ஜனவரி 06, 2012

தானேவுக்குப் பிறகு - கடலூரில் இருந்து ஒரு ரிப்போர்ட்

எனது குடும்ப நண்பரும் சகப் பதிவருமான திவா அண்ணா கடலூரில் இருந்து அனுப்பிய விவரத்தை கீழே படியுங்கள்

தானே வந்து தானே போய் இன்று ஐந்தாம்நாள். இன்னும்எங்கள் ஊரில் மின்சாரம் இல்லை.இன்னும் பத்து நாள்ஆகும்போல் இருக்கிறது.கலெக்டர் ஆபீஸ்வளாகத்து இணைப்புகளை மட்டும் இப்போதைக்கு சரி செய்திருக்கிறார்கள்.மற்ற இடங்கள் ஒவ்வொருபகுதியாக வர்ம் என்கிறார்கள்.ஏறத்தாழ எல்லாம்மின் கம்பங்களும் சாய்ந்துவிட்டதாலும், எல்லாம் மின்மாற்றிகளும் விழுந்துவிட்டதாலும் மெதுவாகத்தான் எல்லாம் நடக்கும். அரசை குற்றம் சாட்ட முடியாது.எவ்வளவு தூரம் இயற்கை வாழ்வை விட்டுவெளியே வந்துவிட்டோம்? மின்சாரம் இல்லாமல் எல்லோரும் விழிக்கிறார்கள்.இருந்த கிண்றுகளை தூர்த்து வீடு கட்டிவிட்டு இப்போது தண்ணீர்  இல்லை என்றூஅலறுகிறார்கள். நகரத்தில்தான் இப்படி என்றூ நினைத்தால் எல்லாம் கிராமங்களிலும் இதே கதை என்று  தெரிகிறது. எங்கள்வீட்டில் கிணறு இருக்கிறது.தண்ணீர் தரையில்இருந்து அரை அடி 'ஆழத்தில்'இருக்கிறது.சேந்திக்கொள்ளவேண்டியதுதான்; பிரச்சினையேஇல்லை! வீட்டுஜன்னல்களை திறந்து வைத்தால்வெளிச்சமோ காற்றோ பிரச்சினையேஇல்லை! இரவுக்குமட்டும் விளக்குகளை ஏற்றிக்கொண்டுசமாளிக்க வேண்டி இருக்கிறது.வீட்டுக்குசமையல் செய்யும் பெண்மணிஇன்னும் வரவில்லை. போன்செய்து கேட்டால் ஏதோ சாக்குப்போக்கு.உண்மையை கண்டறியநாளாகவில்லை. ஊரில்எல்லோரும் செய்வதைத்தான்இவரும் செய்கிறார். அதாவதுநடந்த களேபரத்தை கொஞ்சம் கூடசரி செய்யாமல் உட்கார்ந்துகொண்டு இருக்கிறார். ஏன்?அதாவது ரெவியூ ஆட்கள்வர வேண்டுமாம். என்னசேதம் என்றூ குறிப்பெடுக்கவேண்டுமாம். அப்போதுதான்நஷ்ட ஈடு கிடைக்குமாம்.இல்லை என்றால்கிடைக்காதாம். அடக்கடவுளே!பாதிக்கபடாதநபர் என்று யாரும் இல்லை.எந்த சீமானையும்கூட தானே விட்டு வைக்கவில்லை.எல்லோருக்கும் ஏதோஇழப்பு இருக்கத்தான் இருக்கீறது.பேசாமல் எல்லோருக்குஇழப்பீடு வழங்கப்படுமென்றுஅறிவித்து இருக்கலாம்.இதேகாரணத்தால்தான் நகரில் ஒருகடையும், ஹோட்டலும்திறக்க முடியவில்லை. ஆள்வரவில்லை. திண்டாடுவதுயார்?நாம்மக்களை எப்படி பழக்கி வைத்துஇருகிறோம்? ஏற்பதுஇகழ்ச்சி என்று சொன்ன மண்ணாஇது? கடவுளேகாப்பாத்து!

காக்காகாக்காவா வாந்தி எடுத்தான்.ஏற்கெனெவே தானே புயல்ல சிக்கி தவிக்கிறவங்களுக்குஇன்னொரு கொடுமை நேற்று முன்நாள் இரவு..நெய்வேலிஅருகே காடாம் புலியூர்என்னுமிடத்தில் நில நடுக்கம்ஏற்பட்டதாக வதந்தி பரவியது.நெய்வேலியில் இருந்துஒரு கோஷ்டி மக்கள் கிளம்பிகடலூர் வந்து சேர்ந்தனர். அவர்களது கோஷ்டியைசேர்ந்த ஒருவர் இங்கே இருக்கிறார்போல் இருக்கிறது. எங்கள்மருத்துவ மனை செவிலி ஒருவர் வீட்டுக்கதவை இடித்து அவரைஎழுப்பினர். இயல்பாகவேபயந்த / கூச்சசுபாவம் உள்ள அவர் கதவை முதலில்திறக்கவில்லை. விடாமல் இடிக்கவே பயந்து கொண்டே ஜன்னல்வழியாக வெளியே பார்த்து இருக்கிறார்.

