Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Tuesday, December 3

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

என்றுத் தணியும் ?

குஜராத் மக்களை தொடர்ந்து, பீகார் மக்களும் வளர்ச்சி பணிகளுக்கு ஆதரவாக ஓட்டு போட்டுள்ளனர். பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி ஓரளவு எத...

குஜராத் மக்களை தொடர்ந்து, பீகார் மக்களும் வளர்ச்சி பணிகளுக்கு ஆதரவாக ஓட்டு போட்டுள்ளனர். பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி ஓரளவு எதிர்ப்பார்க்கபட்டதே என்றாலும், இவ்வளவு பெரிய வெற்றியை யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது.

ஆம், மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 206 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர் என்றால் அது அங்கு போட்டியே இல்லை என்பதை காட்டுகிறது. ஜாதி, மதம் முக்கியம் இல்லை, வளர்ச்சிதான் என்று பீகார் மக்கள் ஆணித் தரமாக சொல்லி உள்ளனர்.


இதே போன்றுதான் கடந்த குஜராத் தேர்தலிலும் நடந்தது. அனைத்து மீடியாக்களும் மோடி தோற்று விடுவார் என்று சொன்னார்கள் . ஆனால் என்ன நடந்தது ? சமீபத்தில் அங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள ஆறு மாங்கரட்சிகளையும் மோடி வென்றார். பாஜகவின் சார்பில் போட்டியிட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். முஸ்லிம் அதிகம் உள்ள தொகுதியில் போட்டியிட்ட ஹிந்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

அங்கு மக்கள் இலவசங்களுக்கோ இல்லை ஜாதி,மத உணர்வுகளுக்கோ முக்கியம் அளிக்காமல் வளர்ச்சி பணிகளுக்கே முக்கியத்துவம் அளித்தனர். ஆனால் தமிழகத்தில் ????

எனக்கு தெரிந்த நண்பர், பீகார் அரசாங்கத்தின் e-governance ப்ராஜெக்டில் ஈடுபட்டுள்ளார் ,அவர் சொன்னது "நிதிஷ் இன்னும் ஐந்து வருடம் ஆட்சியில் நீடித்தால் , வளர்ச்சியில் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளும் ". என்ன கேக்கறதுக்கு அதிர்ச்சியா இருக்கா ?? உண்மை அதுதான். வன்முறைகளை பெருமளவு குறைத்துள்ளார். அரசாங்க பணிகளில் லஞ்சத்தை பெருமளவு குறைத்துள்ளார். முக்கியமாக , அடிப்படை கல்வியிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் அதிக கவனம் செலுத்தினார். விளைவு ,இன்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.


ஆனால் , இங்கு என்ன நடக்கிறது,? ஊழல் குற்றச்சாட்டில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சருக்கு ஆதரவாய் ஒரு கூட்டம் , அவர் ஜாதியின் காரணமாக அவரை இந்தக் குற்றச்சாட்டில் சிக்க வைத்துள்ளனர் என்று கூறுகின்றது.

தமிழக மக்கள் என்று ஜாதியையும், இலவசங்களையும் மறந்து வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஓட்டுப் போடுகின்றனரோ அப்பொழுதுதான் தமிழகம் முன்னேறும் .

பீகாரும், குஜராத்தும் முன்னேறி வருவதை பார்த்தல் , அங்கு சென்று விடலாமா என்று தோன்றுகிறது .


அன்புடன் எல்கே

46 கருத்துகள்

பெயரில்லா சொன்னது…

//தமிழக மக்கள் என்று ஜாதியையும், இலவசங்களையும் மறந்து வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஓட்டுப் போடுகின்றனரோ அப்பொழுதுதான் தமிழகம் முன்னேறும் .//
மிகச் சரியாய் சொன்னீர்கள் LK!
பார்க்கலாம், நம் மக்கள் வரும் தேர்தலில் என்ன முடிவு செய்கிறார்கள் என்று?

கோலா பூரி. சொன்னது…

அரசியல் வாதிகள் நடத்தும் ட்ராமாவினால் அரசியலைப்பற்றி தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது என்றுதான் தோன்றுகிரது.

