ஏப்ரல் 19, 2010

அதிரம்பள்ளி நடந்தது என்ன ?


சென்ற வாரம் கொசுவர்த்தி வாரமா இருந்தது நம்ம பதிவர்  வட்டாரத்துல. சரி நம்ம பங்குக்கு நம்மளோட பழைய நினைவை கொஞ்சம் கிண்டுவோம்னு , கிண்டினதுல கிடைச்சது கல்லூரி சுற்றுலா.

கல்லூரி நாட்கள்ல பலரால் மறக்க முடியாதது சுற்றுலா. எங்க கல்லூரில பல விசித்திரமான விதிமுறைகள் உண்டு.  முதலாண்டு மாணவர்களுக்கு சுற்றுலா செல்ல அனுமதி இல்லைங்கறது அதுல முக்கியமானது  .(இது எந்த விதத்தில ஞாயம்  நீங்களே சொல்லுங்க ?)

வேற வழி இல்லாம ஒரு வருஷம் ஓட்டினோம். சரி ரெண்டாவது வருசமாவது அனுமதி தருவாங்கன்னு பார்த்த , எங்களுக்கு மூத்தவங்க (அதாங்க seniros)  பண்ண சில பல லீலைகள்னால ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு அனுமதி வாங்க வேண்டியது போச்சு. ஒரு வழியா எல்லாம் முடிவு பண்ணி கேரளா போலாம்னு கிளம்பினோம்.

கேரளாக்கு போனப்புறம்தான் தெரிஞ்சது அன்னிக்கு அங்க கடை அடைப்புன்னு.( கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா ....). எப்படியோ நிதானமா வண்டிய ஓட்டி ஒரு வழியா அதிரம்பள்ளி அருவிக்கு (புன்னகை மன்னன்ல வருமே அதேதாங்க) வந்து சேந்தோம். எப்பவும் பரபரப்பா இருக்கற இடத்துல ஆள் அரவமே இல்லை .


மக்களுக்குத்தான் பந்த் எனக்கில்லைன்னு அருவி அருமையா கொட்டிக்கிட்டு இருந்துச்சி .அருவி விழுகிற இடத்துல போய் குளிக்க முடியாது , சரி மேல போய் (அருவிக்கு மேல )
நதில குளிக்கலாம்னு போனோம்.. எப்பவும் அங்க பரிசல்ல உள்ளூர் மக்கள் கடை
இருக்கும். அன்னிக்கு ஒரே ஒரு கடைதான்.


இருந்த ஒரு கடைல கிடச்சதை குடிச்சிட்டு ( அட சாயாதாங்க) , குளிக்க ஆரம்பிச்சோம். நம்ம பசங்க எல்லாரும் நகரத்துலையே இருந்து பழகினவங்க , தண்ணிய பார்த்துடன் இறங்கினவன் எவனும் வெளில வரமாட்டேன்கறாங்க. அப்பதாங்க அது நடந்துச்சி. திடீர்னு நம்ம நண்பன் ஒருத்தனை நதி ரொம்ப வேகமா தள்ளிட்டு போய்டுச்சி. ஒரு ரெண்டு நிமிஷம் எங்களுக்கு ஒன்னும் புரியல. எங்களுக்கும் நீச்சல் தெரியாது. தெரிஞ்சாலும் அந்த நிமிசத்துல என்ன பண்றதுன்னு புரியாது . பயத்துல எவனாலயும் கத்தகூட  முடியல . அந்த ஒரு பரிசல்காரர் இருந்தார் பாருங்க , அவர்தான் டக்குனு நதியில குதிச்சி அவனை பிடிக்க போனார். இதுக்குள்ள அவன் கிட்டத்தட்ட விளிம்புக்கே போய்ட்டான், நல்லவேளை அங்க இருந்த ஒரு பாறைய கெட்டியா புடிச்சிட்டு சமாளிச்சிட்டு இருந்தான்.நம்ம ஹீரோ (பரிசல்காரர்) வேகமா அவன் கிட்ட போய் அவனை இழுத்துகிட்டு (நல்ல வாட்டசாட்டமா இருப்பான் ) எதிர் நீச்சல் போட்டு ஒரு வழியா கரைக்கு கொண்டுவந்தார். எங்க கூட வந்த லெக்சரர் முகத்தை பாக்கணுமே , எங்களை விட அவங்கதான் ரொம்ப டென்ஷன் ஆனாங்க. காலேஜ்க்கு பதில் சொல்ல வேண்டியது அவங்கதான . இவ்ளோ நடந்தப்புறம் ஒருத்தன் கேட்டான் பாருங்க அதான் ஹைலைட்டே . அவன் அப்படி என்ன கேட்டனா " சரி சரி வாங்க மறுபடியும் குளிக்க போலாமா "??? அவனுக்கு என்ன கிடைச்சிருக்கும்னு நான் சொல்லனுமா என்ன ????

