மார்ச் 11, 2012

மனம் போன போக்கில் - 2

 திருமணத்திற்கு முன் வரும் காதலைக் கொண்டாடும் நாம், திருமணத்திற்குப் பிறகு அந்தக் காதலை கொண்டாடுகிறோமா ?  இன்றைய இயந்திர வாழ்க்கையில் , ஏறும் விலைவாசியில் , கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய ஒருக் கட்டாயத்தில் உள்ளனர். அலுவலக வேலைகளுக்கும், வீட்டின் கடமைகளுக்கும் இடையில் அகப்பட்டு அன்பு என்ற ஒன்றை மறந்து விடுகின்றனர்.

ஒரு சில தம்பதிகள் பார்ப்பதே வாரத்திற்கு ஒரு முறை என்ற நிலையில் உள்ளனர். ஒரு கட்டம் வரை காசு காசு என்று ஓடும் மனது, பின் காணாமல்  சென்ற அன்பைத் தேட துவங்குகிறது. அந்த அன்பு எங்குக் கிடைக்கிறதோ அந்த இடத்தைத் தேடி ஓடுகிறது மனது. இது நெறைய பேருக்குப் பொருந்தும். ஒரு சிலர் விவகாரங்கள் உடல் பசியினால் ஏற்படுகிறது. அங்குமே அடிப்படைக் காரணம் என்ன என்றுப் பார்த்தால் இருவருக்கும் இடையேயான அன்புக் குறைதலே.எந்த அளவுக்கு ரகசியமாய் காப்பாற்றினாலும் இது ஒரு கட்டத்தில் வெளியே தெரியும் பொழுது ஏற்படும் விளைவுகள்தான் நாம் இன்று தினசரிகளில் படிக்கும் கள்ளக் காதலன்/காதலி கொலைகள்.

அடிப்படைத் தவறு கணவன் மனைவி இருவரிடமும் தான். என்னதான் பணம் நம் வாழ்விற்கு தேவை என்றாலும், அன்பு செலுத்த யாரும் இல்லையெனில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன உபயோகம் வாழ்வில் ?

அன்புடன் எல்கே

23 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அடிப்படைத் தவறு கணவன் மனைவி இருவரிடமும் தான். என்னதான் பணம் நம் வாழ்விற்கு தேவை என்றாலும், அன்பு செலுத்த யாரும் இல்லையெனில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன உபயோகம் வாழ்வில் ?

எல் கே சொன்னது…

உண்மைதான். நன்றி ராஜேஸ்வரி

அப்பாதுரை சொன்னது…

உண்மை. அன்பு காணாமல் போவது வாழ்க்கை இயந்திரத்தனத்தினாலோ காசுத் தேடலினாலோ அல்ல என்று நினைக்கிறேன். இருந்தாலும் அவை அன்பில் தூசு படியக் காரணங்களே.
சுருக்கமாக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

(இதையே கொஞ்சம் வக்கிரமா சொன்ன பிறகு உங்க பதிவைப் பார்த்தேன்)

எல் கே சொன்னது…

@அப்பாதுரை

படித்தேன் ரசித்தேன்

Ramani சொன்னது…

அருமையான அனைவருக்குமான சிந்தனை
தலைப்புதான் போகிற போக்கில் என உள்ளது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Asiya Omar சொன்னது…

அன்பு செலுத்த யாரும் இல்லையெனில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன உபயோகம் வாழ்வில் ?
நல்ல கேள்வி.

எல் கே சொன்னது…

@ரமணி

நன்றி சார். போற போக்குல சொல்லிட்டு போயிட்டான்னு சொல்லுவாங்க பாருங்க. அந்த மாதிரிதான்,....

எல் கே சொன்னது…

@asiya

nandri sago

பாலா சொன்னது…

உண்மைதான். எதிர்கால கனவுகளுக்காக நிகழ்கால சுகங்களை தொலைப்பவர்களே இங்கே அதிகம். மேலும் எதிர்கால கவவுகளும் கலைந்து போவதுதான் சோகம்

சென்னை பித்தன் சொன்னது…

திருமண பந்தத்தில் இருக்கும்போது அதை மீறிய ஒரு உறவை நாடும் பட்சத்தில்,இருவரும் மனம் விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வருவது நல்லது!அதை விடுத்துப் பந்தத்தில் இருந்து கொண்டே,சட்டமும் ,சமூகமும் அனுமதிக்காத ஒன்றில் ஈடுபடுவதை எந்த விதத்தில் நியாயப் படுத்துவது ,கார்த்தி!நிச்சயமாக நான் பிற்போக்கானவனல்ல!

