ஏப்ரல் 03, 2012

Windows 8 பீட்டா பதிவு – 1

இந்தியாவில் இன்னும் பலர் விண்டோஸ் விஸ்டாவிற்கு முந்தைய விண்டோஸ் எக்ஸ்பியில்தான் இருக்கின்றனர்.  ஆனால் மைக்ரோசாப்ட் தனது அடுத்த இயங்குத் தளத்தின் சோதனை பதிப்பை வெளியிட்டுவிட்டது . விண்டோஸ் 8  பீட்டா வெளிவந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கான பீட்டாப் பதிவை வெளியிட்ட மைக்ரோசாப்ட் இப்பொழுது உபயோகிப்பாளர்களுக்கான பீட்டாப் பதிவினை கொண்டுவந்துள்ளது .


விண்டோஸ் என்ற ஒரு ஐடியாவையே ஆப்பிள் நிறுவனத்தின் மேக் இயங்குதளத்தை பார்த்தே மைக்ரோசாப்ட் உருவாக்கியது என்று சொல்வார்கள். விண்டோஸ் 8 ஆண்டிராய்ட் இயங்குதளத்தை போன்றத் தோற்றம் அளிக்கிறது. ஏற்கனவே ஆண்டிராய்ட் போன்களை உபயோகப்படுத்தியவர்களுக்கு இந்த இயங்குதளத்தைப் பார்த்தால் ஒரு  போனை உபயோகப்படுத்துவதுப் போன்றே தோற்றமளிக்கும். அதில் இருக்கும் அப்ளிகேஷன் ஸ்டோர் போன்ற வசதிகள் இதிலும் உண்டு. அவற்றைப் பற்றி அடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம்.


 தொடர்ந்துப் படிக்க http://www.atheetham.com/?p=245

அன்புடன் எல்கே

ஏப்ரல் 01, 2012

நான் எழுத நினைத்தது ....


 சமீபக் காலமாய் , எழுத வேண்டும் என்று சில விஷயங்களைக் குறித்து வைத்திருப்பேன். ஆனால் அவற்றை இன்று வரை எழுதவில்லை. நேரமின்மையும் ஒருக் காரணம். முன்பு போல் இணையத்தில் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. இதுவும் ஒரு சாக்கு.

திவ்யாவை ஒருவழியாக பள்ளிகூடத்தில் (எல் கே ஜி ) சேர்த்தாகிவிட்டது. இவளிடம் அந்தப் பள்ளி ஆசிரியைகள் எண்ணப் பாடு படப் போகின்றனரோ , அந்த ஆண்டவன்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அத்தனைக் குறும்பு .

இதே நேரமின்மைக் காரணமாகத்தான் துவங்கிய தொடர்கதையை தொடர முடியாமல் அப்படியே நிற்கிறது. சீக்கிரம் அதைத் தொடர முயற்சிக்கிறேன். ஏற்கனவே எனதுப் பதிவில் புதிய விண்டோஸ் இயங்குத் தளத்தை பற்றி எழுதினேன். அது பற்றி மேலும் விரிவாக அதீதத்தில் தொடராக எழுத உள்ளேன். நாளை வெளி வரும் அதீதம் இதழில் இருந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அந்தத் தொடர் வரும்.

அதீதம் தளத்தில் சிலப் பிரச்சனைகள் இருப்பதாக வாசகர்கள் கூறியதால் தள வடிவமைப்பை மாற்றிக் கொண்டிருக்கிறோம். அநேகமாய் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. நாளைப் புதிய வடிவமைப்புடன் அதீதம் வெளிவருகிறது.அன்புடன் எல்கே