Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

மக்களே உஷார் VI

சமீப காலமாக தகவல் தொழில் நுட்பக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக உங்களது ஆர்குட் , facebook மற்றும் மின்னஞ்சல் கடவு சொல்லை திருடு...

சமீப காலமாக தகவல் தொழில் நுட்பக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக உங்களது ஆர்குட் , facebook மற்றும் மின்னஞ்சல் கடவு சொல்லை திருடும் பணி மிக அதிகமாக நடக்கிறது.

எதனால் செய்கிறார்கள் ?

 உங்கள் மின்னஞ்சலுக்குண்டான கடவு சொல்லை திருடுவதன் மூலம், அதில் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களயும் பெற முடியும். அதுமட்டும் அல்லது, உங்கள் நண்பர்களுக்கும் அதில் இருந்து பொய்யான மின்னஞ்சல் அனுப்பி அவர்களை குழப்பி அதன் மூலமும் லாபம் அடைய முடியும்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர். தேசிய அளவில் அறியப்பட்ட ஒரு சேவை நிறுவனத்தில் நல்ல பதவியில் இருப்பவர். அரசாங்க அளவிலும் தொடர்பு வைத்திருப்பவர். அவருடைய மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஒரு மடல் வந்தது. நான் மலேசியா வந்துள்ளேன். வந்த இடத்தில் எனது பர்ஸ் ,பாஸ்போர்ட் மற்றும் விசா பறிப்போகிவிட்டது எனவே உடனடியாக எனது இந்த வங்கி கணக்கிற்கு இவ்வளவு தொகை அனுப்பவும். அப்பொழுதுதான் நான் இந்தியா திரும்ப முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரை நான் மற்றும் எனது  குடும்பத்தார் நன்கு அறிவோம். எனவே உடனடியாக அவரை தொடர்பு கொண்டபொழுது அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்றும் அவருடைய மின்னஞ்சல் முகவரியை யாரோ ஹேக் செய்துவிட்டனர் எனவும் சொன்னார்.

இவ்வாறு உங்களுக்கு மின்னஞ்சல் வந்தால் உடனடியாக சம்பத்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு விசாரியுங்கள். இதுமட்டும் அல்லாது , இப்பொழுது ஜிமெயில் நிறுவனத்தின் பெயரிலேயே போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. எனவே அனைவரும் கொஞ்சம் கவனமாக இருங்கள். எந்த நிறுவனமும் உங்களது கடவு சொல்லை கேட்டு மெயில் அனுப்பாது, எனவே அவ்வாறு மெயில் வந்தால் அதை உடனடியாக அழித்து விடவும் .


எவ்வாறு தவிர்க்கலாம்

உங்கள் கடவு சொல்லை அடுத்தவர் கண்டுபிடிக்க இயலாத வண்ணம் அமையுங்கள். முக்கியமாக உங்கள் பிறந்தநாள், மனைவி/காதலி/ குழந்தைகளின் பெயரை கடவு சொல்லாக வைக்காதீர்கள்.

உங்கள் கடவு சொல் அடுத்தவருக்கு தேவை இல்லை. என்னதான் நெருங்கிய தோழராக இருந்தாலும் கடவு சொல்லை தரவேண்டாம்.

அலுவலகம் மற்றும் வெளி இடங்களில் இருந்து நீங்கள் மெயில் அனுப்ப நேர்ந்தால் , அதில் உள்ள "remeber me" பக்கத்தில் இருக்கும் டிக் மார்க்கை எடுத்தப் பிறகே உள் நுழையுங்கள்.

அதே போல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கடவு சொல்லை வையுங்கள்.

உங்கள் மின்னஞ்சலில் எந்தவித வங்கி தொடர்பான கோப்புகளையும் வைக்கவேண்டாம். சம்பந்தப்பட்ட கோப்புகளை உங்கள் கணிணியில் சேமித்து வைத்துவிட்டு, அந்த மின்னஞ்சலை அழித்து விடலாம்.

