முதல் முதலாக என் தளத்தில் சினிமா சம்பந்தப் பட்ட பதிவைப் போடுகிறேன். சினிமா பத்தி எழுதறதுன்னு முடிவு பண்ணவுடனே , முதலில் யாரை பற்றி எழுதுவது...
கொஞ்ச நாளா டல் அடிச்சிட்டு இருந்த கோடம்பாக்கம் வட்டாரமே இப்ப பரபரப்பில இருக்குனா அதுக்கு தலைவரோட எந்திரன் படம்தான் காரணம்.
முக்கியமா, காசு கொடுத்து படத்தை பார்க்க வரவங்க யாரையும் அவர் படம் ஏமாத்தாது. கொடுத்த காசுக்கு முழு வசூல் இருக்கும். யாரெலாம் அவரோட ரசிகர்கள் ?? ஒரு குறிப்பிட வயதை சார்ந்தவர்களா இல்லை எல்லாருமா ? அப்படின்னு கேட்டா மூன்று வயது குழந்தை முதல் அறுபது வயது முதியவர்கள் வரை எல்லோரும் அவர் படத்தை ரசிக்கறாங்க. அதுக்கு என் அப்பாவும் என் இரண்டரை வயது பெண்ணும் சிறந்த உதாரணம் . பொதுவா சினிமா பார்க்காத என் தந்தை ரஜினி படமா இருந்தால் உக்காந்து முழுசா பார்ப்பார்.
எந்திரன்ல ரஜினி கூட்டு சேர்ந்து இருக்கறது ஷங்கர் மற்றும் ஐஸ்வர்யா . ரஜினி மட்டும் இருந்தாலே பிரம்மாண்டம் இதில் ஷங்கர் வேற ? கேட்கனுமா படம் , இது வரை தமிழ் படங்களை விட பல மடங்கு பிரம்மாண்டமாய் இருக்கப் போவது நிச்சயம். ரசிகர்கள் தலைவரோட அடுத்த பிரம்மாண்ட படைப்பை பார்த்த திருப்தியில் மகிழப் போகின்றனர்.
நான் வெகு நாள் கழித்து பார்க்கப் போகும் படமும் இதுவே. கண்டிப்பா குடும்பத்தோட போய் பார்க்கப் போகிறேன். அது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. தலைவர் படம் வெளியானா எல்லாருக்கும் மகிழ்ச்சிதான், ஒரு சிலரை தவிர்த்து.
வருடத்தில் ஒரு மாதம் , ஒரு நாள், ஒரு வேளை எந்திரன் பார்ப்பதால் எனது குடும்பப் பொருளாதாரம் தாழப் போவது இல்லை. படம் பார்க்காம இருந்த அந்த நேரத்தில நான் பெருசா புரட்சி ஒன்னும் பண்ணிடப் போறதும் இல்லை. வீட்ல சும்மா இருக்கறதை விட, குடும்பத்தோட ஒரு மூணு மணி நேரம் நல்லா பொழுது போக்கலாம் படத்துக்குப் போனால். தினம் தினம், நமது இயந்திர வாழ்க்கையில் வெந்து கொண்டு இருப்பதற்கு தலைவர் படம் ஒரு மாறுதல் தரும் , குறைந்தபட்சம் அந்த மூணு மணி நேரமாவது.
சமூகத்தில் ஒரு சிலர் இருக்கின்றனர். அடுத்தவங்களை குற்றம் சொல்லியே பெயர் வாங்கற ஆட்கள். அடுத்தவன் என்ன செஞ்சாலும் குற்றம் சொல்லும் ஆட்கள் இவர்கள். இவர்களை திருத்த முடியாது
எந்திரன் படம் பார்ப்பேன் என்போர் அனைவரும் இந்தப் பதிவில் இருக்கும் படத்தை தங்கள் வலைத்தளங்களில் இணைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் ..
ரஜினியை பத்தி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் . எனவே இதை ஒரு தொடர் பதிவா மாத்தறேன். இதை தொடர நான் அழைப்பது முகிலன், சேட்டைக்காரன் மற்றும் சித்ரா
அன்புடன் எல்கே
57 கருத்துகள்
நானும் எந்திரன் பார்ப்பேன்...
மறுபடியும் ஒரு தொடர் பதிவா?? ம்ம் நடத்துங்க நடத்துங்க...