ஸ்ரீராம். சொன்னது…

பொதுவாகவே மனம் என்பது ஒரு திருப்தி இல்லா நிலையை எட்டுவது இக்காலத்தில் சகஜமாகி விட்டது. ஆண்களில் அடல்ட்ரி செய்தியாவதை விட பெண்களின் அடல்ட்ரி செய்தியாவது அதிகமாகிறது. பெற்ற பெண்ணையே பெண்டாள நினைத்த மதுரைக் கணவனை மனைவி கொன்ற சம்பவமும் இப்போதுதான் படித்தோம்...ஆக, பணத் திருப்தி மட்டும் மனத் திருப்தியைக் கொடுப்பதில்லை.

புதுகைத் தென்றல் சொன்னது…

இப்படி வேலை பணம் என்றே ஓடும் தம்பதிகளுக்கு குழந்தைகள் இருந்துவிட்டால் அவர்களின் பாடு அதோ கதிதான்.

குடும்பம் என்பது என்ன? வீடு என்பதற்கு அர்த்தம் என்ன எல்லாம் மறந்தே போய்விட்டார்கள் கூட. நேத்துதான் பேரண்ட்ஸ் கிளப்பில் இதைப்பத்தி புலம்பியிருக்கேன்.

தேவையான பதிவு

அமைதிச்சாரல் சொன்னது…

//என்னதான் பணம் நம் வாழ்விற்கு தேவை என்றாலும், அன்பு செலுத்த யாரும் இல்லையெனில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன உபயோகம் வாழ்வில்?//

ரொம்பச்சரி..

தெய்வசுகந்தி சொன்னது…

பணத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவம் எதுக்கும் இல்லை .:(((

Vetrimagal சொன்னது…

நிறைவான சொற்களே!

இத்தனை தெளிவாக சிந்திக்கும் திறன் உள்ளவர்களின் வாழ்க்கை நிறைவாகவே இருக்கும்.

ஆனால் கணவன் மனைவி இருவரும் ஒரே மாதிரி நினைக்கவேண்டிய அவசியம் உள்ளது. தவறினால் தலைவலி தான்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

ஆக்கப்பூர்வமான சிந்தனை எல்.கே. வாழ்க்கையின் அடிப்படையே அன்புதானே.. அதை பகிர்ந்து கொள்ளக்கூட நேரமில்லையென்றால் அந்த வாழ்கைக்கே அர்த்தமில்லாமல் போவதும் யதார்த்தம்தானே...

கோவை2தில்லி சொன்னது…

நீங்க சொல்லியுள்ள கருத்துகள் யாவும் மிகச்சரியே......

எல் கே சொன்னது…

@பித்தன்

சார், நான் அதை சரி என்று சொல்லவில்லை. அவ்வாறு அர்த்தம் வருகிறதோ ?? நம்மில் பலர் அதை புரிந்துகொள்ளவில்லை. கொச்சைப் படுத்துகிறோம் என்றே சொல்கிறேன்.

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

உண்மைதான் அண்ணா. பேப்பரில் இன்று அதிகம் வரும் செய்திகளில் இதுவும் ஒன்று

எல் கே சொன்னது…

@புதுகை தென்றல்
நிகழ்காலத்தை தொலைத்துவிட்டு எதிர்காலத்தை தேடுகிறார்கள்

எல் கே சொன்னது…

@சாரல்
நன்றி

@சுகந்தி

உண்மை

எல் கே சொன்னது…

@வெற்றிமகள்
ஒரே மாதிரி சிந்திக்க வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போகும் மனம் வேண்டும்

எல் கே சொன்னது…

@பவளம்
ஆம். அடிப்படையைத் தவற விட்டுவிடுகிறோம்

@ஆதி
நன்றி சகோ