சமீபக் காலமாய் , எழுத வேண்டும் என்று சில விஷயங்களைக் குறித்து வைத்திருப்பேன். ஆனால் அவற்றை இன்று வரை எழுதவில்லை. நேரமின்மையும் ஒருக் காரண...
சமீபக் காலமாய் , எழுத வேண்டும் என்று சில விஷயங்களைக் குறித்து வைத்திருப்பேன். ஆனால் அவற்றை இன்று வரை எழுதவில்லை. நேரமின்மையும் ஒருக் காரணம். முன்பு போல் இணையத்தில் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. இதுவும் ஒரு சாக்கு.
திவ்யாவை ஒருவழியாக பள்ளிகூடத்தில் (எல் கே ஜி ) சேர்த்தாகிவிட்டது. இவளிடம் அந்தப் பள்ளி ஆசிரியைகள் எண்ணப் பாடு படப் போகின்றனரோ , அந்த ஆண்டவன்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அத்தனைக் குறும்பு .
இதே நேரமின்மைக் காரணமாகத்தான் துவங்கிய தொடர்கதையை தொடர முடியாமல் அப்படியே நிற்கிறது. சீக்கிரம் அதைத் தொடர முயற்சிக்கிறேன். ஏற்கனவே எனதுப் பதிவில் புதிய விண்டோஸ் இயங்குத் தளத்தை பற்றி எழுதினேன். அது பற்றி மேலும் விரிவாக அதீதத்தில் தொடராக எழுத உள்ளேன். நாளை வெளி வரும் அதீதம் இதழில் இருந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அந்தத் தொடர் வரும்.
அதீதம் தளத்தில் சிலப் பிரச்சனைகள் இருப்பதாக வாசகர்கள் கூறியதால் தள வடிவமைப்பை மாற்றிக் கொண்டிருக்கிறோம். அநேகமாய் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. நாளைப் புதிய வடிவமைப்புடன் அதீதம் வெளிவருகிறது.
அன்புடன் எல்கே
18 கருத்துகள்
திவ்யாவிற்கு வாழ்த்துகள்.....
எல் கே (ஜி!) - எல் கே ஜி அட்மிஷன் கிடைத்ததற்கு வாழ்த்துகள்!
உங்கள் திவ்யா குட்டிக்கு வாழ்த்துக்கள்
ஆஹா!!.. மேடம் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சாச்சா.. ஜூப்பரு..
குழந்தைக்கு வாழ்த்துகள். புதிய பள்ளியின் சூழ்நிலைக்கு ஏற்ப அவள் மனமும் பதியவேண்டி வாழ்த்துகிறேன். எல்கேஜி அட்மிஷனுக்கு இவ்வளவெல்லாம் முக்கியத்துவம் இருக்குனு நினைச்சாலே ஆச்சரியமா இருக்கு.
அந்தக் காலத்தில் வீட்டிலே விஷமம் பண்ணினாப் பள்ளியிலே கொண்டு சேர்த்துட்டு வருவாங்க. அதுவும் விஜயதசமி அன்று சும்மாப் போயிட்டு டீச்சர் சேர்க்கச் சொன்னாங்க, சேர்த்துட்டேன்னு சொன்ன பெற்றோர்களைப் பார்த்திருக்கேன். இப்போ??????? :(
ஹை! எல் கே ஜி அட்மிஷன் வாங்கிட்டீங்களா? கங்ராஜுலேஷன்ஸ் சார்! பெரிய ஆள்தான் நீங்க!!
குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!
திவ்யாவிற்கு வாழ்த்துகள்.
குழந்தைக்கு வாழ்த்துகள்.
பிரகாஷ் ராஜ் த்ரிஷா நடிச்சப் படம் ஞாபகத்துக்கு வருது. திவ்யா அப்பா அம்மா entrance எக்ஸாம் க்கு படிச்சீங்களா? # சிலரின் பின்னூட்டத்தைப் பார்த்து தோன்றியது.
@வெங்கட்
நன்றி
@கௌதம்
நன்றி சார்
@ஜலீலா
நன்றி சகோ
@சாரல்
ஆமா. ஏற்கனவே வாய் ஜாஸ்தி. இனி எப்படியோ பயமா இருக்கு
@geetha
என்ன பண்ண ? எல் கே ஜி சேர்க்காட்டி கொலை கொற்றம் பண்ணது மாதிரி எல்லோரும் சொல்றாங்க. எனக்கு விருப்பம் இல்லை :(
@ராஜி
அதிகமில்லை. அரை லகரத்துகு கொஞ்சம் கம்மி ( டொனேஷன் + பீஸ் )
@ரிஷபன்
நன்றி சார்
@ஸ்ரீராம்
நன்றி சார்
@சேது
திவ்யாவிடம் மட்டும் கேள்விகள் கேட்கப்படும் என்று சொன்னாங்க. அவங்க கேட்கறதுக்கு முன்னாடி இவ அவங்ககிட்ட பேச ஆரமிச்சிட்டா. என்கிட்டே ஒன்னே ஒண்ணுதான் கேட்டாங்க ...
குழந்தைக்கு வாழ்த்துகள் உங்க தொடருக்கு வெயிட்டிங்க்
திவ்யாகுட்டிக்கு வாழ்த்துகள். தொடரை விரைவில் எதிர்பார்க்கிறோம்.
திவ்யாம்மாவுக்கு வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக