மே 04, 2010

சில நினைவுகள்


வாழ்வின் மறக்க
இயலா சில நினைவுகள் ...

பெண் பார்க்கும் தருணத்தில் 
நாணத்தால் தலை குனிய
அறை ஓரம் நின்று கடைக்கண்ணால்
நீ பார்த்த பார்வை ..

முகம் பாராமல்
நிலம் நோக்கி நீ
பேசிய முதல் வார்த்தை ...

நீ செப்பிய  வார்த்தைகள்
கொஞ்சம் அவை
சொல்லிய அர்த்தமோ ஆயிரம் ..

நீ  பேசுவாய் என
நானும் - வெட்கத்தால்
நீயும் மௌனமாய் கழித்த
அந்த நிமிடங்கள் ...

அழைப்பு வராத தினங்களில்
எழும் கோபம் உன் குரல்
கண்டவுடன் மறைந்த தருணங்கள்..

வாழ்த்து தெரிவிக்க அழைத்து
குரலை கேட்டப்பின்
மௌனமாய் நீ இருந்த அந்த நொடிகள் ..

மணமுடித்தப் பின்னும்
தனிமையில் ஏங்கித்
தவித்த மாதங்கள் ..

35 கருத்துகள்:

அநன்யா மஹாதேவன் சொன்னது…

present saar!!!!
என்ன? சொந்த கதையா? நல்லாவே இருக்கு.

SathyaSridhar சொன்னது…

Karthik,,rombha nalla kavithai enna unga manavi paathu paadina kavithaiya...nalla kavigyanam umakku..

அக்பர் சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு.

கீதா சாம்பசிவம் சொன்னது…

இன்னும் வரலையா??? சரி, சரி! :P:P

சௌம்யா கார்த்திக் சொன்னது…

:)

அநன்யா மஹாதேவன் சொன்னது…

அம்மா,
கொஞ்சம் சீக்கிரம் வந்துரும்மா..
புள்ளை ரொம்ப புலம்ப ஆரம்பிச்சுட்டான்..

தக்குடுபாண்டி சொன்னது…

வழக்கம் போல ஒப்பாரி பாடாம, ஒழுங்கா தங்கமணியை பத்தி எழுதினேரே, ரெம்ப சந்தோஷம்!! may 23 வரைக்கும் பொலம்பின்டே இருக்க வேண்டியதுதான்....;)

அஹமது இர்ஷாத் சொன்னது…

///அழைப்பு வராத தினங்களில்
எழும் கோபம் உன் குரல்
கண்டவுடன் மறைந்த தருணங்கள்..////

Nice Lines. i Like it.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அடேங்கப்பா!! நினைவுகளை அப்படியே
படம் பிடிச்சிட்டீங்களே!!

அமைதிச்சாரல் சொன்னது…

ப்ளாக் விடு தூதா!!!.. நடக்கட்டும்.

egglesscooking சொன்னது…

Aaha! Konjam overa irukke. 100 rubaikku act panna sonna 1000 rubaiku act pannuveenga pola irukke. Ullukulla "thangamani oorukku poyachu enjoy" nu kathikitte irukira madhiri dhaan irukku aana velila thangamani pirivaale vaadara madhiri nallave filim kaatareenga.

Enna irundhaalum kavidhai supera irukiradha marukka mudiyadhu.

Porkodi (பொற்கொடி) சொன்னது…

மதுரத்தின் முந்தின கமெண்டை அப்படிக்கு அப்படி ரீபீட்டேய் போட்டுக் கொ'ல்'கிறேன். இப்படிலாம் சொன்னா நம்பிருவோமாக்கும்?

Harini Sree சொன்னது…

ithu manni a samaathana padutha thaana?? :P

Harini Sree சொன்னது…

forgot to say! Kavithai romba soooper! :)

ஸ்ரீராம். சொன்னது…

என்ன...ஊருக்குப் போயிருக்காங்களா...செம கவிதை...

அப்பாவி தங்கமணி சொன்னது…

சண்டை போட்டு தொரத்தி விட்டுட்டு இப்ப ப்ளாக் விடு தூதா...

