவர்கள் சட்டைப் பண்ணியதாகவே தெரியவில்லை. அவன் தங்களைப் பார்ப்பதையே கண்டுக் கொள்ளாமல் வண்டியை வெகு வேகமாக சேலம் டவுன் ஏரியாவை நோக்கி செலுத்தினார்கள். ஏற்கனவே ரமேஷ் சொன்னவாறு அயோத்தியாப்பட்டினம் செல்லும் சாலையில் அந்த மாருதி ஆம்னி பறந்தது.


செக் போஸ்ட் அருகே வந்தவுடன் அவர்களுக்கு கொஞ்சம் நடுக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அந்த என்றதில் அங்கு எந்த வாகனத்தையும் சோதனை செய்யாதது அவர்களுக்கு நிம்மதியாய் இருந்தது.


அந்த சோதனை சாவடியைக் கடந்து வேறு எங்கும் நிற்காமல் ஏற்காட்டு மலைப்பாதைக்கு வண்டியை விரட்டினர். அந்த மலைப்பாதையில் நுழைந்து சில மீட்டர்களிலேயே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


**********************************************************************************


ரமேஷ் , எதிரே நடந்து வரும் சேகரைப் பார்த்து ஒரு கணம் திகைத்தாலும் உடனே சுதாரித்துக் கொண்டு அங்கிருத்து வெளியேற வேறு வழி இருக்கிறதா என்றுப் பார்த்தான். அவனுக்கு இருந்த ஒரே வழி, அவனது வலப்புறம் இருந்த தடுப்பைத் தாண்டி குதிப்பதுதான். ஆனால் அதுவே அவன் மாட்டிக் கொள்ளவும் வசதியான வழியாக அவனுக்குப் பட்டது.


சேகர் கடந்து செல்லும் வரை வேறு ஏதாவது கடையினுள் நுழைய வேண்டியதுதான் என்று எண்ணியவாறே இடது பக்கம் இருந்த புத்தகக் கடைக்குள் நுழைய முயன்றான். ஆனால் அதே நேரம் அவன் பின் பக்கம் இருந்து வந்த ஒரு நபர் அவன் மேல் மோத, தன் நிலைத் தடுமாறிக் கீழே விழுந்தான்.

அன்புடன் எல்கே

13 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நாம் நினைப்பது மட்டுமே நடந்தால் வாழ்வு நன்றாகத்தான் இருக்கும். //

சுவாரஸ்யமாய் தொடர்கிறது. பாராட்டுக்கள்.

vanathy சொன்னது…

எப்ப கதையை முடிக்கப் போறீங்க, தல??? good one!

எல் கே சொன்னது…

@ராஜராஜேஸ்வரி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@வானதி

ஏன் கதை போர் அடிக்குதா ?? அது என்ன "தல" ???யார் அது

சாகம்பரி சொன்னது…

வார்த்தைகளின் பிரயோகங்கள் கதையை தொடர்ந்து என்னை இழுத்துச் செல்கிறது.

Lakshmi சொன்னது…

ம்ம்ம், தொடரவும்.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

"நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிடுகிறதா என்ன ? நாம் நினைப்பது மட்டுமே நடந்தால் வாழ்வு நன்றாகத்தான் இருக்கும்"
.
நிதர்சனமான உண்மை எல் கே

"அதே நேரம் அவன் பின் பக்கம் இருந்து வந்த ஒரு நபர் அவன் மேல் மோத, தன் நிலைத் தடுமாறிக் கீழே விழுந்தான்."
நல்ல விறு விறுப்பான தொடர்
தொடருங்கள் தொடர்கிறோம்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

முரட்டு வியாபாரமும், மொத்த வியாபாரமும் போல் லேசில் முடியாமல் வியாபாரம் தொடர்ந்து கொண்டே போகிறது.

தொடரட்டும். வாழ்த்துக்கள்.

அன்னு சொன்னது…

தொடர்ந்துட்டே வர்றேன் கார்த்திண்ணா... போக போக கதை சூடு பிடிச்சிட்டே போகுது... அடுத்த அடுத்த பாகங்களை சீக்கிரம் போட்டால் இன்னமும் நல்லது (படிக்கிற எங்களுக்குத்தான்...!!)

:))

அப்பாவி தங்கமணி சொன்னது…

நல்லா போகுது.....நடக்கட்டும்...:)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விறுவிறுப்பாய் செல்கிறது... வியாபாரம் தொடரட்டும்....

ஸ்ரீராம். சொன்னது…

திட்டம் போட்டு மடக்கிட்டாங்க போலேருக்கு....அடுத்து....?

கீதா சாம்பசிவம் சொன்னது…

நல்ல வியாபாரம், சுறுசுறுனு நடக்குது. :P