Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

கசாப்புக் கடைக்கு செல்வாரா கசாப் ???

நவம்பர் 26 ,2008  இந்திய மக்களால் மறக்க முடியாத ஒரு நாள். மும்பையில் தாஜ் ஹோட்டலிலும், CST என்றழைக்கப் படும் சத்ரபதி சிவாஜி தொடர்வண்டி நிலை...


நவம்பர் 26 ,2008  இந்திய மக்களால் மறக்க முடியாத ஒரு நாள். மும்பையில் தாஜ் ஹோட்டலிலும், CST என்றழைக்கப் படும் சத்ரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையத்திலும் இன்னும் சில இடங்களிலும் , பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நிகழ்த்திய நாள். அந்த தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவரவாதி கசாப் மட்டுமே .

கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாய் நடந்து கொண்டிருந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்திருக்கிறது . கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த தண்டனை நிறைவேற்றப்படுமா ???

காரணம் 1

ஏற்கனவே 2001 டிசம்பர் மாதம் நமது நாட்டு பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியக் குற்றத்திற்காக தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட அப்சல் குரு இன்றும் சிறைச்சாலையிலே நமது வரிப் பணத்தில் நன்றாக சாப்பிட்டு கொண்டு நிம்மதியாக இருக்கிறார். தாக்குதல் நடந்து பத்து வருடம் ஆகப் போகிறது .

காரணம் 2 

நமது நாட்டில் குற்றவாளிகளுக்கு உதவி புரிவதற்கென்ற சிலர் இருக்கின்றனர். மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்தவர்கள் . இவங்களுக்கு வேலையே எந்த குற்றவாளிய அரசாங்கம் கடுமையா தண்டிக்குதோ அந்த குற்றவாளிக்கு ஆதரவு தெரிவிப்பது. அந்த பயங்கரவாதி சுட்டுக் கொன்ற, காவலர்களோ இல்லை போது மக்களோ இவர்கள் கண்ணுக்கு மனிதர்கள் இல்லை. அந்த தீவிரவாதி மட்டுமே மனிதனாய் இவர்களுக்கு தெரிவான்.

காரணம் 3

அடுத்து எதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் வரலாம். அப்பொழுது அங்கு சிறுபான்மை ஓட்டு அரசுக்குத் தேவைப்படலாம்( நான் அந்த சிறுபான்மை இனத்தவரை குற்றம் சொல்லவில்லை, அரசாங்கத்தையே குற்றம் சொல்கிறேன் ). அதனாலும் கசாபின் தண்டனை நிறைவேற்றப் படமால் தள்ளி வைக்கப் படலாம்.


நான் நினைக்கிறன் , கசாபுக்கு நல்லா  தெரிஞ்சிருக்குமோ, தீர்ப்பு எப்படி வந்தாலும், தன்னை தூக்குல அவ்வளவு சீக்கிரம் போட மாட்டாங்க  , அதனால குண்டடி பட்டு சாகாம, நிம்மதியா நல்லா அருமையா சாப்பிட்டு வாழ்க்கையை அனுபவிக்கலாம்னு ??

சட்டம் அதன் கடமையை செய்து விட்டது, பொருத்தமான ஒரு தீர்ப்பை வழங்கி விட்டது. ஆனால் அரசாங்கம் அதன் கடமையை செய்யுமா?  இந்த தீவிரவாதிகள் இருவரையும் ஒரே நாளில். தூக்கில் ஏற்றுவார்களா???

18 கருத்துகள்

மின்னுது மின்னல் சொன்னது…

அப்சல் குரு, ராஜிவ்காந்தி கொலையாளி முருகன் போன்றவனுக்கே
தூக்கு அறிவிக்க பட்டு கருனை மனு போட்டு திரு.நாரயணன்.திரு.கலாம்,
புதுசா ஒரு ஜனாதிபதி? அவங்க பேரு என்னா? இருக்காங்களா? அவங்க ! :)

இதுவரைக்கும் ஒன்னுமே கிழிக்கலை !
இவனும் கருனை மனு போடுவான் !!!

ஜெயிலிலேயே வாழ்த்துட்டு சாவான் !!

தக்குடு சொன்னது…

நாம பொலம்பினதுதான் மிச்சம் LK! 'பேயாலும் ஊரில் பிணம் கொத்தி உண்ணும் கழுகுகள்'...:(

Thenammai Lakshmanan சொன்னது…

வன்முறை ஒரு போதும்ஜெயிக்காது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

SathyaSridhar சொன்னது…

Onnarai varusham aprama rombha yosichu ippathaan theerpu koduthurukkanga innum athai nirai vethalama illa venamaannu apram antha karunai manu ithellam aarainju oru konjam 30 varusham izhuthu antha kasab iyarkaya saavane oliya theerpu izhutu thaan poegum,,nambha court judgement pathi therinje ipdi pesarengalae.

