நவம்பர் 12, 2010

கண்கெட்டப் பின்

நகரமும் இல்லாது கிராமமும் இல்லாத ஒரு டவுன். அங்கு பிரதான சாலையில் அவனது தேனீர் கடையும் ,அதனுடன் இணைந்த சிறு பெட்டிக் கடையும் அமைந்திருந்தது. அது சிறு நகரம் அதனால் கடைக்கு வருவோரை நன்கு பரிச்சியம் உண்டு. காலையில் சுறுசுறுப்புடன் காசை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டிருந்த அவன் ,கடைக்கு வந்த ராஜுவை பார்த்து புன்னகைதான். வழக்கம் போல், ஒரு கோல்ட் பில்டரை எடுத்து நீட்ட , ராஜு அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு "டீ மட்டும் போதும் "என்றான் .டீ குடித்துக் கொண்டிருந்த ராஜுவையே பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய மனதில் பழைய நினைவுகள் ஓடத் துவங்கின . ராஜு, கல்லூரி காலத்தில் இருந்தே அந்தக் கடைக்கு தினசரி வருபவன். முதலில் வேலைக்கு ஒன்றாக துவங்கிய புகை பின் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்றளவிற்கு போனது. புகையை தவிர

வேறு கெட்டப் பழக்கம் இல்லாத இளைஞன் ராஜு.கல்லூரி முடித்து நல்ல வேலை பின் திருமணமும் முடிந்தது. திருமணம் முடிந்த பின்னும் மாறவில்லை ராஜுவின் பழக்கம். குழந்தைப் பிறந்த பின்னும் பழைய ராஜுவாக புகை மன்னனாக வலம் வந்தான்.

பழைய நினைவில் மூழ்கி இருந்தவனை உலகுக்கு கொண்டு வந்தது ராஜுவின் குரல் .

"அண்ணே, இந்தாங்க டீக்கு காசு "

"சரி ராஜு".கடையில் இருந்து சென்றவனை பார்த்தவண்ணம் மீண்டும் பழைய நினைவில் மூழ்கினான் . அந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் இருக்கும் . ஒரு ஞாயிறு . மாலை நேரத்தில் விடுமுறைக்கான சோம்பலில் மூழ்கிக் கிடந்தது வீதி. தன் நான்கு வயது மகளுடன் வந்த ராஜு, மகளை வீதியின் மறு பகுதியில் நிறுத்தி விட்டு வீதியை கடந்து கடைக்கு வந்தான் ."ஏம்பா , குழந்தையை அந்தப் பக்கம் விட்டுட்டு வர . ஒண்ணா, இங்க கூட்டிகிட்டு வந்திருக்கணும். இல்லாட்டி வீட்டிலேயே விட்டு வந்திருக்கணும் ""ஒன்னும் ஆகாது அண்ணே. நீங்க சிகரட்டை கொடுங்க ".வாங்கி பற்றவைத்து திரும்பியவன், தன் மகள் ரோட்டை கடக்க முயல்வதைப் பார்த்து ,பதற்றத்துடன் அந்தப் பக்கம் போக முயல, அதற்குள் நெரிசல் இல்லா சாலையில் வேகத்துடன் வந்த கார் அந்த சிறுமியை மோதி வீசியது.

அதிர்ச்சியில் ராஜு சிலையாய் உறைந்தான்.நிகழ்காலத்திற்கு திரும்பியவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான் "சிலருக்கு பட்டால்தான் உறைக்கிறது".

அன்புடன் எல்கே

45 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

அருமையான கதை!

Balaji saravana சொன்னது…

அலட்சியத்தால் வந்த வினை :(

சௌந்தர் சொன்னது…

சிலருக்கு பட்டால்தான் உறைக்கிறது".///

ஆமா சிலருக்கு பட்டால் தான் புரியும் பட்டபிறகு புரிந்தால் என்ன புரிய வில்லை என்றால் என்ன...?

RVS சொன்னது…

//மாலை நேரத்தில் விடுமுறைக்கான சோம்பலில் மூழ்கிக் கிடந்தது வீதி.//
நல்லா இருந்தது.. ;-)

ஹரிஸ் சொன்னது…

அருமை..தொடருங்கள்..

அமைதிச்சாரல் சொன்னது…

கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

”கண்கெட்ட பின்னே சூரிய உதயம் எந்தப் பக்கம் போனால்” என்ற பாடல்வரிகள் நினைவுக்கு வந்தது. கதை நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

கீதா சாம்பசிவம் சொன்னது…

ரொம்பவே மனசுக்குக் கஷ்டமா இருக்கு. :((((

அது சரி, முன்னே ஒரு கதை ஆரம்பிச்ச நினைவு. அது என்ன ஆச்சு??

ப.செல்வக்குமார் சொன்னது…

நல்லா இருக்கு அண்ணா .! கருத்துள்ள கதை ..!!

ஹேமா சொன்னது…

கார்த்திக்...நல்ல முயற்சியும் கதையும்.பாராட்டுக்கள் !

