ஜூன் 14, 2011

வியாபாரம் 11


பழைய வியாபாரங்களைக் காண


இந்த வழியை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணமே அந்த வழியில் எங்கும் சோதனைச் சாவடி இருக்காது என்பதுதான். ஆனால் அவர்கள் எண்ணத்திற்கு மாறாக, அவர்கள் அப்பாதையில் திரும்பிய உடனேயே அங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு சோதனை சாவடி இருப்பது தெரிந்தது.  அதைக் கண்டவுடன் , வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன்  காரின் வேகத்தைக் குறைத்து
என்ன செய்யலாம் என்று , பின்னால் இருந்தவனிடம் கேட்டான்.

ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு  "இது நம்ம அப்பா. உடல் நிலை சரி இல்லை. அதான் தூங்கரார்னு சொல்லிடலாம். உன்கிட்ட லைசென்ஸ் இருக்கா ?"

"ம். இருக்கு. என்னிக்காவது உபயோகம் ஆகும்னு தெரியும் . "

"சரி நார்மல் ஸ்பீட்ல போ . ரொம்ப ஸ்லோ பண்ணாத அதேமாதிரி ரொம்ப பாஸ்ட்டாவும் போகாத ."

"சரி அதை நான் பார்த்துக்கறேன். உளராம பேசு அங்க ."

"லைட் போட்டு பார்த்தா என்ன பண்றது ?"

"பேசிக்கலாம். அவ்ளோ டீப்பா போகமாட்டாங்கன்னு நினைக்கிறேன் . பார்த்துப்போம் ."

அதன்பின் படப்படக்கும் இதயத்துடன் காரை செலுத்தினான் அவன். சோதனைச் சாவடியை நெருங்கவும் அங்கிருந்த போலீசார் , கைகாட்டி வண்டியை நிறுத்தவும் சரியாக இருந்தது .

 *********************************************************************************************************
கீழே விழுந்த ரமேஷ் சுதாரித்து எழுவதற்கும், சேகர் அங்கே வரவும் சரியாக இருந்தது. எழுந்தவேகத்தில் அங்கிருந்து ஓட முயன்ற ரமேஷை சேகர் பிடித்துவிட்டார். அவரிடம் இருந்து தப்பி செல்ல முயன்று திமிறினான். ஆனால் அதற்குள் ரமேஷ் கீழே விழுந்ததைக் கண்ட ஜெயாவும் அங்கே வந்துவிட அவனால் தப்ப இயலவில்லை.

அங்கிருந்து ரமேஷை பைக்கில் கமிஷனர் அலுவலகம் அழைத்து செல்வது என்பது அவன் தப்பிக்க வழி வகுக்கும் என்றெண்ணிய சேகர் , ஜெயாவை கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து ஜீப்பை வரவழிக்க சொல்லிவிட்டு, ரமேஷை அருகில் இருந்த போலிஸ் அவுட் போஸ்ட்டிற்கு அழைத்து சென்றான்.
 

ரமேஷை சேகர் இழுத்து செல்வதைப் பார்த்த விஜி தான் கடைக்கு வெளியே நிற்பதையும் மறந்து அழ ஆரம்பித்தாள். சேகரைத் தொடர்ந்து போக ஆரம்பித்த விஜியை ஜெயா தடுத்து நிறுத்தினாள்.

"எதுக்கு அவங்க பின்னாடி போற ?"

"இல்லை ..."

"தேவை இல்லாமல் இந்த கேஸ்ல நீ மாட்டிக்காத. இப்ப வரைக்கும் இந்த கேஸ்ல உன் பங்கு எதுவும் இல்லை. நீயா உள்ளார தலையை விட்டு வம்புல மாட்டிக்காத. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். முதல்ல போய் லீவ் சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிப் போ . தேவைப்பட்ட நாங்க உன்னை கூப்பிடறோம்."

"சரி..."

 *********************************************************************************************************
தன் காரில் யாரோ ஒருப் பெரியவரை இருவர் அழைத்து செல்வதைப் பார்த்த ராஜூ, ரமேஷுக்கு போன் செய்தும் அவன் எண் கிடைக்காததால் என்ன செய்வது என்று யோசித்தான். பின் காவல் நிலையத்தில் சென்று கார் தொலைந்துவிட்டது என்று புகார் தரலாம் என்றெண்ணி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான்.


அவன் வீட்டின் வாசலிலேயே ஒருவர் பைக்கில் காத்திருந்தார் .

"யார் வேணும் சார் உங்களுக்கு ?"

"நீங்கதானே ராஜு ?"

"ஆமாம். நீங்க?"

"நான் ஜெய். ஒரு கேஸ் விசயமா உங்களைப் பார்க்க வந்தேன்."

இதைக் கேட்டவுடன் ராஜுவின் மனதில் பயம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அப்போதைக்கு அதை வெளிக்காட்டாமல்

"நான் பாட்டுக்கு என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருக்கேன். என்கிட்டே போய் கேஸ் அது இதுன்னு சொல்றீங்க ."

