மே 06, 2011

வியாபாரம் 5


பகல் நேரம் என்பதால் கணேஷ் மியூசிக் ஸ்டோரில் அதிகம் கூட்டம் இல்லை. , இரண்டு கஸ்டமர்கள் மட்டுமே உள்ளே இருந்தனர்.  டிவிடி ப்ளேயரில் எஸ்பிபி இளையராஜாவின் இசையில் தேனாய் குழைந்துக் கொண்டிருக்க , இருந்த இரண்டு வாடிக்கையாளர்களையும் வேறு ஒருப் பெண் கவனித்துக் கொண்டிருக்க , மீதம் இருந்த விஜியும், மற்றொரு பெண்ணும் அரட்டையில் மும்முரமாக இருந்தனர்.


எஸ்பிபியின் தேனோசையை குலைக்கும் விதமாக மொபைல் ஒன்று அலறத் துவங்கியது. கையிலே வைத்திருந்த போன் அலறத் துவங்கியவுடன் , நம்பரைப் பார்த்த விஜி, கேஷ் வாங்கும் இடத்தில் மேலாளர் போல் இருந்தவரிடம் சொல்லிவிட்டு , அழைப்பை உயிர்ப்பித்துக் கொண்டே கடையில் இருந்து வெளியே சென்று பேசத் துவங்கினாள்.


விஜி கொஞ்சம் கறுப்பென்றாலும் , பார்ப்பவரை தன் பக்கம் ஈர்க்கும் கறுப்பென்றே சொல்லலாம். இது கருமை நிறத்துக்கே உரிய விசேஷமாகும். இருபது வயதுக்கே உண்டான துடுக்குத் தனத்துடன் கொஞ்சம் வாயும் அதிகம். இது அவளைப் பற்றி அவளை சுற்றியுள்ளோரின் கணிப்பு . 


பள்ளிப்படிப்புக்கே குட்டிகர்ணம் அடித்ததால் , மேற்கொண்டுப் படிக்காமல், புத்தகத்துக்கு விடைகொடுத்தவள் விஜி. 

வீட்டில் வெட்டியாய் இருப்பதை விட, வேலைக்கு சென்றால் காசும் கிடைக்கும் பொழுதும் கழியும் என்றெண்ணி , முதலில் சிலக் கடைகளில் வேலை செய்தாள். அவை அவளுக்கு ஒத்து வராததால், ஒரு வருடத்திற்கு முன்பு இந்தக் கடையில் தன் தோழியின் மூலம் வேலைக்கு சேர்ந்தாள். இங்கு இடுப்பொடிக்கும் அளவிற்கு வேலை இல்லாததாலும், அவளுக்குப் பிடித்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதாலும் அங்கிருந்து விலகவில்லை. 

அந்த நேரத்தில் தன் வீட்டில் இருந்து எதற்கு போன் வரவேண்டும் என்று யோசித்துக் கொண்டே பேசத் துவங்கினாள். மறுமுனையில் அவள் தந்தை கோபத்துடன் திட்ட ஆரம்பிக்க, முதலில் இவளுக்கோ ஒன்றும் புரியவில்லை. பின் நடந்தவை முழுவதும் அவர் சொல்ல, பின்தான் அவளுக்கு முழுவதும் விளங்கியது. அவர் மறுமுனையில் பேச பேச இங்கு விஜிக்கு பயத்தில் நாக்கு உலர்ந்த, முகத்தில் வேர்வை முத்துக்கள் பூக்கத் துவங்கின. 

சேகர் காரை நெருங்கவும், கிருஷ்ணன் தனதுக் காரில் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. 

"சார் , இந்தக் கார் உங்களதுதானே ?"

"ஆமாம் சார். எங்கக் கார்தான். இங்க எப்படி சார்? டிரைவர் எங்க சார் ?"

