Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

வீடு வாடகைக்கு

நம்ம முன்னோர்கள் தீர்க்கதரிசிங்க. அப்பவே சொல்லி வச்சிட்டாங்க ,"வீட்டை கட்டிப் பார், கல்யாணத்தை பண்ணிப்பார்". ஆனால், இப்ப வீடு வாடக...

நம்ம முன்னோர்கள் தீர்க்கதரிசிங்க. அப்பவே சொல்லி வச்சிட்டாங்க ,"வீட்டை கட்டிப் பார், கல்யாணத்தை பண்ணிப்பார்". ஆனால், இப்ப வீடு வாடகைக்கு கிடைக்கறதே பெரிய விசயமா இருக்கு, இதுல எங்க புது வீடு கட்டறது??

இப்ப எந்த எரியால வீடு வேணும்னாலும், பத்து மாச வாடகை அட்வான்சா  தரணும். இது என்ன சட்டம்னு தெரியல . சரி இதையாவது ஒத்துக்கொள்ளலாம். வருசத்துக்கு ஒரு முறை வாடகைய அதிகரிக்கறாங்க. ஆபிஸ்ல வருசத்துக்கு ஒரு முறை சம்பளம் ஏறுதோ இல்லையோ இங்க வாடகை ஏறிடும். அப்படி ஏத்த எதாவது உருப்படியா காரணம் சொல்றாங்களா அதுவும் இல்லை . கேட்டா , நீங்க வந்து ஒரு வருஷம் ஆச்சு, அதனால ஏத்தறோம். என்னையா காரணம் இது?  இவங்களுக்கு அந்த ஒரு வருசத்துல ஏதாவது அதிகபட்ச செலவு இருக்கானு பார்த்தா  அப்படி எதுவும் இல்லை. அப்புறம் எதுக்கு ஏத்தணும்?


அதேமாதிரி, நீங்க காலி பண்ணிட்டு போனா  அடுத்து அங்க குடி போறவங்க நீங்க கொடுத்ததை விட அதிகமாகத்தான் தரணும் . இதுவும் எழுதப் படாத விதி.
அப்புறம் நீங்க குடிபோறது அபார்ட்மென்ட் வீடா இருந்த சரி, இல்லாட்டி, உங்களுக்குன்னு தனி மீட்டர் இருக்காது, சப் மீட்டர்தான் இருக்கும், ஒரு யூனிட்டுக்கு குறைந்தபட்சம் மூணு ரூபால இருந்து அஞ்சு ரூபா வரைக்கும் கொடுக்க வேண்டி இருக்கும்.

அதுக்கப்புறம், மாசா மாசாம், ஒரு தொகையை பராமரிப்பு தொகையா வாங்குவாங்க. இது இல்லாம, ஒரு சில இடத்துல, முறை வாசல்னு கோலம் போடறதுக்கு ஒரு நூறு ரூபா ..(நாங்களே போட்டுப்போம்னு சொன்னாலும் கேக்க மாட்டாங்க ). அப்படி இப்படின்னு, நீங்க வாங்கற சம்பளத்துல கணிசமான ஒரு பகுதி இவங்களே புடுங்கிடுவாங்க.




முன்பெல்லாம், கல்யாணமாகாதவர்களுக்கு வீடு கிடைப்பது கடினம். இன்னிக்கு நிலைமை, தலைகீழ். கல்யாணமாகாத , வேலைக்கு போறவங்களா இருந்தா சீக்கிரம் வீடு கிடைச்சிரும். குடும்பமா இருக்கவங்களுக்குதான் வீடு கிடைகிறது கஷ்டமான ஒரு விஷயமா இருக்கு.



