நம் அனைவருக்குமே நாம் செய்யும் வேலை எத்தகையதாக இருந்தாலும்,அவரவருக்கு செய்யும் தொழிலே தெய்வம். சில வாரங்களுக்கு முன் வலைப்பூக்களை படித்து ...
இப்ப நீங்க ஒரு பொருளை விக்கறீங்க, அதை வாங்கும் வாடிகையாளர்களுக்கு உதவி புரிய (விற்பனைக்கு பிந்திய சேவை ), அப்புறம் புதுசா அதை வாங்க நினைப்பவர்களுக்கு அந்தப் பொருளை பற்றி சொல்ல (விற்பனைக்கு முந்திய சேவை), பொருட்களை விற்க , இப்படி பல தரப் பட்ட சேவைகளை நீங்க கால் சென்டர் மூலம் பண்ணலாம்.
கால் சென்டர் வகைகள்
பொதுவா வெளிநாட்டு சேவை மற்றும் இந்திய சேவை என்று இரண்டு வகை இருக்கு. முதலில், வெளிநாட்டு சேவையை பற்றி பார்ப்போம். இது முழுக்க முழுக்க அயல்நாட்டு வாடிக்கையாளர்களுக்கானது. இப்ப ஒரு உதாரணத்துக்கு ABC நிறுவனம் இருக்கு . அவங்க எதோ ஒரு நாட்டில் பொருட்களை தயாரித்து விற்று இருப்பார்கள். அதற்கு உரிய சேவையை தர அதற்கென்று ஒரு தொலைபேசி எண் இருக்கும் .பொதுவா அந்த எண் 1 -800 என்று துவங்கும்.(இது மாறுபடலாம் ). அந்த எண் அவர்களுடைய சேவை மையத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் .அந்த சேவை மையத்தில் இருந்து அந்த எண்ணிற்கு வரும் அழைப்புகள் அவர்களுடைய கால் சென்டருக்கு அனுப்பப் படும் . ஒரு நிறுவனத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் கால்சென்டர்கள் இருக்கலாம். அப்பொழுது அதற்கென்று உள்ள கணக்கீட்டின் படி அழைப்புகள் ரௌட்(route ) செய்யப் படும் .
பணிபுரிய என்ன தகுதி தேவை
ஒரு இளங்கலை பட்டமோ அல்லது பட்டயப் படிப்போ இதற்க்கு போதுமான கல்வித்தகுதி. கணிப்பொறி அறிவு கண்டிப்பாக தேவை.நீங்கள் ஆங்கிலத்தில் இலக்கண, உச்சரிப்பு பிழையின்றி பேசுபவராக இருக்க வேண்டும். மற்றபடி பொதுவாக அனைவரும் நினைப்பது போல் நுனி நாக்கு ஆங்கிலம் தேவை அல்ல.எந்தவித நாட்டு சாயலும் நீங்கள் பேசும்பொழுது வரக் கூடாது. அதுதான் முக்கியம். எப்படி தமிழில் ஒவ்வொரு ஊருக்கு ஒரு வகை உள்ளதோ அதைப் போல் ஆங்கிலத்திலும், நாட்டிற்கு நாடு மாறுபடும். எனவே எந்த வித நாட்டின் உச்சரிப்பும் கலக்காமல் பேசுவதுதான் முக்கியம். இப்படி நீங்க பேசறத சரிபார்க்க இதற்கென்று தனியாக ஒரு சிலர் இருப்பார்கள் . அவங்க பண்ற லொள்ளு தாங்காது. அதை பத்தி பின்னாடி பார்ப்போம்.
இந்த தகுதிகள் மட்டும் இல்லாமல், தன்னம்பிக்கை அதிகம் வேண்டும். அது இல்லாட்டி கால் சென்டரில் அதிக நாட்கள் பணிபுரிய இயலாது.
அடுத்தப் பகுதியில், இத்தகைய கால் சென்டர்களில் பணி புரிபவர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் என்ன, எதனால் அவர்களுக்கு அதிக சம்பளம் போன்ற விவரங்களைப் பார்ப்போம்.
