Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பதிவு திருட்டை தடுக்க

முன் குறிப்பு : தங்கள் பதிவு திருடுபோவதை தடுக்க விரும்புவர்கள் மட்டும் படிக்கவும்.தடுக்க இது ஒரு வழி. ஆனால் இதன் மூலம் மட்டுமே தடுக்க இயலா...

முன் குறிப்பு :

தங்கள் பதிவு திருடுபோவதை தடுக்க விரும்புவர்கள் மட்டும் படிக்கவும்.தடுக்க இது ஒரு வழி. ஆனால் இதன் மூலம் மட்டுமே தடுக்க இயலாது. முற்றிலும் ஒழிக்க  இன்னும் வழிகள் வரவில்லை.

நேற்றையப் பதிவில் நமது பதிவில் இருந்து திருடி தங்கள் பதிவில் போட்டவர்களின் தளங்களை கூகிளுக்கு ரிப்போர்ட் செய்யும் வழியை சொல்லி இருந்தேன். ஆனால் பின்னூட்டத்தில் பலர் காப்பி செய்வதையே தடை செய்ய இயலுமா என்று கேட்டிருந்தனர்.

நமது கூகிள் ஆண்டவர் இருக்க எதற்கு கவலை என்று இணையத்தில் தேடிய பொழுது ஒரு நான்கு அல்லது ஐந்து முறைகள் கொடுக்கப்பட்டு இருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக சரிபார்த்து கடைசியாக இந்தத் தளத்தில் இருந்த முறை சரியாக வேலை செய்தது .

நான் முதலில் என் அலுவலகக் கணிணியில் இருந்து சரி பார்த்தேன். பிறகு, நமது பதிவுலக நபர்கள் வெங்கட் நாகராஜ், பிரியமுடன் ரமேஷ் ஆகியோரையும் சரிபார்க்க சொன்னேன். க்ரோம்,இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ,பயர்  பாக்ஸ் ,எபிக் ஆகிய நான்கு உலவிகளிலும் சோதித்து பார்த்துவிட்டேன். இங்கு கொடுத்துள்ள  எச் டி எம் எல் கோடை உங்கள் வலைப்பூவில் சேர்த்து விட்டால் அதற்கு பின் உங்கள் தளத்தில் இருந்து காப்பி செய்வதை தடுக்கலாம்.ஒழிக்கலாம் என்று சொல்லவில்லை,காரணம் இதிலும் ஒரு குறைபாடு உள்ளது. அதை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை  . இங்கே அதை சொன்னால்,வீட்டை பூட்டி சாவியை திருடன் கையில் கொடுத்த கதை ஆகி விடும்.




எப்படி இதை உங்கள் தளத்தில் சேர்ப்பது என்று பார்ப்போம் .

1.முதலில் உங்கள் வலைப்பூவிற்கு சென்று டாஷ்போர்ட் செல்லுங்கள். பிறகு டிசைன் . அதன் பிறகு எடிட் ஹெச் டி எம் எல் செல்லுங்கள்.

2. பின் அங்கு இருக்கும் edit HTML template என்று கொடுத்து இருக்கும் . அதன் கீழ் உள்ள பெட்டியில் கிளிக்  செய்தவிட்டு <head> எங்கிருக்கிறது என்று தேடுங்கள். அதன் கீழ் நான் கொடுத்துள்ள கோடை(code ) காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும் .

இருங்க இருங்க, நீங்க கேக்கறது புரியுது. என் பதிவில் இருந்து அதை  காப்பி பேஸ்ட் செய்ய இயலாது. எனவே அதை இந்த லிங்கில் சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.

இது மட்டும் செய்தால் போதாது. 

இப்படி காப்பி செய்வதை தடுத்தாலும் வேறு ஒரு வகையில் காப்பி செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் பதிவின் கீழ் சில பட்டன்களை நீங்கள் கொடுத்து இருப்பீர்கள். இது  உங்கள் பதிவை அப்படியே மெயில் செய்ய உதவும். 

அதை நீக்க ,
1. முதலில் டேஷ்போர்டில் இருந்து செட்டிங்க்ஸ் செல்லுங்கள். பின்பு "basic settings" இன் கீழ் Show Email Post links? ஏன்டா ஆப்ஷனுக்கு அடுத்து "no" என்பதை  தேர்வு  செய்யுங்கள் .

