ஏப்ரல் 20, 2010

எமனுலகில் பதிவர்எமன் : சித்திர குப்தா, இன்று முதலில் விசாரிக்கப்படவேண்டிய நபர் யார் ?

சி.கு : இதோ உங்கள் முன் நிறுத்தப்பட்டிருக்கும்  இவர்தான் பிரபு .

எமன்  : இவன்  செய்த குற்றம்தான் என்ன ? பார்க்க மிகவும் நல்லவன் போல் தோன்றுகிறானே இந்த மானிடன் .

சி.கு : இல்லை இல்லை இவனை அவ்வாறு சாதராணமாக நினைக்காதீர்கள் . இவன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் மிக கடுமையானது .

எமன்: எங்கே சொல் அந்த குற்றம் என்னவென்று கேட்போம்.

சி.கு : இவன் பூவுலகில் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியால் பதிவுகளின் மூலம்  பலரை துன்புறுத்தி இருக்கிறான்.

எமன்: மானிடா, உன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டிற்கு  என்ன பதில் சொல்கிறாய் ?

பதிவர் : பிரபு, நான் அவ்வாறு என்ன செய்தேன்?  தொழில் நுட்பத்தின் உதவியால், பிறர் பணத்தை களவாடினேனா இல்லை பெண்களை தொந்தரவு செய்தேனா ? என் சிந்தனைகளயும் எண்ணங்களையும் தானே பதித்தேன் ? அது தவறா அது குற்றமா?என்ன கொடுமை இது பிரபு என்ன கொடுமை  இது ?

சி.கு : பிரபு, இவன் அதை மட்டும் செய்திருந்தால் பரவாயில்லை . இட்டப் பதிவை, பல இணைய தளங்களில் இணைத்தான். அங்கே ஒரு ஓட்டுப் பட்டையும் வைத்தான்.  அதுமட்டுமா, தனது நண்பர்களுக்கு இதை மின்னஞ்சல் வேறு செய்து அவர்களை  ஓட்டு மட்டுமாவது போட சொன்னான் .

எமன்: (இந்த மானிடர்களுக்கு ஓட்டு என்றாலே இவ்வாறு செய்யதோன்றுகிறதோ?) உண்மையா மானிடா?

பதிவர்  :  உண்மைதான் பிரபு. எழுதியதை பிறர் படிக்க வேண்டாமா? நான்  மட்டும் படிக்க எதற்கு எழுத வேண்டும் ?

 எமன்: சித்திர குப்தா, இந்த மானிடன் சொல்லுவது சரியாகத்தானே உள்ளது? பிறர் படிக்கத்தானே எழுதுகிறார்கள்.

சி.கு : உண்மைதான் பிரபு. ஆனால் இவன் எழுதியதைப் பற்றி சொல்கிறேன் கேளுங்கள் .
இவன் சாதாரணமாக  எழுதுவதே மொக்கையாக இருக்கும் . இதில் தனியாக மொக்கை பதிவுகள் என்று தலைப்பில் சில பதிவுகள் . இவன் பதிவை பிறர் வந்து படிப்பதே பெரிய விஷயம். இதில் மற்ற பதிவர்களை வைத்து கிண்டல் வேறு . கவிதை என்ற பெயரில் பல கொடுமைகள் .ஆனால் பிரபு, உருப்படியாக சில பதிவுகளும் எழுதி இருக்கிறான் இந்த மானிடன். 

எமன்: எங்கே இவனது சில பதிவுகளை காட்டு . அதை படித்தப்பின் என் தீர்ப்பை கூறுகிறேன். 

பதிவர் : வேண்டாம் பிரபு வேண்டாம்.

ஏங்க யாருங்க அது பிரபு ? எதுக்கு இப்படி ராத்திரில கத்தறீங்க? இதுக்குத்தான் இந்த கொலை நாவல் பதிவுலாம் படிக்காதீங்கான கேட்டாதான?

பதிவர் : அப்ப இவ்ளோ நேரம் நடந்தது எல்லாம் கனவா?

டிஸ்கி : இந்த பதிவில் வரும் பதிவர் நான் என்று நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல 

34 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

vote potachu

அநன்யா மஹாதேவன் சொன்னது…

ஹா ஹா.. சூப்பர்!

Ananthi சொன்னது…

//இந்த பதிவில் வரும் பதிவர் நான் என்று நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல //

ok.. ok... no comments :P :P

Ananthi சொன்னது…

//இட்டப் பதிவை, பல இணைய தளங்களில் இணைத்தான். அங்கே ஒரு ஓட்டுப் பட்டையும் வைத்தான். அதுமட்டுமா, தனது நண்பர்களுக்கு இதை மின்னஞ்சல் வேறு செய்து அவர்களை ஓட்டு மட்டுமாவது போட சொன்னான் //

hahahaa.... :D :D

superrrr..!!