அப்புறம், இந்த தரகர்கள் இருக்காங்களே , அவங்களோட தொல்லை தாங்காது. அவங்கதான் இன்னிக்கு வீடு வாடகை தாறுமாறா ஏறி இருக்க முக்கிய காரணம். ஒரு சில பகுதில, இவங்க அனுமதி இல்லாம யாரும் வீட்டை பார்க்கக் கூட முடியாது. அந்த அளவுக்கு இவங்க செல்வாக்கு இருக்கும். நீங்க இவங்க காமிக்கற வீட்டுக்கு குடி போறதா இருந்தால், அவர்களுக்கு ஒரு மாத வாடகை கமிஷன் தொகையா தர வேண்டி இருக்கும். அதே மாதிரி, வீட்டு உரிமையாளரிடம் ஒரு தொகையை வாங்கிடுவாங்க.

அரசாங்கம், இந்த வீட்டு தரகர்கள் விஷயத்திலாவது தலையிட்டு இதை சரி செய்யணும்.

டிஸ்கி : என்னடா இவன், திடீர்னு இப்படி வீட்டை பத்தி எழுதரான்னு யோசிக்கறவங்களுக்கு, இதை நான் எழுதி வச்சி ரொம்ப நாளா ஆச்சு. போடாம இருந்தேன். இன்னிக்கு ரெண்டு வீடு பார்த்தேன். அதன் விளைவு இந்தப் பதிவு.

 

48 கருத்துகள்

Kousalya Raj சொன்னது…

நண்பருக்கு நல்ல அனுபவம் போலிருக்கே...! தேவையான பதிவுதான்!!

எல் கே சொன்னது…

@கௌசல்யா

ஆமாம். நல்ல அனுபவம் இருக்கு வீடு தேடி

Harini Nagarajan சொன்னது…

nallla pathivu! intha idai tharagargal yentha thurai la thaan illa?? ivangala ozhichu kattanum muthalla. vitta konja naalla ivangalukkunu oru sangam aarambichaalum aarambippaanga.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ரொம்ப நொந்து போயிட்டீங்க போலிருக்கு. மும்பையில் அக்ரீமெண்ட் பதினொரு மாசத்துக்குத்தான். அதுவுமில்லாம ரெண்டு மாச வாடகையை கமிஷனா ரெண்டு பக்கமும் வாங்கிடுவாங்க. சில அபார்ட்மெண்ட்களில் செக்யூரிட்டியா இருக்கிறவங்களே, அந்த பில்டிங்கின் தரகரா இருக்கிறதுமுண்டு.சென்னை பரவாயில்லை மாதிரி இருக்கா :-))))

எல் கே சொன்னது…

@சாரல், இங்கயும் அந்தக் கதைதான். என்ன இந்த அக்ரிமென்ட் வீடு ஓனரைப் பொறுத்து மாறும்


@ஹரிணி
அவங்களுக்கும் சங்கம் இருக்குனு நினைக்கிறன்

geetha santhanam சொன்னது…

வாடகை வீடு கிடைப்பதற்குப் பெரும் கஷ்டம்; கிடைத்தபின் உரிமையாளரால் பெறும் கஷ்டம்; அப்பப்ப வீடு மாறவேண்டிய நிர்பந்தத்தால் வரும் கஷ்டம்;---அதனால் கடனை வாங்கியாவது சொந்த வீடு வாங்கிடுங்க. ---கீதா

Unknown சொன்னது…

சென்னையில் இப்ப பரவாயில்லை IT பசங்க நல்ல வருமானம் பார்த்த சமயம் இங்க வீடு பார்ப்பது குதிரைகொம்பு..
ஒரு காலத்தில் கல்யாணம் ஆகாதவர்களுக்கு வீடு கொடுக்க தயங்கியவர்கள் நிறைய வாடகைக்காக அவர்களுக்குதான் முன்னுரிமை கொடுத்தனர்.
பொருளாதார வீழ்ச்சிக்குப் பின் நிலைமை கொஞ்சம் சீரடைந்துள்ளது..

எல் கே சொன்னது…

@கீதா

சரிதான். ஆனால் அதுல இன்னொரு பிரச்சனை இருக்கு, அதை ஒரு பதிவா போடறேன் .


@செந்தில்

இல்ல நண்பா. இப்ப பழையப்படி ஆகிடுச்சி. ரொம்ப கஷ்டமா இருக்கு.

