Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பதிவுலக அரசியல்

பதிவுலகத்தைப் பற்றிய எனது பதிவுலகம் ஒரு பார்வை பதிவில் பதிவுலக அரசியலைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று கண்மணி டீச்சர் பின்னூட்டத்தில் ச...

பதிவுலகத்தைப் பற்றிய எனது பதிவுலகம் ஒரு பார்வை பதிவில் பதிவுலக அரசியலைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று கண்மணி டீச்சர் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்கள். நான் வேண்டும் என்றுதான் அதைப் பற்றி சொல்லவில்லை.  ஆனால் இந்த இரண்டு நாள்களாக பதிவுலகில் நடந்து வரும் சண்டை இங்கேக் கூட இவ்வாறு நடக்கிறதா என்று என்னும் அளவுக்கு மிகக் கேவலமாக உள்ளது.

நான் அந்த சண்டையில் சம்பந்தப்பட்ட யாரையும் ஆதரிக்க வில்லை . ஒரு குழுவாக சேர்ந்து செயல்படுதல் நல்லதே ஆனால் அதை தனிமனிதத் தாக்குதலுக்கு உபயோகப் படுத்துவது தவறு.

முதலில் ஒரு பதிவர் எதாவது  பதிவு எழுதினால் அதற்க்கு எதிர்வினை எழுதவதை நிறுத்துங்கள். அதை செய்தாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அதேப் போல் பின்னூட்டம் இடும் அன்பர்கள், பதிவின் விசயத்தை உணர்ந்து பின்னூட்டம் இட வேண்டும் . ஆகா இன்று நமக்கு சரியான கும்மி கிடைத்து விட்டது என்று விசயத்தை பெரிது பண்ணக் கூடாது.

ஒரு பழமொழி சொல்வார்கள் "அரிசி சிந்தினா அள்ளலாம் ஆனால் , சொல் சிந்தினால் அள்ள முடியாது ". ஒரு முறை பதிவிட்டுவிட்டால் , பின்பு அதை நீங்கள் நீக்கினாலும், நீங்கள் சொன்னது இல்லை என்றாக முடியாது. எனவே பதிவிடும் முன்பு யோசித்து பதிவிடுங்கள்.


ஒரு நபர் எழுதியுள்ள பதிவு பிடிக்கவில்லை என்றால் அதைத் தவிர்க்கலாம். அதை விட்டுட்டு அதற்கு எதிர்வினை என்று அந்தப் பதிவரை தாக்கி எழுத வேண்டாம். இந்த பிரச்சனையில் சம்பந்தப் பட்ட பதிவர்கள் அனைரும் நன்கு அறியப்பட்ட பதிவர்களே. புதிதாய் பதிவுலகத்திற்கு வருபவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டிய இவர்களே இவ்வாறு நடப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது.

இதைப் போன்ற விசயங்களை இனித் தவிர்ப்போம். பதிவுலகம் இது போன்ற அரசியல்கள் இல்லாத ஒரு இடமாக, அனைவரும் மகிழ்ச்சியாக உலா வரும் ஒரு இடமாக மாற்றுவோம்.

26 கருத்துகள்

vanathy சொன்னது…

எல்கே, என்ன சொல்கிறீர்கள் என்று என் மண்டைக்கு எட்டவில்லை. நீங்கள் சொல்வது சரி தான் சண்டை தவிர்த்து சமாதானமாக போவது எல்லோருக்கும் நல்லது.

dheva சொன்னது…

கண்டிப்பாய்..... நீங்கள் சொல்வது சரி...கார்த்திக்! பிரச்சினை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் எல்லாவற்றுக்கும் ஏக போக உரிமை எடுத்துக்கொள்வதில் தான்..! நான் ... நான் பெரியவன் என்ற எண்ணம்தான் போட்டியையும் கிண்டலையும் உருவாக்குகிறது.


தமிழ் நாடே விக்கித்துப் போய் என்னை திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு நல்ல பதிவினை நான் கொடுப்பேன் என்று ஒரு சூளுரையோடு எழுத வந்தால் அதில் கொள்கை இருக்கிறது. சுய நல எழுத்து வியாபரிகளால் அப்பாவி வாசகனின் வாசிக்கும் திறன் குறைந்து போகிறது. ஒரு சுத்தமான சுகாதாரமான இடத்தை ஏன் சாக்கடையாய் மாற்ற இத்தனை முயற்சி என்பதுதான் எனது ஆதங்கமே.!

எப்போதும் நாம் எழுதி புதிதாய் வரும் எழுத்தாளனையும் ஊக்குவித்து...அவனின் எண்ணோட்டங்களையும் கருத்துக்களையும் கொண்டுவருவோம்....பாஸ்! தமிழ் நாட்டு மற்றும் இந்திய அரசியல் போல பதிவுலகின் ஏக போக ராஜாக்கள் என்ற கற்பனையில் வாழாமல்.... நல்ல எழுத்துக்களை கொட்டித்தெரித்து...ஆரோக்கியமான அறிவார்ந்த சமூகத்தின் அங்கமவோம்!

உங்களின் கருத்தை நான் வழி மொழிகிறேன் பாஸ்!

