நவம்பர் 19, 2010

அன்றே...

நேற்று சாதாரணமானவள் என்பவர் எழுதிய இந்த இடுகையை படித்தப் பின் எனக்கு என் வீட்டில் நடந்த சம்பவம் நினைவிற்கு வருகிறது.


நான் ஐந்து வயதாக இருந்த பொழுது நடந்த சம்பவம் இது. என் பாட்டி (அப்பாவின் அம்மா ) வயிற்றுப்போக்கினால் அவஷ்தைப் பட்டார். வழக்கமான மருந்துகள் கொடுத்ததும் சரியாகாத காரணத்தால் ,எங்கள் குடும்ப மருத்துவரின் அறிவுரைப் படி அப்பொழுது சேலத்தில் பிரபலமாய் இருந்த இரண்டெழுத்து மருத்துவனை ஒன்றில் உள் நோயாளியாக சேர்த்தோம்.


என் பாட்டி அறுபது வயதை கடந்தவர். மருந்துகள் எதுவும் தராமல், நான்கு  பாட்டில் க்ளுகோஸ் ஏற்றத் துவங்கினர். இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் என்று ஒரே சமயத்தில். அவர் என்ன துன்பம் அடைந்து இருப்பார் அந்த வயதில் ?


அந்த பாட்டில்கள் முடிந்தவுடன் அடுத்த முறை மறுபடியும் க்ளுகோஸ் செலுத்தத் துவங்கினர். அங்குதான் பிரச்சனை ஆரம்பித்தது.அளவிற்கு அதிகமாய் க்ளுகோஸ் ஏற்றியதால் அதிகபட்ச அளவை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டிய சிறுநீரகம் பழுதடைந்து விட்டது. இவ்வளவு நடந்தும் வழக்கம் போல் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்கள் எவரும் இதை எங்களுக்கு சொல்லவில்லை. 
இரவுப் பணிக்கு வந்த மருத்துவர் ஒருவர், கொஞ்சம் வயதானவர். அவர்தான் பரிசோதனை பண்ணிவிட்டு, அவர் இறந்துவிட்டார். வேண்டுமானால் பாருங்கள் என்று ஆக்சிஜன் குழாயை அகற்றினார் . பிறகுதான் எங்களுக்கு அவர் உயிர் நீத்தது தெரிந்தது. இன்னும் ஒரு பத்து வருடங்களாவது வந்து இருக்க வேண்டிய அவர் தவறான சிகிச்சையால்   உயிரிழந்தார். இன்று லட்சக் கணக்கில் வாங்கினால் அன்று ஆயிரக் கணக்கில் வாங்கினர்.அது அன்ற்டைய தேதிக்கு எங்களுக்கு பெரியத் தொகை .

இது நடந்து இன்று இருபத்தைந்து வருடங்கள் ஆகி விட்டது. பல விஷயங்கள் மாறி விட்டன. ஆனால் இந்த மாதிரி பணம் கொள்ளை அடிப்பவர்கள் மட்டும் மாறவில்லை. நண்பர்களே, வெறும் பேரை கொண்டு அந்த மருத்துவமனையில் சென்று பரிசோதித்துக் கொள்ளாதீர்கள். 

எந்த எந்த மருத்துவமனைகள் நல்ல சிகிச்சை தருகிறார்கள் என்று விசாரித்து ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துக் கொண்டால் அவசர காலத்தில் உபயோகம் ஆகும்.

அன்புடன் எல்கே

57 கருத்துகள்:

கலாநேசன் சொன்னது…

நேற்று நண்பருக்கு காய்ச்சல். ஒரே மருந்தை இரண்டுமுறை எழுதித்தந்துள்ளார் வேறு ஒரு மருத்துவர். என்ன சொல்ல....

கலாநேசன் சொன்னது…

Pls change yellow fonts to some other colour.

வெறும்பய சொன்னது…

சொல்லிக்கொண்டே போகலாம் இது போன்ற பணத்திற்காக பிணம் தின்னி பிசாசுகளின் கதைகளை பற்றி...

வெறும்பய சொன்னது…

எந்த மருத்துவமனைகள் நல்ல சிகிச்சை தருகிறார்கள் என்று விசாரித்து ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துக் கொண்டாள் அவசர காலத்தில் உபயோகம் ஆகும்.\\//

இது மருத்துவமனைகளுக்கு மட்டுமல்ல ஏறக்குறைய எல்லா நிறுவனங்களுக்கு பொருந்தும்... இல்லாதவர்களை எங்கே போய் தேட முடியும்.. அது போன்று இருப்பவர்கர்களும் கவனிப்பாரற்று கிடக்கிறார்கள்...