Chitra சொன்னது…

பீகாரும், குஜராத்தும் முன்னேறி வருவதை பார்த்தல் , அங்கு சென்று விடலாமா என்று தோன்றுகிறது .


....தமாசு பண்ணாதீக!

Arun Prasath சொன்னது…

தமிழக மக்கள் என்று ஜாதியையும், இலவசங்களையும் மறந்து வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஓட்டுப் போடுகின்றனரோ அப்பொழுதுதான் தமிழகம் முன்னேறும் .//

அது கஷ்டம் சார்...

சேலம் தேவா சொன்னது…

//பீகாரும், குஜராத்தும் முன்னேறி வருவதை பார்த்தல் , அங்கு சென்று விடலாமா என்று தோன்றுகிறது .//

போகும்போது சொல்லுங்கண்ணே நானும் வர்றேன்..!!

ராமலக்ஷ்மி சொன்னது…

//தமிழக மக்கள் என்று ஜாதியையும், இலவசங்களையும் மறந்து வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஓட்டுப் போடுகின்றனரோ அப்பொழுதுதான் தமிழகம் முன்னேறும் .//

உண்மைதான். நடக்குமா?

சித்ரா கமெண்ட் கலக்கல்:)!

DHANS சொன்னது…

its true,

when i travel to gujarat i have been told by many of the people that they are happy with the government.

I didnt travelled to bihar but heard nitheesh is doing good there.

i dont think it will happen in TN unless we find a new leader with visions. may be sarathkumar(?) i am not joking, i heard few of his speeches and his way of approach is different for all. but as of now i dont have confidence with anyone.

for bold decisions i vote for ADMK leader.

ஹரிஸ் Harish சொன்னது…

//தமிழக மக்கள் என்று ஜாதியையும், இலவசங்களையும் மறந்து வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஓட்டுப் போடுகின்றனரோ அப்பொழுதுதான் தமிழகம் முன்னேறும் .//

எனது எண்ணமும் இதுவே,,

S Maharajan சொன்னது…

//தமிழக மக்கள் என்று ஜாதியையும், இலவசங்களையும் மறந்து வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஓட்டுப் போடுகின்றனரோ அப்பொழுதுதான் தமிழகம் முன்னேறும் .//

romba kastam

Unknown சொன்னது…

///பீகாரும், குஜராத்தும் முன்னேறி வருவதை பார்த்தல் , அங்கு சென்று விடலாமா என்று தோன்றுகிறது . ///

ரொம்பக் கஷ்டங்க.. எதுக்கெடுத்தாலும் அடிதான் விழும் அங்க.. :-)

'பரிவை' சே.குமார் சொன்னது…

//தமிழக மக்கள் என்று ஜாதியையும், இலவசங்களையும் மறந்து வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஓட்டுப் போடுகின்றனரோ அப்பொழுதுதான் தமிழகம் முன்னேறும் .//


Correct....

Geetha Sambasivam சொன்னது…

பீகாரும், குஜராத்தும் முன்னேறி வருவதை பார்த்தல் , அங்கு சென்று விடலாமா என்று தோன்றுகிறது . //

செய்ங்க, உங்க பொண்ணுக்கு அவ என்ன படிச்சாலும், மருத்துவம், அல்லது ஆய்வு என எந்தத் துறையாய் இருந்தாலும் இலவசப் படிப்பு. போயாச்சுன்னா திரும்பி வர மனசு இருக்காது. பல சமயங்கள் சென்னைக்கு ஏன் வந்தோம்னு நாங்க நினைச்சு நொந்து நூலாயிருக்கோம். :((((((((

Geetha Sambasivam சொன்னது…

பெண்களுக்கு இலவசப் படிப்பு என்பது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறாது, மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் single window system தமிழ்நாட்டில் அறிமுகம் ஆவதற்குப் பல வருடங்கள் முன்பிருந்தே குஜராத்தில் ஆரம்பமாகிவிட்டது. எங்க பையர் அரசு பொறியியற் கல்லூரியில் முதல் செமஸ்டருக்குக் கட்டிய பணம் கல்லூரி ஃபீஸையும் சேர்த்து ரூ250/- மட்டுமே! ஹாஸ்டல் ஃபீஸும், சாப்பாட்டுச் செலவும் தான் எங்களுக்கு இருந்தது. வேறு மாநிலங்களாய் இருந்திருந்தால் ரொம்பக் கஷ்டப் பட்டிருப்போம்.