2.புதிதாய் கூகிள் கொடுத்த வசதியான "share buttons" அதையும் நீக்குங்கள் 


என்னை மாதிரி மொக்கை பதிவர்களுக்கு இது உபயோகப் படாது. உபயோகம் உள்ள கவிதை, விழிப்புணர்வு,சமையல் பதிவு எழுதும் நண்பர்களுக்கு இது  மிகவும் உதவும். 


அன்புடன் எல் கே

53 கருத்துகள்

Unknown சொன்னது…

மிகப் பயனுள்ள பதிவு. நிச்சயம் செய்கிறேன்.

மாணவன் சொன்னது…

அருமை சார்,

மிகவும் பயனுள்ள தகவல்...

தொடரட்டும் உங்கள் பணி

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

SUPER L.K. VERY USEFUL ARTICLE. THANK YOU.

அன்பரசன் சொன்னது…

உபயோகமான தகவல்

Chitra சொன்னது…

தகவலுக்கு மிக்க நன்றிங்க. அக்கறையுடன், நேரம் எடுத்து, ஒரு வழி கண்டுபிடித்து பயனுள்ள பதிவை தந்து விட்டு, உங்களையும் மொக்கை பதிவர் என்று சொல்லிட்டீங்களே! தன்னடக்கம் தானே!

எல் கே சொன்னது…

@சித்ரா

நான் சொல்லலை ,பலர் என் பதிவை பற்றி சொன்னதைத்தான் நான் இங்கே போட்டேன்

ஆமினா சொன்னது…

எல்லாருக்கும் பயனுள்ள குறிப்பு கொடுத்துருக்கீங்க

வாழ்த்துக்களோடு மனமார்ந்த நன்றி சகோ

ராமலக்ஷ்மி சொன்னது…

அக்கறையுடன் எழுதப்பட்ட பதிவு. பயனாகும் அனைவருக்கும்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல பயனுள்ள பகிர்வு அண்ணா..

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவல் LK!

nis சொன்னது…

useful information

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பயனுள்ள தகவல்.. இப்பத்தான் ரைட்க்ளிக் ஆப்ஷனை எடுத்துடலாமான்னு யோசிச்சிட்டிருந்தேன். அதைவிட நல்லமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Asiya Omar சொன்னது…

எல்.கே.மிக்க நன்றி.நேற்று கேட்டதற்கு சிரமம் பார்க்காமல் உடனே தேடி எடுத்து தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

Prabu M சொன்னது…

தகவலுக்கு நன்றி நண்பா...
என்ன பின்னூட்டமிடுபவர்கள் இனிமேல் பிடித்த வரிகளை ஹைலைட் செய்து காட்ட முடியாது :)
நல்ல விஷயம்... வாழ்த்துக்களும் நன்றிகளும்....

GEETHA ACHAL சொன்னது…

ரொம்ப நன்றி கார்த்திக்...இப்ப தான் email settingயினை மாற்றினேன்...நன்றி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.

Vidhya Chandrasekaran சொன்னது…

நன்றி LK

நேரம் கிடைக்கும்போது செய்துவிடுகிறேன்.

\\என்னை மாதிரி மொக்கை பதிவர்களுக்கு இது உபயோகப் படாது. \\

நாங்க மட்டும் என்னாவாம்?

ஜிஎஸ்ஆர் சொன்னது…

முதலில் மன்னிக்கவும் இப்படியான ஒரு பின்னுட்டத்திற்கு இதற்கான தீர்வு இன்னும் வரவில்லை

http://gsr-gentle.blogspot.com/2010/08/blog-post_05.html

எல் கே சொன்னது…

@ஜீஎஸ்ஆர்

முதலில் என் பதிவை சரியாகப் படிக்கவும். தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு பின்னூட்டம் இட வேண்டாம்
//தடுக்க இது ஒரு வழி. ஆனால் இதன் மூலம் மட்டுமே தடுக்க இயலாது. முற்றிலும் ஒழிக்க இன்னும் வழிகள் வரவில்லை.//

தெளிவாக முதலில் சொல்லியப் பிறகே மற்றவை சொல்லி இருக்கிறேன். நீங்கள் உங்கள் பதிவில் சொல்லியவை எனக்குத் தெரிந்தவைதான். ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பை நான் சொன்னேன். பொதுவாக பாஸ்வேர்ட் ஹேக் செய்தால் தளத்தில் காப்பி செய்தால் பற்றிய தகவல்களை தொழில்நுட்ப தகவல்களாக வெளியாடாமல் இருப்பது நல்லது

geetha santhanam சொன்னது…

very useful info. thanks.

karthikkumar சொன்னது…

உபயோகமான தகவல் சார். நன்றி .

ஜிஎஸ்ஆர் சொன்னது…

பொதுவாகவே பின்னுட்டம் இடுவது குறைவு அப்படியே பின்னுட்டம் எழுதினால் அந்த பதிவை படிக்காமல் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை நான் பின்னுட்டத்தில் தெளிவாகவே எழுதியிருக்கிறேன் இதற்கான தீர்வு இன்னும் வரவில்லை என்பதை தான் எழுதியிருக்கிறேன்

எல் கே சொன்னது…

@ஜீஎஸ்ஆர்

அதையேதான் நான் பதிவிலும் சொல்லி இருக்கிறேன். உங்கள் பின்னூட்டத்தின் மறுமொழியிலும் சொல்லியிருக்கிறேன். சரியாகப் பார்க்கவும்

pichaikaaran சொன்னது…

எனக்கு இந்த தகவல் பயன்படாது...

என் கருத்து ( !! ? ) பரவி மக்கள் பயன்பெற்றால் ( ? ! ? ) சந்தோஷம்தான்..

ஆனால் நல்ல தகவல்தான்...

காப்பி அடிக்கப்பட கூடாது என நினைக்கும் விஷ்யங்களை தனி பிளாக்கில் பதிவிட்டு, நீங்கள் சொன்ன பாதுகாப்பு முறைகளை பயன்படுத்த நினைக்கிறேன்

ரமேஷ் பாபு சொன்னது…

அருமை நண்பரே..., ஆனால் ஒன்றை மறந்து விட்டேரே!? உங்கள் வலை பக்கத்தை ப்ரௌசெரில் இருந்து சேமிக்க முடியும் (File --> Save As). அதை யாராலும் தடுக்க முடியாதே!!. என்ன செய்யலாம்? இதற்கும் ஒரு எளிய வழி இருக்கிறது ஆனால் இது IE இல் மட்டும் வேலை செய்யும். நீங்கள் செய்ய வேண்டியது ஏதேனும் ஒரு tag ஐ சரியாக முடிக்காமல் விட்டுவிடவும். இப்போது எவரேனும் உங்கள் வலைப்பக்கத்தை save as செய்தால் IE சொல்லும் incomplete web page ஆனால் firefox மற்றும் இன்ன பிற ப்ரௌசெர்களில் இது வேலை செய்யாது.

மனோ சாமிநாதன் சொன்னது…

பலவகையிலும் பரிசோதித்து, திருப்தி ஏற்பட்டபின் நிறைவான ஒரு பயனுள்ள தகவலைக் கொடுத்திருக்கிறீர்கள். சமையல் தளங்கள், ஓவியங்கள் இவற்றிற்கு நிச்சயம் இவை பயனளிக்கும்! மிக்க நன்றி!!
Share buttons-ஐ எப்ப‌டி நீக்குவ‌து என்று விப‌ர‌மாக‌ குறிப்பிட்டால் வ‌ச‌தியாக‌ இருக்கும்.

Jaleela Kamal சொன்னது…

பயனுள்ள பதிவு

நானும் ஷேர் பட்டன் இருந்தால் நீக்கி பார்க்கிறேன்
நீங்கள் கொடுத்துள்ள கோட் ஏற்கனவே போட்டு தான் இருக்கேன் இருந்தும் திருட்டு தான்

என்ன செய்ய

Madhavan Srinivasagopalan சொன்னது…

Still I can copy dear.

So, avoid sharing any information which you feel as copyrighted..

Geetha Sambasivam சொன்னது…

பார்க்கலாம், முயற்சி செய்யறேன். இதிலும் குறை இருக்கிறதுனு சொல்றது யோசிக்க வைக்குது. :(

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவுதான்.திருடணும்னு முடிவு பண்ணிட்டா அவன் எப்படியும் திருடிருவான்...

சசிகுமார் சொன்னது…

சூப்பர் சார் நன்றி

ADHI VENKAT சொன்னது…

உபயோகமான தகவல். நன்றி.

சுந்தரா சொன்னது…

பதிவர்களுக்கு உபயோகமான பதிவு.

உங்க உழைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றி கார்த்திக்!

