ஜூலை 04, 2010

கால் சென்டர் VI

வேலை நேரங்களை பற்றி ஹுசைனம்மா கேட்டிருந்தார்கள். அதை பத்தி எழுதலாம்னு  நினைச்சப்ப இரண்டு நாளா ஆணி ரொம்ப ஜாஸ்தியா போய்டுச்சு. அதுவும் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு கிளம்பும் பொழுது நேரம் இரவு ஒரு மணி. :(

கால் சென்டர்ல வேலை செய்யறவங்களுக்கு ஏற்படற பல பாதிப்புகளுக்கு முக்கியக் காரணம் சுழற்சி நேர வேலை. அதாவது, வாரம் ஒரு முறை நீங்கள் வேலை செய்யும் நேரம் மாறும். ஒரு உதாரணத்துக்கு , இந்த வாரம் மாலை 6.30-அதிகாலை 3.30 வரை உங்கள்பணி நேரம் என்றால், அடுத்த வாரமோ இல்லை இரு வாரங்கள் கழித்தோ உங்களது பணி நேரம் மாறும். அது  எப்படி  வேண்டுமானாலும்  இருக்கலாம். நள்ளிரவு 12.30 - காலை 9.30 அல்லது அதிகாலை 3.30 மணி - மதியம் 12.30 இப்படி எவ்வாறு வேண்டுமானாலும் மாறலாம்.

இரவு நேரப் பணியின் நன்மைகள் 

இரவில் பணிக்கு செல்வதால், வங்கி மற்றும் அரசு அலுவலகங்கள் செல்வது போன்ற வேலைகளை முடிக்கலாம். இதற்கென்று விடுப்பு எடுக்கத் தேவையில்லை.

பகலில் தூங்கியது போக இருக்கும் நேரத்தில் எதாவது மேற்படிப்பு படிக்கலாம்.

அதிகப் படியான சம்பளம்

வீட்டிற்கே வந்து அழைத்துச் செல்லும் கார் வசதி.

இரவு நேரப் பணியின் பாதகங்கள் 

நமது உடல் அமைப்பானது இயற்கையாக இரவு உறங்கி பகலில் விழித்திருப்பதற்கு ஏற்ப உள்ளது. இரவு நேரம் வேலை செய்வதால் அதன் இயக்கம் பாதிக்கப் படும். முக்கியமாக பாதிப்புக்கு உள்ளாவது சாப்பிடும் நேரம் மற்றும் உணவு. 

கண்ட நேரத்திற்கு சாப்பிடுவதால் சரியாக செரிமானம் ஆகாமல், வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அடுத்து அலுவலக காண்டீனில் இவர்கள் சாப்பிட செல்லும் நேரம் எதவும் இல்லை என்றால், கப் நூடுல்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதாலும் உடல்நலம் பாதிக்கப்படலாம்.

பகல் நேரத்தில் உறங்கிக் கொண்டிருப்பதால், நட்பு வட்டாரம் சுருங்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடமும் அதிகம் பழக வாய்ப்பு குறையும். இது மிகப் பெரிய பாதகம். வெளிவட்டாரத் தொடர்பே அற்றுப் போய்விடும்.

பொதுவாக, இரவு நேரப் பணியில் , பாதகங்கள் அதிகம் இருந்தாலும், அதில் கிடைக்கும் சம்பளம், விரைவான வளர்ச்சி அதை விரும்புவர் அதிகம். பலர் விரும்பி சேர்ந்தாலும், அதில் தாக்குப் பிடிக்க முடியாமல், இந்தத் துறைக்கே முழுக்குப் போட்டுவிட்டு செல்பவர்களும் உண்டு. நான் யாருக்கும் இந்தத் துறையை சிபாரிசு செய்ய மாட்டேன், குறிப்பாக பொறியியல் பட்டதாரிகளுக்கு.