"விடியற்காலையில்  காரை இங்க யாரோக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு போயிருக்காங்க. யார் அதை பண்ணினது என்றுத் தெரியலை. டிரைவரைப் பத்தியும் எந்தத் தகவலும் இல்லை. ஒண்ணா டிரைவரே உங்கப்பாவை எங்கையோ கடத்தி வெச்சிருக்கணும் இல்லை டிரைவரையும் சேர்த்து யாரோக் கடத்தியிருக்கணும். இதுல எது நடந்திருக்குன்னுதான் தெரியலை ."

"சரி உங்களுக்கு ஏதாவது அழைப்பு வந்துச்சா ?"

"இதுவரைக்கும் எதுவும் வரலை சார். " 

கிருஷ்ணன் சொல்லி முடிக்கவும் , அவரது அலைபேசி சிணுங்கத் துவங்க, அதை எடுத்து நம்பரைப் பார்த்தக் கிருஷ்ணன் , சேகரிடம் 

"எதோ புதிய நம்பரா இருக்கு சார் "

"போனை அட்டென்ட் பண்ணுங்க . உங்க நம்பருக்கு வரும்  கால்ஸ் எல்லாத்தையும் ட்ரேஸ் பண்ண சொல்லியிருக்கேன்."

அழைப்பை உயிர்ப்பித்து பேசத் துவங்கிய கிருஷ்ணன் முகத்தில் கவலை ரேகைகள் விழத் துவங்கின. நெற்றியில் வியர்வை ஓடத் துவங்க , இதயத் துடிப்பு அதிகரிக்கத் துவங்கியது .

இரண்டு  நிமிடமே நீடித்த அந்த அழைப்பு முடிந்தவுடன் ,

"யாருங்க கிருஷ்ணன் ? ஏன் உங்க முகம் இப்படி இருக்கு ?"


"யார்னு தெரியலை சார் . பேரு சொல்லலை. இப்ப அப்பா அவங்கக் கிட்டத்தான் இருக்காராம். அவர் உயிரோட வேணும்னா காசு வேணும்னு சொல்றாங்க ."

"எவ்வளவு கேக்கறாங்க ?"

"ஐம்பது லட்சம் ."

"மை குட்னஸ். பேசின குரல் உங்களுக்கு தெரிஞ்ச குரலா இருக்கா ?"

"தெரியலை சார். அந்த டென்சன்ல என்னால ஒன்னும் கவனிக்க முடியலை ." என்று சொன்னக் கிருஷ்ணனின் குரலில் இன்னமும் படப்படப்பு இருந்தது. 

"எந்த நம்பர்ல இருந்த கால் வந்துச்சு? அந்த நம்பரை சொல்லுங்க ."

கிருஷ்ணன் சொன்ன நம்பரை குறித்துக் கொண்ட சேகர், தன் வண்டியில் சொருகி வைத்திருந்த வயர்லஸ் போனை எடுத்து அதில் கண்ட்ரோல் ரூமை அழைத்தான். 


-வியாபாரம் தொடரும் 

பி கு : அடுத்தப் பகுதி ஞாயிறு அன்று வரும் 

அன்புடன் எல்கே

32 கருத்துகள்:

Gayathri சொன்னது…

Ippothan padichen...mundhaya pagangalai inithan padikkanum


thodarungal

Lakshmi சொன்னது…

நல்லா போகுது தொடர். ஒவ்வொரு பகுதியிலும் விறு விறுப்பு கூடிக்கொண்டே போகிரது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சூடுபிடித்த வியாபாரம் சுறுசுறுப்பாகவே செல்கிறது.

Chitra சொன்னது…

விறுவிறுப்பாக செல்ல ஆரம்பித்து விட்டது. அருமை.

சுசி சொன்னது…

தொடருங்க கார்த்திக்.

