Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

இவர்களும் பிரபலங்களே I

பதிவுலகிற்கு தினமும் புதிதாக வருபவர்கள் ஏராளம். அவர்களில் நன்றாக எழுதுபவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களில் சிலருக்கு திரட்டிகள் பற்றி தெரிந்த...

பதிவுலகிற்கு தினமும் புதிதாக வருபவர்கள் ஏராளம். அவர்களில் நன்றாக எழுதுபவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களில் சிலருக்கு திரட்டிகள் பற்றி தெரிந்து இருக்கிறது அதில் இணைவதின் மூலம் பலரின் அறிமுகங்கள் கிடைக்கிறது. ஆனால பலருக்கு திரட்டிகள் பற்றி தெரிவதில்லை தெரிந்தாலும் அவர்களின் பதிவை படிப்பவர்கள் மிகக் குறைவு . எனக்கு தெரிந்த நான் படிக்கும் அத்தகைய பதிவர்களை அறிமுகம் செய்வதே இந்த பகுதியின் நோக்கம் . என் பதிவை படிப்பவர்கள் இவர்களின் பதிவுகளையும் படித்து ஊக்கம் அளிக்குமாய் கேட்டுக் கொள்கிறேன்.

ஹரிணி 

ஏறத்தாழ இரு வருடங்களாக பதிவுலகில் இருந்தாலும், இவர் இப்பொழுதுதான் தமிழில் எழுத ஆரம்பித்து இருக்கிறார். இவருக்கு கதை எழுதுவது நன்றாக வருகிறது. இவருடைய அந்த ஒரு மணி நேரம்! கதை இரண்டு காதல் ஜோடிகளுக்கு இடையில் ஒரே நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மிக அழகாக சொல்லுகிறது.
இவரது பதிவை படிக்க http://vacantandpensive.blogspot.com/ 

 சந்தியா

மிக சமீபத்தில் பதிவுலகத்திற்கு வந்துள்ள புதுமுகம் இவர். இவர் தன் வாழ்க்கை அனுபவங்களையே பதிவாக எழுதுகிறார். கொச்சியில் பிறந்த கொங்கனி பெண்மணியாகிய இவர் தமிழை கற்று தமிழில் பதிவுகள் எழுதுகிறார். தமிழ்நாட்டில் பிறந்தவர்களே தமிழை மறந்து கொண்டு இருக்கின்ற இவ்வேளையில் இது ஒரு சிறப்பான விஷயம். 
இவரது பதிவை படிக்க http://sandhya-myfeelings.blogspot.com

கௌசல்யா 

மனதோடு மட்டும் என்ற தலைப்பில் மிக மிக அருமையான இன்றைக்கு நிறைய குடும்பங்களுக்கு தேவையான விசயத்தை எழுதுகிறார். எதனால் கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வருகிறது என்று அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வு சொல்ல முயற்சித்துள்ளார்.

இவரது பதிவை படிக்க http://kousalya2010.blogspot.com/

அஷ்வின்

வாழி நலம் சூழ என்ற தலைப்பில் இயற்கை மருத்துவத்தை பற்றியும் அதன் நலன்களை பற்றியும் எழுதி வருகிறார். அனைவரும் படிக்கவேண்டிய மிக அவசியமான பதிவு.

 இவரது பதிவை படிக்க http://frutarians.blogspot.com/

பத்மநாபன்
  
ஆனந்த வாசிப்பு என்ற தலைப்பில் எழுதும் இவர் சுஜாதாவின் பரம ரசிகர் ஆவார். என்ன காரணமோ தெரியவில்லை இவர் அதிகம் எழுதவில்லை. உங்கள் ஊக்கம் இவரை மேலும் எழுத தூண்டும் என்று எண்ணுகிறேன்.