கால் சென்டரில் பொதுவாக இரண்டு வகை போன்கள் உபயோகப் படுத்தப் படுகின்றன. நாம் உபயோகிக்கும் சாதரணமான போன்கள் அங்கு உபயோகிக்க இயலாது. அதற்கென்று IP போன்கள் உள்ளன. பல நிறுவனங்கள் இத்தகைய போன்களை தயாரித்தாலும், அதிகம் உபயோகிக்கப் படுவது Avaya மற்றும் Nortel நிறுவனத்தின் போன்களே.

வாடிக்கையாளர் அந்த நிறுவனத்தின் சேவை எண்ணை அழைத்தவுடன் , அவரது அழைப்பு, போன் செர்வரின் வழியாக  முதலில் IVR க்குப் போகும் . பின்பு அங்கு அவர் தேர்வு செய்யும் விருப்பத்தினை பொருத்து சம்பந்தப்பட்ட பிரிவில், யாரவது ஏஜெண்ட்ஸ் அழைப்புகள் இல்லாமல் இருக்கிறார்களா  என்று பார்க்கும், அப்படி யாரும் ப்ரீயாக இல்லாதப் பட்சத்தில், அவரது அழைப்பு, ஹோல்டில் இருக்கும். வாடிக்கையாளருக்கு, வெறும் சங்கீதம் ஒலிக்கும், எப்பொழுது அவரது அழைப்பு ஏஜெண்டுக்கு மாற்றப்படுகிறதோ  அப்பொழுது அந்த சங்கீதம்  நின்று விடும்.

இவ்வாறு  எத்தனை அழைப்புகள் வருகின்றன,அவற்றில் எத்தனை அழைப்புகள் ஏஜெண்டுக்கு வருமுன் துண்டிக்கப் படுகின்றன , எத்தனை அழைப்புகள் queue இல் உள்ளன போன்றவற்றை அதற்குண்டான போன் செர்வர் மென்பொருள் மூலம் பார்க்கலாம்.


With Love LK

58 கருத்துகள்:

Kousalya சொன்னது…

இரவு நேர கண் முழிப்பு என்பது சிரமம்தான். இருந்தும் சிலர் விரும்பி பணி புரிவதால் இந்த சிரமம் தெரியாது என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு விசயத்தையும் மிகவும் தெளிவாக விளக்குகிறீர்கள். நல்ல பதிவு.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நல்ல தகவல்கள் தொடருங்கள் ...

கலாநேசன் சொன்னது…

நல்பதிவு.

LK சொன்னது…

@கௌசல்யா
//இருந்தும் சிலர் விரும்பி பணி புரிவதால் இந்த சிரமம் தெரியாது என்று//

தெரியாமல் இல்லை. பணம் தான் முக்கியக் காரணம்

:))

LK சொன்னது…

@செந்தில்

வருகைக்கு நன்றி

@கலாநேசன்

நன்றி சார்

ராம்ஜி_யாஹூ சொன்னது…

nice, reading your post gave the feeling oF watching the film -OUTSOURCED

LK சொன்னது…

நன்றி ராம்ஜி . நான் இது வரைக்கும் அந்தப் படத்தை பார்க்கவில்லை

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல தகவல்கள்!!!

Harini Sree சொன்னது…

Migavum ubayogamaana thagavalgal! :)

Mrs.Menagasathia சொன்னது…

நல்ல பதிவு!!

பெயரில்லா சொன்னது…

படங்களோடு நல்ல விளக்கவும் தந்த கார்த்திக்கு நன்றி ...லேட்டா பதில் எழுதினதுக்கு மன்னிக்கவும் ...இங்கே கம்ப்யூட்டர் ரிபயர் ஆச்சு அதான் லேட் .

ஹேமா சொன்னது…

இரவு நேரப் பணியால் வரும் நன்மையும் தீமையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் கார்த்திக்.நிச்சயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு
உதவியாய் இருக்கும் பதிவு.