வெறும்பய சொன்னது…

எந்த மருத்துவமனைகள் நல்ல சிகிச்சை தருகிறார்கள் என்று விசாரித்து ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துக் கொண்டாள் அவசர காலத்தில் உபயோகம் ஆகும்.\\//

இது மருத்துவமனைகளுக்கு மட்டுமல்ல ஏறக்குறைய எல்லா நிறுவனங்களுக்கு பொருந்தும்... இல்லாதவர்களை எங்கே போய் தேட முடியும்.. அது போன்று இருப்பவர்கர்களும் கவனிப்பாரற்று கிடக்கிறார்கள்...

Balaji saravana சொன்னது…

//வெறும் பேரை கொண்டு அந்த மருத்துவமனையில் சென்று பரிசோதித்துக் கொள்ளாதீர்கள். //

என் கருத்தும் இது தான் LK..

Sethu சொன்னது…

Very sad to hear, LK.

GEETHA ACHAL சொன்னது…

என்ன செய்வது கார்த்திக்...இப்படி தான் எல்லா இடத்திலும் நடக்கின்றது...

இதுபோல தான்,அதுவும் பெருபாலும் Normalலாகவே குழந்தை பிறக்க வாய்ப்பு இருந்தாலும், மருத்துவர்கள் பணத்திற்காக C-செக்ஸ்ன் செய்துவிடுக்கின்றார்ங்க...அது மாதிரி தான் இருக்கின்றது...

இதற்கு கவர்மண்ட் மருத்துவமனையே மேல்...

சௌந்தர் சொன்னது…

எப்போதும் இந்த மருத்துவர்கள் இப்படி தான் ஒரு மருத்துவர் செய்த தவறை இன்னொரு மருத்துவர் அது தவறு என்று சான்றிதழ் தரமாட்டார்..!

ஸாதிகா சொன்னது…

ஏமாற்றும் மருத்துவர்கள் அன்றும்,இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.மருத்துவமே பிஸினஸ் ஆகி விட்டது என்பது கசப்பான உண்மை.//எந்த மருத்துவமனைகள் நல்ல சிகிச்சை தருகிறார்கள் என்று விசாரித்து ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துக் கொண்டாள் அவசர காலத்தில் உபயோகம் ஆகும்.\\//
// அருமையான யோசனை.

nis சொன்னது…

கவலையான விடயம் ;((

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வருத்தமான விஷயம் கார்த்திக். பெரும்பாலான மருத்துவமனைகள் பண்ம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாய் கொண்டுள்ளன. சேவை என்ற எண்ணமே மறந்து விட்டது.

தமிழ்க் காதலன். சொன்னது…

நல்லக் கருத்தை பதிந்திருக்கிறீர்கள் எல்.கே. உண்மையில் நோய் வந்து இறந்தவனை விட தவறான மருத்துவ முறைகளால் இறந்தவர்கள்தான் அதிகம். அந்த காலத்தில் சும்மாவா சொன்னார்கள் ......." வைத்தியங்கிட்ட கொடுக்கிறத... வாணிகனிடம் கொடு என்று". எப்படி வாழ வேண்டும் எனப் புரியாத போது... இப்படித்தான் வாழ்க்கை நாறும்.

ஹரிஸ் சொன்னது…

//ஆனால் இந்த மாதிரி பணம் கொள்ளை அடிப்பவர்கள் மட்டும் மாறவில்லை//
மருத்துவம் வியாபாரம் ஆகிடுச்சி பாஸ்..இவங்க மாறப்போவது இல்லை,, நாம தான் அலார்ட்டா இருக்கனும்..

Gayathri சொன்னது…

manasukku rombha kashtama irukku.

dheva சொன்னது…

தவறான சிகிச்சைகள்...........இது போன்ற நிகழ்வுகளுகு காரணமாக ஆகிவிடுகின்றன.....! விழிப்புணர்வு நம்மிடம் நிச்சயம் இருக்கவேண்டும்......!!!!!


ஆயிரங்கள்....லட்சங்களுக்கு பின்னால் இருக்கிறது இன்றைய மருத்துவம்.....!!!!!

