தேடலின் பதிவுகளை படித்துவிட்டு ஒருவர் என்னிடம் கீழ் கண்ட கேள்வியை கேட்டார் "பற்று இருக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால், ஒரு தாய...
"பற்று இருக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால், ஒரு தாய் தன் குழந்தை மேல் பாசமும் பற்றும் இல்லையெனில் எவ்வாறு வளர்க்க இயலும் "
பற்று பாசம் இரண்டிற்கும் வித்யாசம் உள்ளது. இதற்கும் உதாரணம் உண்டு. அத்வைத சித்தாந்தத்தை தோற்றுவித்த ஆதி சங்கரர் சன்யாசம் வாங்கினார். ஆனால் தனது தாயாருக்கு ஒரு உறுதி மொழி அளித்தார் . உனக்கு நான்தான் அந்திமக் காரியங்கள் செய்வேன் என்று. இங்குதான் அந்த வேறுபாடு உள்ளது. அவருக்கு பற்று இருந்தால், சந்நியாசம் வாங்கி இருக்க இயலாது. அப்படியே சந்நியாசியாக சென்றிருந்தாலும் அவரால் இவ்வளவு சாதித்து இருக்க இயலாது. அவருக்கு இருந்தது பாசம் மட்டுமே. ஒரு பொருளின் மீது பற்று வந்தால், மனம் அதை பற்றியே சதா சர்வ காலமும் நினைக்கும்.
ஒரு குழந்தையை வளர்க்க பாசம் இருந்தால் போதும், பற்று தேவை இல்லை. ஒரு உதாரணம் (உதாரணம் மட்டுமே ) அந்தக் குழந்தைக்கு உடல் நலம் குன்றினால், பற்று அற்றவர்கள் எதனால் உடல் நலம் குன்றியதோ அதை சரி செய்ய மட்டுமே விளைவர், தேவை இன்றி அழுது புலம்புதல் இருக்காது. ஏன் என்றால் அவர்களுக்கு தெரியும் இதுவும் ஒரு மாயை என்று .("காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா")
பற்று இருந்தாலோ, அழுது புலம்பி வேறு விஷயங்களில் கவனம் இல்லாமல் அதை மட்டுமே யோசிப்பர்.
இங்கு வேறு ஒன்றையும் சொல்ல வேண்டும். நம்மை போல் சம்சார வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இந்த பற்றை கடந்து செல்லுவது மிகக் கடினம். இதற்க்கு ராமயாணத்தில் வரும் ஒரு இடம் சிறந்த உதாரணம், மாரிசன் பொய் மானாக உருவெடுத்து வரும் பொழுது, ராமருக்கு அது அரக்கர்களின் சூழ்ச்சியோ என்ற சந்தேகம். இருந்தாலும், தன் மனைவி முதல் முறையாக ஒன்றை கேட்டு விட்டாலே அதை தர வேண்டாமா ? என்ற மனைவியின் மேல் இருந்த பற்றுதான் அவரை அதை துரத்தி செல்ல வைத்தது. அதுவே பின் நிகழ்ந்த சோகத்துக்கும் காரணம்.
அடுத்தக் கேள்வி " இவ்வாறு எதிலும் பற்று இல்லாமல் இருந்தால் சமூகம் கேலி செய்யாதா ??"
பற்று அறுத்தவர்களுக்கு மற்றவர்களின் தூஷனை பற்றி கவலை இல்லை. எப்பொழுது அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்று நினைக்கிறோமோ அப்பொழுது நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது என்றே அர்த்தம் . அடுத்தவர்கள் வார்த்தை நம் மனதை பாதிக்கக் கூடாது. அந்த அளவுக்கு மனம் பண்பட வேண்டும்.
வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் , கேளுங்கள் பதில் அளிக்கிறேன்
அன்புடன் எல்கே
9 கருத்துகள்
பற்றற்றவர்களுக்கு மற்றவர்கள் சொல்வதை பற்றி எந்த கவலையும் இல்லைதான். ஆனால் பற்றற்றவர்களின் வாழ்க்கை அர்த்தமற்று போகிறதே?
உங்க கருது சரி தான் ஆனா பின்பற்றுவதுதான் சரமம்..முயன்று பார்கிறேன்
நல்லாத்தான் இருக்கு.ஞானிகளால் முடிந்தது நம்மால் முடியுமா? முயன்று பார்க்கவேண்டிய ஒன்று..
ஒரு குழந்தையை வளர்க்க பாசம் இருந்தால் போதும், பற்று தேவை இல்லை. ஒரு உதாரணம் (உதாரணம் மட்டுமே )////
நல்ல விளக்கம்
நல்லா இருக்கு கார்த்தி ....
//எப்பொழுது அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்று நினைக்கிறோமோ அப்பொழுது நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது என்றே அர்த்தம் . அடுத்தவர்கள் வார்த்தை நம் மனதை பாதிக்கக் கூடாது. அந்த அளவுக்கு மனம் பண்பட வேண்டும்.///
ஹ்ம்ம்.. நல்லா இருக்குங்க..
:)
நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்...
பற்று என்பது இவன் என்னுடையவன், இந்தக் குழந்தை என்னுடையது, அதனால் நான் சொல்றதைக் கேட்கணும் என்று எதிர்பார்க்கும் அளவுக்குப் போகும். ஆளுமையை உண்டாக்கும். வெறும் பாசம் மட்டும் வைத்தால் அவங்க தேவைக்கு நாமும், நம் தேவைக்கு அவங்களும் உதவிக்கலாம். உதவலைனாலும் மனதைப் பாதிக்காது.
நம் விருப்பத்தை மற்றவர்கள் மேல் திணிப்பதும், நாம் செய்த உதவிகளுக்குத் திரும்ப பலனை எதிர்பார்ப்பதும் பற்றுத் தான்! கொஞ்சம் இல்லை, நிறையவே கஷ்டம், நடைமுறையில் கொண்டு வர. நீ என்ன கல்லா? இரக்கமே இல்லையானு எல்லாம் கேட்பாங்க. எல்லாத்தையும் தாண்டி வரணும்.
கருத்துரையிடுக