இவரது பதிவை படிக்க http://aanandhavaasippu.blogspot.com/

தொடர்ந்து வாரம் ஒரு முறை புதிய மற்றும் அதிகம் படிக்கப்படாத பதிவுகளை வெளியிட எண்ணி உள்ளேன். உங்களுக்கு தெரிந்து இத்தகைய பதிவுகள் இருந்தால் எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

35 கருத்துகள்

Ashwin Ji சொன்னது…

அன்பிற்கினிய எல்.கே.எஸ் அவர்களுக்கு வணக்கம். உங்களது வலைப்பூவில் எனது ''வாழி நலம் சூழ'' வலைப் பூவைப் பற்றிய உங்கள் அறிமுகத்துக்கு இதய நன்றி. என்னை தங்களுக்கு அறிமுகம் செய்து வைத்த சகோதரி அனன்யா மகாதேவனுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

புதுசா நெறைய பேரை தெரிஞ்சுகறது சந்தோசமா இருக்குங்க LK . Thanks for the intro. Keep up the good job

பத்மநாபன் சொன்னது…

வணக்கம் எல்.கே...மிக்க நன்றி..என் வலைப்பூவின் தலைப்பு காரணமோ ,என்னவோ தெரியவில்லை எல்லோருடய பதிப்புகளையும் ஆனந்தமாக வாசித்து வருகிறேன்...எழுதவேண்டும் என்று உட்கார்ந்தால் மனது தானக வாசிக்க போய்விடுகிறது..சுஜாதாவின் பரம ரசிகன் என்பதிலும், என் போன்று வலையில் சக வாசகர்கள் இருப்பதும் பெருமிதம்...என்னயும் பதிவராக அறிமுகப்படுத்திய மிக்க நன்றி...இதற்காகவேணும் ..மெனக்கெடவேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது........

Bhushavali சொன்னது…

Thala,
Intersting to know about these bloggers. Of course, I've dropped by Harini's earlier, though not a regular visitor. Will visit theirs soon!!!

Karur Pasupathishwarar Temple in My Travelogue
Fashion Panache - Summer Special

Chitra சொன்னது…

good idea. Best wishes!

ஜெய்லானி சொன்னது…

போடுங்க , நல்ல விசயம் இது..

எல் கே சொன்னது…

@அஷ்வின்

அது என்ன எல்.கே.எஸ்??? நான் வெறும் எல்.கே மட்டுமே..
தொடர்ந்து எழுதுங்க நண்பரே

@அப்பாவி

நன்றி.நீங்க கெட்டப் படி உங்க நேரத்துக்கு(நீங்க முழிச்சி இருக்க நேரத்துல) ஒரு பதிவு போட்டாச்சு

@பத்மநாபன்
/.இதற்காகவேணும் ..மெனக்கெடவேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது........//

அதுக்குதான அறிமுகப்படுத்தி இருக்கேன் .

@தோழி

நன்றி தோழி

@சித்ரா

நன்றி

@ஜெய்
நன்றிங்க

அன்புடன் நான் சொன்னது…

நல்லது அப்படியே ஆகட்டும்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அருமை!! நல்ல முயற்சி!! பாராட்டுக்கள்.

பத்மா சொன்னது…

thanks .nalla efforts

எல் கே சொன்னது…

@சி. கருணாகரசு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@சைவகொத்து
நன்றிங்க. உங்கள் ஊக்கம்தான் என்னை இயங்க வைக்கிறது
@பத்மா

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Ananya Mahadevan சொன்னது…

என் பேச்சைக்கேட்டு இயற்கை வாழ்வும் ஆனந்த வாசிப்பும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! மற்ற அறிமுகங்களும் மிக அருமை! நன்றி நன்றி நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இது ஒரு நல்ல விஷயம் LK. இன்னும் பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்யுங்கள்.

தக்குடு சொன்னது…

நல்ல முயற்சி LK!!

(தக்குடு! தக்குடு!னு ஒரு பதிவர் இருக்கார். அவரையும் யாருக்கும் அவ்ளோவா பரிச்சியம் கிடையாது....soo....:PPP

Cable சங்கர் சொன்னது…

நல்ல முயற்சி நண்பரே.. வாழ்த்துக்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

நல்ல முயற்சி..
புது பதிவர்களின் அறிமுகத்துக்கு நன்றி சார்...