டிஸ்கி : எனது ஆறு வருட கால் சென்டர் அனுபவத்தை கொண்டு இதை எழுதுகிறேன். இதில் எதுவும் தவறு இருப்பின், சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.
43 கருத்துகள்
உங்க வேலை சம்பந்தப்பட்டது, எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான். தொடருங்கள்....
வாழ்த்துகள்.
நல்ல இண்ட்ரெஸ்டிங்காக இருக்கும் போல,தொடருங்கள்,நாங்களும் தெரிந்துகொள்கிறோம்.
தகவல்கள் அறிய காத்திருக்கோம். தொடருங்கள்.
கால் சென்ட்டர் வேலை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது ...அதே பத்தி நீங்க எழுதற எல்லா பதிவும் நான் ஆர்வமா படிப்பேன் ...நன்றி
கால் சென்டர் பற்றிய பல்வேறு செவி-வழி செய்திகள் இருந்தாலும், first-hand செய்தி கிடைக்கப்போவது மகிழ்ச்சி. தொடருங்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்... :)
இப்படி நீங்க பேசறத சரிபார்க்க இதற்கென்று தனியாக ஒரு சிலர் இருப்பார்கள்//
எஸ் உளவாளி இருப்பார்
கண்டிப்பாக மற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். குறைந்தபட்ச அறிவை பெருவையாவது பெற வேண்டும். நானும் என் துறையான மருத்துவ கருவிகள் பற்றி எழுத ஆரம்பித்து இருக்கிறேன். இது போல மற்றவர்கலும் எழுதினால் நலம்.
தொடருங்கள், வாழ்த்துக்கள்
@கௌசல்யா
ஆமாங்க
@சாரல்
நன்றி தொடருங்கள்
@ஆசியா
நன்றிங்க. கண்டிப்பா இண்ட்ரெஸ்டிங்காக இருக்கும்
@சந்த்யா
நன்றி தொடர்ந்து வாருங்கள்
@வெங்கட்
உண்மைதான் .. எல்லாம் செவி வழி செய்திகள்தான்
@சௌந்தர்
ஹஹஅஹா
@அருண்
முதல் வருகைக்கு நன்றி பாஸ்.. எழுதுங்கள் நானும் வருகிறேன் அங்கு
கால் செண்டர் பத்தி எனக்கும் எதுவுமே தெரியாது. தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்குது. தொடருங்கள்!!!!!!!!!!
அவசியமான விளக்கம். தொடருங்கள்.
முதல் வருகைக்கு நன்றி விஜய்
கண்டிப்பா எல்லாரும் புரிஞ்சிக்கற மாதிரி போடறேன் தெய்வ சுகந்தி
நன்றி வானம்பாடிகள் சார்
கால் சென்டர்-நாலே அங்க தப்பு மட்டும் தான் இருக்கும் அப்படீன்னு நெறைய பேரு நெனச்சுண்டு இருக்காங்க. அது மட்டும் இல்லாம அங்க வேல பாகரவங்களுக்கு technical அறிவு கம்மினும் சொல்ல கேட்டு இருக்கேன். ஆனா அது முற்றிலும் தவறு. technical -ஆ ஒரு IT கம்பெனில ஒருத்தர் 6 மாசம் எவ்ளோ கத்துக்க முடியுமோ அத விட பன் மடங்கு அதிகமா கால் சென்டர்-ல வேல பாக்கற ஒரு technical executive கத்துக்க முடியும். உங்களுடைய போஸ்ட் ஒரு சிலருக்காவது அந்த நெனைப்ப மாத்தி உண்மையா புரிய வெச்சா சரி! :)
துறை சார்ந்த பதிவு ஒரு பயனுள்ள முயற்சி..தொடர வாழ்த்துக்கள்.
இந்த துறையில் உடனடியாக நிறைய பேருக்கு வேலை கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்..அதை அவர்கள் எவ்வளவு தூரம் நிறைவாக செய்கிறார்கள் / செய்யமுடியும் என்பது பற்றி இனிவரும் பதிவுகளில் பாடமாகவும் செய்தியாகவும் வரும் என எதிர்பார்க்கிறேன்..
அவர்வர் பிர்ச்சனை அவரவருக்கு....
நீங்க தெளிவு படுத்திட்டிங்க.
மேலும் தகவல் தாங்க.....
பகிர்வுக்கு நன்றிங்க.
அருமை. தொடருங்கள்.
எல்கே, எல்லா வேலைகளிலும் ப்ளஸ், மைனஸ் இருக்கு. எழுதியவருக்கு கால் சென்டர் மீது ஏதாவது கடுப்பு இருந்திருக்கும். விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கோ. நானும் தெரிந்து கொள்கிறேன்.
கால் சென்டர் அனுபவங்களை சொல்லுங்க. நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.
Good!
நல்லா போஸ்ட் LK . எனக்கு இந்த பீல்ட் பத்தி அதிகம் தெரியாது... waiting for next part to read more about it. Thanks
தொடருங்கள்..படிக்கக் காத்திருக்கிறோம். நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும்.
@ஹரிணி
சரியா சொன்ன.. அதை பத்தி கடைசியா எழுதறேன்
@பத்மநாபன்
நன்றி சார். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எழுதறேன்..
@கருனாகராசு
நன்றி சார்
@சரவணகுமார்
நன்றி நண்பரே
@வாணி
இருக்கலாம்.. ஆனால் பதிவில் எழுதும்பொழுது தவறான தகவல்களை தரக் கூடாது
நன்றிங்க
@ஜெயந்தி
நன்றிங்க
நன்றி சித்ரா
நன்றி புவனா
நன்றி ஸ்ரீராம்
இக்கரையில் இருந்து பார்த்தா அக்கரையை பார்த்தா அப்படித்தான் தெரியிம்னு சொல்லுவாங்க
அதான் பச்சையா.....
அப்படி பார்ப்பவர்களை நாம் பார்க்காமல் இருப்பதே நல்லது கார்த்தி
நிறைய தகவலை அறிய காத்திருக்கிரென்....
உண்மைதான் செந்தில். உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயலுவேன்
yes yejamaan!!..:)
நானும் தெரிந்து கொள்கிறேன்.
தொடருங்கள்....
இதில எதுவும் தப்பு இருப்பது போல தெரியலையே... ஒரு வேளை அதில அவருக்கு கஷ்டமான நிகழ்வு எதுவும் நடந்திருக்கலாம்.
இந்த மாதிரி அனுபவ பகிர்வுகள் தேவை. தொடருஙகள்!
Unga experience share pannathukku, thanks.. :)
Unga experience share pannathukku, thanks.. :)
நல்ல அருமையான சொல்லிருக்கிங்க...
@தக்குடு
நன்றி முதலாளி
@ஜெய்
அதை பத்தி பின்னாடி சொல்றேன்.
@குந்தவை
நன்றி
@ஆனந்தி
நன்றிங்க
@கார்த்திக்
நன்றி பாஸ்
@மேனகா
நன்றி அம்மணி
கால் செண்டர் என்றதும் ( வடிவேலுவும், சத்யராஜும் கால் செண்டரில் வேலை பார்க்கும் ஜோக் அடிக்கடி டீவியில் போடுவது நினைவுக்கு வந்தது,
நல்ல பயனுள்ள் இடுகைய போட்டு இருக்கீங்க அதுவும் அனுபவத்தை பகிரும் போது கால் செண்டரில் வேலை பார்ப்பவர்களுக்கும், வேலைக்கு சேர நினைப்பவர்களுக்கும் இந்த இடுகை ரொம்ப உதவியாக இருக்கும்.
வாழ்த்துகள் எல் ,கே
எந்த வேலையும் சுலபம் கிடையாது தான். பதிவு போட்டு மற்றவர்களுக்கு விழுப்புணர்வு கொடுப்பதும் பெரிய வேலை தான்.
உங்கள் பதிவு அருமையாக உள்ளது. அதிலும் குழந்தைகள் பற்றியது மற்றும் கால்செண்டர். தொடருங்கள்
அன்பின் கார்த்திக் - அருமையான பணி - தொடர்க - அனைத்தையும் படிக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
கருத்துரையிடுக