Asiya Omar சொன்னது…

என்ன பிரச்சனைன்னு தெரியலை,
தூற்றிய இடத்திற்கு போகாமல் இருப்பது நல்லது.அதை விட்டு விட்டு எதிர் போட்டி நடத்துவது சரி இல்லை.

அமைதி அப்பா சொன்னது…

மனிதர்கள், எப்போதும் மனிதர்கள்தான்!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

என்ன சொல்றது... ஒண்ணும் புரியலை :-(

Ananya Mahadevan சொன்னது…

உள்ளேன் ஐய்யா!
(மத்தபடி ஒண்ணும் புரிபடலை!)

Kousalya Raj சொன்னது…

சில விசயங்களை மறுபடி விமர்சனம் செய்யாமல் விட்டுவிட்டாலே , பிரச்சனையின் தீவிரம் குறைந்து விடும்.

குந்தவை சொன்னது…

Yes Boss.
Since I don't know anything about this politics, No comments.

உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்.

Geetha Sambasivam சொன்னது…

ஒண்ணுமே புரியலை உலகத்திலே! எதுவானாலும் நீங்க சொல்லி இருப்பது சரியே.

ஜெய்லானி சொன்னது…

பொதுவா நான் முன்பே சொன்ன மாதிரி கமெண்டுகளை விளையாட்டா எடுத்துக்கனும். சீரியசா எடுத்தா எதுவும் பிரச்சனையே !!!.

எல் கே சொன்னது…

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. மீண்டும் ஒரு பிரச்சனையை கிளப்பி விடக் கூடாது என்றே நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை . அனைவரும் இன்று இருப்பது போல் சண்டை இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் .

@தேவா
சரியாக சொன்னிர்கள்

SathyaSridhar சொன்னது…

Enna vishayamnae puriyalainga,, aana oru vishayam pidikalainna thalli iruppathu thaan nalalthu.

ARV Loshan சொன்னது…

இதுலேயும் எங்கேயாவது பிழை கண்டுபிடித்து பிரித்து மேய்ந்திடுவார்களோ எனப் பயமாக உள்ளது சகா..

இதுவும் கடந்து போகும்.. ;)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

பிரச்சனை என்னனு தெரியல. ஆனா சொன்னா கருத்து சரி தான்

Unknown சொன்னது…

அண்ணே உங்களை வரவேற்கிறேன் ..

Menaga Sathia சொன்னது…

//பிரச்சனை என்னனு தெரியல. ஆனா சொன்னா கருத்து சரி தான்//ரிப்பிட்ட்ட்ட்

ஸ்ரீராம். சொன்னது…

எனக்கும் என்ன பிரச்னை, எங்கே என்று தெரியவில்லை...என்றாலும் நீங்கள் சொல்லி உள்ள கருத்து சரிதான்...

Unknown சொன்னது…

வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.

வவ்வால் சொன்னது…

Neenga solli iruppathu sarithan.but pirachanai puriyalainu romba appaviya comment pottavangalai ellam partha siripu than varuthu olaga maha nadippuda sami!

எல் கே சொன்னது…

@வவ்வால்

இங்கு இருக்கும் பாதி பேருக்கு பிரச்னையை பற்றி விரிவாக தெரியாது,. எனவே அவர்களை குறைக் கூற வேண்டாம்

Geetha Sambasivam சொன்னது…

இங்கு இருக்கும் பாதி பேருக்கு பிரச்னையை பற்றி விரிவாக தெரியாது,. எனவே அவர்களை குறைக் கூற வேண்டாம் //

ம்ம்ம்????? நான் பதிவுலகத்தின் எல்லாப் பதிவுகளையும் படிக்கிறதே இல்லை. எப்படித் தெரியும்???? :((((((( மத்தவங்களுக்கும் அப்படித் தான் இருக்கும்.

Jaleela Kamal சொன்னது…

இந்த பதிவுலகில் எங்கு சண்டை நடக்கரர்து என்று எனக்கு தெரியல.

ஏதாவது குளு கொடுங்களேன்.


என்ன செய்ய சில பேர் பதிவுக்கு உள்குத்து வைத்ட்து எதிர் மறை பதிவு போடுகீறார்கள் இதானால் அவர்களுக்கு என்ன சந்தோஷமோ..

எல் கே சொன்னது…

@jalella

not in public.. i will send u email if u want

Harini Nagarajan சொன்னது…

Inga sonna mukka vaasi pera pola naanum sollarathu ithu thaan "yenna prachananu enakku theriyaathu aagayaal no comments" aana neenga kooriya karuthu anaiththum gnyayamaanavai.

Jaleela Kamal சொன்னது…

mmm முடிந்த்தால் அநன்யா முலம் அனுப்புங்கள்.

அத்ற்குள் முன்று பதிவு போட்டு விட்டீர்கள், மெதுவா பிறகு படிக்கிறேன்.

Geetha Sambasivam சொன்னது…

அத்ற்குள் முன்று பதிவு போட்டு விட்டீர்கள், //

ஆமாம், ஒரு நாளைக்கு மூன்று பதிவுனு சொல்ல மறந்துட்டீங்களே???? :P:P:P