மாலையில் ஜெய் அழைத்த உடன், அன்று வாங்கிய வெண்ணிற உடை அணித்து தேவதை போல் வந்த அஞ்சலியை கண்ட ஜெய் ஒரு கணம் அவள் அழகில் தன்னை மறந்து நின்றான்...
மாலையில் ஜெய் அழைத்த உடன், அன்று வாங்கிய வெண்ணிற உடை அணித்து தேவதை போல் வந்த அஞ்சலியை கண்ட ஜெய் ஒரு கணம் அவள் அழகில் தன்னை மறந்து நின்றான். பின் அவளை நெருங்கி, அவள் காதில், மிக மெல்லமாக, " யூ லுக் கிரேட் இன் திஸ் டிரஸ் " என்று கிசு கிசுத்தான். பின் அவளின் கரங்களை பற்றியவாறு , வெளிவந்து தனது நண்பனின் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் அவர்களது கார் விரைந்து கொண்டிருந்தது. ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு இடத்தில் , பக்கத்தில் அதிகம் வீடுகள் இல்லாத ஒரு பங்களாவின் உள் நுழைந்தான் ஜெய். அந்த வீட்டில் நுழையும் பொழுதே அஞ்சலியின் மனதில் எதோ ஒரு பயம் படர்ந்தது. இருந்தாலும், ஜெய் அருகில் இருக்கும் தைரியத்தில் அதை வெளிகாட்டாமல் வீட்டிற்குள் சென்றாள்.
உடன் வந்த ஜெய், தனது நண்பர்களை அஞ்சலிக்கு அறிமுகப் படுத்தினான்.
"விஜய் எங்க ??"
"இல்லடா . அவன் எதோ வேலை இருக்கு . முடிஞ்சா வரேன்னு சொன்னான் ".
"சரி. விடு. "
"அஞ்சலி, கூல் ட்ரிங்க்ஸ் ??"
"பெப்சி ப்ளீஸ் .."
அங்கிருந்து அறைக்குள் சென்ற ஜெய், பெப்சி பாட்டிலில் இருந்து மூன்று க்ளாஸ்களில் பெப்சியை நிரப்பினான். பின், அந்த க்ளாஸ்களில் ஒன்றில் மட்டும் எதோ இரண்டு சிறிய புட்டிகளில் இருந்து மேலும் இரு திரவங்களை நிரப்பினான்.பின் அவற்றை எடுத்துக் கொண்டு முன்னறைக்கு சென்று அஞ்சலிடம் அந்த க்ளாசை கொடுத்து , மற்ற இரண்டை தனது நண்பர்களிடம் கொடுத்து , அவன் பாட்டிலை எடுத்துக் கொண்டான்.
***********************************
தனது தீர்மானத்தை உறுதி செய்யும் அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினார் வேலன். உடனடியாக, ஆர்.டி.ஓ அலுவலகம் சென்ற வேலன், அந்த காரின் உரிமையாளர் விலாசத்தைப் பெற்றார். அடுத்து சைபர் கிரைம் அலுவலகம் சென்ற வேலன், ஜிக்கு வந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று அறிந்துக் கொண்டு அந்த பிரௌசிங் சென்டர் சென்றார்.
அங்கு அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் வந்த நபர்களின் பெயர்களை அங்கிருந்த குறிப்பேட்டில் சரிபார்த்த வேலன், தான் எதிர்பார்த்த நபரின் பெயர் இல்லாததால் , அந்த சென்டரின் உரிமையாளரிடம், விசாரிக்க தொடங்கினார். பின் அங்கிருந்து கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட வேலன், உடனடியாக, ஒரு டீமை விஜயின் வீட்டிற்கு அனுப்ப சொல்லிவிட்டு தானும், அங்கு விரைந்தார்.
***********************************
தனக்கு நேரப் போகும் விபரீதத்தை அறியாமல், குளிர்பானத்தை பருகிய அஞ்சலி , மெதுவாக தன்னிலை இழக்கத் துவங்கினாள். இதற்காகக் காத்திருந்த ஜெய் , அவளை மெதுவாகத் தாங்கி , உள்ளறைக்கு தூக்கி சென்றான். அவன் பின் அவன் நபர்கள், விக்டர் மற்றும் பாஸ்கரும் சென்றனர்.
