Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பாவத்தின் பரிசு இறுதி

ஊருக்கு வந்த அஞ்சலி, தனது சகோதரியிடம் எதுவும் கூறவில்லை. அவளிடம் எப்பொழுதும் போல் இருக்க முயன்றாள். தாயாக இருந்து வளர்த்த அவள் சகோதரி ரஞ...


ஊருக்கு வந்த அஞ்சலி, தனது சகோதரியிடம் எதுவும் கூறவில்லை. அவளிடம் எப்பொழுதும் போல் இருக்க முயன்றாள். தாயாக இருந்து வளர்த்த அவள் சகோதரி ரஞ்சனிக்கு இவளின் நிலை சந்தேகத்தை அளித்தது. அஞ்சலியிடம் சந்தேகத்துடன் இதை பற்றி துருவ ஆரம்பித்தாள். முதலில்  மறுத்த அஞ்சலி, ஒரு கட்டத்தில் சோகமும், கோபமும் ஒன்றிணைய , நடந்ததை ரஞ்சனியிடம் கூறினாள்.

தனது தங்கைக்கு நடந்த துரோகத்தை கேட்ட ரஞ்சனியின் உள்ளம் கொதித்தாலும், தங்களால் அப்பொழுது எதுவும் செய்ய இயலாது என்பதை உணர்ந்து ஆற்றாமையில் உள்ளம் குமைந்தாள். சோகத்துடன் இருவரும் நாட்களை கடத்த, ஒரு நாள் காலை ரஞ்சனிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அஞ்சலி தற்கொலை செய்துகொண்டாள்.

                                             ***********************************
அதிர்ச்சியுடன் அலைபேசி அழைப்பை துண்டித்த வேலனைப் பார்த்து புன்னகைத்த விஜய், "என்ன சார், ஜெய் கொலை செய்யப் பட்டனா?"

"ஆமாம். நீ இங்க இருக்க . அப்ப அவனை கொலை செய்தது யார்  ?? "

"உங்களுக்கு அதற்கான விடை கொஞ்ச நேரத்துல தெரியும் சார். நீங்க ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்."

அவன் கூறியதைப் போல் சிறிது நேரத்தில், அங்கு வந்தப் பெண் வேலனிடம், தான்தான் ஜெய்யை கொன்றதாக் கூறினாள்.

"உன் பெயர் என்ன ?"

"ரஞ்சனி......"

"உனக்கும், விஜய்க்கும் என்ன தொடர்பு? நீ கொலை செஞ்ச அவங்களுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை ?"

"சொல்றேன் சார்."

பின் ரஞ்சனி தன் தங்கைக்கு நடந்தவற்றை கூறினாள்.  அஞ்சலி தற்கொலை செய்துகொண்டப் பின் தான் கோவைக்கு வந்ததாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறினாள்.புகார் அளித்தும் எந்தப் பயனும் தராததால் அவர்களைப் பழிவாங்க முடிவெடுத்ததாகவும் அதற்க்கு உதவிப் புரிந்தது தனதுக் காதலன் விஜய் எனவும் சொன்னாள்.



"அவர்களின் பலவீனம் எனக்குத் தெரியும் . எனவே அதைக் கொண்டே அவர்களை கொன்றோம். பாஸ்கர் சதா சர்வகாலமும் சாட்டில் இருப்பவன். அதன் மூலம் பெண்களை பிடித்து அவர்களை அனுபவிப்பவன். மேலும், அவனுக்கு போதை மருந்து இல்லாமல் தூக்கம் வராது. எனவே , ரஞ்சனி அவனிடம் சாட்டில் பழக ஆரம்பித்தாள். அவனை அவசரப் படுத்தி மும்பையில் இருந்து சீக்கிரம் வரவழைத்ததும் ரஞ்சனிதான். தன் தங்கையின் மரணத்திற்கு பழி வாங்க தன்னையும் இழந்தாள். அவனுக்கு போதை மருந்தில் விஷத்தை கலந்து கொடுத்தாள். விக்டர் எப்படி இறந்தான் என்பது உங்களுக்கே தெரியும். "

"அப்ப ஜெய் ??"

"ஜெய்க்கு கெட்டப் பழக்கங்கள் இருந்தாலும், அவன் ஒரு சில தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வான். அதனால், இன்று தொண்டு நிறுவன பிரதிநிதியாக அறிமுகப் படுத்திக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றேன். என் நேரம், அவன் தனியாகத் தான் இருந்தான். காசோலை எடுத்துக் கொண்டு அவன் வந்த நேரம், அவனது உயிரை இந்தத் துப்பாக்கி குடித்தது "  இது ரஞ்சனி.