ஜெய்லானி சொன்னது…

கண்டிப்பா சான்ஸே இல்ல. இங்க போட்டா அங்க பஞ்சாபிய போட்டுடுவாங்க. அந்த பயம் இருக்கு.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ஹ்ம்ம்.. நல்ல கேள்வி தான்.. பதில் தான் தெரியல!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

அது இப்படியும் ஒரு பத்து வருசமாச்சும் ஆகும் சார். பாபர் மசூதி வழக்குல ஆரம்பிச்சு இன்னும் தீக்க வேண்டிய கணக்கு நெறைய இருக்கே... நம்ம அரசியல் சூதாட்டங்கள் பத்தி தெரியாதா...

தருமி சொன்னது…

//குண்டடி பட்டு சாகாம, நிம்மதியா நல்லா அருமையா சாப்பிட்டு வாழ்க்கையை அனுபவிக்கலாம்னு ??//

அதோட உட்ருவாங்களா ... யாராவது இவனை உடனே வெளியே விடட்டா உங்க மந்திரி புள்ளைய நாங்க போட்டுருவோம்னு சொன்னா நம்ம ஆளுக இவனை அப்போ உட்ருவாங்களே ..

Priya சொன்னது…

தலைப்பும் அதை தொடர்ந்து எழுதிய விஷயமும் நல்லா இருக்கு. நிறைய சிந்திக்க வைக்கும் பதிவு!

Chitra சொன்னது…

பொறுத்து (???) இருந்துதான் பார்க்க வேண்டும்..... அரசாங்கம் ஆச்சே......

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்க ஜனநாயகம்...!

எனக்கு எப்பவுமே அந்தப் படத்துல இருக்கற கசாபை பார்க்க பத்திகிட்டு வரும்...செய்ய வந்தது கொலை...ஸ்டைல் வேற... அவன் ஜீன்சும் டி ஷர்ட்டும்...

எல் கே சொன்னது…

@மின்னல்
:(

@தக்குடு

சரியாய் சொன்ன
@தென்னம்மை
புரிஞ்சிகிடதா தெரியலையே

எல் கே சொன்னது…

@சத்யஸ்ரீதர்
இப்பவாது கொஞ்சம் சுறுசுறுப்பா எதாவது பன்னுவாங்கலானு ஒரு ஆதங்கம்

@ஜெய்லானி
:(

@ஆனந்தி
உங்களுக்கும் தெரியலையா

@தருமி
அட இது மறந்துபோச்சு ..

முதல் வருகைக்க்சும் கருத்துக்கும் நன்றி

எல் கே சொன்னது…

@AT
அட அதுக்கு முந்திய ஒரு கணக்கே இன்னும் தீர்க்கல

@பிரியா
நன்றி பிரியா . ஒரு ஆதங்கம்தான் இதை எழுத தூண்டியது ..

@ஸ்ரீராம்
அண்ணே, மாட்டிகிட்ட என்ன களியா சாப்பிடப் போறான்? என்ன வகை வேணுமோ சொன்னா கொண்டுவந்து தரப் போறாங்க அப்புறம் என் எவ்ளோ நீட்டா டிரஸ் பண்ண மாட்டான்

பெயரில்லா சொன்னது…

கசாபினே கசாப்பு கடைக்கு அனுப்புமென்ன நம்பிக்கை எனக்கு இல்லை. திரு ராஜீவ் காந்தி கொலகரர்களே இப்போதும் கொஞ்சிட்டு தானே இருகாங்க ...கசாப்க்கும் இதே கதை தான் ...அவனுக்கு தூக்கு தண்டனை எதுக்கு ?எல்லாரும் சேர்ந்து கல்லால் அடிச்சு தான் இவனை போல் இருப்பவரை கொல்ல வேண்டும்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அன்றைய தினத்தின் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. அன்னிக்கு விமான நிலையம் பிழைச்சது புண்ணியம்.வெடிகுண்டு ஏத்திவந்த கார் அதுக்கு முன்னால இருக்கிற சிக்னல் கிட்ட வரும்போதே வெடிச்சிடுச்சு. இல்லைன்னா இன்னும் உயிர்ச்சேதம் அதிகமாகியிருக்கும்.

எல் கே சொன்னது…

:(

சாமக்கோடங்கி சொன்னது…

கொசுவுக்கெல்லாம் பாவம் பாக்கலாமா...? போட்டுத் தள்ளனும்..