ஒரு சில வாரங்களுக்கு முன்னாடி தக்குடுகிட்ட இருந்து ஒரு மெயில் வந்துச்சு. டிசம்பர் ஒண்ணு சென்னையில் எனக்கு கல்யாணம். கண்டிப்பா வந்திருங்க ப...
ஒரு சில வாரங்களுக்கு முன்னாடி தக்குடுகிட்ட
இருந்து ஒரு மெயில் வந்துச்சு. டிசம்பர் ஒண்ணு சென்னையில் எனக்கு கல்யாணம்.
கண்டிப்பா வந்திருங்க பாஸ் அப்படின்னு சொல்லி இருந்தான். ஆஹா இன்னொரு விக்கெட்டும்
காலி என்று மனதுக்குள் நினைத்தேன்
நேற்று மாலை திருமண வரவேற்புக்கு போனேன். வேறு
சில வேலைகளும் இருந்துச்சு அதனால் அதை முடித்துவிட்டு அப்படியே மண்டபத்துக்கு
போலாம்னு ஐடியா. இதுக்கு நடுவில் பாலாஜி நானும் சென்னையில்தான் இருக்கேன்.
கல்யாணத்துக்கு வரேன்னு சொன்னான்.
மண்டபத்துக்கு போனப்ப ஆறு மணி இருக்கும்.
தெரிந்த முகம் ஒண்ணு கூட கண்ணில் படலை. சரி எப்படியும் மாப்பிள்ளை வெளில வருவான்
பார்த்துக்கலாம்னு இருந்தேன். அப்பத்தான் கோவிலுக்கு போயிட்டு வருங்கால மனைவி
சகிதமா தக்குடு வந்தான்.
ஒரு நிமிஷம் அவனோட டிரெஸ்ஸை பார்த்து டென்சன்
ஆகிட்டேன். தோஹாவில் போட்ட கோட்டை(பேஸ்புக்கில் அவன் போட்டோ பார்த்த நல்லவங்க நாலு
பேருக்கு இது தெரியும்) இன்னும்
கலட்டமாட்டேனு அடம்பிடிச்சு அதையே போட்டுகிட்டு இருந்தான்.
அவன் இருந்த நிலைமையில் அவனா வந்து நம்மக்கிட்ட
பேசுவான்னு எதிர் பாக்கறது தப்புன்னு , நானே போய் கை கொடுத்தேன். நல்லவேளை
அறிமுகப்படுத்திக்க வேண்டிய அவசியமில்லாமல் யாருன்னு தெரிஞ்சிகிட்டான். அதன் பின்
அவன் அம்மாவிடம் அறிமுகப்படுத்தினான். பதிவர் என்று சொன்னவுடன் அவங்க முகத்தில்
அந்த ஒரு சந்தோசம்.
எவ்ளோ நேரம்
தனியா உக்காந்திருப்பது என்று யோசித்துகிட்டு இருந்தப்ப பாலாஜி போன் பண்ணி
நான் வந்துகிட்டே இருக்கேன்னு சொன்னான். சரி அப்படியே நம்ம ஆர்விஎஸ்க்கு போன்
பண்ணலாமேன்னு பண்ணா , அவர் குடும்ப சகிதமாக அவரோட ரதத்தில் வரதா சொன்னார்.
பாலாஜி வந்த கொஞ்ச நேரத்தில் திராச(TRC) சாரும்
வந்தார்.தக்குடு எப்படியும் அறிமுகப்படுத்தமாட்டான்னு
தெரியும் அதனால அவர் தக்குடுவோட மாமனாரிடம் எங்களை அறிமுகப்படுத்தினார். தக்குடுவுக்கு
அண்ணா மாதிரிதான் இருக்கார் அவர்.
இந்த நேரத்தில்தான் ஒரு அழைப்பு வந்தது. புது
நம்பரா இருந்தது . எடுக்கலாம வேண்டாமான்னு யோசிச்சி எடுத்தா ,கனடாவில இருந்து நம்ம
அப்பாவி தங்கமணி. ஒரு மாதிரி தூக்கக் கலக்கத்தில் இருந்த மாதிரி இருந்தது. ஒரு
வேளை எழுந்தவுடன் போன் பண்ணிட்டாங்கலோன்னு கேட்டா இல்லை இப்பதான் ஆபிஸ் வந்தேன்னு
சொன்னாங்க. அப்ப சரியாதான் இருக்கு . நம்ம அப்பாவி ஆபிசில் எப்ப வேலை
பார்த்திருக்காங்க ??