(ஜோக்ஸ் அபார்ட்.... நல்லா எழுதி இருக்கீங்க LK . உங்களுக்குள்ள இப்படி ஒரு கவிஞர் இருப்பாருன்னு தான் நெனைக்கல)

பின் குறிப்பு - இந்த போஸ்ட் ரிலீஸ் பண்றது இப்பவும் நாங்க தூங்கற நேரத்துலையே பண்றீங்க... (I mean night time here) நாங்க பாக்கறதுக்குள்ள ஊரே கமெண்ட் போட்டு முடிச்சுடுது.... வாரத்துக்கு ஒரு போஸ்ட்ஆச்சும் எங்க டைம்க்கு போடுங்களேன் பிரதர்.... இது நியாமான கோரிக்கை என்பதால்.... (ஆஹா மைக் கெடச்ச போதுமேன்னு யாரோ திட்றாங்க... சரி சரி நிறுத்திடறேன்)

LK சொன்னது…

@சத்யாஸ்ரீதர்
ஆமாம். நன்றி

@அனன்யா
:) பாராட்டுக்கு நன்றி

@அக்பர்
வருகைக்கும் கருத்தக்கும் நன்றி
@கீதா

பாட்டி இன்னும் வரலை

VELU.G சொன்னது…

பழைய விசயமெல்லாம் இருக்கட்டுங்க, இப்ப இப்ப என்ன நடக்குதுன்னு கொஞ்சம் விளாவாரியா சொல்ல முடியுமா

LK சொன்னது…

@சௌம்யா

:D@தக்குடு
நன்றி
@அகமது
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

LK சொன்னது…

@சைவகொத்து பரோட்டா

மறந்தால்தானே நினைப்பதற்கு

@சாரல்

இல்லை இல்லை. சும்மா அப்படியே

LK சொன்னது…

@மதுரம்

//thangamani oorukku poyachu enjoy"//
அது ஒரு பக்கம் இருந்தாலும் . இதுவும் இருக்கு

@பொர்ஸ்
நம்பித்தான் ஆகணும்

@ஹரிணி
உண்மையா இப்படிலாம் சொல்லக் கூடாது

@ஸ்ரீராம்
பாராட்டுக்கு நன்றி

LK சொன்னது…

@அப்பாவி தங்கமணி

கொஞ்சம் கஷ்டமான கோரிக்கைதான் .இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது

பாராட்டுக்கு நன்றி

@வேலு
ஆணிய புடுங்க வேண்டாம்

Ananthi சொன்னது…

நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.. :)

Chitra சொன்னது…

படமும் கவிதையும் அருமை. பாராட்டுக்கள்!

malgudi சொன்னது…

அழகான கோர்வை

Kousalya சொன்னது…

உங்களின் கவிதை நன்றாக இருக்கிறது..!

thenammailakshmanan சொன்னது…

வாழ்த்து தெரிவிக்க அழைத்து
குரலை கேட்டப்பின்
மௌனமாய் நீ இருந்த அந்த நொடிகள் ..//

இது ரொம்ப அருமை கார்த்திக் பாராட்டுக்கள்

LK சொன்னது…

@ஆனந்தி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@சித்ரா

ரொம்ப நன்றி சித்ரா

@கௌசல்யா

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

LK சொன்னது…

@தேனம்மை

ரொம்ப ரொம்ப நன்றி

அன்புடன் மலிக்கா சொன்னது…

தூதுபோ தூதுபோ
பிளாக் கிளியே
இந்த நினைவுகளை அங்கேபோய் சொல்லு கிளியே!

அசத்தல் கார்த்திக்..

வெறும்பய சொன்னது…

காதலை கவிதையாய் சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்.

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) சொன்னது…

baagirathiyaa athu??

LK சொன்னது…

@மலிக்கா
பாராட்டுக்கு நன்றி ..
ப்ளாக் தூது போய் சேந்தாச்சு,. தங்கமணி பின்னூட்டம் இருக்கே பாக்கலியா

@வெறும் பய

முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

@மைதிலி
பாகீரதி என் அம்மாவின் பெயர். தங்கமணியின் பெயர் சௌம்யா

அப்பாவி தங்கமணி சொன்னது…

//பாராட்டுக்கு நன்றி ..
ப்ளாக் தூது போய் சேந்தாச்சு,. தங்கமணி பின்னூட்டம் இருக்கே பாக்கலியா//

ஆஹா... இதை நாங்க கவனிக்கலயே.... கவனிச்சுருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டது ஒண்ணும் வெளங்கலைகறது வேற விசயம். கோயம்புத்தூர்ல இருந்து எப்போ வர்றாக சௌம்யா அம்மணி. எங்க ஊரு அம்மணிய கேட்டதா சொல்லுங்க

LK சொன்னது…

இன்னும் இரண்டு வாரம் இருக்கு கண்டிப்பா சொல்றேன்