அவள் நீட்டிய துப்பாக்கியை வாங்கிக் கொண்ட வேலனிடம், நீங்க என்னை அரெஸ்ட் பண்ணாமல் இருந்திருந்தாலும் கூட, ஜெய்யின் மரணத்திற்குப் பிறகு , இருவரும் சரணடைந்து இருப்போம் " என்று ரஞ்சனி கூறினாள்.

இரண்டு  கொலைகள் செய்திருந்தாலும், அவள் செய்த கொலைக்கு அவள் கூறிய காரணத்தினால் , அவளுக்கும் , விக்டரை கொலை செய்த காரணத்தினால், விஜய்க்கும் ஆயுள் தண்டனை கிடைத்தது.

- முற்றும்
                                             ***********************************
இந்தக் கதையை தொடர்ந்து படித்து எனக்கு ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு இரட்டை பாதையில் கதை பயணிப்பது புதிது அல்ல. "அலை பாயுதே " படத்தில் இதே பாணியை மணிரத்னம் உபயோகித்திருந்தார். அதை போன்றே இந்த கதையையும் அமைத்தேன்.

கதையில் குறைகளை சுட்டி காட்டினால் திருத்திக் கொள்வேன்.

அனைவருக்கும் நன்றி.

50 கருத்துகள்

Ananya Mahadevan சொன்னது…

சூப்பர் எல்.கே! ரொம்ப நல்லா இருந்தது. கடைசி வரைக்கும் கெஸ் பண்ண முடியலை!
இன்னும் நிறைய எழுது.. ஒரே ஒரு நெருடல். அந்தப்பையன் விஜய் கூறும் எக்ஸ்ட்ரா காரணங்கள். அவங்க பணக்காரங்க.. என்னை கேலி செஞ்சாங்க.. இதெல்லாம் கொஞ்சம் அப்ஸர்டா இருக்கு.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்தாங்கன்னு நான் கோபத்துல துணை போனேன்னு சொல்லி முடிச்சிருக்கலாம்.
எனிவே.. இவ்ளோ அருமையா ஒரு த்ரில்லர் எடுத்துண்டு போனதுக்கு வாழ்த்துக்கள்

Asiya Omar சொன்னது…

ஒரு முழுமையான க்ரைம் நாவலை படித்த உணர்வு.பாராட்டுக்கள்.

Asiya Omar சொன்னது…

இறுதிப்பகுதியில் கண்ணுக்கு குளிர்ச்சியாய ஒரு மலர்க்கொத்து.நன்றி.

தக்குடு சொன்னது…

Gr888 effort LK! nalla yelutheneel, guess panna mudiyaamaiyee poyindu irunthathu. good job!(athisayamaa flowers yellam pooturukeelee pa)

குந்தவை சொன்னது…

கார்த்திக்.. நிஜம்மாவே நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.
அனன்யா சொன்னது போல எனக்குமே அந்த இடத்தில் நெருடல் இருந்தது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தொடரை விருவிருப்பாகக் கொண்டு சென்று இருந்தீர்கள் நண்பரே. நல்ல முயற்சி. தொடருங்கள்.

எல் கே சொன்னது…

@அனன்ஸ்
நன்றி. எனக்கு நெருடல படலியே ??? சரி இனி திருத்திக்கறேன்.

எல் கே சொன்னது…

பாராட்டுக்கு நன்றி சகோதரி.. சும்மா ஒரு மாற்றத்துக்கு மலர் கொத்து

எல் கே சொன்னது…

@தக்குடு
நன்றிபா.

@குந்தவை
தொடர்ந்து வந்து படித்ததற்கும் பாராட்டுக்கும் நன்றி

எல் கே சொன்னது…

@வெங்கட்

நன்றி வெங்கட்

Kousalya Raj சொன்னது…

எதிர் பாராத முடிவு!! முதல் அரங்கேற்றம் (முதல் கதை ) வெற்றி பெற்று இருக்கிறது, பாராட்டுகிறேன்!!

தோழியாய் மகிழ்கிறேன். கதைகள் தொடர என் வாழ்த்துகள்!!

SathyaSridhar சொன்னது…

Kadhai nalla irunthu thunga nalla crime story... mudivu naan konjam kooda ethir paarkaave illai nalla turning point..

Geetha Sambasivam சொன்னது…

எல்லாரும் சொல்லியாச்சு, விஜய் காரக்டர் கூறும் காரணங்கள் வலுவானதாய் இல்லை. குறைஞ்ச பக்ஷமாய் ரஞ்சனியின் காதலன் என்றோ, அஞ்சலிக்கும், ரஞ்சனிக்கும் அண்ணன் என்றோ அல்லது வேறு ஏதாவது வலுவான காரணம் இருந்திருக்கலாமோ?? கதையின் ஓட்டம் நல்லா இருந்தது என்றாலும் முடிவில் என்னவோ ஒரு வெறுமை! :( ஏன்?? சொல்லத் தெரியலை எனக்கு. ஆனால் கடைசிவரைக்கும் விறுவிறுப்பாவே இருந்தது என்பதையும் சொல்லணும். அடுத்த முயற்சி இன்னும் நன்கு அமைய முன்கூட்டிய வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

அருமையான தொடர்.. நீங்கள் குமுதம் மற்றும் விகடனுக்கு அனுப்பி வையுங்கள் ..