Ananthi சொன்னது…

சூப்பரா இருக்கு..!!

சும்மா ஒரு கற்பனை..:D :D

சி.கு. பிரபு இந்த பதிவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

எமன்: இவர் எழுதிய பதிவுகளை.. ஒவ்வன்றையும்.. நூறு முறை வாசிக்க சொல்லவும்.!!
நம் காவலரில் ஒருவரை அருகில் நியமித்து, ஒழுங்காக வாசிக்கிறாரா என்றும் பார்க்க சொல்..!!

பதிவர்: :O :O நூறு முறையா... (மயக்கமாகி கீழே விழுகிறார்)...

தக்குடுபாண்டி சொன்னது…

கஷ்டப்பட்டு திகில் கதை எழுதினா, அது கொலை நாவலா உங்களுக்கு?? கேடி உங்களோட அடுத்த எப்பிசோடுக்கு பலி கொடுக்க ஒரு ஆளு சிக்கியாச்சு.....:)

Harini Sree சொன்னது…

sema sooper! :D

Porkodi (பொற்கொடி) சொன்னது…

ஏய்! ஏய்! என்னாதிது? தேமேன்னு கதை எழுதிட்டு இருக்கற என்னை எதுக்கு வம்பு இழுக்கணுமாக்கும்? (இப்ப தான் அநன்யா லேங்குவேஜ் கோர்ஸ் படிச்சிட்டு வர்றேன்.)

Porkodi (பொற்கொடி) சொன்னது…

2ஏ 2 கொலை! அதுக்கு எதுக்கு எல்லாரும் இப்படி அலர்றீங்க? நீங்கள்லாம் என்னத்த கொலையுதிர் காலம் படிச்சீங்களோ, போங்க விபூதிய பூசிட்டு தாச்சிக்கோங்க.

அமைதிச்சாரல் சொன்னது…

//இந்த பதிவில் வரும் பதிவர் நான் என்று நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல //

நம்பிட்டோம். :-)))))

பித்தனின் வாக்கு சொன்னது…

எல்கே பதிவு நல்லாத்தான் இருக்கு. இது நீங்க என்னுடைய பதிவு வாங்க சிரிக்கலாம் வாங்க படித்து விட்டுப் போட்டிங்களா? அல்லது படிக்காம போட்டிங்களான்னு தெரியலை. ஆனா அதுக்கும் இதுக்கும் லிங்க் இருக்கு. முதல்ல தொடர்புடைய பதிவுன்னு சொல்லி லிங்க் கொடுங்க.

அட்டகாசமா ஆரம்பிச்சு இருக்கீங்க.

// டிஸ்கி : இந்த பதிவில் வரும் பதிவர் நான் என்று நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல //

இதைப் படித்துதான் நான் என் பதிவைப் படித்து இருப்பீர்களே என்று சந்தேகப் பட்டேன். எதுக்கும் லிங்க் கொடுக்கின்றேன் படிக்கவும்.

http://imsaiilavarasan.blogspot.com/2010/02/blog-post_19.html

LK சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

எல்கே பதிவு நல்லாத்தான் இருக்கு. இது நீங்க என்னுடைய பதிவு வாங்க சிரிக்கலாம் வாங்க படித்து விட்டுப் போட்டிங்களா? /

இல்ல தல .. நான் இப்பதான் அத படிக்கறேன் .
// அண்ணாமலையான் said...

vote போட்டாச்சு//
:)
@அனன்யா
நன்றி

LK சொன்னது…

@ஆனந்தி

நல்ல கற்பனை (பய புள்ளைங்க நம்ம மேல கொல வேரில இருக்கீங்க போல )


//தக்குடுபாண்டி said...

கஷ்டப்பட்டு திகில் கதை எழுதினா, அது கொலை நாவலா உங்களுக்கு?//

:D :D :D

@Porkodi (பொற்கொடி)

பொற்ஸ் நேத்து நைட் ஆற்காட்டார் புண்ணியத்துல சுத்தமா தூங்கல

LK சொன்னது…

@சாரல்

நம்பனும்

asiya omar சொன்னது…

கனவு கண்டது நீங்க தானே அப்ப பதிவரும் நீங்கதான்,அதுக்கு மேலே நிர்வாகம் பொறுப்பல்லன்னால் எப்படி தம்பி?எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா.