பெயரில்லா சொன்னது…

//குடும்பமா இருக்கவங்களுக்குதான் வீடு கிடைகிறது கஷ்டமான ஒரு விஷயமா இருக்கு.//

இதெல்லாம் ஒரு கஷ்டமா. எனக்கு இன்னும் கல்யாணமாகலைன்னு சொல்லி ஒரு வீடு எடுங்க :)
தங்க்ஸ் கிட்ட அடி வாங்கினா நான் பொறுப்பில்லை

dheva சொன்னது…

பத்து மாச வாடகை அட்வான்ஸா? என்னங்க சொல்றீங்க.. ஷாக்கா இருக்கு பாஸ்!

cheena (சீனா) சொன்னது…

எல்லா இடமும் இப்படித்தான் - 10 மாச அட்வான்ஸ் தான் - கமிஷன் 1 மாசம் - மெயிண்டனன்ஸ் கொஞ்சம் - அய்யோ - ஏன் கேக்குறீங்க போங்க - கஷ்டம் தான்

நல்லதொரு இடுகை '
நல்வாழ்த்துகள் பாகீரதி
நட்புடன் சீனா

எல் கே சொன்னது…

@அம்மிணி

சரியில்லை. நான் பாவம்

@தேவா

இதுக்கே இப்படியா

எல் கே சொன்னது…

@சீனா

முதல் வருகைக்கு நன்றி சார். நீங்க சொல்றது சரிதான்.

சிறு திருத்தம். பாகீரதி என் அன்னையின் பெயர் அதைதான் என் வலைபூவிற்கு வைத்துள்ளேன். எனது பெயர் கார்த்திக் (LK)

கோமதி அரசு சொன்னது…

சென்னையில் வாடகைக்கு வீடு கஷ்டம் தான்.இதனால் தான் :

‘எலி வளை என்றாலும் தனி வளை’ என்று

சொந்த வீடு கனவு வலையில் மாட்டிக்கொள்கிறார்கள்.

veeramanikandan சொன்னது…

@ harini sree : already avangalukku sangam irukku...

Riyas சொன்னது…

கல்யாணம் பண்றதெல்லாம் ஈஸிங்கோ... வீடு கட்றதுதான் ரொம்ப கஷ்டம்..

ஆனா நான் இன்னும் கல்யாணமும் கட்டல்ல வீடும் கட்டல்ல.. ஹி

vanathy சொன்னது…

எல்கே, வீடு தேடி களைத்த அனுபவமோ. இங்கே அமெரிக்காவில் மட்டும் என்ன வாழுதாம்? ஒவ்வொரு வருடமும் வாடகையை ஏத்திப் போடுவாங்க.

பத்மா சொன்னது…

அட போங்கப்பா ...வாடகைக்கு வீட்ட குடுத்துட்டு நான் படற பாடு எனக்கு இல்ல தெரியும் .!ரெண்டு பக்கமும் கஷ்ட நஷ்டங்கள் இருக்கு ...

சாமக்கோடங்கி சொன்னது…

இடைத் தரகர்களால் தான் இந்த நாடே அழிந்து கொண்டிருக்கிறது.. வேலைக்கு ஆட்கள் செர்ப்பதானாலும் சரி, விவசாயிகளின் உழைப்பை சந்தைக்கு கொண்டு செல்வதானாலும் சரி, எந்த விதமான வணிகமானாலும் சரி.. விற்பவர், வாங்குபவர், இவர்கள் இரண்டு பேருக்கும் கிடைக்கும் லாபத்தை விட, குறைவான வேலையைச் செய்து விட்டு இவர்கள் அடையும் லாபம் அதீதமானது.. அதாவது உழைக்காமல்பலனை அனுபவிப்பது.. எந்த விஷயத்திலும் தரகர்களை நியமிக்கவே கூடாது..