27 கருத்துகள்:

கீதா சாம்பசிவம் சொன்னது…

ம்ம்ம் கடவுள் காப்பாத்தினார், அது சரி இம்பொசிஷன் இருக்கு, தனி மெயில் பாருங்க :P

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல மலரும் நினைவுகள். பக் பக் என்று இருந்திருக்கும். ஆள் தெரியாத இட்த்திலும் ஆழம் தெரியாத நதியிலும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நான் எல்லாம் சுற்றுலா போன தெரியாத ஆத்தில் இறங்க மாட்டேன். என் வீரம் எல்லாம் எங்க ஊர் அமராவதி ஆத்துலதான் பயப்படாம குளிக்கலாம். பகிர்வுக்கு நன்றி எல் கே.

அநன்யா மஹாதேவன் சொன்னது…

சூப்பர் போஸ்டு. ரொம்ப சுவாரஸ்யமான நரேஷன். நல்ல டெம்போ. கலக்கிட்டே போ!

அண்ணாமலையான் சொன்னது…

நல்லா சுத்திருக்கு கொசு வத்தி

ஸ்ரீராம். சொன்னது…

இப்போ நினைச்சுப் பார்க்கும்போது சுவாரஸ்யமாத்தான் இருக்கும்..!

அமைதிச்சாரல் சொன்னது…

அதிரம்பள்ளி அதிரவெச்சிட்டுது.எங்கே சுற்றுலா போனாலும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும்.

Harini Sree சொன்னது…

nalla velai yaarukkum yethuvum aagala! en nanban shriram irukan illa avanoda cousin um 3 nanbargalum keralala yetho oru edathula ipdi thaan kulikarennu poi athula 3 per adichundu poi iranthe poitaanga! ippa nenacha kooda kathi kalanguthu!

LK சொன்னது…

//கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம் கடவுள் காப்பாத்தினார், அது சரி இம்பொசிஷன் இருக்கு, தனி மெயில் பாருங்க :P//
பார்த்தாச்சு

// பித்தனின் வாக்கு said...

நல்ல மலரும் நினைவுகள். பக் பக் என்று இருந்திருக்கும். ஆள் தெரியாத இட்த்திலும் ஆழம் தெரியாத நதியிலும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நான் எல்லாம் சுற்றுலா போன தெரியாத ஆத்தில் இறங்க மாட்டேன். என் வீரம் எல்லாம் எங்க ஊர் அமராவதி ஆத்துலதான் பயப்படாம குளிக்கலாம். பகிர்வுக்கு நன்றி எல் கே.//
நன்றி பித்தன்
/அண்ணாமலையான் said...

நல்லா சுத்திருக்கு கொசு வத்தி//
நன்றி
/ ஸ்ரீராம். said...

இப்போ நினைச்சுப் பார்க்கும்போது சுவாரஸ்யமாத்தான் இருக்கும்..!//
ஆமாம் ஆனா அப்ப திக் திக்

LK சொன்னது…

//அநன்யா மஹாதேவன் said...

சூப்பர் போஸ்டு. ரொம்ப சுவாரஸ்யமான நரேஷன். நல்ல டெம்போ. கலக்கிட்டே போ!//
ரொம்ப நன்றி
//அமைதிச்சாரல் said...

அதிரம்பள்ளி அதிரவெச்சிட்டுது.எங்கே சுற்றுலா போனாலும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும்//
ஆமாங்க
//Harini Sree said...

nalla velai yaarukkum yethuvum aagala! en nanban shriram irukan illa avanoda cousin um 3 nanbargalum keralala yetho oru edathula ipdi thaan kulikarennu poi athula 3 per adichundu poi iranthe poitaanga! ippa nenacha kooda kathi kalanguthu!//
:)

தக்குடுபாண்டி சொன்னது…

மூனு கப்பு தண்ணில நாலு பேரு குளிக்கர சிட்டி ஆளுங்க எல்லாம் ஆழமான தண்ணில ஜாக்கிரதையா இருக்க வேண்டாம்???? தலை தப்பிச்சது தம்புரான் புண்ணியம்...!

LK சொன்னது…

// தக்குடுபாண்டி said...

மூனு கப்பு தண்ணில நாலு பேரு குளிக்கர சிட்டி ஆளுங்க எல்லாம் ஆழமான தண்ணில ஜாக்கிரதையா இருக்க வேண்டாம்???? தலை தப்பிச்சது தம்புரான் புண்ணியம்...!//
ஆர்வக்கோளாறுதான்

Ammu Madhu சொன்னது…

cool

Ananthi சொன்னது…

கொஞ்சம் பயமா தான் இருக்கு.. நல்ல வேளை, உங்க நண்பருக்கு எதுவும் ஆகலை..

Chitra சொன்னது…

very nice. மலரும் நினைவுகளில், ஒரு சந்தோஷ வெள்ளம்.

பெயரில்லா சொன்னது…

ஆஹா,ஒரு பழைய தமிழ் படம் பார்த்த உணர்வு

LK சொன்னது…

//Ammu Madhu said...

கூல்//
வருகைக்கு நன்றி அம்மு

// Ananthi said...

கொஞ்சம் பயமா தான் இருக்கு.. நல்ல வேளை, உங்க நண்பருக்கு எதுவும் ஆகலை//
ஆமாம் ஆனந்தி . வருகைக்கு நன்றி
// Chitra said...

very nice. மலரும் நினைவுகளில், ஒரு சந்தோஷ வெள்ளம்.//
வருகைக்கு நன்றி சித்ரா
// venkatesa sivam & sivaramamurthy sivam said...