என்.ஆர்.சிபி சொன்னது…

:))

கிகிகி!

அன்புடன் மலிக்கா சொன்னது…

அச்சச்சோ அங்கேயுமா. தாங்குமா

LK சொன்னது…

//asiya omar said...

கனவு கண்டது நீங்க தானே அப்ப பதிவரும் நீங்கதான்,அதுக்கு மேலே நிர்வாகம் பொறுப்பல்லன்னால் எப்படி தம்பி?எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா.///


ஆஷியா அக்கா நான் கனவு கண்டேன்னு எங்க சொன்னேன். ஒழுங்கா படிங்க மறுபடியும்

LK சொன்னது…

//என்.ஆர்.சிபி said...

:))

கிகிகி!//
:)))

LK சொன்னது…

//அன்புடன் மலிக்கா said...

அச்சச்சோ அங்கேயுமா. தாங்குமா//


தாங்கும்னு நினைக்கிறன்

Known Stranger சொன்னது…

room potu yosipingaloo iniki ena post podalamnu

மங்குனி அமைச்சர் சொன்னது…

இப்படி ஒரு சுய விளம்பரம் தேவையா ? அந்த சினிமா காரங்கதான் அப்படி பண்றாங்கன்ன நீங்களுமா

கீதா சாம்பசிவம் சொன்னது…

தலையிலே அடிச்சுக்கறேன்! நச்! நச்! :P

அட, நம்ம தெரிஞ்ச அந்நியர்?? மறுபடியும் வந்திருக்காரா???

LK சொன்னது…

/Known Stranger said...

room potu yosipingaloo iniki ena post podalamnu//
:)))

//கீதா சாம்பசிவம் said...

தலையிலே அடிச்சுக்கறேன்! நச்! நச்! :P

அட, நம்ம தெரிஞ்ச அந்நியர்?? மறுபடியும் வந்திருக்காரா???//

பாத்து பாட்டி ரொம்ப அடிச்சுகாதேள் . தலை ஏதாவது ஆகிவிட pothu

அப்பாவி தங்கமணி சொன்னது…

//இந்த பதிவில் வரும் பதிவர் நான் என்று நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல //

எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல.... ஓகே ஓகே

அப்பாவி தங்கமணி சொன்னது…

பொற்கொடி - நீங்க ஒண்ணும் டென்ஷன் ஆகதீங்க. மொத்தமா கணக்கு வெச்சு அடுத்த வாரம் க்ரோர்பதில மாட்டி உட்ருவோம். என்ன நான் சொல்றது? (எனனக்கு என்னமோ சிலர் புள்ளையையும் கிள்ளிட்டு தொட்டிலையும் ஆடராப்ல தோன்றது... நான் திரட்டுப்பால் சிங்கத்த சொன்னதா அவிக நெனச்சா கொம்பெனி பொறுப்பல்ல)

அப்பாவி தங்கமணி சொன்னது…

//ஆனந்தி சொன்னது - எமன்: இவர் எழுதிய பதிவுகளை.. ஒவ்வன்றையும்.. நூறு முறை வாசிக்க சொல்லவும்.!! நம் காவலரில் ஒருவரை அருகில் நியமித்து, ஒழுங்காக வாசிக்கிறாரா என்றும் பார்க்க சொல்..!!//

ஆனந்தி சொன்னா மேட்டர் சூப்பர். ஆனந்திக்கு ஒரு "ஓ" போடுங்கப்பா

Sangkavi சொன்னது…

வித்தியாசமான கற்பனை....

நல்லாயிருக்குங்க....

LK சொன்னது…

//ஆனந்தி சொன்னா மேட்டர் சூப்பர். ஆனந்திக்கு ஒரு "ஓ" போடுங்கப்பா//

அவங்களுக்கு சொன்ன அதே பதில்தான் உங்களுக்கும்

LK சொன்னது…

//Sangkavi said...

வித்தியாசமான கற்பனை....

நல்லாயிருக்குங்க....//

வாங்க தல. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Mitr Friend - Bhushavali சொன்னது…

Empa ippadi... Idhu yaara kuri vechu ehudhininga... :)

Elephanta Caves - Part II
What I wore to Work

LK சொன்னது…

//Mitr Friend - Bhushavali said...

Empa ippadi... Idhu yaara kuri vechu ehudhininga... :)//

தோழி என்னை வம்புல மாட்டிவிடாதீங்க. just for fun post

நசரேயன் சொன்னது…

நல்லா இருக்கு

LK சொன்னது…

/ நசரேயன் said...

நல்லா இருக்கு//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நசரேயன்