அருண் பிரசாத் சொன்னது…

கண்டிப்பாய் அடிப்படை மருத்துவத்தை தெரிந்து இருக்க வேண்டும்...

இல்லையே மிளகாய் அரைத்து விடுவார்கள்

Arun Prasath சொன்னது…

இப்போ என்ன பிரச்சனனா இவங்க எப்டி கண்டுபுடிக்க? எல்லாம் பசு தோல் போர்த்திய புலிகள்

kavisiva சொன்னது…

இது போன்ற பிணந்தின்னி மருத்துவர்களை அடையாளம் காண்பது எப்படி என்றுதான் புரியவில்லை :(

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

எந்த எந்த மருத்துவமனைகள் நல்ல சிகிச்சை தருகிறார்கள் என்று விசாரித்து ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துக் கொண்டால் அவசர காலத்தில் உபயோகம் ஆகும்.//

மருத்துவரும் கூட..

நல்ல யோசனை

ப.செல்வக்குமார் சொன்னது…

// ஆனால் இந்த மாதிரி பணம் கொள்ளை அடிப்பவர்கள் மட்டும் மாறவில்லை. நண்பர்களே, வெறும் பேரை கொண்டு அந்த மருத்துவமனையில் சென்று பரிசோதித்துக் கொள்ளாதீர்கள்//

ரமண படமல வர்ற மாதிரி இருக்கு அண்ணா ., என்னத்த சொல்லுறது ..
நாமதான் கவனமா இருந்துக்கனும் . ஆனா குளுகோஸ் அதிகமா இறக்குனா இறந்துடுவாங்க அப்படின்னு தெரியாம இருந்திருக்காங்க அது வேதனையான விசயம்தான் ..

சாதாரணமானவள் சொன்னது…

25 வருடங்கள் அல்ல, இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள். இவர்களை சொல்லி பயனில்லை. நல்ல மருத்துவரை அடையாளம் காணாதவரை இது போன்ற இழப்புகளை நாம் சந்திக்க வேண்டியது தான்.:-(

எஸ்.கே சொன்னது…

எனக்கும் ஒரு அரசு மருத்துவமனை ஆபரேசனில் செய்த பிழையால்தான் நடக்க இயலாத நிலை ஏற்பட்டது. எங்கே நல்ல மருத்துவம் கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான்!

LK சொன்னது…

@கலாநேசன்
அவருக்கு ஞாபக மறதி வியாதி போல ? மாத்தியாச்சு

LK சொன்னது…

@ஜெயந்த்

உண்மைதான் தம்பி. நல்லவர்களை தேடுவது கடினம்

LK சொன்னது…

@பயணங்களும்

ஹ்ம்ம் ஆமாம்

LK சொன்னது…

@கவிசிவா
உண்மை

LK சொன்னது…

@அருன்ப்ரசாத்
:(

LK சொன்னது…

@அருண் பிரசாத்
சரியா சொன்னீங்க

LK சொன்னது…

@தேவா
யார் அதை செய்வது ?? அதுதான் கேள்வி

LK சொன்னது…

@தேவா
யார் அதை செய்வது ?? அதுதான் கேள்வி

LK சொன்னது…

@ஹரிஸ்
ஆமாம். நன்றி

LK சொன்னது…

@தமிழ்க் காதலன்
அந்த காலத்திலுமா ?

LK சொன்னது…

@வெங்கட்
பழங்காலத்தில் எவை சேவையாக இருந்ததோ அவை இன்று பணம் பிடுங்கும் இயந்திரமாக மாறி விட்டது

LK சொன்னது…

@கங்கா
:(

LK சொன்னது…

@சாதிகா
நன்றி

LK சொன்னது…

@கீதா
அதுவும் உள்ளது. கொங்கு மண்டலத்தில் அதிகம்

LK சொன்னது…

@செல்வா
வயதானவரின் உடல் அதை ஏற்குமா என்றுக் கூட யோசிக்கவில்லை

LK சொன்னது…

@சாதாரணமானவள்
உண்மைதான்

LK சொன்னது…

@எஸ் கே
தனியார் பணம் பறித்தால், அரசாங்கம் தவறான சிகிச்சை அளிக்கிறது . நம் நிலை ?