எவ்வளவுநேரமா கதவை தட்டறது? முதலில்வெளியே வாங்க, அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்லியுள்ளனர்.அவர் பகுதியை சேர்ந்த மக்கள்தான் என்று புரிந்ததும் வெளியே வந்து  இருக்கிறார். 'பூகம்பம் வரப் போகிறது; தெருவில்தான்இருக்கணும்; வீட்டுக்குள்ளே போக கூடாது' என்றுவற்புறுத்தி உள்ளனர்.முதலில் இவரும் செய்வது அறியாமல் தெருவிலேயேநின்று இருக்கிறார்.உக்காரக்கூட இடம் இல்லை. எழுபதைகடந்த இந்த மூதாட்டி ஒன்றும் புரியாமல் நாகர்கோவிலில் உள்ள தன் உறவினருக்கு போன்செய்தார். உறவினரும் இன்டர்நெட் பார்த்து ஒரு நிலநடுக்கமும் பதிவாகவில்லை;எச்சரிக்கை ஏதுமில்லைஎன்று கண்டு "நீ நிம்மதியாக உள்ளே போய்படுத்துக்கொள். ஒருபூகம்பமும் வராது. யாரும்கேட்டால் "வந்தால்வரட்டும், என்தலை மீது இடிந்து விழட்டும்என்று சொல்லிவிடு" என்றுசொல்லியுள்ளார். இவரும் அப்படி செய்ய பார்க்க முடியவே முடியாது, நீங்கள் வீட்டுக்குள் போக நாங்கள் விட மாட்டோம் என்று வற்புறுத்தி தெருவிலேயே நிற்க வைத்துஉள்ளார்கள். ஒருவாறாக விடிகாலையில் மெதுவாக மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.எங்கள் வீட்டுக்கு விடிகாலை நாலு மணிக்கு போன் வந்தது. பூகம்பம் வருவதாக சொல்லுகிறார்கள்என்று. ஏற்கெனெவே என் மடிக்கணினி மின் சக்திஇல்லை என்று வேலை செய்ய மறூத்துஇருந்தது. ஏதேனும்கொஞ்சமாவது முடிகிறதா என்று பார்த்தால் நல்ல வேளையாக எச்சரித்தாலும் ஒரு நிமிடம்வேலை செய்தது. அதற்குள்ஒரு மீடியாவிலும் அப்படிஎச்சரிக்கையோ பூகம்பம்ஏற்பட்டதாக செய்தியோ இல்லைஎன்று தெரிந்து கொண்டேன்.அதற்குள் ஆஸ்பத்திரியில்இருந்து யாரோ இப்படி செய்திசொன்னதாக போன். அவர்களைஆசுவாசப்படுத்திவிட்டு என்வேலையை கவனிக்க ஆரம்பித்தேன்.காலையில் சிலமீடியாக்கள் இதை பெரிதுபடுத்தியதாக கேள்விப்பட்டேன்.மின்சாரம் இல்லாமல் டிவி முதலியன 5 நாட்களாக பார்க்கமுடியவில்லை. அதனால்அதை உறுதிப்படுத்த முடியவில்லை.உண்மை பேரிடர்களை விட இந்த காக்காகாக்காவா வாந்தி எடுத்தான் ரீதியிலான வதந்திகள் பெரியபிரச்சினையாக இருக்கிறது

கடலூருக்கு என்ன தேவை என்று கேட்டு  சில தொலை பேசி அழைப்புகள் வந்தன.ஒன்றும் தேவையில்லை. அரசு அமைப்புகள் வேலை செய்து கொண்டு இருக்கின்றன. எல்லாம் சரியாக நாள் ஆகும். பல இடங்களிலும் தண்ணீர் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. ரீச் சந்திரா போன் செய்து விசாரித்தார். கிணறுகளை தூர்த்துவிட்ட நிலையில் தண்ணீர் இல்லை. இருந்தால்தானே சுத்தி செய்ய? இருந்தாலும் பெரும்பாலும் ஜெனரேட்டர்கள் உதவியுடன் மோட்டர்கள் இயக்கப்பட்டு நீர் வினியோகம் ஆகிறது. எங்களுக்கு இது இல்லை அது இல்லை என்று கூப்பாடு போடுவது அரசு அறிவிக்கும் நிவாரணம் தமக்கும் கிடைக்க வேண்டும் என்றுதான். மோடி உடனடியாக நிறைய  மின்கம்பங்களை அனுப்பி இருக்கிறார். 'குஜராத்' என்று கம்பத்தின் பக்கத்தில் எழுதி இருப்பதை பார்த்து கேட்டதில் தெரிந்தது.

