Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பள்ளித் துவக்கம்

திவ்யாக்கு பள்ளித் திறந்து இரண்டு நாட்கள் ஸ்கூல் போயிட்டு வந்தாச்சு. எதுவும் ரகளை பண்ணாமல் சமத்தா போயிட்டு வந்துட்டாள். நேற்று , பள்ளிக்க...

திவ்யாக்கு பள்ளித் திறந்து இரண்டு நாட்கள் ஸ்கூல் போயிட்டு வந்தாச்சு. எதுவும் ரகளை பண்ணாமல் சமத்தா போயிட்டு வந்துட்டாள்.

நேற்று , பள்ளிக்கூடம் திறந்த முதல் வாரத்திலேயே பெற்றோர் - ஆசிரியர்  மீட்டிங். முதல் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஆபீஸ்க்கு பர்மிஷன் போட்டதில் நேற்று என்னால் செல்ல இயலவில்லை. என் தங்கமணி மட்டும் போயிட்டு வந்தாங்க. பள்ளியின் செயல்பாடு எந்த மாதிரி வகுப்புகள் எடுப்போம், பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.  அவற்றில் பல எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.




அதில் எனக்கு ரொம்பப் பிடிச்சது இதுதான்...


கண்டிப்பா குழந்தைகளை எழுத சொல்லி கட்டாயப் படுத்தாதீங்க. அவங்க விரல்களில் அதற்கு உண்டான வலிமை இருக்காது. குறைந்தபட்சம் இன்னும் ஒரு வருஷம் ஆகும் . அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்கணும்.

இப்ப பல பெற்றோரின் நினைப்பே , பள்ளிக்கூடம் போகத் துவங்கியவுடன் எல்லாம் குழந்தை உடனே செய்யனும்னு எதிர்பார்ப்பதுதான்.

எல்லாவற்றையும் விட ஒரு குழந்தையின் தாய் கேட்டதுதான் டாப் கிளாஸ்

"என் குழந்தைக்கு டென்னிஸ் கோச்சிங்  தருவீங்களா ?"

அதற்கு தலைமை ஆசிரியை அளித்த பதில்

" பொறந்ததில் இருந்து உங்க குழந்தையின் கையை பார்த்திருக்கீர்களா ? டென்னிஸ் விளையாடற வயசா இது ?  இந்த வயதில் என்ன சொல்லித் தரவேண்டுமோ அதைக் கட்டாயம் சொல்லித் தருவோம் "

இறுதியாக , " என் மகன் சான்றோன் எனக் கேட்டத் தருணம் ".. இரண்டு நாட்கள் கவனித்ததில் அதிக வார்த்தைகளை சரியாக சொன்னக் குழந்தை திவ்யா என்று அவர்கள் கிளாஸ் டீச்சர் அனைவரின் முன் சொன்னது...



அன்புடன் எல்கே

18 கருத்துகள்

thamilarasi சொன்னது…

சந்தோஷ தருணம்..எல்லா வளமும் கல்வியும் பெற்று வாழ வாழ்த்துக்கள் கார்த்திக்

Geetha Sambasivam சொன்னது…

வாழ்த்துகள். குழந்தைங்க மெல்ல மெல்லா எல்லாத்தையும் கத்துப்பாங்க. ஆகவே பொறுமையா இருந்தால் தான் நல்லது. பல பெற்றோர்களுக்கும் புரியறதில்லை. :(((

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல பள்ளி. நல்ல பகிர்வு.

திவ்யாவுக்கு வாழ்த்துகள்!

சென்னை பித்தன் சொன்னது…

வாங்க பெருமைக்குரிய தந்தையே!ரொம்ப நாளாக் காணோமேன்னு பார்த்தேன்.திவ்யாவுக்கு வாழ்த்துகள்.என்ன கிளாஸ்?

ஹுஸைனம்மா சொன்னது…

வாழ்த்துகள்.

ஸ்ரீராம். சொன்னது…

பொறுமை பெருமை தரும். கங்க்ராட்ஸ் திவ்யா!

Rajan சொன்னது…

வாழ்த்துக்கள் s

vanathy சொன்னது…

Super. Well done.

அப்பாதுரை சொன்னது…

பரவாயில்லையே இந்தப் பள்ளிக்கூடம்!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

இந்தப் பள்ளிக்கூடம் ரொம்பப் பிடிச்சுருக்கு. ஸ்கோருக்காகவும் எக்ஸ்ட்ரா ஃபீஸுக்காகவும் அது இதுன்னு குழந்தைகளைக் கஷ்டப்படுத்தலை.

திவ்விக்கு வாழ்த்துகள்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சந்தோஷ தருணம் ! வாழ்த்துக்கள் !

pudugaithendral சொன்னது…

எப்படிங்க இப்படி ஒரு ஸ்கூலை தேடிபிடிச்சீங்க. அதுக்கு முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

pudugaithendral சொன்னது…

எப்படிங்க இப்படி ஒரு ஸ்கூலை தேடிபிடிச்சீங்க. அதுக்கு முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

எல் கே சொன்னது…

@தமிழ்

நன்றி

@கீதா

உண்மைதான்

@ராமலக்ஷ்மி

நன்றி மேடம்

எல் கே சொன்னது…

@பித்தன்
நன்றி சார். இப்பதான் எல் கே ஜி. அலுவலக வேலை அதிகம்

@ஹுசைனம்மா
நன்றி

@ஸ்ரீராம்

நன்றி

எல் கே சொன்னது…

@ராஜன்

நன்றி

@அப்பாதுரை

இன்னும் நெறைய இருக்கு. சொல்றேன்

@சாரல்
உண்மைதான். காசு வாங்கறாங்க. ஆனால் குழந்தைகளை படுத்துவதில்லை.

எல் கே சொன்னது…

@தனபாலன்

நன்றி

@புதுகை

முதலில் வேற ஸ்கூல்தான் முயற்சி பண்ணோம்,. அங்கக் கிடைக்கலை. எனவே இங்க வந்தோம். வந்தது நல்லதா போச்சு. இன்னிக்கு ரைம்ஸ் புக் கொடுத்து இருக்காங்க. நான்கு மொழிகளில் ரைம்ஸ். அப்புறம் சுலோகம், பாரதியார் பாட்டு, திருக்குறள், ஆத்திசுவடி எல்லாம் இருக்கு

இராஜராஜேஸ்வரி சொன்னது…

" என் மகன் சான்றோன் எனக் கேட்டத் தருணம் "..வாழ்த்துக்கள்