ஜூலை 15, 2010

சிஸ்டம் ரீஸ்டோர்

கணிப்பொறி சம்பந்தப்பட்ட  துறையில்  வேலை  செய்கிறோம் , அது  சம்பந்தமா  ஒரு   பதிவு  கூட போடவில்லை . நேத்து இரவு கனவில் கணிப்பொறி வந்து ரொம்ப கெஞ்சினது எனக்காக ஒரு பதிவு போடுன்னு, அதனால இன்னிக்கு ஒரு தொழில் நுட்ப பதிவு.

இப்ப நிறைய பேர் உபயோகிக்கறது விண்டோஸ் எக்ஸ்பி(Windows XP). இதில் உங்களுக்கு அதிகம் வரக்கூடிய ஒரு பிரச்சனை விண்டோஸ் லோட் ஆகாமல் பாதியில் நிற்பது. அப்படி பாதியில் நின்றால் , கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்து , F8 பட்டனை தொடர்ந்து தட்டவும். உங்களுக்கு விண்டோஸ் பூட் மெனு வரும். அதில் கீழ்க்கண்டவை இருக்கும்.

1. safe Mode
2. Safe mode with Network
3. Safe mode with command prompt
4.Enable Boot Logging
5.Enable VGA Mode
6. Last Known Good Configuration(your most recent settings that worked)
7.Directory Services Restore Mode(Windows Domain Controllers only)
8.Debugging Mode
9.Disable Automatic System Restart on Failure
10.Start Windows Normally
11.Reboot
12.Return to OS Choices Menu

இப்படி ஒரு மெனு வரும். இப்பதான் முதல் முறையா உங்கள்ளுக்கு பிரச்சனை வருவதாக இருந்தால், ஆறாவது (6) ஆப்சனை தேர்வு செய்யவும். இது உங்கள் விண்டோஸ் பழுதடைவதற்க்கு முந்தைய நிலைக்கு உங்கள் கணிப்பொறியை கொண்டு செல்லும்.

இந்த முறையிலும், உங்கள் விண்டோஸ் லோட் ஆக வில்லையென்றால், திருபவும் கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்து அதே போல்  F8 பட்டனை தொடர்ந்து தட்டவும். இப்பொழுது  முதல் விருப்பத்தை(safe Mode) தேர்வு செய்யவும் . இப்பொழுது
விண்டோஸ் லோட் ஆகி சேப் மோடில் வரும் . இப்ப உங்க விண்டோஸ் ஸ்க்ரீன்ல ஸ்டார்ட் பட்டன் இருக்கும் அதை கிளிக் பண்ணி பிறகு ப்ரோக்ராம்ஸ் கிளிக் பண்ணுங்க. இப்ப உங்க சிஸ்டம்ல இன்ஸ்டால் ஆகி இருக்கும் ப்ரோக்ராம் லிஸ்ட் வரும். அதில் அச்செச்சரீஸ்(accessories) கிளிக் பண்ணி சிஸ்டம் டூல்ஸ் உள்ள போங்க. அதில் சிஸ்டம் ரீச்டோர் (system restore) என்று ஒன்று இருக்கும். அதை கிளிக் பண்ணுங்க. இப்ப சிஸ்டம் ரீச்டோர் (system restore)  ஸ்க்ரீன் வரும். அதில் "restore my computer to an earlier time" செலக்ட் செய்து next பட்டனை அழுத்துங்கள்.

இப்ப ஒரு காலேண்டர் வரும் அதில், சில நாட்கள் மட்டும், போல்டாக (BOLD) இருக்கும். அதில் ஒன்றை தேர்வு செய்து  next பட்டனை அழுத்துங்கள். உடனே நீங்க தேர்வு செய்ததை உறுதிப் படுத்த சொல்லி ஒரு ஸ்க்ரீன் வரும் ,next பட்டனை அழுத்துங்கள். நீங்கள் தேர்வு செய்த தேதிக்குப் பிறகு எதாவது புதிய மென்பொருள் இன்ஸ்டால் செய்திருந்தால் அவை போய் விடும். மற்றப்படி நீங்கள் எதாவது பைல்கள் உருவாக்கிருந்தால் அவை போகாது.

இப்பொழுது சிஸ்டம் ரீச்டோர் ரன் ஆகி பிறகு ரீஸ்டார்ட் ஆகும். உங்கள் விண்டோஸ் பிந்தைய தேதிக்கு ரீச்டோர் ஆகி இருந்தால் நல்லபடியாக சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆகி உங்கள் சிஸ்டம் ரீச்டோர் செய்யப் பட்டது என்ற தகவல் வரும். இல்லை விண்டோஸ் லோட் ஆகவில்லை என்றால் வேறு வழியில்லை, விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்வதுதான் ஒரே வழி.


With Love LK

31 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

நல்ல தகவல் எனக்கு இந்த பிரச்சனை இல்லை

பெயரில்லா சொன்னது…

இன்றைக்கு நான் படித்ததிலே உருப்படியான தகவல் இது என்றுதான் நினைக்கிறேன்.

ப.செல்வக்குமார் சொன்னது…

கரன்ட் இல்லனா என்னை செய்யலாம்...?!!?

ப.செல்வக்குமார் சொன்னது…

ஓ .. பழக்க தோசத்துல மொக்க போட்டுட்டேனா ..?
ஆனா உங்க தகவல் நல்லா இருந்தது ..

ஜீவன்பென்னி சொன்னது…

புதிதாக உபயோகிப்பவர்களுக்கு பயனுள்ள தவல்.

அருண் பிரசாத் சொன்னது…

LK சார்,

இதுக்கு கண்டிப்பா கம்பியூட்டர் இருக்கனுமா?

ஹி ஹி ஹி சும்மா தமாசு

புதியவர்களுக்கு தேவையான தகவல்

முகிலன் சொன்னது…

வீட்டுல தங்கமணி கோவத்துல சூடா இருக்கும்போது இதே மாதிரி எதாவது ரீஸ்டோர் கமாண்ட் இருக்கா எல்.கே?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

புதியவர்களுக்கு உபயோகமான பதிவு. நமது வாழ்விலும் சிஸ்டம் ரெஸ்டோர் கீ இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிச்சுட்டு இருக்கேன். :)

ஹேமா சொன்னது…

பிரயோசனமான விஷயம்.அப்படியே பிரதி பண்ணிக்கொள்கிறேன் LK.நன்றி

Priya சொன்னது…

நல்ல தகவல்!

//வெங்கட் நாகராஜ்.... நமது வாழ்விலும் சிஸ்டம் ரெஸ்டோர் கீ இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிச்சுட்டு இருக்கேன். :)//....நானும்தான்!

தெய்வசுகந்தி சொன்னது…

எங்க desktop ல இந்த மாதிரி நிறைய தடவை restore பண்ணி இப்ப அந்த option ஏ வேலை செய்யலை. அது வாங்கினப்போ குடுத்த CD வெச்சு restore பண்ணலாமான்னு இருக்கறேன். (அதுவும் 4 தடவை பண்ணிட்டேன்)

பெயரில்லா சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல் கார்த்திக்... நன்றி

Ananthi சொன்னது…

Thanks for the useful informations

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல தகவல்...

LK சொன்னது…

@சௌந்தர்
பிரச்சனை இல்லாதது குறித்து மகிழ்ச்சியே.. :))

@ஜூனியர் தருமி
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

LK சொன்னது…

@செல்வக்குமார்
UPS இருக்குல (நாங்களும் மொக்கை போடுவோம் )

@ஜீவன்
நன்றி ஜீவன்

LK சொன்னது…

@அருண்
அப்படிதான் நான் நினைக்கிறன் ,. நன்றி பாஸ்

@முகிலன்
அபப்டி ஒரு கமாண்ட் கண்டுபிடிக்க்கவே முடியாதாம் .. சொல்லிட்டாங்க பாஸ்

LK சொன்னது…

@வெங்கட்
நன்றி.. அப்படி இருந்தா நாம ஆடுற ஆட்டம் எப்படி இருக்கும் ?? அதான் ஆண்டவன் அப்படி செய்யல

@ஹேமா
தாரளாமாக எடுத்துக் கொள்ளுங்கள்

LK சொன்னது…

@பிரியா
நன்றிங்க

@தெய்வ சுகந்தி
அதாவது எதையுமே ஒரு அளவுக்கு மேல உபயோகிச்சா சரி வராது. அதுவும் இல்லாமல், குறிப்பிட இந்த வசதியினால் சரி செய்ய இயலாத பிரச்சனையாக இருக்கும். வேண்டும் என்றால் தனி மடலோ இங்கயோ சொல்லுங்கள் என்ன பிரச்சனை என்று அதை தீர்க்கும் வழிசொல்கிறேன்

LK சொன்னது…

@சந்த்யா

நன்றி

@ஆனந்தி
நன்றிங்க

வானம்பாடிகள் சொன்னது…

முகிலன் said...


//வீட்டுல தங்கமணி கோவத்துல சூடா இருக்கும்போது இதே மாதிரி எதாவது ரீஸ்டோர் கமாண்ட் இருக்கா எல்.கே?//

சில நேரம் மணிக்கணக்கா ஓடி cannot be restoredனு வரும். இந்த மேட்டர்ல எப்பவும் அப்படித்தான் வரும்.:))

www.thalaivan.com சொன்னது…

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

Mrs.Menagasathia சொன்னது…

thxs for sharing!!

ஜெய்லானி சொன்னது…

நல்ல விஷயங்கள்...

vanathy சொன்னது…

super informations & very useful too, LK.

அமைதிச்சாரல் சொன்னது…

இந்த அவஸ்தையில் சிலசமயம் மாட்டினதுண்டு.1ம்,10ம் முயற்சித்துவிட்டு கடைசியில் டாக்டர்கிட்ட கொண்டு போயிடுவேன் :-)).

நல்ல பயனுள்ள தகவல்கள்.

GEETHA ACHAL சொன்னது…

தகவலுக்கு நன்றிகள்...

Ananthi சொன்னது…

உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

Karthick Chidambaram சொன்னது…

good information. Amaa enna thideernu ippadi ?

தெய்வசுகந்தி சொன்னது…

நன்றி கார்த்திக்!! அது எப்படியும் 8 வருஷ பழசு. இந்த வருஷம் மாத்தற planல தான் இருக்கறோம். இப்போதைக்கு ஏதாவது பண்ணலாம்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

good one