அதேபோல் , ஆர்குட் போன்ற தளங்களில் நுழையும் முன் அது சரியானா முகவரியா என்று உறுதிபடுத்திக் கொள்ளவும். எப்பொழுதும் இணையத் தள முகவரிகளை நீங்களே டைப் செய்யுங்கள், ஏற்கனவே ஹிஸ்டரியில் இருக்கும் இணைப்புகளை உபயோகப்படுத்தாதீர்கள். இது முக்கியமாக பிரௌசிங் சென்டர்களில் இருந்து கணிணியை உபயோகிப்பவர்களின் கவனதிற்குதான்.

உங்களுக்கு மெயிலில் எதாவது ஒரு இணையத்தளத்தின் முகவரி வந்தால், அதைப் பற்றி சரியாக தெரியாமல் அதில் நுழைய வேண்டாம். குறிப்பாக, சாட் தளங்களின் போலி முகவரிகள்தான் அதிகமாக இருக்கின்றது.

இணையத் திருட்டு இப்பொழுது மிக அதிக அளவில் நடக்கிறது. எனவே அனைவரும் கவனமாக இருப்போம்.



35 கருத்துகள்

dheva சொன்னது…

ஆமாம் கார்த்திக்....! என்னுடைய நண்பருக்கும் இது போல நடந்தது ...அவரின் மெயில் முகவரியில் இருந்து எனக்கு மெயில் வந்தது, லண்டனில் இருப்பதாகவும் பர்ஸ் தொலைந்து விட்டதாகவும் கூறி ஒரு குறிப்பிட்ட அக்கவுண்டுக்கு பணம் அனுப்ப கோரியிருந்தார்கள், ஆனால் நண்பர் துபாயில் தான் இருந்தார்...பின் தான் அவரும் இந்த மோசடிக்கு ஆளாகியிருப்பது அறிந்து மைக்ரோ சாப்ட்க்கு தொடர்பு கொண்டு அவரது பாஸ்வேர்டை மீட்டெடுத்து மாற்றினோம்.

மிக முக்கியமான ஒரு விழிப்புணர்வு இடுகை பாஸ்! சூப்பர்!

Kousalya Raj சொன்னது…

மிகவும் அவசியமான பதிவு. அனைவரும் இதை படிக்கவேண்டும். பாராட்டுகள் LK. good one. keep it up.

ஜெய்லானி சொன்னது…

எல்லாத்துக்கும் சாஃப்ட்வேர் இருக்கு . கடவுள்தான் காப்பாத்தனும் வேற வழி இல்லை..!!!

Geetha Sambasivam சொன்னது…

இது அடிக்கடி நடக்குது தாத்தா, நாம தான் கவனமா இருக்கணும், எங்க குழுமத்திலே ஒருத்தரோட மெயில் ஐடியை ஹாக் பண்ணிட்டு, அவர் இங்கிலாந்தில் இருந்து மெயில் பண்ணறாப்போல் பண்ணி எல்லார் கிட்டேயும் பணம் கேட்டார் ஹாக் பண்ணினவர். அந்த நண்பர் கடிதம் ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும் ஓம் எனப் போடாமல் எழுதமாட்டார். ஆகையால் நாங்க ஜாக்கிரதையா டெலீட் பண்ணிட்டு எல்லாருக்கும் தகவல் கொடுத்தோம். மூளையை எப்படி எல்லாம் பயன்படுத்தறாங்க??? :(((( நல்ல வழியிலே போகக்கூடாதா?

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

மிக அவசியமான பதிவு LK...
// அலுவலகம் மற்றும் வெளி இடங்களில் இருந்து நீங்கள் மெயில் அனுப்ப நேர்ந்தால் , அதில் உள்ள "remeber me" பக்கத்தில் இருக்கும் டிக் மார்க்கை எடுத்தப் பிறகே உள் நுழையுங்கள். //
இது தெரியாம நான் ரொம்பவே அவஸ்தை பட்டிருக்கேன், முன்னாடி ...