ஆஹா,ஒரு பழைய தமிழ் படம் பார்த்த உணர்வு//
நன்றி

Porkodi (பொற்கொடி) சொன்னது…

நானும் அதிரம்பள்ளி போனது ஞாபகம் வருது. அப்போவும் இதே மாதிரி ஒரு ஆர்வக்கோளாறு க்ரூப் தண்ணிக்கு நடுவுல விளையாட்டு(!) எனக்கு வந்த கோபத்துக்கு, அருவியை நிம்மதியா ரசிக்க முடியலை! :(

asiya omar சொன்னது…

படிச்சிட்டு பகீர்னு இருக்கு.அப்பாடா காப்பாத்தியாச்சில்ல இனி திரும்பவும் குதிக்க வேண்டியது தான்.

Known Stranger சொன்னது…

vada mozhi kalapu neriya irukum pola irukay semozhiyil.

LK சொன்னது…

//Porkodi (பொற்கொடி) said...

நானும் அதிரம்பள்ளி போனது ஞாபகம் வருது. அப்போவும் இதே மாதிரி ஒரு ஆர்வக்கோளாறு க்ரூப் தண்ணிக்கு நடுவுல விளையாட்டு(!) எனக்கு வந்த கோபத்துக்கு, அருவியை நிம்மதியா ரசிக்க முடியலை! :(/
பொற்ஸ்
அதுக்குதான் நாங்க அடுத்த வருஷம் மறுபடியும் அங்க போய் என்ஜாய் பண்ணோம்

வருகைக்கு நன்றி
///asiya omar said...

படிச்சிட்டு பகீர்னு இருக்கு.அப்பாடா காப்பாத்தியாச்சில்ல இனி திரும்பவும் குதிக்க வேண்டியது தான்.//


நாங்க ரெடியா இருந்தோம் ஆனா லெக்சரர் ரெடியா இல்லை

வருகைக்கு நன்றி

// Known Stranger said...

vada mozhi kalapu neriya irukum pola irukay semozhiyil.//

சொல்ற கருத்துதான் முக்கியம் ஊடகம் முக்கியம் இல்லைன்னு நினைக்கறவன் நான். நீங்க என் தமிழ்ல எழுத கூடாது

மாதேவி சொன்னது…

பரிசல்காரரைப் பாராட்ட வேண்டும். மகிழ்ச்சியாய் சுற்றுலா செல்லும் இடத்தில் இப்படியாய் நடக்கும் சம்பவங்கள் வடுக்களாயும் போவதுண்டு.

Known Stranger சொன்னது…

namaluku lana rana thagararu jasthi. padikarathoda nama panga nipatikarathu nalamnu oru ennam enaku. ezhthulogam namaku pudipadatha onru. pechatral unday thavira ezhthatral kami. pali kalathu muthalay thamizha variya than kathukiten ezhutha kathukala athukapuram virupamum varala. tamizhuku enalaana thondu. vadamozhi kalapu thamil inum ezhutha padrathula enaku santhosam. athula oru azhagu undu athu ipothaiya tamizh arvalar pallaruku verupu.

geetha santhanam சொன்னது…

நல்ல ஸ்வாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். திக் திக் என்று நெஞ்சு அடிக்க படித்து முடித்தேன். கீதா

LK சொன்னது…

நன்றி மாதேவி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா

Mitr Friend - Bhushavali சொன்னது…

OMG!!! Reminds me of my mis-adventure at a village well.. Adhanpa vayakkattula irukkara periya kenaru... Ulllllla poitten. Oru angel vandhu kaapathichchu... Ishwara.... Anikki comedy piece aanavadhan... Innivaraila ottraingappa....

Elephanta Caves - Part II
What I wore to Work

Jaleela சொன்னது…

ஆனால் தண்ணீ அடிச்சிட்டு போச்சுன்னு சொன்னதும், நிறைய சம்பவஙக்ள் நினைவுக்கு வருது.

ஒரு இரண்டு வருடம் முன் 10 வது பரிட்சைக்கு முன் பசஙக் எல்லாம் சேர்ந்து குளிக்க போன இடத்தில் ஒரு பையன அப்படியே சுழலில் அடித்து கொண்டு போய் விட்டது.

இத கேள்வி பட்டதிலிருந்து அவனுடைய பெற்றோர்களை நினைத்து எனக்கு ரொம்ப மன வருத்தமா இருந்தது, .


( ஒருத்தன் எல்லாம் முடிந்ததும் சரி சரி எல்லா வாங்க குளிக்க போலாம் என்று சொன்ன அவனை பார்த்து எல்லோரும் சேர்ந்துகும்மிட்டீஙக்லா? )

LK சொன்னது…

@ஜலீலா

என்ன பண்றதுங்க ஒரு சில எடத்துல குளிக்க தடை உண்டு ஆனால் யார் கேக்கறாங்க ?
(அதை சொல்லனுமா என்ன ?)