Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

கற்க வேண்டியது யார் ?

குழந்தைகளை கல்வி கற்க பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் உண்மையில் கற்க வேண்டியது யார் என்ற கேள்வி சமீபகாலமாய் என்னுள் எழுவதைத் தவிர்க்க இயலவில...

குழந்தைகளை கல்வி கற்க பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் உண்மையில் கற்க வேண்டியது யார் என்ற கேள்வி சமீபகாலமாய் என்னுள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு திவ்யாவின் பள்ளியில் ஒரு போட்டி நடைபெற்றது. மாநில அளவிலான போட்டி என்று சொல்லப்பட்டாலும் சென்னையில் இருந்து மட்டுமே சில பள்ளிகள் கலந்துக் கொண்டன. பேச்சு , பாடல், யோகா என சில பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

முதல் போட்டி துவங்கிய பொழுதே பிரச்சனைத் துவங்கியது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களை மட்டும் அறைகளுக்கு வரசொன்னார்கள், கேட்டனரா நம் பெற்றோர்கள். எதோ இவர்களே போட்டியில் கலந்துக் கொள்வது போல் வகுப்பறைகளின் வாயில்களிலே நிற்கத் துவங்கினர். பல முறை அவர்கள் சொல்லியும் பெற்றோர்கள் கேட்காதக் காரணத்தினால் வகுப்பறையின் கதவுகளை மூடி போட்டியை நடத்தும் சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

எல்கேஜி குழந்தைகளுக்கு ரைம்ஸ் போட்டி நடைபெற்றது. நான்கு வயதுக் குழந்தை அத்தனை பெயர் முன்னிலையில் நின்று பேசுவதே பெரிய விஷயம்.பாவம் அந்தக் குழந்தை பயந்துவிட்டதோ இல்லை ரைம்ஸ் மறந்து விட்டதோ தெரியவில்லை. மைக் முன்னின்று ரைம்ஸ் சொல்ல இயலாமல் கீழே இறங்கிவிட்டது. அந்தக் குழந்தையைத் தொடர்ந்து பங்குபெற்ற மற்றொரு குழந்தை அருமையாக ரைம்ஸ் சொல்ல முதல் குழந்தையின் தாய்க்கு வந்ததே கோபம். தனது குழந்தையை அத்தனை பேரின் முன்னிலையிலும் திட்டி அதே ஹாலில் விட்டு விட்டு வெளியே சென்று விட்டார். அந்தக் குழந்தையோ செய்வதறியாமல் அழுகத் துவங்கியது. ஐந்து நிமிடம் கழித்தே அந்தத் தாய் திரும்ப வந்து அக்குழந்தையை அழைத்துச் சென்றார்.

அந்த நிகழ்ச்சியில் பாட இயலாவிட்டால் என்ன ஆகப் போகிறது ? அதனால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் மங்கி போய்விடுமா இல்லை அந்தக் குழந்தைக்கு திறமை இல்லை என்றாகிவிடுமா ?  அடுத்தக் குழந்தைகளுடன் ஒப்பிடும்பொழுது அந்தக் குழந்தைக்கு தாழ்வு மனப்பான்மை சிறுவயதிலேயே வந்துவிடாதா ? அது அதனின் வளர்ச்சியை பாதிக்காதா ?

எதற்கு  எல்லா விசயங்களிலும் ஒரு ஒப்பீடு ? ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு திறமையைக் கொண்டிருக்கும். அது என்னத் திறமை என்று பார்த்து அதை வெளிக் கொண்டுவருவதே பெற்றோர்களின் கடமை. அதை விட்டு விட்டு இப்படி மட்டம் தட்டுவது அவர்களின் வேலையல்ல. டிவியில் வரும் ரியாலிட்டி ஷோக்களின் பாதிப்புதான் இது .

இது ஓர் வகை என்றால், மற்றொரு வகை அடுத்தக் குழந்தைகளை ஊக்குவிக்காமல் (குறைந்தபட்சம் கை தட்டுவதுக் கூட இல்லை ) அமைதியாய் இருப்பது. இது எந்த வகை நாகரீகம் என்றுப் புரியவில்லை. படிக்காதப் பெற்றோர் கூட இப்படி செய்வது இல்லை. படித்துப் பட்டம் பெற்று பெரிய வேலைகளில்  இருப்பவர்களே அதிகம் இப்படி செய்கின்றனர்.

 இப்பொழுது சொல்லுங்கள் கற்க வேண்டியது யார் ??

அன்புடன் எல்கே

3 கருத்துகள்

Rathnavel Natarajan சொன்னது…

இப்பொழுது சொல்லுங்கள் கற்க வேண்டியது யார் ?? = பெற்றோர்கள்.

Madhu சொன்னது…

குழந்தையை சரியான முறையில் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கேள்வி. ஒப்பீடு தேவையே இல்லாதது என்பது புரிந்தால் நல்லது..