டிசம்பர் 31, 2015

மீண்டும் தொடரலாமா...

இங்கு எழுதுவதில்லை என்றே சொல்லலாம்.பேஸ்புக்கில் சிறிய போஸ்ட்கள் எழுதுவதோடு சரி. அதைத் தவிர்த்து வேறு எழுதுவதே இல்லை என்றே சொல்லலாம்.

எதையாவது எழுதவேண்டும் என்று நினைப்பதோடு சரி. எழுத வணங்குவது இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்பகூட போனில் ப்ளாகர் ஆப் இன்ஸ்டால் செய்ததால் ஒரு போஸ்ட். 2016ல் தொடர்ந்து எழுதலாம் என ஒரு எண்ணம். இது எத்தனை நாள் எனத் தெரியவில்லை.

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

அன்புடன் எல்கே

மே 31, 2015

இரண்டு வார்த்தைகள்

இரண்டு  வார்த்தைகள்
 சம்பவம் ஒன்று
 வெள்ளிகிழமை மாலை , ஆறரை மணி  அளவில் ரங்கராஜபுரம் பாலத்தில் இருந்து மேற்கு மாம்பலம் நோக்கி  வந்துகொண்டிருந்தேன் . நாற்பது வயதிற்கு மேற்பட்ட நபர் , பாலத்தில் இருந்தே ஹாரனில் இருந்து  எடுக்காமல் வந்தார். நான் அவருக்கு வழி  விடவில்லை. (வேண்டுமென்றேதான் செய்தேன் ). போத்திஸ்   சந்திப்பை  அணுகும் முன்  வயதான பெண் ஒருவர் சாலையை கடந்துக் கொண்டிருந்தார். நான் ப்ரேக்  நிறுத்திவிட்டு அவர்கள் சாலையைக் கடந்தவுடன் செல்ல நினைத்தேன். அதற்குள் பின்னால்   வந்த நபர் அவர்களை திட்டத் துவங்கினார்.
அவரைப் பார்த்து இரண்டு  வார்த்தைதான்  சொன்னேன் . கோபத்தில் முறைத்துவிட்டு பறந்து விட்டார்.
நான் சொன்னது " வயதான முட்டாள் "
சம்பவம் இரண்டு
நேற்று மாலை .  நூறடி சாலையில் ஸ்ருதி  மியூசிக்  சிக்னலில் இருந்து கேகே நகர் நோக்கி வந்துக் கொண்டிருந்தேன் . காமராஜர் சாலை  சந்திப்பில்  நேரத்தில்   எப்பொழுதுமே ட்ராபிக் அதிகமாய் இருக்கும் . எனவே சமீபக்  காலமாய்  குறிப்பிட்ட நேரங்களில் போக்குவரத்துக் காவலர் நின்று போக்குவரத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தார். நூறடி சாலையில் இருந்து வந்த வாகனங்களை  விட்டு  காமராஜர் சாலையில்  இருந்து வந்த வாகனங்களை அனுப்பிக் கொண்டிருந்தார்.  அதிகபட்சம்  இரண்டு நிமிடங்கள் நிற்க நேரிடலாம்.அதற்குள் எனதருகில் ஆக்டிவாவில் வந்து நின்ற வெண்ணை தேவதை, வண்டியில் இருந்த ஹாரனை பேட்டரி தீரும் அளவிற்கு அடித்தார்.இங்கயும் இரண்டு வார்த்தைகள்தான் சொன்னேன். இந்தப் பொண்ணும்  முறைக்குது
 இங்க சொன்ன  இரண்டு வார்த்தைகள் "படித்த முட்டாள் "
அன்புடன் எல்கே

மே 23, 2015

காவிரியின் மைந்தன்

பலரும்  படிக்க சொன்ன புத்தகம் என்பதாலும்  பொன்னியின் செல்வனின்  தொடர்ச்சி என்று சொன்னதாலும் இதை தேடி கொண்டிருந்தேன். எதேச்சையா  வேறு ஒரு மின்னூல் தேடப் போய்  இது கிடைச்சது.

 இதை  படிக்க  சொன்ன சிலரைத் தேடிகிட்டு  இருக்கேன். இதை விட படு திராபையான புத்தகத்தை  இது வரை நான் படித்ததில்லை. . 

இந்தக் கதையின் நாயகனாக கந்தமாறனை முன்னிறுத்தி உள்ளார் ஆசிரியர். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கந்தமாறன்தான் அணைத்து செயல்களிலும் வெற்றிப் பெறுகிறார். வந்தியத் தேவரும் பொன்னியின் செல்வரும் கதையின் வரும் சில பாத்திரங்களாகவே  காட்டப்படுகிறார்கள்.

குந்தவைக்கு அருள்மொழிவர்மரை  நினைத்துக்  கவலைப் படும் வேலையை மட்டுமே கொடுத்துள்ளார். அதேப் போல் ஆழ்வார்க்கடியானின்  பாத்திரப் படைப்பு கல்கியின் எழுத்துத்திறனுக்கு சிறந்த எடுத்துக் காட்டு. ஆனால்  அந்தப் பாத்திரமும் இதில் வீணடிக்கப்பட்டுள்ளது. 

இதில் அருள்மொழி வர்மரும் கந்தமாறனும்  ஒரே பெண்ணைக் காதலிப்பதாய் ஒரு உபக்  கதை. இதனால் யாரிடமும் சொல்லாமல் நாடோடியாய் சிலமாதம் சுற்றும் பொன்னியின் செல்வர் பாண்டியன் ஆபத்து உதவிகளில் ஒருவனான இடும்பன்காரியுடன் சில மாதம் தங்கியும் இவரை அவன் அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தம்.

இறுதியில் ஆபத்து உதவிகளுடன் நடக்கும் சண்டையில் வானதி இறக்க , பழுவேட்டரையரின்  மகளைக் கரம் பிடிக்கிறார் பொன்னியின் செல்வன்.  

கந்தமாறன் காதலை தியாகம் செய்துவிட்டு ரவிதாசனை தேடி போவதோடு கதை முடிகிறது.

யாரவது இலவசமாய் தந்தாலும்  வாங்கிப் படிக்க வேண்டாம். 

அன்புடன் எல்கே