மார்ச் 10, 2012

Windows 8 Beta

 மைக்ரோசாப்ட் தனது அடுத்த ஆபரேடிங் சிஸ்டம் விண்டோஸ் 8 ஐ இந்த வருடம் வெளியட உள்ளது. அதற்கான பீட்டா வெர்ஷன் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று நண்பர் தமிழ்வாசியின் பதிவில் இந்த செய்தியைப் பார்த்துவிட்டு மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்தேன். இரண்டு விதமாக தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இப்பொழுது இருக்கும் ஆபரேடிங் சிஸ்டம் அப்க்ரேட் செய்து கொள்ளலாம். இந்த முறையில் நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்திருக்கும் மென்பொருள்களில் விண்டோஸ் 8 இல் வேலை செய்யும் என்றால் அவற்றை மீண்டும் இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை.


இல்லையெனில்  ஐ எஸ் ஓ பைலாக தரவிறக்கம் செய்துக் கொண்டு டி வி டி அல்லது பென் டிரைவ் கொண்டு வேறுக் கணிணியிலோ அல்லது இதேக் கணிணியின் இன்னொரு டிரைவிலோ இன்ஸ்டால் செய்துக் கொள்ளலாம்.

இன்ஸ்டால் செய்ய மிகக் குறைந்த நேரமே ஆகிறது.  எனக்கு அரைமணி நேரமே ஆகியது. இந்த விஷயத்தில் விண்டோஸ் எக்ஸ்பி தான் மோசம். காலையில் இருந்து இதுவரை உபயோகித்ததில் விண்டோஸ் 8 பிடித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

கொஞ்சம் ஆண்ட்ராய்ட் கொஞ்சம் ஆப்பிள் இவற்றில் இருந்து காப்பி அடித்து செய்துள்ளது நன்றாகவே தெரிகிறது.

தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் 

சில ஸ்க்ரீன் ஷாட்
அன்புடன் எல்கே

12 கருத்துகள்:

kg gouthaman சொன்னது…

My current os is Windows XP. can I install windows 8 beta in my computer? (downloading thro net?)

எல் கே சொன்னது…

http://windows.microsoft.com/en-US/windows-8/download

Sir please check the compatibility and minimum requirement. If you not tech savy i will advise to wait

சிட்டுக்குருவி சொன்னது…

வரட்டும் பாவிச்சு பார்த்திடுவொம் இல்ல...

எல் கே சொன்னது…

நன்றி சிட்டுக் குருவி

பாலா சொன்னது…

அப்போ 7 பிளாப்பா?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எட்டு வந்தாச்சா? நல்லது. ஏற்கனவே 7 தான் பயன்படுத்தறேன். பார்க்கலாம் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து செய்யலாம்னு நினைக்கிறேன்....

எல் கே சொன்னது…

பாலா ப்ளாப் இல்லை. இன்றைய போட்டியில் புதுசா ஏதாவது செய்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எல் கே சொன்னது…

வெங்கட், கொஞ்சம் பொறுக்கலாம். டெஸ்ட் பண்ணி பாக்கனும்னு ஆசை . தரவிறக்கம் செஞ்சுட்டேன். நல்லாவே இருக்கு.

Asiya Omar சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சகோ.

ஸ்ரீராம். சொன்னது…

ஓ...எட்டு வேற வந்துடுச்சா....நான் இன்னும் எக்ஸ்பியைத் தாண்டலை!

எல் கே சொன்னது…

@ஆசியா

நன்றி

@ஸ்ரீராம்

அண்ணா, இந்தியாவில் பலருக்கு எக்ஸ்பி ரொம்ப பிடித்த ஒன்று

ஜெய்லானி சொன்னது…

வெளியிட்ட நாளிலிருந்து டிரை செய்கிரேன் முடியல ..நடுவில் நின்று போய் விடுகிரது ..:-(

இப்போ இருக்கும் பீட்டா வெர்ஷன் எத்தனை நாள் வேலை செய்யும் ..?? :-)