Gayathri சொன்னது…

எல்லாருக்கும் மிக தேவையான ஒன்னு
மிக்க நன்றி ப்ரோ

சௌந்தர் சொன்னது…

அது என்ன என்னை மாதிரி மொக்கை பதிவர் நீங்க நல்ல பதிவர் தான். என் பதிவை எல்லாம் காபி அடிக்க மாட்டாங்க நல்ல தகவல்...

எல் கே சொன்னது…

@கலாநேசன்
நன்றி

@மாணவன்

நன்றி

@சங்கரி
நன்றி

@அன்பரசன்
நன்றி

எல் கே சொன்னது…

@ஆமினா
நன்றி சகோ

@ராமலக்ஷ்மி

நன்றிங்க

@ஜெயந்த்

நன்றி

@பாலாஜி
நன்றி

@நிஸ்
நன்றி

@

எல் கே சொன்னது…

@சாரல்

அதையும் பண்ணுங்க. நான் சொல்லி இருப்பது மட்டுமே போதாது


@ஆசிய

நன்றி சகோ

@பிரபு
உண்மைதான். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று கிடைக்கும்

எல் கே சொன்னது…

@கீதா

நன்றி

@வெங்கட்
நன்றி


@வித்யா
அப்ப எனக்கு ஒரு கம்பெனி இருக்கு .. நன்றி

@கீதா சந்தானம்
நன்றி

@கார்த்திக் குமார்
நன்றி

@பார்வையாளன்

நன்றி முயற்சி செய்யுங்கள்

எல் கே சொன்னது…

@ரமேஷ்
நீங்கள் சொல்வது போல் செய்வது கடினம். ஏதேனும் ஒரு இடம் முழுமை பெறாமல் இருந்தால் டெம்ப்ளேட் சேவ் ஆகாது .

எல் கே சொன்னது…

@மனோ சாமிநாதன்
நன்றி அம்மா. கண்டிப்பாக போடுகிறேன். ஊருக்கு செல்கிறேன். வந்தவுடன் முதல் பதிவாக போட்டுவிடுகிறேன்

எல் கே சொன்னது…

@மாதவன்

அண்ணே,, நான் காபி பணணவே முடியாதுன்னு எங்கயும் சொல்லலை. முன் குறிப்பு படிங்கோ. இது ஒரு வழி. ஒழிக்கவே இயலாது என்று சொல்லி இருப்பேன். நன்றி

எல் கே சொன்னது…

@ஜலீலா

சகோ, நான் முயன்று கொண்டிருக்கிறேன். வெற்றி பெற்றால் பகிர்கிறேன்

எல் கே சொன்னது…

@கீதா
மாமி, 100% பாதுகாப்பு இன்னும் வரவில்லை :(

எல் கே சொன்னது…

@ஆர்கே சதீஷ்
உண்மை

@சசி
நன்றி தம்பி

@கோவை
நன்றி

@சுந்தரா
நன்றிங்க

@காயத்ரி
நன்றி

எல் கே சொன்னது…

@சௌந்தர்

உண்மைதான் சொல்கிறேன். நெறைய பேரு என் முதுகுக்குப் பின்னாடி சொன்னதை நான் இங்கே சொன்னேன் அவ்வளவே

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Asusual, useful post Karthik

Unknown சொன்னது…

கண்டிப்பாக பயனுள்ள பதிவுங்க எல்.கே..

ஆனால் நீங்க சொன்னமாதிரி இதுல ஒரு குறையும் இருக்கு..

சுசி சொன்னது…

நல்ல தகவல் கார்த்திக்.

Harini Nagarajan சொன்னது…

miga ubayogamana pathivu. Kandipaaga seigiren. Ithil yenna ottai irukkirathu enbathai apparama enakku gtalk-il solli vidungal! :D

ஸ்ரீராம். சொன்னது…

உபயோகமான பதிவு....எந்த அளவு என்று உபயோகித்த பின்தான் தெரியும் இல்லையா?

Vaitheki சொன்னது…

பயனுள்ள விடயம். இதை பகிர்தமைக்கு நன்றி !

தக்குடு சொன்னது…

//மொக்கை பதிவர்// பாஸ் என்னையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க!!..:)

@ ஹரிணி மேடம் - இதெல்லாம் போஸ்ட் போடரவாளுக்கு தான் உபயோகமாகும். வருஷத்துக்கு 2 பதிவு போடறவா கவலைபடவேண்டாம்...:PP