தக்குடுபாண்டி சொன்னது…

தெளிவாகவும் அழகாகவும் உள்ளது உங்கள் விளக்கம்....:)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

//////இரவில் பணிக்கு செல்வதால், வங்கி மற்றும் அரசு அலுவலகங்கள் செல்வது போன்ற வேலைகளை முடிக்கலாம். இதற்கென்று விடுப்பு எடுக்கத் தேவையில்லை.///////

இது நல்ல யோசனையாக இருக்கே நண்பரே !

Dinesh சொன்னது…

கால் சென்டர் salary structure pathi sollunga boss...

Ananthi சொன்னது…

nice explanations. continue :)

சுசி சொன்னது…

//அதுவும் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு கிளம்பும் பொழுது நேரம் இரவு ஒரு மணி. :(//

சாரி.. நான் வேற தொல்லை குடுத்திட்டேன் போல.
அது தொடர் பதிவுதானே சாவகாசமா எழுதுங்க.

ஜெய்லானி சொன்னது…

உண்மைதான் இரவு பணியில் பாதிப்புகளே அதிகம் . ஆரம்பத்தில் இனிக்கும் சுவை போகப்போக கசக்க ஆரம்பித்து விடும்

sriram சொன்னது…

இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து வருகிறேன் கார்த்திக், நல்லா இருக்கு, தொடர்ந்து எழுதுங்க..

//நாம் உபயோகிக்கும் சாதரணமான போன்கள் அங்கு உபயோகிக்க இயலாது. அதற்கென்று IP போன்கள் உள்ளன//

அப்படி இல்லை கார்த்திக். You don't necessarily need IP phone to talk on VOIP. On a single phone scenario (home segment or small call center), the Internet will go to a router which can be connected to normal Analog / Digital phone. In a larger call center situation, multiple VOIP lines will terminate on an EPABX (In India, Telephone landlines and VOIP lines cannot be connected to a single EPABX - but can be done if use LOGICAL PARTITION) and the extensions of that EPABX (Electronic Private Access Branch Extension - popularly known as board lines) can be normal Analog or Digital or IP phones. It is necessary to IP phones.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஸ்ரீராம். சொன்னது…

தூக்க நேரங்கள் மாறும்போது ஏற்படும் பாதிப்புகள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பவை முற்றிலும் உண்மை.

... சொன்னது…

கால் சென்டர் பத்தி நிறைய தெரிந்து கொள்கிறேன்.
நன்றி.
"நான் யாருக்கும் இந்தத் துறையை சிபாரிசு செய்ய மாட்டேன், குறிப்பாக பொறியியல் பட்டதாரிகளுக்கு."
கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?

LK சொன்னது…

@தெய்வ சுகந்தி
நன்றி

@ஹரிணி

:)))

LK சொன்னது…

@மேனகா

நன்றிங்க

LK சொன்னது…

@சந்தியா

பரவாயில்லை. வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@ஹேமா
அவர்களுக்கு புதிதாய் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அங்கு வேலை செய்ய விரும்புவர்களுக்கு உபயோகம் ஆகும்

LK சொன்னது…

@ஹேமா
அவர்களுக்கு புதிதாய் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அங்கு வேலை செய்ய விரும்புவர்களுக்கு உபயோகம் ஆகும்

LK சொன்னது…

@தக்குடு

நன்றி

LK சொன்னது…

@ஷங்கர்

வருகைக்கு நன்றி பாஸ்

LK சொன்னது…

@தினேஷ்

இப்பொழுது எத்தகைய முறையை பின்பற்றுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.. நான் விசாரித்து பின் எழுதகிறேன் . நன்றி

LK சொன்னது…

@ஆனந்தி
நன்றிங்க

@சுசி
பரவாயில்லை. நிதானம்தான் எழுதுவேன் . நன்றிங்க

LK சொன்னது…

@ஜெய்
உண்மைதான் தல . நன்றி

LK சொன்னது…

@பாஸ்டன் அண்ணாச்சி

முதலில் வருகைக்கு ஒரு பெரிய நன்றிங்க. international call centerla pothuva intha rendu mattume use panraanga. domesticla neenga solra visayangal undu

LK சொன்னது…

@ஸ்ரீராம் அண்ணா
நன்றி

@பாலா
பொதுவா இதுல முப்பது வயதுக்கு மேல் , முன்னேற வாய்ப்புகள் குறைவு . மேலும் பொறியியல் பட்டதாரிகளுக்கு அவர்களுக்கு ஏற்ற வேலை இல்லை. அதனால் தான் அவ்வாறு சொன்னேன்.

vanathy சொன்னது…

LK, super! continue....