Mythili சொன்னது…

super claimax, oru thraipadam partha feelings. gra8.

mythili

எல் கே சொன்னது…

@கௌசல்யா

வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்கும் :)))

எல் கே சொன்னது…

@சத்யா
தொடர்ந்து படித்ததற்கும் ,கருத்துக்கும் நன்றி சத்யா.

எல் கே சொன்னது…

@மாமி
இப்பதான் எழுதறேன் . அடுத்த முறை சரி பண்ணிடறேன்

எல் கே சொன்னது…

@மைதிலி

நன்றிங்க

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்தி கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. ராஜேஷ் குமார் நாவல் படிச்ச மாதிரி ஒரு திருப்தி . இன்னும் நிறையை நிறையை கதை எழுதி பெரிய கதாசிரியர் என்று பேரு எடுக்க நான் வாழ்த்துகிறேன் ..அஞ்சலி எதுக்கு தற்கொலை பண்ணினா ? தானாகவே பழி வாங்கியிருந்தா நல்லா இருந்திருக்கும் ...ஆனா இந்த முடிவும் நல்லா தான் இருக்கு ..

Harini Nagarajan சொன்னது…

Very nice ending! COngratulations! oorukku poitathunaala konjam late a comment podaren! :D

யுக கோபிகா சொன்னது…

எதிபாராத திருப்பங்கள் கொண்ட crime story...அருமை ...

பத்மநாபன் சொன்னது…

முதல் தொடர் முயற்ச்சியே , தேர்ந்த கிரைம் எழுத்தாளர் அளவுக்கு திகில் கதையை கொண்டு போயிருந்திர்கள் .... ரஞ்சனி வருகை யாரும் எதிர் பார்த்திருக்கமாட்டர்கள்... எங்களை பயப்படுத்தி வந்த படங்கள் , அஞ்சலிக்கு அஞ்சலியாய் மலர்கொத்தாக மாறிவிட்டது ...இதுபோல் நிறைய முயற்சி செய்யலாம் ....வாழ்த்துக்கள் ....

Guna சொன்னது…

Super nga... Kadaisi varaikkum guess pannave mudiyala.. Keep Writing.

எல் கே சொன்னது…

@சந்த்யா

நன்றிங்க

@செந்தில்

முயற்சி பண்றேன். நன்றிங்க

எல் கே சொன்னது…

@ஹரிணி
நன்றி

@கோபிகா

தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
உங்களுடைய ஊக்கம்தான் இதற்க்கு முக்கிய காரணம். நன்றி

@குணா
நன்றி சார்

GEETHA ACHAL சொன்னது…

அருமையாக எழுதி இருக்கின்றிங்க...வாழ்த்துக்கள்...எப்பொழுதும் மண்டை ஒடு பார்த்துவிட்டு இன்று அழகிய பூங்கொத்து பார்பது சூப்பர்ப்....அடுத்த தொடர் கதை எப்போ......

எல் கே சொன்னது…

@கீதா ஆச்சல்

நன்றிங்க. அடுத்த கதை கொஞ்ச நாள் ஆகும்.

Menaga Sathia சொன்னது…

சூப்பர்ர் எல்கே!! பாராட்டுக்கள்...நல்லா த்ரில்லரா சொல்லிருக்கிங்க..அடுத்த கதையை சீக்கிரம் எழுதுங்கள்...

எல் கே சொன்னது…

@மேனகா

நன்றிங்க.. அடுத்த கதை லேட் ஆகும். வீடு மாற்ற வேண்டி உள்ளது . அது முடிந்த பின் வரும்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

சூப்பர்.. நல்லா இருக்கு..
நல்ல வேளை.. இதுலயாவது.. பயமுறுத்தாம ஒரு படம் போட்டீங்களே... :-))

Porkodi (பொற்கொடி) சொன்னது…

கதை கலக்கல் எல்.கே.. ரெண்டு ட்ராக் ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடிச்சுருந்தது.