நான் கண்டிப்பாய் பார்பேன்... இங்க மொரீசியஸ்ல வராது. ஆனாலும், நெட்ல டவுன்லோட் பண்ணியாது பார்ப்பேன், சென்னை வ்ரும் போது கண்டிப்பாய் சத்யம் போய் பார்பேன்
கரீக்ட்டும்மா! அதைப் பார்க்கிறத வுட வேறே இன்னா வேலை? பாத்தே ஆவணும்! பாத்திருவோம்! இன்னாண்றே?
என்னது கார்திக்...இப்ப தான் தொடர் பதிவுக்கு பதில் எழுதலாம் என்று நினைத்தால்....இதுவும் ஒரு தொடர் பதிவா...சூப்பர்ப் தான்...
பார்க்கணும் எல் .கே கண்டிப்பா பார்க்கணும் ...நம்ம வாத்தியார் கதைக்காகவே ...டைரக்டர் சங்கர் ,நம்மள மாதிரியே வாத்தியாரோட விசில் ரசிகர் .... கண்டிப்பா எமாத்தமாட்டார் ...ஐசு வேற இருக்காங்க ...இன்னம் என்ன வேணும் ?
கடைசில தலைவர் படம் பார்க்கறதுக்கு கூட காரணமெல்லாம் சொல்ல வைச்சுட்டாங்களே :(
@கலாநேசன்
நன்றிங்க
@மேனகா
ஆமாம்
@அருண்
இது ரசிகனுக்கு அழகு..
@சேட்டை
அஹங்கறேன். கரீக்டுமா
@கீதா
ஹிஹி.
@பத்மநாபன்
இன்னும் என்ன என்னவோ வேணுமாம்..
@பாசகி
என்னங்க பண்றது. இவங்க சொல்றதுக்காக யாரும் படம் பார்க்காம இருக்கப்போறது இல்ல.. முதல் வருகைக்கு நன்றி
வருடத்தில் ஒரு மாதம் , ஒரு நாள், ஒரு வேளை எந்திரன் பார்ப்பதால் எனது குடும்பப் பொருளாதாரம் தாழப் போவது இல்லை.////
ரொம்ப சரியா சொன்னிங்க நானும் இந்த படம் பார்ப்பேன்
யாருய்யா அது எங்க தலயை படம் பாக்க வேனாமுன்னு மிரட்டியது....ராஸ்கோல்..பிச்சி புடுவேன் பிச்சி...
தைரியமா போங்க தல ..நா இருக்கேன்
:-)
http://konjamvettipechu.blogspot.com/2010/03/blog-post_23.html
....நான் ஏற்கனவே ரஜினி பற்றி அப்போ அப்போ எழுதுக்கிட்டு வரேன்..... இனி, எந்திரன் பார்த்ததும்....... மீண்டும்...... பூம் பூம் ரோபோடா....!!!
நானும் பார்ப்பேன்!...
பிரபாகர்...
aduththa thodaraa? Good!!!!
நல்ல ஆரம்பம். நானும் பாப்பேன். ஆனா எப்போன்னுதேன் தெரியலை. எனக்கும் முதல் நாள் முதல் டிக்கெட் வகைகளுக்கும் ரெம்ப தூரம். ஆனால், கண்டிப்பா பார்த்தபின் பதிவிருக்கும்!
நானும் பார்ப்பேன்!...
ஆமா...இப்ப யாரு உன்னை படத்தை பார்க்கவேணமாம்னு சொன்னது...என்ன கொடுமை சாமி இது....
ஓடுங்க ஓடுங்க அது வந்துட்டு இருக்கு...
நான் தொடர்பதிவை சொன்னம்பா...:))
@பாலச்சந்தர்
ஆமாம் சார் . நான் விளம்பரம் பண்ணாட்டி அந்தப் படம் பத்தி யாருக்குமே தெரியாம போய்டும். நான் விளம்பரம் பண்ணிட்டேன் எனக்கு ரஜினி ஒரு கோடி தரப்போறார். எங்களுக்குப் பிடிக்கும் நாங்க பார்க்க போறோம். உங்களுக்கு பிடிக்காட்டி அதை பத்தி ஏன் சார் விழுந்து விழுந்து இவ்வளவு தகவல் திரட்டி அதை எழுதறீங்க. வினவை படித்தப் பிறகுதான் இதை நான் எழுதினேன் . நன்றி
//சமூகத்தில் ஒரு சிலர் இருக்கின்றனர். அடுத்தவங்களை குற்றம் சொல்லியே பெயர் வாங்கற ஆட்கள். //
இவங்கலும் எந்திரன் பார்ப்பார்கல்.
கண்டிப்பாக பார்ப்போம் !!!!