பெயரில்லா சொன்னது…

எல்லோர்க்கும் பயன் பெடற பதிவு .தகவல்கு நன்றி

SathyaSridhar சொன்னது…

Romba nalla pathivu nga, mukyama Orkut, Facebook la Password thiruda vaaippu nirayave irukku. En friend en kitta sonna vishayam ithu Facebook la naama use pannum poedhu athu oru software oeda varuthu appo namma password ae easy aah avanga track panidalaam. Ithai thavirkanumnaa naama password maathikitte irukanum.

தக்குடு சொன்னது…

useful post LK!continue ur good job!

அமைதி அப்பா சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல்.
நானும் இது பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். எப்போதும் விழித்துக் கொண்டிருப்போம்.

Menaga Sathia சொன்னது…

மிகவும் அவசியமான பதிவு!!

Priya சொன்னது…

பயனுள்ள தகவல் + அவசியமான பதிவு!

பெயரில்லா சொன்னது…

ஆக்சுவலி ஃபேஸ்புக்கில் ஒரு பிரபலம் எனது நண்பி. சின்ன வயசில ஒன்னா படிச்சவங்க. அவங்க போடுற ப்ரொபைல் பிச்சரை அப்படியே காப்பி பண்ணி இன்னொரு ப்ரொபைல்ல போடறது மட்டுமல்ல, அவங்க எழுதிற மாதிரியே எழுதுவாங்க. அதே மாதிரியே ஸ்மைல்ஸ் நிறைய போட்டு கொமன்ட் போடுறது. அவங்களே அந்த போலி ப்ரொபைல்லை பாத்து அசந்திட்டாங்க. நாங்க எல்லோரும் கம்ளென் பண்ணி அதை நீக்கிட்டோம். ஆனாலும், இன்றுவரை எப்படி அந்த போலியால் அவ்வளவு நேர்த்தியாக ஒரு போலி பக்கத்தை மெயின்டைன் பண்ண முடிந்தது என்று நினைச்சிட்டே இருக்கோம். ஒரு ஈமெயில் ஐடி கிரியேட் பண்ணி வலைத்தளங்களுக்கு மட்டுமே உபயோகியுங்கள். அதனால் Spam மெயில் முக்கியமான ஐடிக்கு வராது.

அப்புறம் நாங்கள் எல்லோரும் செய்யும் ஒரு முட்டாள் தனம், எல்லா அட்ரசையும் CC-ல போடுறது. ஒரு Forward அனுப்பும் போது மெயிலின் பாடியில் உள்ள ஈமெயில் அட்ரசுகளை டிலீட் பண்ணுங்க. அப்புறம் BCC-ல மட்டும் எல்லோர் அட்ரசயும் போடுங்க. இல்லேன்னா இந்த தொல்லை இருக்கு. நானும் சொல்லி சொல்லிப் பார்க்கிறேன் சிலர் புரிந்து கொள்வதே இல்லை. ஃபோர்வேட் அனுப்பாதே என்று கொஞ்சம் காரமாகவே சொல்லி வைத்திருக்கிறேன். வேற என்னத்தை செய்யுறது.

மதுரை சரவணன் சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல்.
thanks for sharing.

Asiya Omar சொன்னது…

பயனுள்ள பதிவு.பாஸ்வேர்ட் வைப்பது பற்றி சொன்னது நல்லது,எல்லோரும் உஷாராக இருக்க இது நல்ல யோசனை.

Geetha Sambasivam சொன்னது…

//ஒரு Forward அனுப்பும் போது மெயிலின் பாடியில் உள்ள ஈமெயில் அட்ரசுகளை டிலீட் பண்ணுங்க. அப்புறம் BCC-ல மட்டும் எல்லோர் அட்ரசயும் போடுங்க. இல்லேன்னா இந்த தொல்லை இருக்கு.//

விஷயத்தை மட்டும் காப்பி,பேஸ்ட் பண்ணி அனுப்பவேண்டியவங்களுக்கு அனுப்பிடலாம். நான் பெரும்பாலும் அப்படித் தான் செய்வேன்.