எல்லாரும் சொன்னா மாதிரி ரஞ்சனி மோட்டிவ் கூட ஒத்துக்கலாம், விஜய் சொன்ன காரணம் அவ்ளோ பொருந்தலை. பணத்துக்காக அல்லது நிஜமாவே நியாயத்துக்காக இல்லே அவனும் அஞ்சலியை விரும்பினான்னு ஏதாவது சொல்லிருந்தா இன்னும் கொஞ்ச எடுபட்டிருக்கும் என்பது என் எண்ணம். :)

அப்புற‌ம் இன்னொண்ணு என்ன‌ன்னா, க‌தை நீங்க‌ கொண்டு போயிருக்க‌ற‌ வித‌ம் விறுவிறுப்பாவும் என்னை பெரிசா யோசிக்க‌ விடாம‌லும் இருந்த‌து அருமை. ஆனா ப‌டிச்சு முடிச்ச‌ப்புற‌ம் ரொம்ப‌ வ‌ழ‌க்க‌மான‌ க‌தையா இருக்கிற‌தே (ஏக‌ப்ப‌ட்ட‌ க்ளிஷே.. ஏகப்பட்ட சினிமா ராஜேஷ்குமார் நாவல்ல வந்த மாதிரி) என்ற‌ எண்ண‌மும் எழுந்த‌து!

இதை சொல்ல‌ற‌துக்கு உன‌க்கு என்ன‌ யோக்கிய‌தைன்னு எல்லாம் கேட்டுட‌ப்ப்டாது..!

எல் கே சொன்னது…

//வ‌ழ‌க்க‌மான‌ க‌தையா இருக்கிற‌தே (ஏக‌ப்ப‌ட்ட‌ க்ளிஷே.. ஏகப்பட்ட சினிமா ராஜேஷ்குமார் நாவல்ல வந்த மாதிரி) என்ற‌ //

நன்றி பொற்ஸ். நான் அதிகம் நாவல் படிச்சது இல்ல.. இருந்தாலும் உன் விமரசனத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

பாராட்டுக்கு நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Well done LK . இந்த மாதிரி ஸ்டோரி எழுதறது கஷ்டம்னு எழுத ஆரம்பிச்சப்புறம் தான் புரியுது... குறைகள்னு சொல்றதுக்கு பெருசா ஒண்ணும் இல்ல.... ஒரு ஒருத்தர் ஸ்டைல் வேறுபடும் அவ்ளோ தான்... Good job (நான் தான் இன்னும் சாய்பாபா காலனி ஸ்டாப்லயே நிக்கறேன்... ஹும்.... ஹா ஹா ஹா)

எல் கே சொன்னது…

@புவனா

சரியாய் சொன்னீங்க. மண்டை காஞ்சு போச்சு. பாராட்டுக்கு நன்றி

Porkodi (பொற்கொடி) சொன்னது…

சரி அப்போ "த்ரில்லர் கதை ஆரம்பித்து நகர்த்த முடியாமல் கஷ்டப்படுவோர் கழகம்"னு ஒண்ணு ஆரம்ப்சிச்சுடுவோம், ஆனா தலை(வலி)வி நான் தான் சொல்லிட்டேன்!

எல் கே சொன்னது…

சரி நீயே இருந்துக்க

தெய்வசுகந்தி சொன்னது…

சூப்பர் கதைங்க கார்த்திக். நல்லா விறு விறுப்பா எழுதியிருக்கீங்க!!. மண்டை ஓடெல்லாம் வித்தியாசமா எங்கேயிருந்து புடிச்சீங்க?

எல் கே சொன்னது…

@சுகந்தி

நன்றிங்க.. படம் எல்லாம் கூகிள் உதவி

vanathy சொன்னது…

LK, very good. nalla irukku. Well written.
You shouldn't have killed anjali.

ஜெய்லானி சொன்னது…

நல்ல சஸ்பென்ஸ் கதை :-)))

எல் கே சொன்னது…

@வானதி

ஹ்ம்ம் அந்த அளவுக்கு அஞ்சலி உங்களை கவர்ந்து விட்டாலோ???

எல் கே சொன்னது…

@ஜெய்

நன்றி தல

geetha santhanam சொன்னது…

nice crime story and well written. congrats.--geetha

செந்தில்குமார் சொன்னது…

நல்லாயிருக்கு கார்த்திக்

போய்க்கிட்டே இருந்தேன் நீழும் உங்கள் வரிகள் என இருந்தும் ரசித்தேன்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்ல சஸ்பென்ஸோட கொண்டு போய் எதிர்பாரா விதமா முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

கோமதி அரசு சொன்னது…

கார்த்திக்,கதை நல்லா இருக்கு.

மர்ம நாவல்கள் தொடர்ந்து எழுதலாம்.

வாழ்த்துக்கள்.

கோமதி அரசு சொன்னது…

நான் அஞ்சலி கொலை செய்வாள் என நினைத்தேன்.

எல் கே சொன்னது…

நன்றி சாரல்

நன்றி கோமதி மேடம். அடுத்த கதை விரைவில்