kavisiva சொன்னது…

//தமிழக மக்கள் என்று ஜாதியையும், இலவசங்களையும் மறந்து வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஓட்டுப் போடுகின்றனரோ அப்பொழுதுதான் தமிழகம் முன்னேறும் .//

சரியா சொன்னீங்க! ஆனா அது எப்போ நடக்கும்னுதான் தெரியலை :(. அவங்க சாதனைகளை சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்கராங்க. இவங்க இலவசம் ங்கற எலும்புத் துண்டை காட்டி ஓட்டு கேட்கறாங்க. தமிழ் நாட்டு மக்கள் எலும்புத் துண்டுக்கு ஆசைப் பட்டு முதுகெலும்பைத் தொலைத்து ரொம்ப நாட்களாகிவிட்டது :(

அருள் சொன்னது…

பத்திரிகைகளின் பித்தலாட்டம்: பீகாரில் சாதி தோற்றதா?

http://arulgreen.blogspot.com/2010/11/blog-post_25.html

Gayathri சொன்னது…

தமிழ்நாடும் முன்னேறும் ஆனா என்னிக்கின்னு தான் தெரியல..

குரஜாத் அப்டி இப்டி நீங்க போய்டா..தமிழ்நாடு ஒரு நல்லவர இழந்திடும்..வேணாம்..

கவலை வேண்டாம் உங்களுக்கு பதிலாக பீகார் குஜார்த் மக்களை தனி ரயிலில் சென்னை வர ஏற்பார்டு செய்வோம்..செலவை அருண் அண்ணா பார்த்துகொள்வார்...அவர்களுக்கு இட்லி நம்ம தங்கமணி அக்க செஞ்சுதருவாங்க...
நான் எல்லாருக்கும் தமிழ் சொல்லி தரேன்..

டீல்லா நோ டீல்லா

Gayathri சொன்னது…

காவியங்கள் உன்னை பாட காத்திருக்கும் பொழுது
குஜராத் நீ போனாள் என்ன வாகும் மனது???

வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்,
நாங்கள் போவதெங்கே??????????

டாக் ப்ரோ டாக்

RVS சொன்னது…

ஊராட்சிக்கு ஊராட்சி..
நகராட்சிக்கு நகராட்சி..
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடான்னு போர்ட் எழுதி வச்சுருக்காங்களே எல்.கே!!!!. ;-)

செல்வா சொன்னது…

//அரசாங்க பணிகளில் லஞ்சத்தை பெருமளவு குறைத்துள்ளார். முக்கியமாக , அடிப்படை கல்வியிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் அதிக கவனம் செலுத்தினார். விளைவு ,இன்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.///

உண்மைலேயே சந்தோசமான செய்தி அண்ணா ., இதை பார்த்தாவது இங்குள்ளவர்கள் திருந்தனுமே ..!!

செல்வா சொன்னது…

உங்க டெம்ப்ளட் கலக்கலா இருக்கு ..!!

எல் கே சொன்னது…

@பாலாஜி
எனக்கு நம்பிக்கை இல்லை

எல் கே சொன்னது…

@கோமு
ஹ்ம்ம் நன்றி

எல் கே சொன்னது…

@சித்ரா
தமாசு இல்லேங்க. உண்மைதான். பெண்களுக்கு இலவச கல்வி. நாள் முழுவதும் தடை இல்லாத மின்சாரம், நிம்மதியான ஊர் வேறு என்ன வேண்டும் ??