"அதை நாங்க முடிவு பண்றோம் ராஜு. ரமேஷ் உங்க பிரெண்ட்தான ?"

"ஆமாம் சார்."

"நல்ல க்ளோஸ் பிரெண்டா ?"

"ஆமாம் சார். சின்ன வயசில் இருந்து ஒரே ஏரியாதான். அதுவுமில்லாமல் ரெண்டு பேரும் ஒட்டுக்காதான் கார் ஓட்டக் கத்துக்கிட்டோம். ரெண்டு பேரும் இதே லைன்லதான் இருக்கோம். ஏன் சார் இப்ப அவனைப் பத்திக் கேக்கறீங்க ?"

"அதை அப்புறம் சொல்றேன். உன் கார் எங்க ?"

அவர் வார்த்தைகளில் மரியாதைக் குறைந்துவிட்டதைக் கண்ட ராஜு, அவருக்கு தன் மேல் சந்தேகம் வந்துவிட்டதோ என்று எண்ணினான்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சார் , யாரோ அடிச்சிட்டு போய்ட்டாங்க. இப்பதான் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டு வரேன்."

"அப்படியா ? சரி என் கூட வா. கொஞ்சம் விசாரிக்க வேண்டி இருக்கு ."

"சார் அதான் நீங்கக் கேட்டதுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டேன்ல. அப்புறம் எதுக்கு கூப்பிடறீங்க ?"

"இன்னும் விசாரிக்க வேண்டி இருக்கு, நீயா வரியா ..?"


அதற்கு மேல் முரண்டுப் பிடிக்காமல் அவருடன் வர ராஜு ஒத்துக்கொண்டான். அங்கிருந்துக் கிளம்பும் முன் , சேகருக்கு போன் செய்ய அலைபேசியை ஜெய் எடுத்த அதே நேரத்தில் , சேகர் அவனுக்கு கால் செய்தான்.

"ஜெய் ! எங்க இருக்கீங்க ? உடனே கமிஷனர் ஆபிஸ்க்கு வாங்க "

"கிளம்பிட்டேன் சார். இன்னொரு விஷயம் ரமேஷோட பிரெண்ட் ராஜுவை கூட்டிட்டு வரேன். எனக்கு அவன் மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கு .:

"ஓகே குட் . ரமேஷும் மாட்டிக்கிட்டான்."

"சீக்கிரம் கிளம்பி வாங்க."

"எஸ் சார்."


 *********************************************************************************************************

போலீசார் சைகைக்கு இணங்கி வண்டி நின்றவுடன், அங்கிருந்த போலீசாரில் ஒருவர் வேகமாக வந்தார். அவர் வருவதைப் பார்த்து கொஞ்சம் பயத்துடனேயே காரில் இருவரும் இருந்தனர்.

காரை நெருங்கி வந்தவர் "எங்க போறீங்க ?"

"ஏற்காடுதான் சார் போயிட்டு இருக்கோம் ."

"உள்ள யார் யார் இருக்காங்க ?"

"நான், எங்க அப்பா, அண்ணன் சார் ."

"இந்த வழில இன்னிக்கு போக முடியாது. பாறை விழுந்து பாதை அடைச்சிருக்கு. இப்படியே திரும்பி போய் அஸ்தம்பட்டி வழியா போங்க."

"இன்னிக்கு கிளியர் ஆகாதா சார் ?"

"கஷ்டம். வெளிச்சம் வேற இல்லை. சுத்திக்கிட்டுதான் போகணும். வேற வழியில்லை. "

"சரி சார் "

எதிர்பாராத்  திருப்பமாய் இப்படி ஒரு சிக்கல் வர வேறு வழியில்லாமல் காரைத் திருப்பினார்கள். சோதனை சாவடியில் இருந்து சிறிது தூரம் சென்றப்பின்  வண்டியை நிறுத்தி என்ன செய்யலாம் என்று யோசிக்கத் துவங்கினார்கள். சிறிது யோசனைக்குப் பிறகு ரமேஷிற்கு போன் செய்துப் பேசலாம் என்று முடிவு செய்து அவன் எண்ணை அழைத்தார்கள் .

பி கு : கொஞ்சம் தாமதமாய் அப்டேட் செய்வதற்கு மன்னிக்கவும். இந்த வாரத்தில் கதையை முடிச்சிடறேன் .- வியாபாரம் தொடரும்30 கருத்துகள்:

hareaswar சொன்னது…

super ah irukkunna :) :)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எதிர்பாராத் திருப்பமாய் இப்படி ஒரு சிக்கல் வர வேறு வழியில்லாமல் காரைத் திருப்பினார்கள்.//

நிறைய திருப்பங்கள் .

A.R.ராஜகோபாலன் சொன்னது…

கலக்குறிங்க சார்
ஊட்டி ரோடு மாதிரி பல சுவையான எதிர்பாரா திருப்பங்கள், அழைத்து செல்லுங்கள் எங்களை , பின் தொடர்கிறோம் உங்களை

பத்மநாபன் சொன்னது…

எல். கே முடிக்க போறிங்களா .. நான் படிக்க ஆரம்பிச்சுட்டேன் ..நீங்க எழுதி முடிக்க நான் படிச்சு முடிக்க சரியாய் இருக்கும் ...

