Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பென் டிரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் -I

கணினியின் தேவை பெருகி வரும் இன்றைய சூழலில் ,நம்மில் பெரும்பாலோனோர் பென் ட்ரைவ்களையும்,எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்களையும் அதிகம் உபயோகப் படுத்...

கணினியின் தேவை பெருகி வரும் இன்றைய சூழலில் ,நம்மில் பெரும்பாலோனோர் பென் ட்ரைவ்களையும்,எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்களையும் அதிகம் உபயோகப் படுத்துகிறோம். இன்று பென் டிரைவ்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதே போன்றுதான் எச்டேர்னல் ஹார்ட் டிஸ்க்களும்.

இவற்றை வாங்கும் முன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்பதை பற்றிப் பார்ப்போம்.ஏனெனில் சில கடைகளில் ஒரு சில விஷயங்களை குறிப்பிடுவது  இல்லை. வாடிக்கையாளர் ஏமாற்றப் படுகின்றார். இந்த விஷயத்தில் பல வாடிக்கையாளர்கள் ஏமாற்றப் பட்டிருப்பதை பார்த்து இருக்கிறேன். அதைத் தவிர்க்கவே இந்தப் பதிவு.

முதலில் உங்களுக்கு தேவை பென் டிரைவா இல்லை எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கா என்று முடிவெடுங்கள். அலுவலக வேலைகளை வீட்டில் கொண்டு வந்து செய்பவராய் இருந்தால் நீங்கள் அதிகபட்சம் எவ்வளவு பெரிய பைல்களை கொண்டுவருவீர்கள் என்ற கணக்கு போடுங்கள். இன்று 64 GB  வரை பென் டிரைவ்கள் கிடைக்கின்றன. இதை கொண்டு செல்வது எளிது. உங்கள் பேன்ட் பாக்கெட் இல்லை ஷர்ட்டில் போட்டு கொண்டு வந்து விடலாம். எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்களை விட விலை குறைவுதான்.

அடுத்தது, வாங்கும் முன் மார்கெட்டில் விலை விவரங்களை சேகரியுங்கள். பல நிறுவனங்கள் இப்பொழுது மார்கெட்டில் உள்ளன. உதாரணத்திற்கு seagate,transcend,iomega,buffalo,western digital,lacie போன்றவை எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் ஆகும்.அதே போன்று பென் டிரைவ் விற்பனையில் Kingston,HP,transcend,sandisk,verbatim,moserbear   போன்றவை முன்னணியில் உள்ளவை.

உங்களுக்கு எத்தகைய கொள்ளளவு உள்ள ஹார்ட் டிஸ்க்/பென் டிரைவ்  தேவை படும் என்று முடிவெடுத்து அதன் விலைகளை கேட்டாயிற்று. அடுத்து என்ன பண்ணுவது.  அதன் வாரண்டி காலம் பற்றி விசாரியுங்கள். அதே போல், நீங்கள் வாங்கும் கடையிலேயே மாற்றி தருவேன் என்று சொல்லுவார்கள். இருந்தாலும், நீங்கள் நிறுவனத்தின் நேரடி சர்விஸ் சென்டர் எங்குள்ளது, அதற்கு கஸ்டமர் கேர் எண் உள்ளதா என்று விசாரித்து கொள்ளவும். நேரடியாக சர்விஸ் சென்டரில் சென்று மாற்றுவதே சிறந்தது. ஒரு சில நிறுவனங்கள் உங்கள் வீட்டில் வந்து கூட ரிப்பேர் ஆன எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்குகளை பெற்று சென்று பிறகு சர்விஸ் செய்த ஹார்ட் டிஸ்க்கை கொரியரில் அனுப்பி வைக்கின்றனர். எனவே நீங்க அலைய  வேண்டிய அவசியம் இருக்காது.

நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் ஒன்று. இன்றைய பொருளாதார சூழலில் பெரும்பாலான நிறுவனங்கள் உங்கள் பென் ட்ரைவோ இல்லை எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கோ பழுதடைந்தால் புதிய பொருள் தருவது இல்லை, நீங்கள் கொடுத்த பொருளையே சர்விஸ் செய்து கொடுப்பார். இன்னும் சில நிறுவனங்கள் வேறு ஒரு ஹார்ட் டிஸ்க்கோ இல்லை பென் ட்ரைவோ தருவார்கள். ஆனால் அதன் மேல் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருக்கும் "refurbished product".  இதன் அர்த்தம் இது சர்விஸ் செய்யப் பட்ட பொருள் என்பதே.

நீங்கள் வேலை நிமித்தம் வெளிநாடு செல்பவராக இருந்தால் வாங்கும் பொருளுக்கு இண்டர்நேசனல் வாரண்டி உள்ளதா என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ளவும். இன்று பெரும்பாலான நிறுவனங்கள் இத்தகைய வசதி தருவது இல்லை.