Raja சொன்னது…

//எந்த நிறுவனமும் உங்களது கடவு சொல்லை கேட்டு மெயில் அனுப்பாது, எனவே அவ்வாறு மெயில் வந்தால் அதை உடனடியாக அழித்து விடவும்//

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை பதிவாக்கியதற்கு நன்றி!!!...

எனக்கும் இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு "Hotmail" முகவரியில் கடவு சொல், பெயர், பிறந்த நாள், ஆகிய அனைத்து விபரங்களையும் கேட்டு மின்னஞ்சல் வந்தது. இந்த விபரங்களை தராமல் விட்டால் ஒரு வாரத்தில் உங்களது முகவரி நீக்கப்பட்டு விடும் என்று எச்சரிக்கையோடு!!!. நானும் உடனே யோசிக்காமல் அனைத்து விபரங்களையும் அனுப்பிவிட்டேன். பிறகு சந்தேகம் வரவே உடனே எனக்கு வந்த மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்கும் பொழுதுதான் இது போலியான முகவரி என உணர்ந்து உடனே அனைத்து விபரங்களையும் மாற்றினேன். அடிக்கடி இது போன்ற மின்னஞ்சல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எனக்கு இது போன்ற மின்னஞ்சல் வந்தது அதை இங்கே இணைத்துள்ளேன்.
--------------------------------------------------------------
Important message regarding your account‏
From: Windows Live Team (devi.erm@gmail.com)
You may not know this sender.Mark as safe|Mark as junk
Sent: 27 May 2010 22:02PM
To: communications@microsoft.windowsliveuser.com

This message is from our data base to all free and premium Hotmail account owners. Due to congestion in our data base, we are terminating all unverified accounts. To prevent your account from closing, you have to update it below. Click on your reply button to reply back to this message and then fill the information below.




* Username : ………………………..
* Password: ………………………….
* Date of Birth: ………………………
* Country Or Territory: ……………
XE23Y88Z



Enter the 8 characters you see: ..................


Warning!!! Account owner that refuses to verify his/her account after a week of receiving this warning, will lose it permanently.

Microsoft controls the data collected in this survey and may use your responses (together with existing data we have about you) to make sure its products and services meet your needs and preferences. Microsoft will treat all data collected from you in accordance with our privacy policy. To review this privacy policy, please see: http://privacy.microsoft.com/en-us/default.mspx


Sincerely,
The Windows Live Hotmail Team

©2010 Microsoft Corporation

சாமக்கோடங்கி சொன்னது…

பதிவும் ரொம்ப பயனுள்ள ஒன்று.. பின்னூட்டங்களைப் பார்த்தும் பயந்து போனேன்.. கண்டிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

நன்றி..

ஸ்ரீராம். சொன்னது…

நான் கூட சமீபத்தில் செய்திகளில் பார்த்தேன். உஷாராகத்தான் இருக்க வேண்டும்.

பத்மநாபன் சொன்னது…

நல்ல பதிவு. தகவல் அனைத்தும் மிகவும் பயன்மிக்கது.. இணயத்தை வெகுவாக பயன் படுத்தும் இந்த சூழலில் நல்ல வழிகாட்டி...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பதிவு.

ஆனால் சில நேரங்களில் நம்மையும் மீறி தவறு நடக்க வாய்ப்பு உண்டு.

