Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Saturday, April 12

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News
latest

சொந்த மண் X

சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த நாமக்கல் இன்று நாமக்கல் மாவட்டத்தின் தலைமை இடமாய் இருக்கிறது. சேலத்தில் இருந்து திருச்சி செல்லும் வழி...

சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த நாமக்கல் இன்று நாமக்கல் மாவட்டத்தின் தலைமை இடமாய் இருக்கிறது. சேலத்தில் இருந்து திருச்சி செல்லும் வழியில் 55 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து செல்வதாய் இருந்தால் ,சேலம் அல்லது ஈரோடு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் நாமக்கல்லை அடையலாம். சென்னையில் இருந்து நேரடி ரயில் வசதி இல்லை.


நாமக்கல் லாரி போக்குவரத்திற்கும், கோழி பண்ணைகளுக்கும் புகழ் பெற்றது. அதேபோல் இங்குள்ள நரசிம்மர் கோவிலும் ஆஞ்சநேயர் கோவிலும் மிகப் புகழ் பெற்றவை.

கோவிலுக்கு செல்ல, சேலம் ரோட்டில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஐந்து நிமிட நடையில் கோவிலை அடையலாம். நரசிம்மர் கோவில், பல்லவர் கால சிற்பக் கலைக்கு மிக சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.நரசிம்மரை வழிபாடும் முன் நாமகிரித் தாயாரை வணங்கித்தான் செல்லவேண்டும். கணிதமேதை ராமானுஜர் நாமகிரித் தாயாரின் பரம பக்தர். இங்கு தாயாருக்கு ஒரு காலத்தில் மூக்குத்திக் காணிக்கை அதிக அளவில் வருமாம்(இது என் தந்தை சொல்லி கேட்டது ).

அதேபோல் மனநலன் குன்றியவர்கள் தொடர்ந்து தாயாரை வழிபட்டால் அவர்களது மனநலன் சரியாகும் என்றும் சொல்லுகிறார்கள். தாயாரின் முக அழகு காண கண்கோடி வேண்டும். தாயாரை வணங்கி உள்ளே சென்றால் நரசிம்மர் ஹிரண்ய கசிபுவை வதம் பண்ணிய கோலத்தில் அமர்ந்து இருக்கிறார். இந்த சிலையை மூலவரை செதுக்கிய சிற்பியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரது விரல்களில் ரத்தம் தொய்ந்து இருப்பது போன்று மிக தத்ரூபமாக செதுக்கி இருக்கிறார். முன்பு மின்சார விளக்குகள், கருவறைகளில் உபயோகிக்கும் முன், விளக்கொளியில் நரசிம்மரை பார்த்தாலே பயமாக இருக்கும். அப்படி ஒரு சிற்பக் கலை அற்புதம் இந்தக் கோவில்.

நரசிம்மர் கோவிலுக்கு நேர் எதிரே, அவரை சேவித்துக் கொண்டு நின்று கொண்டு நமக்கு அருள்பாலிப்பவர் ஆஞ்சநேயர். இரு கரம் குவித்து நரசிம்மரை வணங்கியப் படி தனக்கு மேல் எந்த வித கூரையும் இல்லாமல், வானமே கூரையை வீற்று இருக்கிறார். மேல் கூரை கட்ட எடுத்த முயற்சிகள் வீணாக போய்விட்டன. இருமுறை முயற்சித்து கட்டியும் அவை இடிந்து விழுந்து விட்டன. எனவே பின் முயற்சி எடுக்கவில்லை.

சேலத்தில் இருந்த வரை, ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிறும் இங்குதான் இருப்பேன். அன்று ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேகம் பூஜை இருக்கும்.

நாமக்கல் எனக்கு மிகப் பிடிக்கும் . அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று எனது இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயர் கோவில் இங்கு உள்ளது. இரண்டு இது எனது தந்தை பிறந்த மண். அவர் பிறந்த சமயத்தில் சேலத்தில் ப்ளேக் நோய் அதிக அளவில் இருந்ததால் நாமக்கல்லில் இருந்த  உறவினர் வீட்டில் பிறந்தார்.

டிஸ்கி : படங்கள் உதவி கூகிள்

அன்புடன் எல்கே

23 கருத்துகள்

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல பகிர்வு.

நாமக்கல் ஆஞ்சநேயர் அழகாகக் காட்சி தருகிறார்.

பெயரில்லா சொன்னது…

தகவல்கள் நன்று..
ஜெய் ஆஞ்சநேயா!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

தகவல்களுக்கு நன்றி, படங்கள் அழகாய் இருக்கிறது!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல தவல்கள்.. சிறப்பாக சொல்லியிருகிறீர்கள்...

Asiya Omar சொன்னது…

தொடர்ந்து எழுதுங்க,அருமையாக இருக்கு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பரே. நாமக்கல் பற்றிய விஷயங்கள் அருமை. ஒன்றிரண்டு முறை நாமக்கல் சென்று இருக்கிறேன். மீண்டும் செல்ல வேண்டும். பார்க்கலாம்!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அழகான ஆஞ்சநேயர்.

பவள சங்கரி சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள் எல்.கே. பிராக்டிகலா நல்லா எழுதுறீங்க , வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் சொன்னது…

நாமக்கல்ல ஆஞ்சினேயர் கோவிலுக்கு மட்டும் போயிருக்கேன்... மத்த விஷயங்கள் எதுவும் பார்த்தது இல்லை

செல்வா சொன்னது…

///ஆஞ்சநேயர் கோவில் இங்கு உள்ளது.//

நானும் கேள்விப்பட்டிருக்கேன் அண்ணா .,
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பற்றி .!!

எல் கே சொன்னது…

@ராமலக்ஷ்மி

நன்றி மேடம்.

எல் கே சொன்னது…

@பாலாஜி
நன்றி

எல் கே சொன்னது…

@சை.கொ.ப

நன்றி

எல் கே சொன்னது…

@வ்ரஐம்பய
நன்றி

எல் கே சொன்னது…

@ஆசியா
நன்றி

எல் கே சொன்னது…

@வெங்கட்
கண்டிப்பா போயிட்டு வாங்க

எல் கே சொன்னது…

@சாரல்
நன்றி

எல் கே சொன்னது…

@நித்திலம்
நன்றி

எல் கே சொன்னது…

@அருண்
நரசிம்மரையும் இவரையும் தவிர்த்து வேறு எதுவும் இல்லை

எல் கே சொன்னது…

@செல்வா
முடிஞ்சா போய்ட்டு வா

எல் கே சொன்னது…

நன்றி சுசி

vanathy சொன்னது…

nice post!

எல் கே சொன்னது…

@வானதி

நன்றி