ஊரில் இரண்டு நாட்கள் தீபாவளியை கொண்டாடி விட்டு வந்தது மனதிற்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. பல இடங்கள் உருமாறிவிட்டன. பல வருடங்கள் கழித்து எ...
அதேப்போல் ஆட்டோ கட்டணம். சேலத்தில் இருந்து ரயிலில் சென்னைக்கு ஆக்கும் கட்டணத்தை விட அதிகமாக ரயில்வே ஸ்டேசனில் இருந்து எங்கள் வீட்டிற்கு செலவதற்கு கேட்கிறார்கள் .
சென்றப் பதிவில் சொன்னது போல் முதலில், வெங்காய வெடியை பற்றிப் பார்ப்போம். ரொம்ப பெருசால்லாம் இருக்காது, ஒரு கல், கொஞ்சம் வெடிமருந்து அதை சுற்றி ஒட்டப்பட்ட கலர் காகிதம் . இதுதான் வெங்காய வெடி. "மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது" என்பார்கள். அதுபோன்றுதான் இது. இதை ஓங்கி சுவரிலோ ,தரையிலோ அடித்தால், பயங்கர சப்தத்துடன் வெடிக்கும். இதில் ஆபத்து அதிகம், சுவரில் தரையிலோ இது படும்போது, உள்ளிருக்கும் கல் மிகுந்த வேகத்துடன் வெளியில் வரும் அது எந்தப்பக்கம் சென்று யாரை தாக்கும் என்றுத் தெரியாது. நான் சேலத்தில் இருக்கும் பொழுது ஒரு பட்டாசு கடையில், விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த வெங்காய வெடிகள் உரசி ,பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதற்குப் பிறகுதான் அரசு இதை தடை செய்ததாக ஞாபகம்.
சேலத்தில் அமைந்துள்ள மற்றொரு கோவில் ,கந்தாஸ்ரமம். சேலம் நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீ சதானந்த பிரமேந்திர சரஸ்வதி சுவாமிகளால் கட்டப்பட்டுள்ளது. சிறிய குன்றில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்லும் முன் கன்னிமார் ஓடையை கடந்து செல்லவேண்டும். மழை காலத்தை தவிர மற்ற நாட்களில் காய்ந்து வற்றி போய் இருக்கும். குன்றில் ஏறினால், அங்கிருக்கும் அத்தனை சுவாமி சிலைகளும் பிரம்மாண்டமாய் காட்சி அளிக்கும். முருகன் மட்டும் இன்றி, ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனும், பஞ்சமுக ஆஞ்சநேயரும்,தத்தாத்ரேயா சுவாமிகளுக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு .
மாம்பழத்திற்கு அடுத்து சேலத்தில் புகழ் பெற்றது சேலம் ஸ்டீல் பிளான்ட். சேலம் நகரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவில் இருக்கும் அனைத்து ஆலைகளையும் விட இது புகழ் பெருக காரணம், இந்தியாவின் ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் தேவையின் பெரும்பான்மையை சேலம் ஸ்டீல் பிளான்ட் தான் தீர்க்கிறது.
ISO 9001:2000 தரக் கட்டுபாடு சான்றிதழும், ISO140001:2004 சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சான்றிதழும் தரப்பட்டுள்ளது சேலம் இரும்பாலைக்கு.
அடுத்து வருவது சேலம் மாரியம்மன் பண்டிகை
அன்புடன் எல்கே
32 கருத்துகள்
நல்ல பகிர்வு
பண்டிகையை காண ஆவலோடு காத்திருக்கிறேன்.
தீபாவளியினை சூப்பராக கொண்டாடி இருக்கின்றிங்க போல...குட்டிமா எப்படி இருக்காங்க...
ஆகா, என்க்கு மிகவும் பிடித்த கந்தாஸ்ரமம்.....நன்றி எல்.கே.
சொந்த மண்ல இந்த வாரம் உணர்வு தூக்கலா இருக்கு.....!
சேலம் வீதிகள் உங்களின் கடந்த காலத்தில் ஏற்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகள் சேத்து சொன்னீங்கன்னா.. இப்ப இருக்குற கலக்கலோடு சேர்ந்து செம கலக்கலா இருக்கும்....!
ஆமா தோசை மட்டும்தானே சாப்டீங்க...???????!!!!****&&^^^$%%%
nalla enjoy panneengala? sondha urukku poitu vara kushiye thanithaan
selatha paththi nalla solreenga nandri
@ஜெயந்த்
நன்றி தம்பி
@கீதா
ஆமாம். பாப்பா அருமையா இருக்காங்க
@நித்திலம்
உங்களுக்கும் பிடிக்குமா நன்றி
@தேவா
சொந்த மண்ணை தரிசித்து வந்தேன் அல்லவா . அதனால்தான் ..அனுபவங்கள் வேண்டுமா? அதற்கென்ன பஞ்சம். நெறைய இருக்கு பகிர்கிறேன்
பாஸ் வெறும் தோசைதான்
@காயத்ரி
ஆமாம். நன்றி
நல்ல பகிர்வு.
மண்வாசம் தொடர்ந்து வீசட்டும்....
நல்ல பதிவு.நன்றி!!
சொந்த மண்ணில் தீபாவளி கொண்டாட்டம் - மகிழ்ச்சி தெரிந்தது உங்கள் பதிவில்.
சேலத்திலும் “மாம்பலம்” இருக்கா?
Nice!! :)
@குமார்
நன்றி நண்பா
@மேனகா
நன்றி
@கலா நேசன்
வீசும்
@வெங்கட்
சுட்டிக் காட்டியதற்கு நன்றி.. திருத்தி விட்டேன்
@ஜீ
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
பொறமைப் படுறமாதிரி ஒரு தீபாவளி கொண்டாடிட்டு வந்திருக்கீங்க !
அன்பான தீபாவளி வாழ்த்துகள் கார்த்திக்.
வாழ்த்துகள். உங்க கடை பேரே சொல்லமாட்டேன்கறீங்க. பயபடாதீங்க.
சேலம் ஸ்டீல் ப்லான்ட்க்கு முன்பே கண்ணாடி தொழிற்சாலை, மற்றும் சேலம் மக்னசிட் போன்றவைப் பற்றி எழுதுங்கள். ஒரு காலத்தில் பல ஜவ்வரிசி ஆலைகள் இருந்தது. அம்மாபேட்டை பொன்னம்மாபேட்டை நெசவாளர்களின் வேஷ்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றது. பல காலமாக சிறுதொழில்களின் பிரபலமான இடம் சேலம். சேலம் பஸ் ஸ்டாண்ட் வெறும் சில மணித்துளிகளே தூங்கும்.
@ஹேமா
நன்றி தோழி
@சேது
இதில் என்ன இருக்கு பயப் பட. கடைக்கு பெயர் எல்லாம் இல்லை. செவ்வைபேட்டையில் "ராஜாய்யர் கடை " என்றால் எல்லோருக்கும் தெரியும். பழைய இந்தியன் ஆயில் டிப்போவின் எதிரில் .
கண்டிப்பா எழுதறேன் சார்
nalla pathuvu! Neenga vengaya vedi a pathi pesina appa enakku vengaya vadaam thaan gnyabagam vanthuthu! :P
நல்ல பகிர்வு கார்த்திக்.
எங்க ஊர் பொட்டு வெடி தான் வெங்காய வெடியா? பகிர்வு வழக்கம் போல அருமை.
நல்ல தகவல்கள் LK!
ஆகா! வெங்காய வெடி பத்தி எல்லாம் எழுதி, சின்ன வயசு நினைவை தூண்டி விடறீங்க...ஆட்டோ கட்டணம் பத்தி சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை.நல்ல பதிவு.
வெங்காய வெடி விபத்து பற்றி நானும் கேள்வி பட்டு இருக்கேன்....
நல்ல பகிர்வு
சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடியதுக்கு வாழ்த்துகள். சென்னை, தாம்பரம், அருகே சேலையூரில் அமைந்துள்ள ஸ்கந்தாஸ்ரமத்திலும் நீங்க சொன்னாப்போல் எல்லா விக்கிரஹங்களும் பெரியவையாக அமைக்கப்பட்டிருக்கின்றது. படம் எடுக்கத் தடை! அது பற்றிப் பதிவும் போட்டிருக்கேன்.
கருத்துரையிடுக