Lakshmi சொன்னது…

எதிர்பராத திருப்பங்களுடன் கதையை நகர்த்திச்செல்லும் விதம் அழகு.

சாகம்பரி சொன்னது…

வாக்கியங்களின் வடிவமைப்பிலும், உரையாடலிலும் வியாபாரம் லாபம்தான்.

vanathy சொன்னது…

கதை நல்லாப் போகுது, கார்த்திக்.

S.Menaga சொன்னது…

மொத்தமா சேர்த்து எல்லா எபிசோட்களையும் படிக்கிறேன்...

எல் கே சொன்னது…

@வெங்கட்

நன்றிடா

எல் கே சொன்னது…

@ராஜராஜேஸ்வரி

ஆமாம் மலையில் நெறைய திருப்பங்கள்

எல் கே சொன்னது…

@ராஜகோபால்

சார் இது ஏற்காடு . ஊட்டி இல்லை (சும்மா கலாட்டா ).நன்றிங்க

எல் கே சொன்னது…

பத்மநாபன்

ஆமாம் அண்ணா. ஒழுங்கா எழுதி இருந்தா முடிச்சிருக்கலாம். கொஞ்சம் சோம்பல் . இதுக்கு மேல விட்டா அந்த செட்டியார் வந்து அடிப்பார்

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

நன்றி மா

எல் கே சொன்னது…

@சாகம்பரி

எனக்கு அப்படிதான் எழுத வரும், நன்றிங்க

எல் கே சொன்னது…

வாணி


நன்றி

எல் கே சொன்னது…

@மேனகா

நன்றி மேனகா

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நிறைய திருப்பங்களுடன் வியாபாரம் நடக்கிறது.

//இதுக்கு மேல விட்டா அந்த செட்டியார் வந்து அடிப்பார்//

ஆஹா, செட்டியார் திரும்பி வருவதுபோலவும் திருப்பங்கள் இருக்குமோ! பார்ப்போம்.

RVS சொன்னது…

பத்துண்ணாவுக்கு சொன்ன பதிலைத்தான் டைப் பண்ணலாம்ன்னு இருந்தேன். நீங்களே முந்திக்கிட்டீங்க.. தப்பிச்சீங்க... இன்னும் எவ்ளோ எபிசொட் போகும். நல்லாத்தான் போவுது.. என்னைப் போல அவசரப்பட்டு தொடரை முடிக்காதீங்க எல்.கே. ;-))

எல் கே சொன்னது…

வைகோ

நன்றி சார்

எல் கே சொன்னது…

@ஆர் வீ எஸ்

இல்லை ஆர்வீஎஸ் . நான் கதையை எப்பவும் இழுக்க மாட்டேன். இழுத்தா நல்லா இருக்காது. அதிகபட்சம் ரெண்டு

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யமா இருக்கு. அதது பொருந்தி, அவனவன் அங்கங்க மாட்டி...முடிவை நெருங்குது. தமிழ் நாட்டுல போலீஸ் இவ்வளவு வேகமா கேஸை முடிக்கிறாங்கன்னா நல்லா தான் இருக்கும!

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

நன்றி அண்ணா. அவங்க பண்ண மாட்டாங்க. அதான் கதையிலாவது அப்படி இருக்கட்டுமேன்னு

சே.குமார் சொன்னது…

கதை நல்லாப் போகுது.

சே.குமார் சொன்னது…

கதை நல்லாப் போகுது.

எல் கே சொன்னது…

@குமார்

எங்க கொஞ்ச நாளா ஆளைக் காணோம்

அப்பாவி தங்கமணி சொன்னது…

முடிய போகுதா... ஹ்ம்ம்... ரெண்டு கதைய முடிச்சுட்ட நான் இன்னும் அந்த ஒண்ணை முடிச்ச பாடா காணோம்...நானும் சீக்கரம் முடிக்கறேன்... கதை நல்லா போகுது...:)

அன்னு சொன்னது…

கார்த்திண்ணா...

அப்பாவி ஒரு தொடரை முடிக்கும் முன் நீங்க ரெண்டு கதை எழுதலாம்தான். ஆனா இந்த தடவை அப்பாவிக்கே சவால் விட்ட மாதிரி டிலே... அதைத்தான் சொன்னேன் :)

மனோ சாமிநாதன் சொன்னது…

சுவாரஸ்யமாக கதை போகிறது!

கீதா சாம்பசிவம் சொன்னது…

ஏடிஎம்மோட ஜில் மாதிரி இழுக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்காமல் இருக்கே, அதுவே பெரிய விஷயம். :P:P:P நல்லா விறுவிறு. :D

இராஜராஜேஸ்வரி சொன்னது…

http://blogintamil.blogspot.com/2011/06/2_24.html///


தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துரை தெரிவிக்கவும். நன்றி..