பெயரில்லா சொன்னது…

thank you very much karthick

துளசி கோபால் சொன்னது…

புதியவர்களின் அறிமுகத்துக்கு நன்றி.

Prasanna சொன்னது…

அறிமுகத்துக்கு நன்றி :)

பித்தனின் வாக்கு சொன்னது…

nalla introduction thanks el k

vasan சொன்னது…

Mr.L.K.

ந‌ல்ல‌ முய‌ற்சி,
நானும் வ‌ர‌லாமா?
சேத்துக்குவ்விங்க‌ளா??

SathyaSridhar சொன்னது…

LK,,rombha nalla vishayam niraya pudhu vishayangal terinjukkalam...ungaludaya intha muyarchikku ennudaya vaazhthukkal.

எல் கே சொன்னது…

@அனந்யா
அறிமுகப் படுத்தியதுக்கு நன்றி

@வெங்கட்
உங்கள் ஆதரவு இருந்தால் தொடர்ந்து எழுதுவேன்

@தக்குடு
இது உனக்கே கொஞ்சம் அதிகமா படல

@ஷங்கர்
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

எல் கே சொன்னது…

@பட்டாப்பட்டி

நன்றி

@சந்தியா
நன்றி
@துளசி
ரொம்ப நாள் கழிச்சு நம்ம வீட்டுக்கு வந்து இருக்கீங்க. நன்றி

@பிரசன்னா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@சுதாகர்
நன்றி
@வாசன்
கண்டிப்பா நன்றி .
@சத்யஸ்ரீதர்
ரொம்ப நன்றி

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல முயற்சி...

Harini Nagarajan சொன்னது…

என் ப்ளாக்-ஐ அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. மற்றவர்கள் ப்ளாக்-ஐயும் இனி படிக்க முயலுவேன். மிக்க நன்றி எல் கே அண்ணா :)

எல் கே சொன்னது…

nnadri harini and sreeram

கல்விக்கோயில் சொன்னது…

இவர்களும் பிரபல பதிவர்களே! என்ற தங்களின் பதிவு மிக அருமை. நம்மை நாம் வெளிப்படுத்தும் அதே வேளையில்மற்றவர்களை அறிமுகப்படுத்துவதில் உள்ள இன்பமே தனிதான். வாழ்த்துக்கள்.

Ashwin Ji சொன்னது…

பல அன்புள்ளங்களை பெற்றிட உதவியாக உங்கள் வலைப்பூ விளங்குகிறது. நன்றி எல்.கே.

எல் கே சொன்னது…

nandri kaviyinkavigal and ashiwnji

இனியன் பாலாஜி சொன்னது…

திரு எல்.கே அவர்களே நல்ல முயற்சி.
அனைத்தையும் இன்னும் படிக்கவில்லை. படிப்பதற்கு முன்பாகவே முதலில்
தங்களுக்கு அனைவரின் சார்பாகவும் நன்றி தெரிவித்து கொள்ள வேண்டும் என்று நினைத்து எழுதுகின்றேன்.
அனைத்தையும் படித்துவிட்டு அவர்களுக்கு பதில் அனுப்புகிறேன். நிறைய புதியவர்களை கண்டு பிடித்து எழுதுங்கள். நானும் உங்களுக்கு
எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்று நினைத்தால் கூறவும்.இனியன் பாலாஜி

எல் கே சொன்னது…

நன்றி இனியன் பாலாஜி . உங்கள் பார்வைக்கு புதிய பதிவுகள் தென்பட்டால் எனக்கு சொல்லுங்கள்

Kousalya Raj சொன்னது…

இப்படி எங்களை அறிமுகபடுத்தி அதற்கு 'இவர்களும் பிரபலங்களே' என்ற தலைப்பை கொடுத்த உங்கள் நட்பிற்கு தலை வணங்குகிறேன். தொடரட்டும் உங்களது இந்த பாணி (பணி)

எல் கே சொன்னது…

nandri kousalya

Unknown சொன்னது…

வாழ்த்துகள்..தொடரட்டும் நல்ல பணி