மறுநாள் காலை கண்விழித்த அஞ்சலி, புயல் வந்தழித்த நந்தவனமாய் இருந்தாள். முந்திய இரவு என்ன நடந்தது என்பதை எண்ணிப் பார்த்த அவளுக்கு குளிர் பானம் குடித்தது மட்டுமே நினைவிற்கு வந்தது. அதன் பின் தன்னை யாரோ தூக்கியது போன்ற உணர்வு இருக்கவே , அதன் பின் என்ன நடந்தது என்பதை யோசிக்க ஆரம்பித்தாள். அவளின் உடல் உணர்ச்சிகள் என்ன நடந்து இருக்கும் என்பதை அவளுக்கு உணர்த்தவே , நிலைகுலைந்தாள்.
அப்பொழுது அங்கு வந்த ஜெயிடம் அவள் சண்டையிட்டாள், கதறினாள். இந்த நிகழ்வுகளை எதிர்பார்த்த ஜெய், அவளை மிரட்டத் துவங்கினான்.
"இங்க பார். இரவு எடுத்தப் புகைப்படங்களும், வீடியோவும் இருக்கு . நீ அமைதியா இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்லை. இதை இன்டர்நெட்டில் போட்டால் என்ன ஆகும் என்று தெரியும் அல்லவா ??"
அவனது மிரட்டலை கேட்ட அஞ்சலி, வேறு வழியின்றி வாய் மூடினாள். சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு தான் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டுப் பிறகு வருவதாகக் கூறி கிளம்பினாள் .
***********************************
விஜய் வீட்டை அடைந்த வேலன், அங்கு அவரது துறையை சேர்ந்த டீம் ரெடியாக இருப்பதை கண்டு புன்னகையுடன் அவனது வீட்டில் நுழைந்தார்.
காவல் துறை தனது வீட்டை முற்றுகை இட்டதையும், வேலன் புன்னகையுடன் உள் நுழைவதையும் கண்ட விஜய் ,
"சார் என்ன நடக்குது இங்க ? எதுக்கு இத்தனை போலிஸ். ?"
"விஜய், நீங்க நல்லாவே நடிக்கறீங்க . ஆனால் பாருங்க ஒரு சில இடத்துல கோட்டை விட்டுடீங்க."
"சார் என்ன சொல்றீங்க. ?"
"நான் சுத்தி வளைக்க விரும்பல விஜய், சொல்லுங்க, எதுக்கு பாஸ்கரையும் , விக்டரையும் கொலை பண்ணீங்க ?"
அவரது நேரடி தாக்குதலை எதிர்பார்க்காத விஜய் நிலைகுலைந்து சோபாவில் அமர்ந்தான் .
"விக்டர் அடிபடும் வரை, எனக்கு உன் மேல் சந்தேகம் இல்லை. . முதல் சந்தேகம், நீங்கள் ஊரில் இருந்து திரும்பியது வேறு யாருக்கும் தெரியாது. அதனால் அவனுக்கு போன் செய்து வரவழைத்தது நீ அல்லது ஜெய் இருவரில் ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். மருத்தவமனையில் உங்களிடம் பேசிய பொழுது, உன் முகத்தில் , ஒரு வித செயற்கை அதிர்ச்சி இருந்தது. அதுதான் எனக்கு உன் மேல் சந்தேகத்தை வரவழைத்தது. அடுத்தது, அங்கிருந்து கிளம்பிய உன்னை கண்காணிக்க சொல்லி இருந்தேன். நீ நேராக, ஒரு பிரௌசிங் சென்டருக்கு சென்றாய். சென்ற ௧௦ நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி இருக்கிறாய்.
இது உன் மேல் என் சந்தேகத்தை மேலும் வலுப் படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, விக்டரை கொலை செய்ய உன் அலுவலகக் காரை உபயோகித்து இருக்கிறாய். கார் தொலைந்து அரைமணி நேரம் கழித்து நீ தந்தப் புகாரில் , கார் சாவிகள் உன்னிடம் இருப்பதாகவும் , யாரோ கார் பூட்டை உடைத்து திருடியதாகவும் சொல்லி இருக்கிறாய். அது மட்டும் அல்ல, கார் காணமல் போன நேரம் காலை ௮ மணி என்று குறிப்பிட்டு இருக்கிறது. உனது காரில், அலாரம் வசதி உண்டு, அதை அணைக்காமல் யாரும் காரை தொட முயன்றால் அது சத்தமிடும் . இந்த விஷயங்கள் உன்னை காட்டிக் கொடுத்து விட்டன விஜய். "
"ஓகே இன்ஸ்பெக்டர். எஸ் நாந்தான் பண்ணேன். "
அவனை கைது செய்து ஸ்டேசனுக்கு வேலன் வரவும், அவரது அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. எதிர்முனை சொன்னத் தவகல் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
-பரிசு தொடரும் .
