ஜனவரி 08, 2012

விழி கிடைக்குமா ?


விழி கிடைக்குமா ? அபய கரம் கிடைக்குமா ?
குருநாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமா ?....விழி...

அலைமீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே என அபயக்குரல் கேட்குமா ?...விழி..


நங்கூரம் போல் குருநாதர் கடைவிழி இருக்க
சம்சாரத் துயர் கண்டு மனம் அஞ்சுமா?
நிலையாக அன்பு வைத்து எனதெல்லாம் உனதடியில் வைத்தால்
விழியோரப் படகில் எனக்கிடம் கிடைக்குமா ?...விழி..


கோடி கோடி ஜன்மம் நான் எடுப்பேன்,
குரு உந்தன் அருள் இருந்தால்
குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன்
நினைக்காத இன்பம் பல எனைவந்து சேரும்போது
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா ?அன்புடன் எல்கே

4 கருத்துகள்:

kg gouthaman சொன்னது…

நல்ல முயற்சி. வாழ்த்துகள். நீங்கள் எழுதி உள்ளதில், இரண்டாவது சரணமும் முதல் சரணமும் இடம் மாறியுள்ளன. 'கோடி கோடி' என்று துவங்கும் சரணம் முதலிலும், 'நங்கூரம் போல்' என்று துவங்கும் சரணம் அதற்கு அடுத்தும் பாடப் படுகிறது, வீடியோவில்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விழி கிடைக்குமா ?
அபய கரம் கிடைக்குமா

அருமையான எனக்குப் பிடித்த படலின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Rathnavel சொன்னது…

அருமை.
நன்றி.

thirumathi bs sridhar சொன்னது…

அட!வாங்க
எனக்கு இதுலாம் ஒன்னும் புரியாது.ஆனாலும் பார்த்தேன்,படித்தேன்.