எல் கே சொன்னது…

@கோமதி

அதுக்கும் நான் முயற்சி பண்ணிட்டேன்.. எனக்கு வங்கிக் கடன் தரமாட்டேன்னு சொல்றாங்க

எல் கே சொன்னது…

@ரியாஸ்

கல்யாணத்துக்கு முன்னாடி வீடு வாங்கிடுங்க

@வானதி

அங்கயும் இதே கதையா ???

எல் கே சொன்னது…

@பத்மா

அப்பா எனக்கு வாடகைக்கு கொடுங்க.. நான் ஒழுங்கா வீட்டை பார்த்துக்கறேன்

@பிரகாஷ்
சரியா சொன்னீங்க.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

எங்க ஊருக்கு குடி வந்திருங்க...சேலம்
ஆத்தூரில் 5 வருடமாக வாடகை ஏத்தாமல் ஒரே வாடகைதான் வாங்குறேன்.எப்ப வர்ரீங்க கார்திக்

எல் கே சொன்னது…

@வெங்கட்

நம்ம ஊர்னு சொல்லுங்க.. நான் சேலம் பாஸ்..

சௌந்தர் சொன்னது…

நல்ல பதிவு எங்களுக்கு இந்த அனுபவம் இருக்கு

Menaga Sathia சொன்னது…

நல்ல பதிவு!! எங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கு.இதுல உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்ன்னு வேற கேட்பாங்க.நாங்க 5 பேர்.5 பேர்ன்னு சொன்னதும் வீடு இல்லைன்னு சொல்லிடுப்வாங்க.எங்க பெற்றோர் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது...இப்போ கடவுள் அருளால் நல்லாயிருக்கோம்.அதெல்லாம் கொடுமையான காலங்கள்....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

நீங்க இப்படி! ஆனா, நாங்க வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு, வயிற்றில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கோம்! இக்கரைக்கு அக்கரை பச்சை!

பெயரில்லா சொன்னது…

அட கொடுமையே. இதுக்கு நுகர்வோர் சட்டம் என்ன சொல்லுது?

ஜெயந்தி சொன்னது…

நல்லா அனுபவிச்சு(ட்டு) சொல்லியிருக்கீங்க. ஆணி அடிக்கக்கூடாது ஒரு கண்டிஷனும் உண்டு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

கோலம் போட நூறு ரூபாயா... ஆஹா ... பேசாம இந்த பொட்டி தட்றத விட்டுட்டு இந்த பிசினஸ் செய்யலாம் போல இருக்கே... நல்ல அனுபவம் தான் போங்க...

தெய்வசுகந்தி சொன்னது…

வாடகை ஏத்தற பிரச்சனை எல்லா ஊருலயும் இருக்கு போல.

எல் கே சொன்னது…

@சௌந்தர்

:)

@மேனகா

இப்ப அப்பாடி இல்ல, எதனை பேரோ அதுக்கு எத்த மாதிரி வாடகை ஜாஸ்தி

@ராமமூர்த்தி

சார், ஆனால், உங்களை மாதிரி கவலைப்படும் அல்லது கஷ்டப்படும் உரிமையாளர்கள் கம்மி

எல் கே சொன்னது…

@அனாமிகா
அப்படினா

@ஜெயந்தி

ஆமாமா.

@அப்பாவி

ஆமாம். மூன்று வீடுகள் இருந்தால் அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் சம்பாதிக்கலாம்

ஸ்ரீராம். சொன்னது…

உண்மையான பதிவு...இன்னும் கூட நிறையச் சொல்லலாம்...ஆணி அடிக்கக் கூடாது, ராத்திரி இத்தனை மணிக்கு மேல வரக் கூடாது, லைட் எரியக் கூடாது, வீட்டுல இத்தனை பேர்தான் இருக்கணும் ....இத்யாதி இத்யாதி..

