ஜூலை 18, 2010

இந்திய இணைய உலவி

என்னடா கொஞ்ச நாள் வரமாட்டேன்னு சொல்லிட்டு போனான், ரெண்டு நாள் கூட ஆகல உடனே வந்துட்டான் அப்படின்னு உங்க மைன்ட் வாய்ஸ் சொல்றது எனக்கு கேக்குது. நான் இவ்வளவு சீக்கிரம் வரக் காரணம், தானை தலைவி கீதா மாமிதான்,. ஆமா, அவங்க எழுதினா பதிவை பார்த்தப் பிறகுதான்  நான் இந்த எபிக் பிரௌசர் உபயோகப் படுத்த ஆரம்பித்தேன். உடனடியா ரொம்பப் பிடிச்சி போச்சுங்க.

இதில, ஒரு சைட் பார் ஒண்ணு இருக்கு . அதில் பல தரப்பட்ட வசதிகள் இருக்கு. நீங்க பிரபல சோசியல் நெட்வொர்கிங் தளங்களான ஆர்குட், முகப்பக்கம், ட்விட்டர் போன்றவற்றை ஒரே கிளிக்கில் உபயோகிக்கலாம். மேலும் அவை உலவியின் முக்கிய இடமான வலது பக்கம் வருவதில்லை. இடது பக்கம்  சின்னதாக  வருகிறது. எனவே மற்றவர்களுக்கு தெரியாமல் ஆர்குட் போன்றவற்றை உபயோகிப்பவர்களுக்கு  இது ஒரு வசதி.

மேலும்,இந்த இணைய உலவியில் இருந்தே, நீங்கள் உங்க கணிப்பொறியில் இருக்கும் கோப்புகள் படங்களை உபயோகிக்கலாம். அதற்கு இதில் இருக்கும் my computer பட்டனை கிளிக்கினால் போதும்.

மேலும், இலவச இணைப்பாக , ஒரு ஆன்டி வைரஸ் கொடுத்துள்ளனர். இதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இணைய உலவியில் இருந்தவாறே இதை இயக்கி, வைரஸ உள்ளதா எனக் கண்டறியலாம்.

மேலும், உலவியில் நீங்கள் பலதரப்பட்ட ஸ்கின்களை உபயோகித்துக் கொள்ளலாம். இந்தியாவை சேர்ந்த பல புகழ் பெற்ற நபர்களின் புகைப் படங்கள் உள்ளன.(திருவள்ளுவர் உட்பட). மேலும் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யும் வசதி இணைத்துள்ளனர். enable indic dropdown விருப்பத்தை தேர்வு செய்து விட்டாள், எல்லாத் தளங்களிலும் நீங்கள் விரும்பும் மொழியில் தட்டச்சு செய்துக் கொள்ளலாம். .


இதை நீங்கள் உபயோகிக்க விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டியத் தளம் http://www.epicbrowser.com

With Love LK

47 கருத்துகள்:

pinkyrose சொன்னது…

me the first!

pinkyrose சொன்னது…

இதெல்லம் அறிவாளிகளுக்கானதுன்னு நினைக்குறேன்...

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ப‌கிர்வுக்கு ந‌ன்றி

கலாநேசன் சொன்னது…

பயனுள்ள பதிவு. நன்றி

சௌந்தர் சொன்னது…

புதிய தகவல்

கீதா சாம்பசிவம் சொன்னது…

நாங்க எல்லாம் தோண்டி துருவிட்டோமில்ல !ஸ்கின்ஸ் பத்தி திவா வும் சொன்னார், நானும் பார்த்தேன், ஆனால் மயில் பிடிச்சிருக்கு சோ மாத்தலை

அப்பாவி தங்கமணி சொன்னது…

வாவ்...இவ்ளோ மேட்டர் இருக்கா....சூப்பர் info பதிவு

kavisiva சொன்னது…

பகிர்வுக்கு நன்றி LK.

ஆனா எங்க போனாலும் இந்த மைண்ட் வாய்ஸ் தொல்லை ஜாஸ்தியா இருக்கே :))

வானம்பாடிகள் சொன்னது…

எனக்கும் மிகப் பிடித்துவிட்டது:) நன்றி பகிர்வுக்கு

தக்குடுபாண்டி சொன்னது…

:))) ok point noted.

கீதா சாம்பசிவம் சொன்னது…

கிர்ர்ரர்ர்ர்ர் அக்கிரமமா இருக்கே? நான் முதல்லே போஸ்ட் போட்டேன். எல்லாரும் எல்கேவுக்கு பாராட்டு?? நற நற நற நற

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வுக்கு நன்றி.

