Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

இப்படி ஒரு பிரதமர் தேவையா ??

* காமன்வெல்த் போட்டிகளில் ஊழல்   * ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு  *  ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்டவரையே  "மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு...

* காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் 

 * ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு 

*  ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்டவரையே "மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையராக நியமித்தது 

*  ஆதர்ஷ் ஊழல் 

* சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயரை வெளியிட மறுப்பது 


இதெல்லாம் இது வரை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி செய்த சாதனைகள். இன்னும் நெறைய இருக்கும். ஆனால் இது வரை வெளியில் வந்தது இவ்வளவு தான். வெளில வராம எவ்வளவு இருக்கோ தெரியலை.

ஒவ்வொருமுறையும் சுப்ரீம் கோர்ட் தலையிட்டப் பிறகுதான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குது . அப்புறம் மத்திய அரசாங்கம் எதுக்கு ,ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தேர்தல்  எதுக்கு ? வெட்டி செலவு பண்ணிக்கிட்டு .

அப்புறம் பிரதமர்னு ஒருத்தர் இருக்கார் பாருங்க. அவர் சொல்றதைலாம் கேட்டா ரொம்ப அப்பாவியோன்னு தோணும் . ஆனால் பாருங்க, அதெல்லாம் வெறும் நடிப்பு . நாட்டின் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு கமிஷனரா ஒருத்தரை நியமிக்கறாங்க. அவர் மேல ஏற்கனவே ஊழல குற்றசாட்டு இருக்குனு எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சொல்றாங்க. அப்ப பிரதமரா இவர் என்ன பண்ணியிருக்கணும் ? வேற யாரையாவது நியமிச்சு இருக்கணும். சரி விடுங்க இவருக்குதான் அமைச்சர்கள் என்ன பண்றாங்கன்னு கூட தெரியாதே . இவர் நியமனத்தை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போடறாங்க . அப்பவாது ,பதவி விலக சொல்லி இருக்கலாம் . அப்பவும் பண்ணலை. இப்ப கடைசியா கோர்ட் சொல்லிடுச்சி , தாமஸ் பதவி  நியமனம் செல்லாதுன்னு . இப்ப வேற வழி இல்லை . அவர் பதவியை விட்டு இறங்கியாகனும். 

அடுத்தது கருப்பு பண விவகாரம். நேத்து சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை பார்த்து நாக்கை புடுங்கற மாதிரி கேள்வியை கேட்டு இருக்கு . இப்பவும் இவர் அமைதியா இருக்கார் . நமக்கு இப்படி ஒரு பிரதமர் தேவையா ?? 

இதைவிடக் கொடுமை, காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளான கல்மாடி இன்னும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரா தொடர்கிறார் .  எதிக்கட்சிகள் வாயை அடைக்க வேண்டும் என்று அவரிடம் இருந்த ஒரு பதவியை மட்டும் பிடுங்கி விட்டார்கள். இதில் பொருட்கள் சப்ளை செய்த சில கம்பெனிகளுக்கு பல கோடி ரூபாய் தரவேண்டி உள்ளது. 

இதெல்லாம் பிரதமரிடம் கேட்டால், எனக்கு எதுமே தெரியாதுன்னு அப்பாவி மாதிரி பதில் சொல்லுவார். எதுமே தெரியலைன்னா பதவி விலகிட்டு போகவேண்டிதானே , எதுக்கு பிரதமரா இருக்கார் ? இது வரை பிரதமராக இருந்தவர்களில் இவர் அளவுக்கு அந்தப் பதவியை அவமானப்படுத்தியவர்கள் எவரும் இல்லை. இதுவரை ஜனாதிபதி பதவி மட்டுமே ரப்பர் ஸ்டாம்ப் பதவியா இருந்தது., ஆனால் ,இவரோ இல்லை இவருக்கு பதில் வேறு யாரவது காங்கிரஸ் எம்பியோ இந்தப் பதவியில் இருந்தால் இந்தியப் பிரதமர் பதவியும் ரப்பர் ஸ்டாம்ப் பதவியாகி விடும். 

 தேர்தல் வருகிறது. சிந்தியுங்கள் இப்படிப்பட்ட கொள்ளைக்காரர்களுக்கும், அது தெரிந்தும் எதையும் செய்யாமல் கள்ளமௌனம் சாதிக்கும் நபர்களுக்குமா ஓட்டுப் போடப் போகிறீர்கள் ?? இது நாடாளுமன்றத் தேர்தல் இல்லைதான். ஆனால் இப்பொழுது இவர்களுக்கு அடி விழுந்தால்தான் இனியாவது ஒழுங்காக இருப்பார்கள். சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் .டிஸ்கி : இந்தப் பதிவுக்கு மட்டுறுத்தல் உண்டு.  பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு விஷயம்.இங்கு ஊழல்தான் விஷயம். அதைப் பற்றி மட்டும் பேசவும். தேவை இல்லாத விஷயங்களில் நுழைத்து பின்னூட்டம் இட்டால் அது வெளியிடப்படாது.

அன்புடன் எல்கே 

39 கருத்துகள்

settaikkaran சொன்னது…

இப்படியொரு பிரதமர் "நமக்குத்" தேவையா-னு கேட்டிருக்கணும். :-)
மேலிடத்துக்கு அப்படியொரு பிரதமர்தான் தேவையாம்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>டிஸ்கி : இந்தப் பதிவுக்கு மட்டுறுத்தல் உண்டு. பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு விஷயம்.இங்கு ஊழல்தான் விஷயம். அதைப் பற்றி மட்டும் பேசவும். தேவை இல்லாத விஷயங்களில் நுழைத்து பின்னூட்டம் இட்டால் அது வெளியிடப்படாது.

செம மாண்டுஇ போல

கோலா பூரி. சொன்னது…

இவ்வளவு நாளா,பிரதமர் பதவின்னா, ஒரு மறியாதைப்பட்ட பதவின்னு நினைச்சுகிட்டு இருந்தோமே. ஆனா இப்ப அந்தப்பதவில அம்ருகிறவங்களும் ரப்பர்ஸ்டாம்ப்தானா? அப்பா வேணவே வேணாம் தான்.

dheva சொன்னது…

அதாவது ஒரு படிச்ச நல்ல பிரமரைக் கூட இந்த அரசியல் எப்படி கைக்கூலிய மாத்தி உட்கார வச்சுடுது பாத்தீங்களா...

ஆதங்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

Vidhya Chandrasekaran சொன்னது…

எதுமே தெரியலைன்னா பதவி விலகிட்டு போகவேண்டிதானே , எதுக்கு பிரதமரா இருக்கார் ? இது வரை பிரதமராக இருந்தவர்களில் இவர் அளவுக்கு அந்தப் பதவியை அவமானப்படுத்தியவர்கள் எவரும் இல்லை\\

சாட்டையடி...

ஜெய்லானி சொன்னது…

//இதெல்லாம் பிரதமரிடம் கேட்டால், எனக்கு எதுமே தெரியாதுன்னு அப்பாவி மாதிரி பதில் சொல்லுவார் //

ஹலோ...நீங்க எங்கே ஆப்பிரிகாவிலயா இருக்கீங்க ..ஒரு அப்பாவியை போட்டு இந்த அடி அடிக்கிறீங்க .அவர் என்ன பாவம் செய்தார்... இத்தாலி அம்மாகிட்டே கேக்கவேண்டியதை ஒரு புள்ள பூச்சிகிட்ட கேக்குரீங்க :-))

Chitra சொன்னது…

இதுவரை ஜனாதிபதி பதவி மட்டுமே ரப்பர் ஸ்டாம்ப் பதவியா இருந்தது., ஆனால் ,இவரோ இல்லை இவருக்கு பதில் வேறு யாரவது காங்கிரஸ் எம்பியோ இந்தப் பதவியில் இருந்தால் இந்தியப் பிரதமர் பதவியும் ரப்பர் ஸ்டாம்ப் பதவியாகி விடும்.

.....ஜனாதிபதி அப்படி இருக்க, மக்கள் ஓகே சொன்னாங்க.... அப்போவே கண்டுக்காமல் விட்டதுதான், இப்போ பிரதமர் பதவிக்கும்.....ம்ம்ம்ம்..... :-(

bandhu சொன்னது…

இப்படியொரு பிரதமர் கண்டிப்பாக மக்களுக்கு தேவையில்லை. ஆனா இப்ப மக்களை பத்தி எவன் கவலை படறான்? கட்சிக்கும் தொழிலதிபர்களுக்கும் இணக்கமான பிரதமர் தான் தேவையா இருக்கு. அதுக்கு தான் இந்த பிரதமர் லாயக்கு!

middleclassmadhavi சொன்னது…

உண்மையில் அரசை நடத்துபவர்களுக்கு இப்படி ஒரு பிரதமர் தேவைப்பட்டுத் தான் நியமித்திருக்கிறார்கள்.
அப்ப மாற வேண்டியது?..

raji சொன்னது…

ஊர்ப்பக்கம் பொம்மலாட்டம் காமிப்பாங்க
பாத்துருக்கிங்களா எல் கே சார்?

அதுல வர பொம்மை மாதிரிதான் இப்போதைய பிரதமரும்.

பிரதமர் பதவி பொம்மாலாட்டமாயிடுச்சு

! சிவகுமார் ! சொன்னது…

இத்தனை முறை உச்சநீதிமன்றம் குட்டியும் மௌனம் சாதிப்பது தீவிரவாதத்தை விட கொடுமையானது

RVS சொன்னது…

நாம எப்போதுமே வெள்ளைக்காரங்க சொன்னா அப்படியே கேப்போம். ;-))))))

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

ஒட்டு போட்டு ஒரு மணி நேரத்தில் என்ன இஷ்டமோ அப்படி மாற்றிக்கொள்ளும் திறமைசாலிகள் இருக்க ஒரு மாதத்திற்கு பிறகுதான் ரிசல்ட் என்றால் .........

Unknown சொன்னது…

அந்தாளு நம்ம நாட்டை மொத்தமா விக்காமே போகமாட்டான் ..

சுசி சொன்னது…

நாளுக்கொரு புது வீடு??

:)

பாலா சொன்னது…

அன்னை பிரதமரானால் பஞ்சாயத்து வரும். அதான் இப்படி ஒரு பிரதமர். கவலை படாதீர்கள். இளைஞர் சிங்கம் ஒன்று கூடிய விரைவில் தயாராகி வருகிறது.

எல் கே சொன்னது…

@சேட்டை

அது என்னவோ சரிதான்,. ஆனால் நம்மக்கு வேண்டாம்

எல் கே சொன்னது…

@செந்தில்
என்ன ஆச்சு ??

//செம மாண்டுஇ போல/// என்ன அர்த்தம் சித்தப்பு

எல் கே சொன்னது…

@கோமு

இப்படிப்பட்ட ஆளுகளை தேர்வு செய்தால் அதுதான் நிலை

எல் கே சொன்னது…

@தேவா
படிச்சவன் தப்பு பன்னமாட்டான்கர மன நிலை இது. மன்மோகனும் குற்றவாளிதான். அவருக்கு தெரியாமல்/சம்மதம் இல்லாம இவ்வளவு நடக்க வாய்ப்பு இல்லை

எல் கே சொன்னது…

@வித்யா

நன்றி

எல் கே சொன்னது…

@ஜெய்
தேவாக்கு சொன்ன பதில்தான். அவர் சம்மதம்/உண்டபாடு இல்லாமல் இவ்வளவும் நடக்காது

எல் கே சொன்னது…

@சித்ரா
அதே. இனியும் அமைதி காத்தல் சரியல்ல

எல் கே சொன்னது…

@பந்து

அது சரி

எல் கே சொன்னது…

@மாதவி
மக்களிடம் சரியானவர்களை தேர்வு செய்யும் விழிப்புணர்வு வரவேண்டும்

எல் கே சொன்னது…

@ராஜி

கொஞ்சம் வித்தியாசம். இந்த பொம்மைக்கு எல்லாமும் தெரியும். இதன் பங்கும் உண்டு

எல் கே சொன்னது…

@சிவகுமார்

அவர் மௌன விரதமாம்

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்
அதே அதே

எல் கே சொன்னது…

@திருமதி

அனைவருக்கும் இந்த சந்தேகம் உண்டு

எல் கே சொன்னது…

@செந்தில்
தலைவரே பேரம் படியளையாம் இன்னும்

எல் கே சொன்னது…

@சுசி

இனி மாறாது

எல் கே சொன்னது…

@பாலா

அது காகித சிங்கம். அது எங்க போனாலும் கட்சி டெபாசிட் காலி ஆகிடும்

அப்பாவி தங்கமணி சொன்னது…

I stopped following Indian Politics too closely a little while ago, not becos' I'm not in India, but it's nothing but a reality show these days...

You punched the nail and it makes perfect sense. Hope it brings some sense in some atleast. Good post Karthik....:-)

அப்பாவி தங்கமணி சொன்னது…

Template change again???...:))

GEETHA ACHAL சொன்னது…

puthu templateah....superb...

ஹுஸைனம்மா சொன்னது…

பெரிய பதவிகள், பொறுப்புகளுக்கு வந்துவிட்டாலே கைகட்டப்பட்டுவிடுகிறது. திறமையானவர் என்றாலும் பலதையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலையில் கொண்ட அனுபவங்கள் பயனற்றுப் போய்விடுகின்றன. முன்னாள் பிரதமர் திரு.வாஜ்பாயியும் இப்படித்தானே ஒரு சந்தர்ப்பத்தில் கண்ணீர் விட்டார், தன் கையாலாகாத்தனத்தை நினைத்து.

ஸ்ரீராம். சொன்னது…

பின்னொரு சந்தர்ப்பத்தில் சோனியா சுயசரிதை எழுதும்போது தனக்கு அடங்கி இந்தியத் தலைவர்கள் எப்படியெல்லாம் வாய் மூடி இருந்தார்கள் என்று எழுதக் கூடும். ரொம்ப நேர்மையானவர் என்று சொல்லப் பட்டவரையே பெயரைக் கெடுத்த பெருமை தனக்குண்டு என்று எழுதலாம். மக்களுக்கும் இப்போதெல்லாம் ஆயிரம் எல்லாம் அலுத்துப் போய் லட்சம் கோடி ஊழல் என்றால்தான் சற்றே நிமிர்ந்து பார்க்கிறார்கள். அதுவும் அதோடு சரி...!

தி. ரா. ச.(T.R.C.) சொன்னது…

@Lk Today's PM 's joke is super. he did not know that there was case by CBI on Mr Joseph. the procedure of appointment of such post are first cabinet committee should clear. then PM secretariate should clear it. Then the file go to CVC and they have to clear that there is no case against the person concerned. then only gazattee notification will come.. all these things will brought to the knowledge of the PM.