பிப்ரவரி 24, 2010

மேடை நாடகம்

நாடகம் என்றாலே மெகா தொடர்கள் மட்டுமே தற்போதைய தலைமுறைக்கு நினைவு வரும். ஆனால் உண்மையில் நாடகம் என்றால் மேடை நாடகமே . அதுதான் சினிமாவுக்கு முன்னோடி . மேடை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியே சினிமா .

சினிமாவில் நடிப்பதை விட நாடகத்தில் நடிப்பது மிக கடினம். இது கிரிக்கெட் போட்டி மாதிரி லைவ் டெலிகாஸ்ட் , பதிவு செய்யப்பட்டு பின்பு ஒளிபரப்ப படுபவை அல்ல. சினிமா உலகில் கொடிகட்டி பரந்த பலரும் மேடை நாடகத்தில் பட்டை தீட்டப்பட்டவர்களே. பல உதாரணங்கள் உள்ளன, சிவாஜி கணேசன்,கே பாலசந்தர் , YG மகேந்திரன் இன்னும் பலர் உள்ளனர் . ஆனால் இன்று மேடை நாடகம் என்றல் என்ன என்றே தெரியாதவர்கள் பலர் உள்ளனர். அந்த கலையும் மெதுவாக அழிந்து கொண்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும், இந்த மேடை நாடக கலை முற்றிலும் அழியாமல் இருக்க காரணம் ஒரு சிலர் இன்றளவும் நாடகங்களை தொடர்ந்து நடத்தி கொண்டு இருப்பதே ..

'ரயில் பிரியா' கடந்த 16 வருடங்களாக தொடர்ந்து நாடகங்களை நடத்தி கொண்டு வருகிறது, 1994 ஆம் வருடம் இதை வெங்கட் (ரயில் வெங்கட்) என்பவர் தொடங்கினார். இதுநாள் வரை கிட்டத்தட்ட 1000 மேடைகளை கண்டிருக்கிறது . இப்பொழுது இந்த குழு நடத்தும் நாட்களுக்கு கதை வசனம் எழுதுவது என்னுடய நண்பர் திரு அனந்த் அவர்கள் . இவர் 1996இல் இருந்து இதை செய்து வருகிறார்.

இதில் நான் முக்கிமாக குறிப்பிட விரும்புவது , நாடகம் இவர்களோட வருமானம் அல்ல. இதை இவர்கள் மேடை நாடகத்தின் மீதுள்ள பற்றினால் தொடர்ந்து நடத்தி கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் பல அலுவலகங்களில் வேலை செய்பவர்களே.

திரு அனந்த் அவர்களுடய நாடகங்களில் நகைசுவையே பிரதானமாக இருக்கும். அதற்காக கதைக்கு ஒட்டாத நகைச்சுவை அல்ல. கதையை தழுவி செல்லும் மிக அழகான ஒன்றாக இருக்கும். சமீபத்தில் இவர்களுடைய 16 ஆம்
ஆண்டு விழாவுக்கு வருகை தந்த நாடக உலக பிதாமகர் என்று போற்றப்படும் பலச்சனரின் பாராட்டே இதற்கு சான்று.

16 ஆம் ஆண்டு விழா வெறும் விழா மட்டும் அல்ல ஒரு சாதனை களமும் கூட. தொடர்ந்து 27 மணி நேரம் நாடகங்கள் அரங்கேறின. எல்லாவற்றிலும் அதே நடிகர் நடிகைகளே நடித்தனர் என்பதே சிறப்பு. அப்பொழுது அந்த விழாவுக்கு வந்த பொழுதான் KB அவர்கள் அனந்த் அவர்களின் நடிப்பு மற்றும் கதை வசனத்தை பாராட்டி உள்ளார்.

இவர்கள் மட்டும் அல்ல , இவர்களை போன்று இன்னும் சிலரும் கலை அழிந்து விட கூடாது என்று தொடரந்து பாடுபட்டு கொண்டு இருக்கின்றனர். நம்மால் ஆனா உதவி இவர்களின் நாடகங்களுக்கு சென்று அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதே .

25 கருத்துகள்:

கீதா சாம்பசிவம் சொன்னது…

உங்க பதிவை விடப் பதிவில் இறங்கும் நட்சத்திர வடிவங்கள் நல்லா இருக்கு. :))))))))

கீதா சாம்பசிவம் சொன்னது…

தொலைக்காட்சிகளும், மெகா தொடர்களும் வந்ததும் நாடகக்கலையே நசிச்சுத் தான் போய்விட்டது. :((((

LK சொன்னது…

//உங்க பதிவை விடப் பதிவில் இறங்கும் நட்சத்திர வடிவங்கள் நல்லா இருக்கு. //

இதுல உள்குத்து எதுவும் இல்லையே

LK சொன்னது…

//தொலைக்காட்சிகளும், மெகா தொடர்களும் வந்ததும் நாடகக்கலையே நசிச்சுத் தான் போய்விட்டது. ://