ஸ்ரீராம். சொன்னது…

//"...எந்த எந்த மருத்துவமனைகள் நல்ல சிகிச்சை தருகிறார்கள் என்று விசாரித்து ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துக் கொண்டால்.."//

அது அவ்வளவு சுலபமஅல்லவே...ஒருவருடைய அனுபவம் அடுத்தவருக்கு பொருந்தாது...எடை போடுவது கடினம்!!

அமைதிச்சாரல் சொன்னது…

சில டாக்டர்கள் இப்படித்தான் இருக்கறாங்க.. இவங்களால நல்லவங்களுக்கும் பேரு கெடுது..

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக்..

புது வீடும் அசத்தல்..

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

உயிர் காக்கும் பணியில் இருப்போர் இது போல் செயல்படுவது, மிக வருத்தமான விசயம்.

நாகராஜசோழன் MA சொன்னது…

இந்த மாதிரி நிலைமை ஆகியதற்கு முதல் காரணம் மருத்துவம் என்பது சேவை என்றில்லாமல் அது ஒரு தொழிலாய் ஆனது. இரண்டாவதாக அரசு மருத்துவமனைகளின் தரம். யாருமே அரசு மருத்துவமனைக்கு வந்து விடக்கூடாது என நினைத்தே மருத்துவமனைகளை நடத்துகின்றனர். அடுத்தது மருத்துவம் படிக்க ஆகும் செலவு. செலவு அதிகமாக இருப்பதால் மருத்துவர்கள் உருவாவது குறைகிறது. இதனால் இருக்கும் மருத்துவர்களையே மக்கள் நாட வேண்டியதாகிறது. (இன்னும் ஒன்று எந்த ஒரு மருத்துவரும் தனது பிள்ளையை கண்டிப்பாக மருதுவராக்காவே முயற்சி செய்வார்.)

கோவை2தில்லி சொன்னது…

எங்க ஊரிலும் இந்த அனுபவத்தை சந்தித்திருக்கிறேன். இறந்து மூன்று நாட்களானாலும் உயிரோடு இருப்பதாக கூறி பணம் பிடுங்குவார்கள். எந்த மருத்துவமனையையும் நம்ப முடியவில்லை.

பதிவுலகில் பாபு சொன்னது…

மிகவும் கஷ்டமான விசயங்க..

மக்கள் எல்லாம் இப்போ ஏதாவது சிகிச்சைக்குப் போனா எவ்வளவு பிடுங்குவாங்களோன்னுதான் பயப்படறாங்க..

நோயாளிகளை என்னமோ பிச்சைக்காரங்க மாதிரிதான் நிறைய ஹாஸ்பிடல்ல நடத்தறாங்க..

மக்களுக்கு டாக்டர்கள் மேல எல்லாம் சுத்தமா மரியாதை இல்லை இப்போ..

சுந்தரா சொன்னது…

வருத்தமான விஷயம் கார்த்திக். எவ்வளவோ பேர்பெற்ற மருத்துவமனையாக இருந்தாலும், பல நேரங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது.

ஒரு குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர், ஆறுமாசக்குழந்தைக்கு, கேப்ஸ்யூல் எழுதித்தந்து அதில் பாதி கொடுக்கச்சொல்லியிருக்கிறார் (!!!)

அதைப் பிரித்து பாதியைத் தேனில் கலந்து கொடுக்க, அடுத்த நாளே உடம்பெல்லாம் அம்மை வந்ததுபோல அலர்ஜி. அப்புறம்தான் தெரிந்தது அவர் தவறுதலாக பெரியவர்களுக்கான கேப்ஸ்யூலைக் குழந்தைக்கு எழுதிய விபரம்.

அவ்வளவும் அலட்சியம்.

சுந்தரா சொன்னது…

வருத்தமான விஷயம் கார்த்திக். எவ்வளவோ பேர்பெற்ற மருத்துவமனையாக இருந்தாலும், பல நேரங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது.

ஒரு குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர், ஆறுமாசக்குழந்தைக்கு, கேப்ஸ்யூல் எழுதித்தந்து அதில் பாதி கொடுக்கச்சொல்லியிருக்கிறார் (!!!)

அதைப் பிரித்து பாதியைத் தேனில் கலந்து கொடுக்க, அடுத்த நாளே உடம்பெல்லாம் அம்மை வந்ததுபோல அலர்ஜி. அப்புறம்தான் தெரிந்தது அவர் தவறுதலாக பெரியவர்களுக்கான கேப்ஸ்யூலைக் குழந்தைக்கு எழுதிய விபரம்.