கிரி சொன்னது…

சூப்பர் தலை. நல்ல தகவல் திரட்டியாக இருக்கு உங்கள் தளம். மிக்க நன்றி.

மோகன் குமார் சொன்னது…

மிக உபயோகமான தகவல்கள். அருமையாய் எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குந்தவை சொன்னது…

நல்ல பதிவு கார்த்திக். இந்த ஒழுங்கற்ற வேலை நேரத்தை.. மருத்துவர்கள், நர்ஸ் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் ஏற்கனவே அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் அதை ரெம்ப சிந்தித்து பார்ப்பது கிடையாது. :(

அருண் பிரசாத் சொன்னது…

கஷ்டம்தான் பிரதர்

ஜெயந்தி சொன்னது…

இப்போ இரவு வேலை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

தமிழ் வெங்கட் சொன்னது…

//பகலில் தூங்கியது போக இருக்கும் நேரத்தில் எதாவது மேற்படிப்பு படிக்கலாம்.//

நல்ல ஆலோசனை நண்பரே..
நம்ம சேலத்துக்கு எப்ப வர்ரீங்க..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நல்ல தகவல்கள் தொடருங்கள் ...

அப்பாவி தங்கமணி சொன்னது…

நல்ல பதிவு...nadathunga nadathunga ....

LK சொன்னது…

@வாணி

நன்றிங்க

LK சொன்னது…

@கிரி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@மோகன்குமார்

நன்றிங்க

LK சொன்னது…

@குந்தவை

அவர்கள் கூட இரவில் எதுவும் பனி இல்லாவிட்டால் ஓய்வு எடுக்கலாம். அனால் இவர்கள் ???

LK சொன்னது…

#அருண்
ஆமாம்

@ஜெயந்தி

ஹ்ம்ம்

LK சொன்னது…

@தமிழ் வெங்கட்

இப்போதைக்கு இல்ல பாஸ்..

LK சொன்னது…

@ரமேஷ்

நன்றி

LK சொன்னது…

@அடப்பாவி

நன்றி

பிரசன்னா சொன்னது…

இரவு நேரப் பணியின் பாதகங்கள் நுணுக்கமாக நன்றாக விவரித்து இருக்கிறீர்கள்.. நன்றி :)

அன்புடன் மலிக்கா சொன்னது…

ஒவ்வொரு விசயத்தையும் மிகவும் தெளிவாக விளக்குகிறீர்கள் கார்த்திக்
நல்ல நல்ல தகவல்கள் .

கீதா சாம்பசிவம் சொன்னது…

நாம் உபயோகிக்கும் சாதரணமான போன்கள் அங்கு உபயோகிக்க இயலாது. அதற்கென்று IP போன்கள் உள்ளன. பல நிறுவனங்கள் இத்தகைய போன்களை தயாரித்தாலும், அதிகம் உபயோகிக்கப் படுவது Avaya மற்றும் Nortel நிறுவனத்தின் போன்களே.//

ம்ம்ம்ம்ம்??? இதிலே முக்கியமாத் தெரிஞ்ச விஷயம், யாரானும் ஃப்ரீனா தான் போன் கால் அவங்களுக்குப் போகும்னு தெரிஞ்சதுதான். சில சமயம் எத்தனை முறை தொலைபேசியில் கூப்பிட்டாலும், all the executives are busy, please call later,அப்படின்னே வருது. அதுவும் ஒரு மணி நேரத்துக்கும் மேலா வரும். அதுக்கு என்ன காரணம்???