நன்றி சார்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பயனுள்ள பதிவு எல்.கே. ஒருகாலத்துல.. இந்த கடிதத்தை பிரதிஎடுத்து ஐம்பது பேருக்கு அனுப்பலைன்னா,, சாமி கண்ணைக்குத்திரும் என்ற ரீதியில் கடிதங்கள் உலாவரும். இது டெக்னாலஜி யுகம்.மக்கள் டிசைன் டிசைனா ஏமாத்தறாங்க. நாமளும் உஷாரா இல்லாம கோட்டை விட்டுட்டு அப்றம் முழிக்கிறோம் :-((

எல் கே சொன்னது…

@தேவா
நன்றி தேவா. எல்லோருக்கும் இதில் ஒரு அனுபவம் கண்டிப்பாக உண்டு

@கௌசல்யா

:)
@ஜெய்
இருந்தாலும் நாம் விழிப்புடன் இருப்போம்

@பாட்டி
ஆமாம். நாம்தான் கவனமோட இருக்கணும்

@neo
நன்றி

@சத்யாஸ்ரீதர்
இது எனக்கு புதுசா இருக்கு

எல் கே சொன்னது…

@தக்குடு

நன்றி

@அமைதி அப்பா
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@மேனகா
நன்றி

@ப்ரியா

நன்றி

@அனாமிகா
இது ரொம்ப சகஜம். நாம்தான் கொஞ்சம் விழிப்புடன் இருக்கணும்

எல் கே சொன்னது…

@மதுரை சரவணன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

@ஆசியா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

@பாட்டி
::))

@ராஜன்
விழிப்புடன் இருப்போம்

@பிரகாஷ்
எனக்கே கொஞ்சம் பயம் ஆகிடுச்சி

@ஸ்ரீராம்
நன்றி அண்ணா

@பத்மநாபன்
நன்றி

@சாரல்

அந்த மாதிரி மெய்ல் படிச்சிட்டு போட்டோ நல்ல இருந்த அதை மட்டும் சேமித்து வைத்து விட்டு மெய்ல் அழித்து விடுவேன்
@அக்பர்
சரிதான்

geetha santhanam சொன்னது…

எனக்கும் yahoo விலிருந்து password confirmation கேட்டு இமெயில் வந்தது. நான் delete செய்துவிட்டேன். அடிக்கடி password மாற்றுவதும் நல்ல யோசனை.--கீதா

vanathy சொன்னது…

எல்கே, நல்ல பயனுள்ள தகவல்.

நீங்கள் இம்பூட்டு ஸ்பீடா பதிவுகள் போட்டா என்னை போல பிள்ளை குட்டிகளோடு இருப்பவர்கள் எப்படி படிக்க முடியும். முடியும் போது வந்து படித்து, பின்னூட்டம் போடுறேன். நேற்று படித்து முடித்தேன். இன்று தான் பின்னூட்டம் கொடுக்க நேரம் வந்திச்சு.

எல் கே சொன்னது…

வானதி , இன்னும் சில நாட்களே தினமும் ஒரு பதிவு. அப்புறம் மாறிடும்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விழிப்புணர்வு தரக்கூடிய நல்ல பதிவு நண்பரே. தொடருங்கள்.

எல் கே சொன்னது…

நன்றி நாகராஜ்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

எங்களுக்கும் இந்த அனுபவம் உண்டு. ஒரு மாதம் முன்ன அவரோட hotmail அக்கௌன்ட்ல இருந்து எல்லாருக்கும் ஏதோ செல்போன் பத்தி ஒரு ஈமெயில் போய் இருக்கு. அது scam னு அப்புறம் தெரிஞ்சுது... கொடுமை தான்... நல்லா உபயோகமான பதிவு

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

// LK Said:
@சோபனா
அந்த உண்ணும் விரதப் போராட்டத்துக்கு நம்ம அப்பாவியோட இட்லி வரும்//

கூடவே என்னோட இட்லி மேல பட்ற திருஷ்டிக்கு பரிகாரமாய் கார்த்திக்கின் உப்புமாவும் தரப்படும்.... (எப்பூடி??????????????)

Geetha Sambasivam சொன்னது…

கூடவே என்னோட இட்லி மேல பட்ற திருஷ்டிக்கு பரிகாரமாய் கார்த்திக்கின் உப்புமாவும் தரப்படும்.... (எப்பூடி??????????????)//

count me out! Karthikoda uppuma???? vendam sami! :P