அவ்வளவும் அலட்சியம்.

அன்னு சொன்னது…

வருந்தத்தக்க விஷயம் கார்த்திண்ணா. ஏற்கனவே அப்துல்லா பாய் வலையிலும் இதே போல் ஒரு பிஞ்சின் பரிதாப வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க முயன்றதை படித்துள்ளேன்... இன்னும் நிறைய இடங்களில் இப்படி நடக்கிறது. கிட்டத்தட்ட இதே மாதிரி என் பாட்டியின் வாழ்விலுன் செய்து, பணம் கட்டி முடிக்கும் வரை அவரின் மரணத்தை எங்களுக்கு தெரியாமலும் பார்த்துக்கொண்டது, திருப்பூரின் TMF ஹாஸ்பிடல். ஊருக்கு ஒன்றிரண்டு நல்ல ஹாஸ்பிடல் இருந்தாலே பெரிது..!!

மனோ சாமிநாதன் சொன்னது…

மிக நல்ல பதிவு!
25 வருடங்களுக்கு முன் தவறான சிகிச்சையால் உங்கள் பாட்டி இறந்து போனது எத்தனை பெரிய சோகம்! அன்றே இப்படி என்றால் இன்றைக்கு எத்தனை எத்தனை ஊழல்கள்!
இதற்கு சரியான வழி-நமக்கென ஒரு குடும்ப டாக்டரை வைத்துக்கொள்ளுவதுதான். சாதாரண உபாதைகளுக்கு அவரே சிகிச்சை தருவார். பிரச்சினை சற்று தீவிரமானது என்றால் அவரே அதற்கான மருத்துவரிடம் அனுப்பி விடுவார். நீண்ட,பல கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு நான் இப்போது இந்த வழியைத்தான் எங்கள் குடும்பத்திற்கு கடைபிடிக்கிறேன். இதைப்பற்றி நானும் ஒரு நீண்ட பதிவு எழுதியிருக்கிறேன்.
http://muthusidharal.blogspot.com/2010/08/blog-post_30.html
டாக்டர். சேதுராமன் [தலைவர், ஜிப்மர் மருத்துவ மனை, பாண்டிச்சேரி] பல எதிர்ப்புகளிடையே இந்த மாதிரி மருத்துவர்களே மக்களுக்கு செய்யும் அநியாயங்கள் பற்றி தனது ' போஸ்மார்ட்டம்' என்ற நூலில் தோலுரித்துக்காட்டியுள்ளார். அவரும் 'குடும்ப மருத்துவர்' என்பது எத்தனை முக்கியம் ஒவ்வொருத்தருக்கும் என்பதை வலியுருத்தியிருக்கிறார்.

சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு.

vanathy சொன்னது…

பணத்திற்காக எதையும் செய்யும் மனநிலை மாற வேண்டும். என் உறவினரின் அம்மா ( மிகவும் வயசானவர் ) இறந்து போக, பணம் குடுத்தால் தான் உடலைத் தருவோம் என்று திருச்சியில் ஒரு மருத்துவமனையில் கண்டிப்பாக சொல்லி விட்டார்களாம். செய்யாத வைத்தியம், அந்த மருந்து, மாத்திரை என்று பல ஆயிரங்கள் வாங்கிய பின்னர் தான் வேலை முடித்து அனுப்பினார்களாம். இந்த மருத்துவர்கள் இந்த ஜென்மத்தில் திருந்திவார்களா என்பது கேள்விக்குறி.

asiya omar சொன்னது…

உயிரின் மதிப்பு தெரியாதவர்களை மருத்துவர்கள் என்று சொல்வதற்கு தகுதியில்லாதவர்கள்.

kunthavai சொன்னது…

:(

But we can take some precaution like
1. try to get more information about the disease and the medication from the doctor.
2. doble check the medicine
3. Avoid high dosage.

ஹுஸைனம்மா சொன்னது…

ரொம்ப வருத்தமா இருக்கு. இப்பவும் அப்படித்தான் இருக்கு சில இடங்களில். குடும்ப மருத்துவரின் அவசியம் இப்பத்தான் தெரியுது.

Harini Sree சொன்னது…

miga sariyaga soneergal enakkum ithu pola oru kathai irukkirathu idugayil idugiren koodiya viraivil! :)