அவங்கக்கிட்ட பேசிட்டு இருக்கப்பவே , ஆர்வீஎஸ்
எங்களை கண்டுக்காம உள்ள போயிட்டு அங்க இருந்து எங்களை கூப்பிட்டார்.
ஆர்வீஎஸ் வரது தெரிஞ்சோ என்னமோ , அவ்ளோ நேரம்
நடந்த பஜனை முடிந்து ஒரு மாமி தனியா பாட ஆரம்பித்தார். ஆர்வீஎஸ்க்கும்
அவங்களுக்கும் எதோ பகைன்னு நினைச்சேன். அப்புறம் யோசிச்சு பார்த்தா, நம்ம
தக்குடுதான் அவனோட பதிவுல கல்லிடைகுறிச்சி மாமிகளை கணக்கில்லாமல் கிண்டலடிச்சி
இருக்கானே . அதுல பாத்திக்கப்பட்ட எதோ ஒரு மாமியோ இருக்குமோன்னு ஒரு சந்தேகம் இப்ப
வரைக்கும் இருக்கு.
கொஞ்ச நேரம், உக்காந்து பேசிட்டு, இன்றைக்கு
“இல்லறத்தில்” நுழையப்போகும் தக்குடு ப்ரம்மாச்சாரிய இருக்கறப்ப ஒரு வார்த்தை
பேசிடலாம் அப்படின்னு மேடையேறி அவனிடம் ரெண்டு வார்த்தை பேசிட்டு, பையனை கண்
கலங்காம பார்த்துக் கொள்ளசொல்லி அவன் தாலிக் கட்டப் போகும் அந்தப் பெண்ணிடம்
சொல்லிவிட்டு கீழே இறங்கினோம்.
அதிசயமா தக்குடு கோட் போடாம, ஷெர்வானி
போட்டிருந்தான். கோட் இல்லாமல் தக்குடுவை பார்ப்பது அரிது. இதை மிஸ் பண்ணாம போட்டோ
எடுக்கலாமேன்னு பார்த்தா இப்படி ஒரு போஸ் தரான்.
அதன்பிறகு டின்னரை சாப்பிட்டு கிளம்பும் பொழுது
தக்குடு ஒரு வார்த்தை சொன்னான். அதனாலதான் இந்த போஸ்ட். “போட்டோ போடறது ,கமென்ட்
அடிக்கறது” இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொன்னான். மற்றவர்கள் சொல்லி நாம என்னைக்குக் கேட்டிருக்கோம் அதான் இந்த
போஸ்ட் .
அன்புடன் எல்கே
25 கருத்துகள்
//“போட்டோ போடறது ,கமென்ட் அடிக்கறது” இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொன்னான். மற்றவர்கள் சொல்லி நாம இன்னிக்குக் கேட்டிருக்கோம் அதான் இந்த போஸ்ட்//
தக்குடு கல்யாணத்தின் முதல் ரிப்போர்ட்,(FIR),சூப்பர்.
மீதி விவரங்களை மற்றவர்களிடமிருந்து விரைவில் எதிர்ப்பார்க்கலாமா?
அப்பாவி தங்கமணியின் (கற்பனை)போஸ்டைத் தொடர்ந்து உங்கள் நிஜ நிகழ்வு போஸ்ட்! ரசித்தேன்.
இன்னொரு அப்பாவி ரங்கமணியா?!! :-))
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க. (இன்னுமொரு அப்பாவி ரங்கமணியா?தங்கமணியா??? பொறுத்திருந்துதான் பாக்கணும். :))
அப்பாவி தங்கமணியா? ரங்கமணியான்னு போகப்போக தெரிஞ்சுடும் :-))
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
I went to the marriage today. I enquired about you LK and heard that you visited the jaanavaasam yesterday. Nice post and 1st report about our new "appaavi rangamani".
நன்றி நன்றி.
சொன்ன பேச்சைக் கேட்காததுக்கு இன்னொரு நன்றி.
வாழ்க மணமக்கள்!!!!
என் சார்பிலும் வாழ்த்துக்கள்
தக்குடுவைக் காட்டிக் கொடுத்ததற்கு நன்றி!!! வாழ்க மணமக்கள்.
நல்ல பதிவு. தக்குடு ஷேக் மாதிரியே இருக்கார். இன்னிக்கு உங்களையெல்லாம் பார்க்கலாம்னு நினைத்தேன். விட்டுப் போச்சு. மினி ப்ளாக்கர்ஸ் மீட்டிங் நடத்திட்டுக் கிளம்பிட்டோம்.
நல்ல பதிவு. தகவல்கள்லாம் நல்லா இருக்கு.
தக்குடு தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இனிய திருமண வாழ்த்துகள்.
அட்டகாசம் கார்த்திக் :)
தம்பதியினர் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ நல்வாழ்த்துக்கள்.
அருமையான பகிர்வு.
“போட்டோ போடறது ,கமென்ட் அடிக்கறது” இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொன்னான்.//
ஹாஹா, தொடர்ந்து இப்படியே சொன்ன பேச்சைக் கேட்காமல் இருக்க வாழ்த்துகள்.
தொடர
// “போட்டோ போடறது ,கமென்ட் அடிக்கறது” இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொன்னான். மற்றவர்கள் சொல்லி நாம என்னைக்குக் கேட்டிருக்கோம் //
நாராயண, நாராயண!
இன்னுமொரு அப்பாவி ரங்கமணிக்கு! வாழ்த்துகள். கூடவே அவரது தங்கமணிக்கும்!
புதுமண தம்பதிகளுக்கு வழ்த்துக்கள்& ஆசிகள்.
//“போட்டோ போடறது ,கமென்ட் அடிக்கறது” இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொன்னான். //
அப்படிச் சொன்னா கட்டாயம் செய்யணும்னு அர்த்தம்னு கார்த்திக் குக்குத் தெரியாதா என்ன?
டின்னார் நல்லாருந்ததா!
சூப்பர் போஸ்ட் கார்த்தி... :) ஆனா தலைப்பு தான் முரண்பாடு, நியாயத்துக்கு இன்னொரு அப்பாவி தங்கமணினு தானே வந்திருக்கணும், ஐ மீன் மிசஸ் தக்குடுவ சொல்றேன்...:)
தேங்க்ஸ் போட்டோ போட்டதுக்கும்... இதை பாத்து தக்குடு டென்ஷன் ஆகற காட்சிய யாராச்சும் போட்டோ எடுத்து போட்டோ இன்னும் நல்லா இருக்கும்...ஹா ஹா ஹா... என்னா ஒரு வில்லத்தனம்னு தக்குடு சொல்லபோறது இப்பவே ஞான திருஷ்டில தெரியுது..:)
என்னது நான் தூங்கிட்டே பேசினேனே... ச்சே ச்சே, என் சுபாவமே அப்படி தான் ரெம்ப சத்தமா பேச மாட்டேன், ஏன்னா நான் ஒரு அப்பாவி யு சீ...:)))
(என்கிட்டயேவா...:)
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!! நம்ம தக்குடுவா அது,ம்ஹூம் கோட்டு சூட்டுனு கலக்கல்....
அப்பாவி ரங்கமணிக்கு... திருமண வாழ்வு இனிதாக அமைய வாழ்த்துக்கள்!!!
புதுமண தம்பதியினருக்கு என் வாழ்த்துக்கள்.
நீண்ட நாட்களுக்கு பின் வந்த பகிர்வு...தொடர்ந்து எழுதலாமே கார்த்திக்...! :)
நல்ல ரிப்போர்ட்!! மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!!
வாழ்த்து சொன்ன எல்லா நல்ல உள்ளங்களுக்கும் ரொம்ப நன்னியோ நன்னி! நல்லா இருங்கடே எல்லாரும்! :)
கருத்துரையிடுக