அப்படியே இந்த பதிவை படித்து சொல்லுங்கள் யார் இந்த வினவு என்று ????
http://sri1982-srihari.blogspot.com/2010/09/blog-post_17.html
கண்டிப்பா நானும் பாப்பேன்..
ரைட்டு!
சான்ஸ் கிடைத்தால் நானும் பார்ப்பேன்.
@BalaChandar:
I think you guys have some psychological problem...thats the reason you are thinking in a different way....you guys haven't done any thing for the society but still u guys talk as though you are the survivor for the society...
nice post friend..
rajini padam release agumpothu mattum thaan ivargal namma naattu porulaathaara nilai paarppaargal!! avar padatthai paartthal,yetho,india economic down agidum pola katharuvaargal!! oru manmatha ambukko,kaavalanukko padam release aagum mun vimarsanam elutha maattaargal!! ivarkal yaar thalaivar padatthai boycot seiya solvatharku? they r doin jus cheap publicity,..blog la famous aganumna,enthiran thalaippu vaithu,rajiniyai thittiyo,allathu enthiran ar rahmanai thittiyo(note this..only enthiran rahman!! not other movies frm him!!) eluthinaal,avnga periya hit!!! so rajini peyar use pannikiraanga!! ivanga mattum illa!! vikadan group kooda ithila irukku!!
avvalavu perukku oru ton gelusil koduthaalum kaanaathu!!
ivanga enna solrathu? naan london la irukken...10 thadavai 250 pounds kodutthu paarppen!! (£25 ticket vatchaalum)...entha entha blogger boycot panna solraangalo...avangale muthal show padam paarpaanga enbathe unmai..avanga blog famous panna ipdi eluthuraanga!! so ivangalai care panna vendiya avasiyam illa!!! poraamai piditchavanga!
நானும் பார்ப்பேன்னு சொல்லணுமா?
Naanum thaan paarpaen.. :)
@பாலச்சந்தர்
சமூக அக்கறையோட பதிவுகள் வேணும்னா அதுவும் எழுதி இருக்கேன். நீங்க என் பின்னூட்டம் போட வரலை அப்ப??? மக்களே உஷார் நு பல பதிவுகள் எழுதி இருக்கேன் . படிச்சு பாருங்க. சும்மா ஒரு பதிவை படிச்சிட்டு பேசக் கூடாது .
@சௌந்தர்
நன்றி
@ஜெய்
நீங்க இருக்கற தைர்யதுல போறேன்
@சித்ரா
ரைட்டு
@பிரபாகர்
நன்றி
@தெய்வ சுகந்தி
நன்றி
@அன்னு
நன்றி
@நாஞ்சில்
எலேய் பாத்துக்கலாம்
@சூரி வாசு
நன்றி
@நசரேயன்
நன்றி
@ஸ்ரீஹரி
பார்கிறேன் நண்பரே
@காயத்ரி
சரி . நன்றி
@வேல்ஜி
நன்றி
@ஆசியா
நன்றி
@ராஜ்
சரியா சொன்னீங்க
@டீன்
அப்படிப் போடு அரிவாளை
@முகிலன்
:))
@ஆனந்தி
நல்லது
எல்கே, ஏன் பார்த்தா என்ன? எனக்குத் தான் ஒன்றுமே விளங்கவில்லையா?. நான் எல்லாப் படமும் டிவிடியில் பார்ப்பேன். இதையும் பார்த்திட்டா போச்சு.
ஆஹா தொடர் பதிவா...
எப்படியும் இந்தியாவில படம் ரிலீஸ் ஆகுறதுக்கும் ஒரு நாள் முன்னாடியே நான் படம் பாத்திருவேன்...
எல்லோரும் படம் பார்க்கத்தான் போறோம்...
சுஜாதா பெயர் பற்றி பதிவுல மிஸ்ஸிங். பெருமையில் அவருக்கு பெரும் பங்குண்டு..!
intha padam velivarrathile sile perukku porukka mudiyama irukku yennu theriyelle namma padam india poora athukku melayum olagam poora pesapadurathile namma santhosa padrethe vituttu sela natharipasangalukku yen intha vayiteruchchalnnu puriyela
namum enthiran paarpen
enaku Eluda aasai than. aaana karutha tamilla eppadi type panradunnu theriyala..
எந்திரன் படத்திற்கு என் ஆதரவு உண்டு.
எந்திரன் இந்திய அளவிலின்றி, உலக அளவிலும் சாதனை படைக்க வாழ்த்துகிறேன்....
:)))))))))
தில்லியில் ரீலீஸ் ஆகும் பட்சத்தில் நானும் பார்ப்பேன்.... :)
வெங்கட்...
கருத்துரையிடுக