எல் கே சொன்னது…

@அருண்
உண்மைதான்

எல் கே சொன்னது…

@சேலம் தேவா
கண்டிப்பா

எல் கே சொன்னது…

@ராமலக்ஷ்மி
நடக்கறது கஷ்டம்

எல் கே சொன்னது…

@தன்ஸ்
முதல் வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. நமது மீடியாக்கள் உண்மை நிலவரத்தை காண்பிப்பதே இல்லை .சரத் குமார் ஒரு ஜோக்கர்

எல் கே சொன்னது…

@ஹரிஸ்
நன்றி

@மகாராஜன்
பார்ப்போம்

எல் கே சொன்னது…

@பாபு
தவறான தகவல். குஜராத் மக்கள் எனக்கு தெரிஞ்சு ரொம்ப அமைதியான சுபாவம்.பல கோஜ்ராதி மக்களுடன் பழகி இருக்கிறேன்

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி

எல் கே சொன்னது…

@கீதா
வாஸ்தவம்தான். வேலை கிடைத்தால் சென்று விடுவேன்

எல் கே சொன்னது…

@கவிசிவா

சரியா சொன்னீங்க. சொன்ன நம்ம ஆளுங்களுக்கு கோபம் வரும்

எல் கே சொன்னது…

@அருள்
ஆனால், சாதியை முன் வைத்து அங்கு கூட்டணி அமைக்கவில்லை .வெற்றி பெற்றது ஒரு சாதியின் ஓட்டை வைத்து அல்ல.

எல் கே சொன்னது…

@காயத்ரி
என் இந்த கொலை வெறி உனக்கு

எல் கே சொன்னது…

@ஆர் வீ எஸ்
அண்ணே "வாய் சொல்லில் வீரரடி " பாடி வைத்தான் பாரதி அன்றே

எல் கே சொன்னது…

@செல்வா
திருந்த மாட்டாங்க தம்பி. நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

என்னத்த செல்ல அடுத்தவன பாத்தே பொழப்ப ஓட்ட வேண்டியது தான்...

Sriakila சொன்னது…

//தமிழக மக்கள் என்று ஜாதியையும், இலவசங்களையும் மறந்து வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஓட்டுப் போடுகின்றனரோ அப்பொழுதுதான் தமிழகம் முன்னேறும் //

Yes.. It's true.

சுசி சொன்னது…

கிளம்பும்போது மறக்காம சொல்லிட்டு போங்க கார்த்திக் :))

ஸ்ரீராம். சொன்னது…

//பீகாரும், குஜராத்தும் முன்னேறி வருவதை பார்த்தல் , அங்கு சென்று விடலாமா என்று தோன்றுகிறது//


அங்கேயெல்லாம் போக வேணாம்...இங்கேயே இருப்போம் எல்கே...

Unknown சொன்னது…

பீகார் மக்களுக்கு ஒரு சல்யூட் ...

சென்னை பித்தன் சொன்னது…

//தமிழக மக்கள் என்று ஜாதியையும், இலவசங்களையும் மறந்து வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஓட்டுப் போடுகின்றனரோ அப்பொழுதுதான் தமிழகம் முன்னேறும் .//
எப்போது நடக்கும்? பொறுத்திருப்போம்;காலம் மாறும்!

Philosophy Prabhakaran சொன்னது…

// பீகாரும், குஜராத்தும் முன்னேறி வருவதை பார்த்தல் , அங்கு சென்று விடலாமா என்று தோன்றுகிறது . //

ஒரு முறை பொய் பாருங்க... அதுக்கப்புறம் இந்த மாதிரி சொல்ல மாட்டீங்க...

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அதுபோல் இங்கே மாற்றம் வரும் காலம் எப்போது என தெரியவில்லை.

vanathy சொன்னது…

அரசியலில் என் அறிவு பூஜ்ஜம்.

settaikkaran சொன்னது…

கார்த்தி! நிதீஷ்குமார் ஒரு நல்ல நிர்வாகி என்பதோடு, நுணுக்கமான அரசியல்வாதி என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆனால், பீகார் மக்கள் லாலுவையும் பஸ்வானையும் ஓரங்கட்டுமளவுக்கு பணியாற்றியிருப்பதுதான் பெரிய சாதனை!

ப்ரத்யுஷா

தென்னாப்பிரிக்க அணியின் இறங்கு முகம்

மீண்டும் தொடரலாமா...

இரண்டு வார்த்தைகள்

காவிரியின் மைந்தன்

கற்க வேண்டியது யார் ?

புது வீடு

மீண்டும் விருது

பள்ளித் துவக்கம்

அனைவரும் நலமா ?