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம் அண்ணா

//ராத்திரி இத்தனை மணிக்கு மேல வரக் கூடாது, லைட் எரியக் கூடாது, வீட்டுல இத்தனை பேர்தான் இருக்கணும் /

ஆமாம் . சரிதான்

அன்புடன் நான் சொன்னது…

ரொம்மத்தான் படுத்துறாங்க....

kavisiva சொன்னது…

வீடு வாடகைக்கு கிடைக்கிறது எவ்வளவு சிரமமோ அது போலத்தான் சிலரை வீட்டை காலி செய்ய வைப்பதும். எல்லாம் அனுபவம்தான் :(

Asiya Omar சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.ரொம்ப கஷ்டம் தான்,இங்கேயும் சில வினோத அனுபவங்கள் உண்டு.

Chitra சொன்னது…

டிஸ்கி : என்னடா இவன், திடீர்னு இப்படி வீட்டை பத்தி எழுதரான்னு யோசிக்கறவங்களுக்கு, இதை நான் எழுதி வச்சி ரொம்ப நாளா ஆச்சு. போடாம இருந்தேன். இன்னிக்கு ரெண்டு வீடு பார்த்தேன். அதன் விளைவு இந்தப் பதிவு.

.... oh! :-)

Paleo God சொன்னது…

இதனாலேயே நொந்துபோய் தொலைவாய் இருந்தாலும் வீடு கட்டினேன். வாடகை வீட்டில் கஷ்டப்படும் அனைவருக்கும் சொந்தமாய் ஒரு வீடு அமைய என் ப்ரார்த்தனைகள்.

யுக கோபிகா சொன்னது…

உண்மை தான்..

SathyaSridhar சொன்னது…

Neenga sonnathu noothukku nooru unmainga ella idathlaium broker broker thaan avanga utkarntha idathulae rendu pakkam irunthum commission vaangidaraanga..

எல் கே சொன்னது…

@ஷங்கர்

நன்றி தல... ஆனால் இந்த கடன் கிடைக்க மாட்டேன் என்கிறது..

@கோபிகா

நன்றி

@சத்யா
ஆமாமா

ஜெய்லானி சொன்னது…

அதிகம் குடுக்க ஆள் இருக்கும் வரை யாரையும் ஒன்னும் சொல்ல முடியாது. இது நமது நமது வீக்னஸ் ..!!

Jaleela Kamal சொன்னது…

ஊரில் இது வரை சொந்த வீட்டில் இருப்பதால் வாடகை வீடு பற்றி தெரியல.
ஆனால் சின்ன வயதில் வாடை வீடுதான் ஆனால் பல வீடு எல்லாம் மாறல , ஒரே வீடுதான்.
ரொமப் நல்ல இருக்கும் பாரத விலாஸ் போல்
அந்த வீடு கார்னரில். காற்றோட்டமாக இருக்கும்.

அதை என்னால மறக்கவே முடியாது, வீட்டுக்காரம்ம்மா கம்பவுடண்டர் , ரொம்ப ரொம்ப நல்ல்வங்க.
. இங்கு தூபாயில்வாடகை வீடு தான் ,

எதுவும் பிரச்ச்சனை இல்ல்லை.

(என் நாத்தனார் ரொம்ப பாவம், இது வரை 25 வீடு மாறி இருப்பாஙக். , வீடு ரொம்ப நல்ல இருக்கும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அடிக்கடி காலி பண்ண வேண்டி வரும்.

egglesscooking சொன்னது…

Innoru side pathi sollava? Enga amma oru veedu vaadagai vittirukkanga. Idhu varaikkum oru maasam kooda muzhusa vaadagai vandhadhu illai. Every month, indha repair pannen, rent la kazhichikkiren, andha repair pannen etc ore puranam dhaan. Amma ippa irukkira idamum andha veedum dhooram, and with her arthritis poi adikadi paaka mudiyala. So avanga solradha nambi dhaan aaganum engira nilamai. Amma kitta sollikitte irukken andha veeta vithudunu. Adhukkum neram vara mattengudhu.

எல் கே சொன்னது…

@ஜெய்

தல சரிதான்

@ஜலீலா

எனக்கும் இப்ப இருக்க வீடு ஓனர் ரொம்ப பிரச்சனை இல்லை..

எல் கே சொன்னது…

@மதுரம்

நீங்க சொல்றது நடக்குது. ஆனால் நூறில் ஒன்று