பி.கு இதன் ஆதரவில் தீண்டத்தகாத மின்சாரம்தான் வினியோகம் ஆகும் என்பதை நினைவில் கொள்ளவும்!


அன்புடன் எல்கே

10 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

புதுகையிலும் இதே போன்ற சிரமங்கள். அங்கு வசிக்கும் நண்பர் பகிர்ந்து கொண்டிருந்தார். அரசு வேகமாகவே செயல்பட்டு 3ஆம் நாள் மின்சாரத்தைக் கொடுத்ததாகச் சொன்னார்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

அரசியல் செய்வது சில பேருக்கு ஆகிவந்த கலையாகிவிட்டது.
அவர்கள் பேசுவதை வைத்தே கண்டு பிடிக்க முடிகிறது. நான்கு நாட்களாகத் தண்ணீரே குடிக்காதவர்கள் இவ்வளவு கத்திப் பேசமுடியுமா.:(
விரிவான செய்தியைக் கொடுத்ததற்குத் தம்பி வாசுதேவனுக்கும் உங்களுக்கும் ரொம்ப நன்றி கார்த்திக்.

kg gouthaman சொன்னது…

கடலூரில் தானே புயலால் மின் விநியோகம், குடி நீர் விநியோகம் பாதிக்கப் பட்டுள்ளன என்று தெரிந்தவுடனேயே, என்னுடைய ஒன்று விட்ட சகோதரர், ஃபோன் செய்து, கடலூரில் உள்ள தன சம்பந்திகள், அவர்கள் தாய் தந்தையர் என்று எல்லோரையும் சென்னை குரோம்பேட்டைக்கு வந்து தங்கும்படி அழைத்து, அவர்களும் வந்து தங்கியுள்ளனர்.

ஸ்ரீராம். சொன்னது…

சுனாமியின் போது வரித்து கட்டிக் கொண்டு உதவி செய்ய வந்த அமைப்புகள் இப்போது எங்கே போயின என்றொரு கேள்வி தினமலரிலோ தினமணியிலோ பார்த்தேன்.

அப்பாதுரை சொன்னது…

படிக்கவே கஷ்டமாக இருக்குங்க. அசல நிலையை நினைச்சுக் கூட பார்க்க முடியவில்லை.
'நஷ்ட ஈடு'காக wait பண்ணுவது எரிச்சலூட்டினாலும் யதார்த்தம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

என்னுடைய சில நண்பர்களும் நெய்வேலி, கடலூர் மற்றும் பாண்டி பற்றிய விஷயங்கள் சொன்னார்கள்...

இயற்கையின் சீற்றத்திற்கு முன் மனிதன் எம்மாத்திரம்.....

geethasmbsvm6 சொன்னது…

அவங்க சுற்றுப்புறத்தைச் சரி செய்யறதுக்குக் கூட அரசு தான் வரணும்னு எதிர்பார்க்கிற அளவுக்கு மக்களைக் கொண்டுபோனது யார்? நம் கடமைனு எதுவும் இல்லையா? :(((((((( எப்போ மாறும் இந்த நிலைமை? யாரானும் தலை எடுத்துச் செய்ய ஆரம்பித்தால் அவங்க சந்திக்கும் விமரிசனங்கள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

geethasmbsvm6 சொன்னது…

தொடர

வித்யா சொன்னது…

:((

விரிவான பகிர்விற்கு நன்றி.

ஹுஸைனம்மா சொன்னது…

//அரசை குற்றம் சாட்ட முடியாது//

அளவுக்குமிஞ்சி பற்பல இலவசங்களை, அவசியமில்லாதபோதும் வாரி வழங்கி, நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தியதோடு, மக்களையும் எப்போதும் அரசை எதிர்ப்பார்க்கும் மெண்டாலிட்டியோடு இருக்கப் பழக்கிவிட்டார்கள்.

தேர்தல் என்றாலோ, முதல்வர் வருகை என்றாலோ சில மணிநேரங்களில் சரிசெய்யப்பட்டுவிடும் சாலைகளும், பிற வசதிகளும், பொதுமக்களுக்கு என்றால் மட்டும் தாமதமாவது எந்த அரசு வந்தாலும் மாறுவதில்லை. நாமும் இவற்றோடு வாழப் பழகிவிட்டோம்.

//தீண்டத்தகாத மின்சாரம்தான் வினியோகம்//

மின்சாரம் எப்பவுமே ”தீண்டத்தகாதது”தானே எல்.கே.? :-))))))