எல் கே சொன்னது…

@காயத்ரி

ரொம்ப நாள் கழிச்சுக் கடை பக்கம் வந்து இருக்கீங்க.. நன்றி

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

நன்றிமா

எல் கே சொன்னது…

@வைகோ

வியாபாரம் சூடு பிடிக்காட்டி கஷ்டம் ஆகிடும் சார்

எல் கே சொன்னது…

@சித்ரா

நன்றிங்க

எல் கே சொன்னது…

@சுசி
கண்டிப்பா தொடருவேன் .. நன்றி சுசி

ஸ்ரீராம். சொன்னது…

இப்போதான் ஒரு வில்லன் குரல் கொடுக்கறார்.இப்போ யோசிக்கும்போது விஜியின் அப்பா கிட்ட சேகர் அனாவசிய விவரம் கொடுத்திருக்காரோன்னு தோணுது. அதுவும் காரணமாத்தானான்னு போக போகத் தெரியும்..! (உங்க பதிலையும் சேர்த்து நானே சொல்லிட்டேனோ....!)

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

இருக்கலாம்... வியாபாரம் எப்படி இருக்கும்னு யூகிக்க முடியாதே

middleclassmadhavi சொன்னது…

thrilling..!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பெரியப்பா .. பின்றாரே..

எல் கே சொன்னது…

@மாதவி

நன்றி

@சித்தப்பு

நன்றி செந்தில்

thirumathi bs sridhar சொன்னது…

தொடர்கிறேன்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வியாபாரம் தொடருங்க...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

யார்னு தெரியலை சார் . பேரு சொல்லலை. இப்ப அப்பா அவங்கக் கிட்டத்தான் இருக்காராம். அவர் உயிரோட வேணும்னா காசு வேணும்னு சொல்றாங்க ."//
விறு விறுப்பு கூடிவிட்டது.

asiya omar சொன்னது…

வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது...க்தை நல்ல ரசனயுடன்
செல்கிறது..

vanathy சொன்னது…

கொஞ்சம் கூட எழுதி கதையை முடிக்க கூடாதா, தல. விறு விறுப்பா போகுது கதை.

பெயரில்லா சொன்னது…

மொத்தமாக எழுதி முடிக்கவும் கார்த்திக்,ஆர்வமே காரணம்

எல் கே சொன்னது…

@ஆச்சி

வருகைக்கு நன்றி ஆச்சி

எல் கே சொன்னது…

@மனோ

தொடரும் தொடரும்

எல் கே சொன்னது…

@ராஜராஜேஸ்வரி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@ஆசியா

நன்றி சகோ

எல் கே சொன்னது…

@வாணி

இதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன். அப்பாவி இன்னும் ஒரு கதையே முடிக்கலை. நான் ஒரு கதை முடிச்சு அடுத்தக் கதையும் முடிக்கனுமா அதுக்குள்ள ? இது எந்த ஊரு நியாயம் ??

vanathy சொன்னது…

நான் ஒரு கதை முடிச்சு அடுத்தக் கதையும் முடிக்கனுமா அதுக்குள்ள ? இது எந்த ஊரு நியாயம் ??///haha

அப்பாவி அக்கா கூட பேசுவதற்குள் விடிஞ்சுடும். நீங்க அப்படியா??? ( படிச்சதும் கிழிச்சிடுங்கோ. ஓக்கி )

எல் கே சொன்னது…

@வாணி

அவங்க பேசறத்துக்கே அவ்ளோ நேரம் ஆகுமா ??

(படிச்சிட்டு கிழிச்சிட்டேன்)

Porkodi (பொற்கொடி) சொன்னது…

அவனவன் கதை கிடைக்க தவியாய் தவிக்கும் போது, உங்களுக்கு மட்டும் அமுதசுரபி ரேஞ்சுக்கு சுரக்குதே.. ;) சூப்பரா இருக்கு, எல்லா பார்டையும் படிச்சுட்டேன்!

Jaleela Kamal சொன்னது…

நல்ல இருக்கு ,. காசு மிரட்டலா

geethasmbsvm6 சொன்னது…

ம்ம்ம் படிச்சுட்டேனே.

நிரூபன் சொன்னது…

தொடரினை நகர்த்தும் விதம் அருமை, 50இலட்சம் கேட்கிறாங்களா, அவ்...
போட்டுத் தள்ளிட வேண்டியது தான்,.