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பரே.

”வாடிக்கையாளருக்கு, வெறும் சங்கீதம் ஒலிக்கும், எப்பொழுது அவரது அழைப்பு ஏஜெண்டுக்கு மாற்றப்படுகிறதோ அப்பொழுது அந்த சங்கீதம் நின்று விடும்.”

சில சமயங்களில் 10-15 நிமிடங்கள் வரை கூட இது போன்று கேட்கும் போது வெறுப்பாக இருக்கிறது. டாடா ஸ்கை நிறுவனத்தின் கால் சென்டரில் இது போல இரண்டு மூன்று அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

sriram சொன்னது…

//கால் சென்டரில் பொதுவாக இரண்டு வகை போன்கள் உபயோகப் படுத்தப் படுகின்றன. நாம் உபயோகிக்கும்
சாதரணமான போன்கள் அங்கு உபயோகிக்க இயலாது. அதற்கென்று IP போன்கள் உள்ளன//

இது இடுகை

//International call centerla pothuva intha rendu mattume use panraanga//

இது உங்க பின்னூட்ட பதில்

ரெண்டுத்துக்கும் உள்ள வித்தியாசம் புரியுதா?? அந்த ரெண்டு பிராண்டு போன் தான் பொதுவா உபயோகிக்கராங்க
என்பது உண்மை, ஆனால் சாதாரண போன்கள் உபயோகிக்க இயலாது - Not Necessary. இப்போ நான்
சொல்ல வந்தது புரியுதா கார்த்திக்??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

LK சொன்னது…

@பிரசன்னா
வருகைக்கு நன்றி

@மலிக்கா
நன்றிங்க

LK சொன்னது…

@கீதா மாமி/ வெங்கட்
நீங்க முதல்ல கால் பண்றப்ப உங்க அழைப்பு ஹோல்ட்ல போயிருக்கும். ஒரே நேரத்தில பலர் அழைக்கும் பொழுது ( அப்பொழுது பணியில் இருக்கும் நபர்களின் எண்ணிகையை விட அதிகம் பேர்) உங்கள் கால் ஹோல்ட்ல போகும். கொஞ்ச நேரம் காத்திருந்த பேசலாம். நீங்க மறுபடியும் அழைக்கும் பொழுதும் இதே நடந்து இருக்கலாம்

@பாஸ்டன் அண்ணாச்சி
புரிந்தது நன்றி .

INAMUL HASAN சொன்னது…

i am fresher.. computer engineering course ipa dhaan mudichaen..

call centre poi english learn pannalaamnu idea la irundhaenn..

but ungaludaya posting ellathayum padichut ini andha pakkamae poha koodadhunu irukaen..

thank u for ur useful info..


but eng learn pannanum athuku dhaan engae pohanumnu idea illai...

LK சொன்னது…

வணக்கம் நண்பரே

உங்கள் பின்னூட்டம் கண்டேன். வருகை புரிந்தமைக்கு நன்றி. ஆங்கிலம் கற்க நல்ல சென்டர்கள் பல உள்ளன. அதில் பயின்றால் மட்டும் போதாது. நீங்கள் உங்கள் நண்பர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடி பயிலவும். ஆரம்பத்தில் தவறுகள் வரும். பலர் சிரிக்கலாம். ஆனால் அதை கண்டுக் கொள்ளாதீர்கள். பேச பேசத்தான் எந்த மொழியையும் கற்க முடியும். அதே போல் நூலகத்தில் ஆங்கில செய்தி தாள்களை படிக்கவும். இதன் மூலம், புதிய சொற்களை கற்கலாம்.

உங்கள் எதிர்காலம் நன்கு அமைய என் வாழ்த்துக்கள் . ஏதேனும் உதவி தேவைப் பட்டால் எனக்கு மின்னஞ்சல் செய்யவும்
நன்றி