ஜெய்லானி சொன்னது…

செக் பண்ணி பாத்துடுவோம்..

Gayathri சொன்னது…

ஹை நான் இன்னிக்கே உபயோகபடுத்தி பாக்கறேன்...மிகவும் அருமையான பகிர்வு..நன்றி...
அப்படியே என் பதிவு பக்கம் வந்துட்டு போங்க...

Kousalya சொன்னது…

எனக்கு தேவையான பதிவு என்று நினைக்கிறேன். பகிர்வுக்கு :)))

Mrs.Menagasathia சொன்னது…

thxs LK!!

LK சொன்னது…

@பிங்கிரோஸ்

இல்லையே எல்லாருக்கும்தான்
உங்களுக்கே வடை

LK சொன்னது…

@கரிசல்காரன்

நன்றி நண்பரே

LK சொன்னது…

@கலாநேசன்

நன்றி நண்பரே

LK சொன்னது…

@சௌந்தர்
நன்றி

LK சொன்னது…

@அப்பாவி
உபயோகித்துப் பார். உனக்கும் பிடிக்கும்

LK சொன்னது…

@கவிசிவா
என்ன பண்ண? நம்ம அப்பாவியோட வேலை அது

LK சொன்னது…

@பாலா
நன்றி சார்

LK சொன்னது…

@தக்குடு
:)))

LK சொன்னது…

@வெங்கட்
நன்றி சாரே

LK சொன்னது…

@கீதா மாமி

என் பதிவில் தெளிவா சொல்லி இருக்கேன் பாருங்க

LK சொன்னது…

@ஜெய்
பண்ணுங்க தல

@காயத்ரி

உபயோகம்தான் .. நன்றி

LK சொன்னது…

@கௌசல்யா
ஒருவருக்கேனும் பயன்பட்டால் மிக மகிழ்ச்சி அடைவேன். :)))

LK சொன்னது…

@மேனகா
நன்றி

ஹேமா சொன்னது…

என் நண்பர்களுக்கும்
சொல்கிறேன் கார்த்திக்.நன்றி.

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல தகவல் கார்த்திக்!! use பண்ணி பாத்திரலாம்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

பயனுள்ள ஒரு புதுமை அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி நண்பரே

vanathy சொன்னது…

LK, super post.

raja சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்கு

அருண் பிரசாத் சொன்னது…

இது புதுசா இருக்கே! உபயோகித்து பார்க்கிறேன்

Thomas Ruban சொன்னது…

நல்ல தகவல்,பயன்படுத்த எளிமையாக உள்ளது.
பகிர்வுக்கு நன்றி.

S.M.ராஜ் சொன்னது…

நானும் பன்படுதுகிறேன்... மிகவும் பயனுள்ள பதிவு...

அமைதிச்சாரல் சொன்னது…

புதுசா இருக்கே..

Ananthi சொன்னது…

wow.. its totally interesting. will try. thanks for sharing.. :)

ப.செல்வக்குமார் சொன்னது…

உண்மை தாங்க .. ஆனா இந்த உலவி ரொம்ப மெதுவா உலவுதுங்க ..!!

ஸ்ரீராம். சொன்னது…

சட்டுன்னு மாற தைரியம் வரவில்லை. கொஞ்ச நாள் பொறுத்து எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்து....!!.......

வரதராஜன் சொன்னது…

மிக அருமை நண்பரே... நன்றாக இருந்தது பகிர்வு... வாழ்த்துக்கள்!! சிறிது தாமதமாக உபயோகப்படுத்தலாம் என்று இருக்கிறேன், இந்த உலவியை

LK சொன்னது…

@ஹேமா

நன்றிங்க

LK சொன்னது…

@தெய்வ சுகந்தி
நன்றிங்க கண்டிப்பா உபயோகிச்சு பாருங்க

LK சொன்னது…

@ஷங்கர்

நன்றி நண்பரே

LK சொன்னது…

@வாணி
நன்றி

@அருண்

நன்றிங்க

@ராஜா
நன்றி

ஆகிரா சொன்னது…

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி. நான் ஏற்கெனவே என் கணிணியில் நிறுவி விட்டேன். இனிமேல் தான் பயன்படுத்த வேண்டும். மழலைகள்.காம் வாசகர்களுக்கு உங்கள் பதிவை வெளியிடுகிறேன்.

அன்புடன்

ஆகிரா