பி.கு. அடுத்த பாகத்தில் முடியும்
32 கருத்துகள்
குட் நல்ல போலீஸ் தான்...கண்டு பிடித்துவிடார்களே!.. கதை மிக நன்று
valththukal friend
2nd!!!
aahaa.. oru junior vikadan article padicha range ku irukku effectu! :P sooooooofer, kadasila ivan thana adhu..!
ஒ...இவன் தானா...அப்புறம் அஞ்சலி இதனை செய்யவில்லை...
nalla kondu pooreenga LK! grtt going. again oru kolai nadanthuruthaa???
ரெண்டு பாகத்தையும் சேத்துவெச்சு படிச்சிட்டேன். கதை நல்லா விறுவிறுப்பா போகிறது. வாழ்த்துக்கள்.
கதை நன்றாக உள்ளது
வாழ்த்துகள்.
- ஸ்ரீராம்
http://sriramsrinivasan.net
இன்னும் வேற அதிர்ச்சியா? கொலைகாரனையே பிடிச்சாச்சே....!!
சஸ்பென்ஸ் ஒவ்வொன்றயும் ..படிப்படியாக ரிலிஸ் செய்கிறிர்கள்..அடுத்த முடிய போகிறதா....எப்படி?
@கௌசல்யா
//குட் நல்ல போலீஸ் தான்...கண்டு பிடித்துவிடார்களே//
நல்ல போலிசும் இருக்காங்க ..
@பொற்ஸ்
கடைசி பார்ட் வரைக்கும் காத்திருக்கவும்
@கீதா
வருகைக்கு நன்றி
@தக்குடு
நன்றி தம்பி
@சாரல்
நன்றிங்க. தொடர்ந்து வாங்க
@ஸ்ரீராம் ஸ்ரீநிவாசன்
நன்றி சார்
@பத்மநாபன்
நன்றி சார். ஆமாம் அடுத்து முடியும்
அஞ்சலி தானே செய்திருக்கனும்,சரி முடிவு எப்படி வருதுன்னு பார்ப்போம்.
கார்த்தி எனக்கு மட்டும் கதை முடிவு என்னாகுமென்று மெயில் பண்ணறியா ? கதை சுபேரா போகுது ..வாழ்த்துக்கள்
@aasiya
sagothari nalai varai kaathirukkavum
@sandhiya
ivlo naal wait pannita naalaiku oru naalthan
good. awaiting for tomarrow's post.
mythili
பயங்கர த்ரில்லிங்கா இருக்கே.. LK அடுத்தது என்ன..??
Kadai yin nadai nandaga ulladu. Andha kala digil padam mari.
Good writing.
Vijay was in love with Anjali..i am guessing....lets see.
@மைதிலி
தொடர் வருகைக்கு நன்றிங்க
@தேனம்மை
நன்றிங்க .. நாளைக்கு முடியும்
@vgr
நன்றி சார். இன்னும் இன்னும் யோசிங்க
//தனக்கு நேரப் போகும் விபரீதத்தை அறியாமல்//
ஐயோ....என்னோட டயலாக்....
//"ஓகே இன்ஸ்பெக்டர். எஸ் நாந்தான் பண்ணேன்"//
ஆஹா... அப்படியா?
// எதிர்முனை சொன்னத் தவகல் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது//
இன்னும் என்ன பாஸ்... அதான் அவனே ஒத்துட்டானே....
இன்னிக்கு ராத்திரி தூக்கத்திலும் உன் கதை நினைப்பு தான் வர போகுது ...மீதி படிக்க ஆவலோடு ...
நல்ல திரிலிங்கா போகுது..!!முடிவுக்காக வெய்ட்டிங்
LK, very interesting!! continue...
//இன்னும் என்ன பாஸ்... அதான் அவனே ஒத்துட்டானே.//
இரு இரு இன்னிக்கு இல்லடி நாளைக்கு தெரியும்
@ஜெய்
நன்றி பாஸ்
@வானதி
நன்றிங்க
கருத்துரையிடுக