 எந்த நிறுவனமும் பென் ட்ரைவுக்கும்/ஹார்ட் டிஸ்க்கிற்கும் மட்டுமே வாரண்டி அளிக்கும். அதில் நீங்கள் வைக்கும் டேட்டாவிற்கு இல்லை. உங்கள் பொருள் பழுதடைந்தால் அதை மட்டுமே மாற்றியோ இல்லை சரி செய்தோ தருவர். நீங்கள் அதில் வைத்த டேட்டா காலி. டேட்டா திரும்ப எடுப்பது என்பது தனி வேலை. அதை எந்த நிறுவனமும் இலவசமாக செய்வது இல்லை. அதற்கென்று தனி நிறுவனங்கள் உள்ளன. அவற்றையே  நீங்கள் நாட வேண்டும். எனவே எக்ஸ்டெர்னல் மீடியா எனப்படும் இவற்றில் வைக்கப்படும் டேட்டாவின் ஒரு பேக் அப் உங்கள் கணிணியில் இருக்கட்டும். இந்த மாதிரி தருணங்களில் அது உபயோகப் படும்.

அதே போல் எத்தனை நாட்களில் ரிப்பேறோ இல்லை மாற்றியோ தருவார்கள் என்பதையும் அந்த நிறுவனத்தின் கால் சென்டருக்கு போன் செய்து உறுதி படுத்திக் கொள்ளுங்கள். கடையில் விற்பனைக்காக உடனடியாக மாற்றி தரப்படும் என்று பொய் சொல்ல வாய்ப்புண்டு.

இவ்வாறு நீங்கள் அனைத்து விஷயங்களையும் தெளிவு  செய்து கொண்டு பின்பு வாங்கவேண்டும். விலை கம்மியாக உள்ளதே என்று சரியாக சர்விஸ் இல்லாத நிறவனத்தின் பொருட்களை வாங்கி பின் அவஸ்தை பட  வேண்டாம்.

-தொடரும்

அன்புடன் எல்கே

42 கருத்துகள்

Philosophy Prabhakaran சொன்னது…

மனமார்ந்த நன்றி LK... மிகவும் பயனுள்ளதாக இருந்தது... குறிப்பாக refurbished product பற்றிய தகவல்...

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அவசியமான தகவல்களுக்கு நன்றி கார்த்திக்.

பெயரில்லா சொன்னது…

மிகவும் நல்ல தகவல் கார்த்திக். இது பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் மட்டுமல்லாது பெரும்பாலான மின்னணுச் சாதனப் பொருட்களுக்குமே பொருந்தக் கூடிய ஒன்றுதான். refurbished product பற்றி நான் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த ஸ்டிக்கர் ஒட்டாமலேயே கூட பொருட்களை சில ஏமாளி வாடிக்கையாளர்கள் தலையில் விற்பனையாளர்கள் கட்டி விடுவதுண்டு என்று என் கணிணி விற்பனையாள நண்பர் கூறினார். Samsung is always the best என்றார். நல்ல தகவலுக்கு நன்றிகள்..

Paleo God சொன்னது…

நீங்கள் நிறுவனத்தின் நேரடி சர்விஸ் சென்டர் எங்குள்ளது, அதற்கு கஸ்டமர் கேர் எண் உள்ளதா என்று விசாரித்து கொள்ளவும். //

முடிந்தால் அந்த சர்வீஸ் செண்டர் எங்கே இருக்கிறது என்று பார்த்து வைத்துக்கொண்டாலும் நலமே! 90% வாரண்டி புக்கில்அச்சிடப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் வேலை செய்வதே இல்லை :(

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவு...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பயனுள்ள தகவல்கள். பலருக்கு உபயோகமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை கார்த்திக்.

பெயரில்லா சொன்னது…

superb LK.. Sriviji

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவல்கள்..

RVS சொன்னது…

Good Post!

karthee சொன்னது…

valuable information

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக்.

அருண் பிரசாத் சொன்னது…

என்னது தொடருமா? இன்னும் இருக்கா! சரி... சரி....

ஆங்... மறந்துட்டேனே.. 200 followers பெற்றதுக்கு வாழ்த்துக்கள்

Geetha Sambasivam சொன்னது…

seagate service centre, Gemini Parson Complexile இருக்குனு நம்பறேன். மத்தது எங்கேனு தெரியாது. உபயோகமான பதிவுக்கு நன்றி. வேலை தெரியாதவங்க நல்ல தெரிந்த உண்மையான எஞ்சினியரை அழைக்கவேண்டும். என்னோட ஹார்ட் டிஸ்க் கணினி வாங்கினப்போ 80 GB இருந்தது. அதிலே கோளாறுனு சொல்லி செர்வீஸுக்குக் கொடுக்கிறேன்னு எடுத்துச் சென்ற மெகானிக் போட்டது 40 GB ஹார்ட் டிஸ்கை, அதுவும் வேறே கம்பெனி. அப்புறமா நல்லவேளையா அசெம்பிள் பண்ணின லிஸ்ட் கைவசம் இருந்ததால் எடுத்துக் காட்டினதும், வேறே ஏதோ உபயோகமில்லா 80- GBயை இதான் உங்க ஹார்ட் டிஸ்க்னு போட்டுட்டுப்போயிட்டார். அதோட மன்னாடி, அப்புறமாப் புதுசு வாங்கினேன் வேறே ஒருத்தர் மூலமாய். :(((( கணினி அநுபவங்கள் ஒரு ஐநூறு பக்கப் புத்தகமே எழுதலாம்.