கோவை2தில்லி சொன்னது…

நல்ல கதை. பாராட்டுகள்.

வெறும்பய சொன்னது…

நல்ல கதை அண்ணா...

வித்யா சொன்னது…

நல்லாருக்கு.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

படிப்பினை! நல்லா இருக்கு கார்த்திக்.

dheva சொன்னது…

கதையில்.....குழந்தையை கூட்டிட்டு வந்து அசால்டாக இருந்தது தவறு என்ற கோணத்தில் நான் படித்தேன். வெளியில் குழந்தைகளை கூட்டிக் கொண்டு வந்தால் முழுக்கவனமும் இருக்க வேண்டும் என்ற மட்டில் விளங்க முடிந்தது.

அதே நேரத்தில்...சிகரெட் குடிப்பதை பற்றிய ஒரு டின்ச் வைத்து இருந்தால் தேவலாம் என்று நினைத்தேன்...அதுவும் மறைமுகமாக சொல்லியிருக்கீங்க...! புகைப்பிடித்தல் தீங்கானது அதே நேரத்தில் வெளியில் பிள்ளைகளை அழைத்து வரும்போது முழுக்கவனம் தேவை.

நல்ல முயற்சி பாஸ்!!!!!!

நாகராஜசோழன் MA சொன்னது…

சுருக்கமா கச்சிதமாக சொல்லி இருக்கீங்க.

Mrs.Menagasathia சொன்னது…

கதை நல்லாயிருக்கு எல்கே!!

அருண் பிரசாத் சொன்னது…

நச் கதை

ஸ்ரீராம். சொன்னது…

கொடுமையான நீதியா இருக்கு...பாவம் குழந்தை...

LK சொன்னது…

@எஸ்கே

நன்றி

LK சொன்னது…

@பாலாஜி

ஆமாம்

LK சொன்னது…

@ஆர்வீ எஸ்

அது மட்டும்தானா

LK சொன்னது…

@ஹரிஸ்

நன்றி

LK சொன்னது…

@சாரல்

ஆமாம்

LK சொன்னது…

@வெங்கட்
உண்மைதான் நன்றி

LK சொன்னது…

@கீதா

இன்னும் ஞாபகம் இருக்கா ??

LK சொன்னது…

@செல்வா
நன்றி

LK சொன்னது…

@ஹேமா

நன்றிங்க

LK சொன்னது…

@கோவை

நன்றி

LK சொன்னது…

@ஜெயந்த்

நன்றி

@வித்யா

நன்றி

LK சொன்னது…

@சை.கொ.ப

ஆஹா ,கதாசிரியரிடம் இருந்து பாராட்டா நன்றி

LK சொன்னது…

@தேவா

பாஸ் ரெண்டுமே தவறு. புகைப் பிடித்தாலே தவறு,. இதில் மகளை வேறு அழைத்து வந்து அவளை தனியே விட்டுவிட்டு வந்து புகைப்பிடித்தல் ரொம்பத் தவறு

LK சொன்னது…

@சோழன்

என்னப்பு கொஞ்ச நாளா காணோம் ?? நன்றி

LK சொன்னது…

@மேனகா
nandri

LK சொன்னது…

@அருண்

நன்றி

LK சொன்னது…

@ஸ்ரீராம்

அண்ணா , ஒரு சிலர் இப்படி நடந்தால்தான் திருந்துகிறார்கள்

Nithu Bala சொன்னது…

நல்ல கதை:-)

Sethu சொன்னது…

ஒரு நல்ல கதைங்கற பாராட்டுக்காக ஒரு சிறுமியை கதையில் கூட பலி கொடுக்க மனசு வரவில்லை. என்ன கார்த்திக் இது? பேசாமல் கடந்து போகிறேன்.

LK சொன்னது…

@சேது

இது கதை அல்ல. நிஜத்தில் நடந்த ஒன்று,. அதை சிறிது மாற்றி இங்கே கொடுத்து இருக்கிறேன்

philosophy prabhakaran சொன்னது…

நெகிழ்ச்சியான கதை... ஏன் இப்படி கண் கலங்க வைக்கிறீங்க...

Gayathri சொன்னது…

பீல் பண்ண வச்சுட்டீங்களே...

அஜாக்ரத்தை கூடாதுதான்

angelin சொன்னது…

very nice .i thought you are going to end it up with effects of passive smoking.. prevention is better than cure and care.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அலட்சியம் ஆபத்து என்பதை விறுவிறுப்பான சிறுகதையில் சொல்லி இருக்கீங்க..சூப்பரா இருக்கு

ஹுஸைனம்மா சொன்னது…

கதையே என்றாலும் இப்படியொரு முடிவு ஏன் என்று எழுத நினைத்தேன். ஆனால், இது உண்மை நிகழ்வென்று சொல்லி பதற வைத்து விட்டீர்கள். கொடுமையான வேதனை. அவன் தவறுக்கு, இருவருக்குத் தண்டனை (குழந்தை, தாய்).

vanathy சொன்னது…

super story.