100 % உண்மை

கீதா சாம்பசிவம் சொன்னது…

சேச்சே, உள்குத்தெல்லாம் இல்லை, நேரே மூக்கிலே பஞ்ச் தான்! :P:P:P:P

தக்குடுபாண்டி சொன்னது…

//சினிமாவில் நடிப்பதை விட நாடகத்தில் நடிப்பது மிக கடினம். இது கிரிக்கெட் போட்டி மாதிரி லைவ் டெலிகாஸ்ட் // ஆமாம் LK, நடுமேடைல வச்சு வேஷ்டி அவுந்து போன அனுபவம் எல்லாம் உண்டு...:)

LK சொன்னது…

//நடுமேடைல வச்சு வேஷ்டி அவுந்து போன அனுபவம் எல்லாம் உண்டு...://

ahaha super :D

LK சொன்னது…

//, நேரே மூக்கிலே பஞ்ச் தான்//

paatti grrrr :D:D

ana சொன்னது…

நாடகக் கலை அழிந்து வரும் இந்த காலத்தில்...உங்கள் நண்பரின் சேவை மகத்தானது.. அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு உங்களுக்கும் எனது நன்றிகள்..

LK சொன்னது…

Thanks ana

பெயரில்லா சொன்னது…

இந்த நாடகங்களளெல்லாம் பெரும்பாலும் சென்னையில் மட்டும்தான் இருக்கும். கோவை மாதிரி மற்ற இடங்களில் இருந்ததாகத்தெரியவில்லை.

குட்டிசாத்தான் சிந்தனைகள் சொன்னது…

நன்றி LK . மனிதனின் ரசனையின் நிறம் மாற்றமே இதற்கு காரணம்.
சில விஷயங்கள் எப்போதுமே வழகொழிந்து போவதில்லை, அதில் மேடை நாடகங்களும் ஒன்று.
இன்றும் சில கிராமங்களில் தெரு கூத்து உண்டு, என்ன அதில் வரும் வசனங்களும் கருத்துகளும் இன்றைய மாந்தர்களின் பிரதிபளிப்பாக இருப்பதேவருத்ததிற்குரிய ஒன்று.
எது எப்படியோ, உங்கள் சேவை போல நாடக சேவையும் தொடரும் என்று நம்புவோமாக !!!

Pradeep Venkat சொன்னது…

gud one lk.. medai nadagam valara namma thaan support pannanum..

LK சொன்னது…

@ammani

எனக்கு தெரிஞ்சு சேலத்தில் ஒவ்வொரு வருடமும் கண்காட்சி நடைபெரும் சமயம் அதில் ஒரு அங்கமாக தினமும் ஒரு நாடகமும் வார இறுதியில் 2 நாடகமும் நடைபெறும்

LK சொன்னது…

@kutti saathan
nan sollikara mathiri perusa onnum pannalaye ithuvarai

thanks

LK சொன்னது…

@thala

thanks

Chitra சொன்னது…

இவர்களை போன்று இன்னும் சிலரும் கலை அழிந்து விட கூடாது என்று தொடரந்து பாடுபட்டு கொண்டு இருக்கின்றனர். நம்மால் ஆனா உதவி இவர்களின் நாடகங்களுக்கு சென்று அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதே .


....... சரிதான்........ பலரை டிவி பொட்டி முன்னால இருந்து இடம் பெயர்க்கிறது எப்படின்னு சினிமா தியேட்டர் ஓனர்களும் மண்டையை சொரிஞ்சிக்கிறாங்க.....

கண்மணி/kanmani சொன்னது…

//தொலைக்காட்சிகளும், மெகா தொடர்களும் வந்ததும் நாடகக்கலையே நசிச்சுத் தான் போய்விட்டது. :(//

ரிப்பீட்டேய்...

அதே நேரம் முழுசா உட்கார்ந்து பார்க்கும் பொறுமையும் போச்சே

LK சொன்னது…

//ரிதான்........ பலரை டிவி பொட்டி முன்னால இருந்து இடம் பெயர்க்கிறது எப்படின்னு சினிமா தியேட்டர் ஓனர்களும் மண்டையை சொரிஞ்சிக்கிறாங்க../

நல்ல கதையும், குறைவான கட்டணுமும் இருந்தால் திரை அரங்கிற்கு மக்கள் செல்வார்கள்

LK சொன்னது…

//அதே நேரம் முழுசா உட்கார்ந்து பார்க்கும் பொறுமையும் போச்சே//

பொறுமை என்பதே இன்று நம்மிடம் இல்லையே

அண்ணாமலையான் சொன்னது…

உண்மைதான்

LK சொன்னது…

//உண்மைதான்//
vaanga ammalaiyare

ஜெயந்தி சொன்னது…

சினிமாவிற்கு முன் நாடகம்தான் மக்களை ஆட்டுவித்துக்கொண்டிருந்தது. சினிமா வந்தவுடன் நாடகம் மெல்ல தொய்ந்தது. டிவி வந்தவுடன் கேட்கவே வேண்டாம். நீங்கள் சொல்வதுபோல் நாடகம் போடுபவர்கள் அந்தக் கலையின் மேலுள்ள பற்றினால்தான் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

LK சொன்னது…

வருகைக்கு நன்றி ஜெயந்தி. இன்னும் சில காலத்தில் டிவி கூட வளகொளிண்டு விடுமோ என்று தோனுகிறது

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…

மேடை நாடகங்கள் வளர்த்து விட்ட கலைஞர்கள் பலர். சிவாஜி அதற்க்கு உதாரணம்.

நன்றி..