எல் கே சொன்னது…

@பிரபாகரன்

நன்றி சார். அனைவர்க்கும் பயன் படட்டும் என்றுதான் போட்டேன்

எல் கே சொன்னது…

@சை.கொ.ப
நன்றி

எல் கே சொன்னது…

@ரமணன்
உண்மைதான். ஆனால் எனக்குத் தெரிந்ததை மட்டுமே நான் சொல்ல விருப்பப்பட்டேன். பொதுவாக சர்விஸ் சென்டருக்கு நீங்கள் நேரடியாக சென்றால் இந்தப் பிரச்சனை வராது . வேறு ஒருவர் மூலம் சென்றால் இந்தப் பிரச்சனை வரலாம். நன்றி

எல் கே சொன்னது…

@ஷங்கர்
இது எதனால் நேரிடுகிறது என்று நான் அடுத்தப் பதிவில் சொல்லுகிறேன். நீங்கள் கஸ்டமர் கேர் எண்ணுக்கு அழைத்து அவர்களிடம் இருந்து முகவரியும் ,தொலைபேசி எண்ணும் பெறலாம்,

எல் கே சொன்னது…

@ஜெயந்த்

நன்றி

@வெங்கட்
நன்றி

எல் கே சொன்னது…

@விஜி
நன்றி

@பாலாஜி
நன்றி

@கார்த்தி
நன்றி

எல் கே சொன்னது…

@சுசி
நன்றி

@ஆர்வீஎஸ்
நன்றி

எல் கே சொன்னது…

@அருண்
இன்னும் இருக்கு பாஸ். வாங்கினப் பிறகு நீங்க என்ன பண்ணனும்னு சொல்ல வேண்டாம் .வாழ்த்திற்கு நன்றி

எல் கே சொன்னது…

@கீதா
மாமி , இப்படியும் நடக்கும். பொதுவாக நேரடியாக சம்பந்தப் பட்டவர்களே சர்விஸ் சென்ட்டர் போவது நல்லது. முடியாதப் பட்சத்தில் நீங்கள் செய்தது போல் செய்யலாம். அது ஜெமினியில் இல்லை, கிரீம்ஸ் ரோட்டில் உள்ளது

ஸ்ரீராம். சொன்னது…

உபயோகமான தகவல்.

ஸ்ரீராம். சொன்னது…

இன்டெர்னல் டிரைவ் கூட வாங்கி ஒரு அடாப்டருடன் எக்ஸ்டர்னல் ஆக உபயோகிக்க முடிகிறது. ஒரு டி பி மூவாயிரத்து ஐநூறு ரூபாயில் முடிகிறது!!

ADHI VENKAT சொன்னது…

பயனுள்ள தகவல்கள். தொடருங்கள்.

vasu balaji சொன்னது…

good one thank you

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பென்ட்ரைவ் இப்பல்லாம் காலேஜ் பசங்களுக்கு மொபைலை விட அத்தியாவசியமான பொருளாகிட்டது..

nis சொன்னது…

பயனுள்ள தகவல்கள்
colorful post :)

Harini Nagarajan சொன்னது…

மிக அருமையான பதிவு. ஒரு சில கம்பெனி பாக் அப் டிஸ்க் தருவதாக என் நண்பன் சொன்னான். அப்படி பாக் அப் டிஸ்க்-உடன் வரும் எச்டேர்னல் ஹர்ட் டிஸ்க் வாங்குவது சிறந்ததா என்றும் கூறுங்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமையான பகிர்வு .. நன்றி கார்த்திக்..

Menaga Sathia சொன்னது…

பயனுள்ள தகவல்,பகிர்ந்தமைக்கு நன்றி!!

vanathy சொன்னது…

very useful informations.

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

உண்மைதான் ஆனா. அபப்டியும் உபயோகிக்கலாம்.

எல் கே சொன்னது…

@கோவை

நன்றிங்க

எல் கே சொன்னது…

@baala

todar varugaikkum karuthukkum nandri saar

எல் கே சொன்னது…

@சாரல்

ஆமாம் சகோ

எல் கே சொன்னது…

@nis
நன்றிங்க

எல் கே சொன்னது…

@ஹரிணி
அனேகமா அது பேக்கப் சாப்ட்வேர் ஆகா இருக்க வாய்ப்புள்ளது

எல் கே சொன்னது…

@தேனம்மை

நன்றி

எல் கே சொன்னது…

@மேனகா
நன்றி

எல் கே சொன்னது…

@வாணி
நன்றி

Unknown சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி