நவம்பர் 02, 2010

எனக்குப் பிடித்த ரஜினி படங்கள் டாப் 10 - தொடர் பதிவு

சூரியனுக்கே வலை வாசல் வச்சிருக்கற அருண் பிரசாத் "எனக்குப் பிடித்த ரஜினி படங்கள்  டாப் 10 " என்ற தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறார். எந்திரன் வெளி  வந்துள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் மத்தியில் இது எந்த இடத்தில் உள்ளது என்று கணிக்க இதை ஆரம்பித்து இருக்கிறார்.


இனி எனது பட்டியல்

10 ஸ்ரீ ராகவேந்திரர்

 ரஜினியின் நூறாவது படம். எந்த வித ஆர்பாட்டமும் இன்றி மிக அமைதியாக நடித்திருப்பார். ரஜினியின் வழக்கமான ஸ்டைல்கள் இல்லாமல் படம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் எடுபடவில்லை. இருந்தாலும் எனக்குப் பிடித்த ரஜினி படங்களில் இதுவும் ஒன்று9 16 வயதினிலே
வில்லன் கேரக்டரில் பரட்டையாக அசாத்தியப் படம். இவரும் கமலும் இந்தப் படத்தின் வெற்றியில் சம பங்கு வகித்தனர். ஒவ்வொரு முறையும் கமலை கிண்டலடித்து "இது எப்படி இருக்கு " என்று சொல்லும் விதம் கலக்கல் ...

8 படையப்பா

ரஜினிக்கு பிரம்மாண்ட வெற்றி தேடித் தந்த படம். ரஜினியின் மகளை ரம்யா கிருஷ்ணன் ஏமாற்றும் வரை நிதானமாக போகும் படம், பின் டாப் கியரில் பறக்கும் . இதில் ரம்யா கிருஷ்ணன் சொல்லும் "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகலை ", நிஜத்திலும் இது எவ்வளவு உண்மை !!!!
7  தில்லு முல்லு

தலைவரின் எல்லாப் படங்களிலும் நகைச்சுவை இயல்பாக இருந்தாலும், முழு நீள நகைச்சுவை படமான இதில் தேங்காய் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து நம்மை படம் முழுவதும் சிரிக்க வைத்து இருப்பார். ரஜினியின் வெற்றிக்கு அவருக்கு இயல்பாய் வரும் நகைச்சுவையும் ஒரு காரணம்.6 மூன்று முகம்

தந்தை , மகன்கள் என்று  மூன்று வேடங்களில் ரஜினி அட்டகாசப்படுத்தியப் படம். மூன்று வேடங்களில் நடித்து இருந்தாலும், இன்றளவும் அனைவராலும் பேசப் படும் வேடம் அலெக்ஸ் பாண்டியனாக வரும் தந்தை வேடமே. இன்றும் ரஜினி நடித்த பாத்திரங்களில் சிறந்த ஒன்றாக பேசப் படுவது. "தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கத்தில உரசினாதன் தீப் பிடிக்கும். இந்த அலெக்ஸ்பாண்டியனை எங்க உரசினாலும் தீப் பிடிக்கும் " ரஜினியின் மறக்க முடியாத வசனங்களில் ஒன்று
 5 எந்திரன்

 சிவாஜியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் வந்தப் படம். ஷங்கர், சுஜாதா, சன் மூவீஸ் என்று ஒரு மிகப் பெரிய கூட்டணி ரஜினியுடன் இணைந்து கொண்டுவந்தப் படம். வழக்கமான ஸ்டைல், பன்ச் வசனங்கள் இல்லாமல் மிக சாதரணமாக தலைவர் நடித்தப் படம். ஆனால் , பல இடங்களில் தனது பழைய நடிப்பை காட்டி இருப்பார். வசீகரனை தேடும் இடத்தில் வசன உச்சரிப்பு அமர்க்களம்.4 புவனா ஒரு கேள்விகுறி

இந்தப் படம் வந்த சமயத்தில் இருந்த ஒரு நடைமுறையை துணிச்சலாக மாற்றி எடுக்கப் பட்டது. அந்த காலத்தில், ரஜினி அதிகமாக வில்லன் வேடத்தில்தான் நடித்துக் கொண்டு இருந்தார். சிவக்குமார் ஹீரோவாக இருந்தார். அதை அப்படியே மாற்றி இந்தப் படத்தில் ஹீரோவாக ரஜினியும் வில்லனாக சிவக்குமாரும் நடித்தப் படம். ரஜினியின் நடிப்புத் திறமைக்கு ஒரு சான்று இந்தப் படம்
3 தளபதி

மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படம் (தப்பா இருந்த சொல்லுங்க ). மம்முட்டி ,அரவிந்த்சாமி போன்றோர் இருந்தாலும் இதில் தனித்து தெரிந்தார் ரஜினி. முதலில், மமுட்டிக்கு பயப் படாமல் அவரை எதிர்ப்பதாகட்டும்  அவருடன் இணைந்தப் பிறகு, யாருக்காகவும் அவரை விட்டுக் கொடுக்காமல் பேசுவதாகட்டும் ரஜினி ஜொலித்து இருப்பார்.

2 முள்ளும் மலரும்

சிவாஜிக்கு ஒரு பாசமலர் போல, ரஜினிக்கு முள்ளும் மலரும் .உமச்ச்சந்திரன் எழுதி கல்கியில் வந்த நாவலை மையமாக வைத்து மகேந்திரனால் இயக்கப் பட்ட படம். பாசத்தில் உருகும் அண்ணனாக ரஜினி கலக்கிய படம் . கை இழந்தப் பின், சரத்பாபுவிடம் அவர் பேசும்பொழுது "ரெண்டு கை கால் போனாலும் பொழைச்சுப்பான் சார் காளி. கெட்டப் பையன் சார் " என்று சொல்லும் இடத்தில் அவரது முக பாவனைகள் அருமையாக இருக்கும்.1 பாட்ஷா
தலைவர் படங்களில் அல்டிமேட் படம் பாட்ஷாதான். நிழல் உலக டானாக இருக்கும் பொழுது அசத்தலான மிரட்டும் நடிப்பை வெளிப்படுத்தும் ரஜினி, முதல் பாதியில், சாதாரண ஆட்டோக்காரராக அமைதியான நடிப்பை காட்டுவார். இதில் வரும் பல வசனங்கள் புகழ் பெற்றவை. இதில் வரும் முதல் சண்டைக் காட்சிஇதைத் தொடர நான் அழைப்பது தினேஷ் (முகிலன் ), சித்ரா இருவரையும்

அன்புடன் எல்கே

58 கருத்துகள்:

Balaji saravana சொன்னது…

உங்களோட பட்டியல் ஒரு தேர்ந்த ரசனையை காட்டுது LK!
சூப்பர்!

philosophy prabhakaran சொன்னது…

9, 7, 6, 3, 2 இதெல்லாம் எனக்கும் பேவரிட்... புவனா ஒரு கேள்விக்குறியும் ராகவேந்திராவும் பார்த்தில்லை... பாட்ஷா படத்தில் அப்படி என்னதான் இருக்கிறதென்று தெரியவில்லை... ஆறிலிருந்து அறுபது வரை படத்தை ஏன் லிஸ்டில் சேர்க்கவில்லை... பிடித்த காட்சிகளை வீடியோவாக இணைக்காமல் வார்த்தைகளில் விவரித்திருக்கலாம்...

asiya omar சொன்னது…

குறிப்பிட்ட படங்கள் அருமை,ராகவேந்திரா பார்த்ததில்லை.அட இனியொரு தொடர் தொடரப் போவுதா?நல்லது.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

1 , 2 , 6 , 7 ,8 எனக்கும் பிடித்த படங்கள்.

ஆனந்தி.. சொன்னது…

எல்லா காட்சிகளுமே நல்லா இருக்கும்..தில்லு முல்லுவில் தேங்காய் சீனிவாசன் ரஜினி இன்டெர்வியு காட்சி கூட பெஸ்ட் இல் சேரும் இல்லையா LK ...

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

நல்ல தொகுப்பு.

வெறும்பய சொன்னது…

அருமையான தொகுப்பு..

LK சொன்னது…

@பாலாஜி

நன்றி நண்பரே

LK சொன்னது…

@பிரபாகரன்
புவனா ஒரு கேள்விக் குறி பார்க்க வேண்டியி ரஜினி படம். ஆறில் இருந்து அறுபது வரையும் எனக்குப் பிடித்த படம்தான். ஆனால் வீடியோ கிடைக்கவில்லை. என் வார்த்தைகளை விட, வீடியோ நன்றாக இருக்கிறது

LK சொன்னது…

@பிரபாகரன்
புவனா ஒரு கேள்விக் குறி பார்க்க வேண்டியி ரஜினி படம். ஆறில் இருந்து அறுபது வரையும் எனக்குப் பிடித்த படம்தான். ஆனால் வீடியோ கிடைக்கவில்லை. என் வார்த்தைகளை விட, வீடியோ நன்றாக இருக்கிறது

LK சொன்னது…

@ஆசியா
நன்றி சகோ

LK சொன்னது…

@சை.கொ.ப

நன்றி

LK சொன்னது…

@ஆனந்தி
படம் முழுக்கவே காமெடி சரவெடிதான்

LK சொன்னது…

@புவனேஸ்வரி

நன்றி

Chitra சொன்னது…

இப்போதான் எந்திரன் காய்ச்சல், கொஞ்சம் குறைஞ்சது.... மீண்டும் எகிற வச்சுட்டீங்களே!!!
Super selections....

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!

I will write soon. :-)

அருண் பிரசாத் சொன்னது…

உடனடியாக தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி எல் கே...

படங்களின் தொகுப்பும், அதன் காட்சி இணைப்பும் அருமை..

S Maharajan சொன்னது…

தலைவரின் அற்புதமான் படங்களை தான் தேர்ந்து எடுத்து உள்ளீர்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பட்டியல் அழகு. தில்லு முல்லு தான் என்னோட முதல் சாய்ஸ்.

தமிழ் உதயம் சொன்னது…

தளபதி மட்டும் என்னை அவ்வளவாக கவரவில்லை.

THOPPITHOPPI சொன்னது…

"எனக்குப் பிடித்த ரஜினி படங்கள் டாப் 10 - தொடர் பதிவு"
************************************

6 முதல் 60 வரை ?

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அனைத்துமே ரஜினியின் டாப் கிளாஸ் படங்கள். சூப்பர் செலக்சன். தொடர்பதிவா தொடரட்டும். வாழ்த்துகள்.

சே.குமார் சொன்னது…

சூப்பர் செலக்சன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

good selection

Gayathri சொன்னது…

எல்லாமே ரொம்ப அருமையான படங்கள்..சூப்பர் ப்ரோ

dr suneel krishnan சொன்னது…

நல்ல தேர்வு .
எனக்கு புவனா மிகவும் பிடிக்கும் , ஜானி காணும் !,
நான் அதிகம் பார்த்த படம் தில்லு முள்ளு தான் .

சுசி சொன்னது…

எந்திரனும் தளபதியும் எனக்கும் பிடிக்கும்.

அமைதிச்சாரல் சொன்னது…

சூப்பர் பட்டியல்.. தில்லுமுல்லுக்குத்தான் நான் முதலிடம் கொடுப்பேன் :-))))))))

ப.செல்வக்குமார் சொன்னது…

என்னோட விருப்பப்படியும் பாட்ஷாதான் ரொம்ப பிடிக்கும் ..!!

LK சொன்னது…

@சித்ரா
நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் . சீக்கிரம் எழுதுங்க

LK சொன்னது…

@அருண்

நன்றி அருண்

LK சொன்னது…

@மகாராஜன்
நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

LK சொன்னது…

@வெங்கட்
ரஜினியோட நகைச்சுவைகளில் அதுதான் டாப்பு

LK சொன்னது…

@தமிழ் உதயம்
நன்றி

LK சொன்னது…

@தொப்பிதொப்பி
அதற்கு வீடியோ கிடைக்கவில்லை. மற்றப் படி அது ரஜினி கிளாசிக்

LK சொன்னது…

@ச்டார்ஜன்
நன்றி நண்பா

LK சொன்னது…

@குமார்
நன்றி

LK சொன்னது…

@ரமேஷ்
நன்றி

LK சொன்னது…

@காயத்ரி
நன்றி

LK சொன்னது…

@சுனில்

ஜானி பிடிக்கும் டாப் படங்களில் இல்லை நன்றி சார்

LK சொன்னது…

@சுசி
நன்றி

LK சொன்னது…

@சாரல்

நன்றி

LK சொன்னது…

@செல்வா
அதிசியம்தான்

நித்திலம் - சிப்பிக்குள் முத்து. சொன்னது…

அட காதல் கவிஞருக்குள் இத்தனை திறமையா...வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

எல்லாமே சுவாரஸ்யமான படங்கள். தீபாவளிக்கு ரஜினி படம் இல்லை என்ற குறையைத் தீர்க்க இந்த தொடர் பதிவா?!

kapilkumar சொன்னது…

sivaji the boos padam yen ungaluku
pidikavelai

LK சொன்னது…

@நித்திலம்

நன்றி

LK சொன்னது…

@ஸ்ரீராம்

அப்படிக்கூட வச்சிக்கலாம்

LK சொன்னது…

@kapil

appadi illai nanbare. enaku pidicha top 10la sivaji varalai avlothaan

Rajesh V Ravanappan சொன்னது…

தீ

நெற்றிக்கண்

நான் சிவப்பு மனிதன்

vanathy சொன்னது…

இந்த லிஸ்டில் நான் நிறையப்படங்கள் பார்க்கவில்லை. என் அப்பா மிகவும்கண்டிப்பானவர். படம் பார்க்க அனுமதிக்கவே மாட்டார். டிவிடி கிடைச்சா பார்க்கணும்.

R.Gopi சொன்னது…

தலைவரோட 150+ படங்களிலிருந்து வெறுமே 10 படங்கள் மட்டும் செலக்ட் செய்வது மிகவும் கஷ்டம்...

நீங்கள் செலக்ட் செய்த படங்கள் எல்லாமே என் டாப்-20 லிஸ்ட்ல இருக்கு.... வந்து தான் பாருங்களேன்..

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)
http://jokkiri.blogspot.com/2010/02/2020.html

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 – (பாகம்-2)
http://jokkiri.blogspot.com/2010/02/2020_09.html

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்
http://jokkiri.blogspot.com/2010/02/2020_14.html

**********

உங்களின் இந்த பதிவில் கண்டிப்பாக சரி செய்ய வேண்டிய இரு தவறுகள் இதோ... சரி செய்யுங்கள்...

1) படம் 7 - தில்லு முல்லு (நீங்கள் தில்லு முள்ளு என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்...

2) //முழு நீல நகைச்சுவை படமான இதில்// - என்று அந்த படத்தை பற்றி எழுதி இருக்கிறீர்கள்... தயவுசெய்து அதை முழு நீள நகைச்சுவை படம் என்று மாற்றுங்கள்... நீங்கள் குறிப்பிட்டது ஆபாசமான படத்தை குறிக்கிறது..

புரிதலுக்கு நன்றி....

தெய்வசுகந்தி சொன்னது…

இது எனக்கும் பிடித்த படங்கள். ஆறிலிருந்து அறுபது வரை?

LK சொன்னது…

@தெய்வ சுகந்தி
அது ரஜினி கிளாசிக் . எனக்கு வீடியோ கிடைக்கலை. அதுதான் சேர்க்கலை

LK சொன்னது…

@கோபி
உண்மைதான் .. தலைவர் படங்களில் இருந்து பத்து மட்டும் எடுப்பது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம்

LK சொன்னது…

@ராஜேஷ்
ஏற்கனவே சொன்ன மாதிரி இவை எனக்குப் பிடித்த பத்துக்கள். உங்களுக்கு பிடிச்ச பத்து படம் போடுங்க

LK சொன்னது…

@வாணி
கண்டிப்பா பாருங்க. இவையெல்லாம் பார்க்க வேண்டிய படங்கள்

Riyas சொன்னது…

super collection LK

அன்னு சொன்னது…

அப்ப ராஜா சின்ன ரோஜா பிடிக்காதா? :)

எனக்கும் 16 வயதினிலேயும், தளபதியும் ரொம்ப பிடிக்கும் :)