ஜனவரி 30, 2012

மனம் போன போக்கில் - 1

 நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். எப்பொழுதுமே ஆஞ்சநேயர் கோவில்களில் எனக்கு மன நிம்மதி கிட்டும். அதனாலேயே மனம் மிக சஞ்சலம் அடையும் சமயங்களில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வது வழக்கம். நங்கநல்லூர் சென்று வெகு நாட்கள் ஆகிவிட்டதால் இந்த முறை அங்கு சென்று வரலாம் என்ற எண்ணத்தில் மாலையில் சென்றிருந்தோம். அப்பொழுதுதான் கோவில் திறந்திருந்தக் காரணத்தினால் கூட்டம் குறைவாகவே இருந்தது. வழக்கமான தரிசனம் சிறிது நேரம் தியானம் எல்லாம் முடிந்து , உள்ளிருந்த கிருஷ்ணரை தரிசித்து வலம் வருகையில் நடந்தது முதல் சம்பவம்.

முன்பு குங்குமம் குடுக்க ஒருவரை நியமித்திருந்தனர். இப்பொழுது அப்படி யாரையும் காணவில்லை. அதற்கு பதில் ஒரு ஸ்டேண்டில் குங்குமத்தை கொட்டி மேலே துவாரமிட்டிருந்தனர். இந்த முறையில் குங்குமம் அதிகம் வீணாகாது என்றாலும், அர்ச்சகர் கையில் குங்குமம் பெறுவது என்பதே பொருத்தமாக இருக்கும் என்பது எனது எண்ணம். அதற்கு காரணம் , அவர் குங்குமம் தரும்பொழுது ஏதவாது ஆசிர்வாதத்துடன் தான் தருவார். ஆதுதான் பொருத்தமாக இருக்கும். இப்படி வீட்டில் போட்டு வைத்துக் கொள்வது போல் எடுத்து வைத்துக் கொள்வது கோவில்களுக்குப் பொருந்தாது. அது சரியுமல்ல .

அடுத்தது , இன்னொரு அறிவிப்புப் பலகை வைத்திருந்தனர். அதாவது அந்தக் கோவிலில் எவை எவை பூஜைக்கு ஏற்கப்படுவதில்லை என்று . அதில் கற்பூரம் நூலினால் கட்டப்பட்ட மாலைகள் இரண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் அதில் கூறப்பட்டிருந்த "துளசி மாலை, பூ மாலை மற்றும் சில " ஏற்கக் கூடியதாக இல்லை. எளியனும் எளியனாகிய கண்ணன் " ஒரு துளசி இலையோ இல்லை ஒரு உத்தரணி தண்ணீரோ " தனக்கு நைவேத்தியமாக தந்தால் போதும் என்று சொல்லி இருக்க, கோவில் நிர்வாகத்தினர் இப்படி நடந்துக் கொள்வது சரியல்ல.

நிர்வாகத்தின் மேல் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டுக் குறைகள் இருந்தாலும், கோவிலைத் தூய்மையாக வைத்துள்ளனர். அதற்கு கண்டிப்பாக பாராட்டுத் தெரிவித்தே ஆக வேண்டும். இன்னொன்று , பொதுவாக பொது இடத்தில் குப்பைப் போடுவதில் ஆர்வமுள்ள நம் மக்கள் , இங்கு அப்படி நடக்கவில்லை. இதுவே அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ள கோவில் என்றால், கேட்பார் யாருமில்லை என்ற எண்ணத்தில் குப்பை போடுவோம். இங்கே தனியார் நிர்வாகம்  என்றக் காரணமா ? இல்லை கட்டுப்பாடுகளும் கண்காணிப்பும் இருந்தால் மட்டுமே விதிகளைப் பின்பற்றுவோம் என்ற எண்ணம் காரணமா ??

விதி என்றவுடன் , இன்னொன்று நினைவிற்கு வருகிறது. ட்ராபிக் சிக்னல்களை பற்றி திவ்யாவிற்கு சொல்லிக் கொடுத்திருந்தேன். இன்று சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த பொழுது, ஒரு அரசாங்க பேருந்து, சிகப்பை மதிக்கமால் சென்றது. அதைப் பார்த்த திவ்யா " ரெட் போட்டிருந்தா நிக்கணும்னு சொன்ன இல்ல,அப்ப ஏன் இந்த பஸ் நிக்காம போகுது ? என்றுக் கேட்டாள். என்னிடம் பதில்தான் இல்லை.

என்ன சொல்வது நண்பர்களே ? பதில் கூறுங்கள்...

இது  அதீதம் இதழில் வந்துள்ளது. அதற்கான சுட்டி

மனம் போன போக்கில் - 1

அன்புடன் எல்கே

14 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

அர்ச்சகர் கையில் குங்குமம் பெறுவது என்பதே பொருத்தமாக இருக்கும் என்பது எனது எண்ணம். அதற்கு காரணம் , அவர் குங்குமம் தரும்பொழுது ஏதவாது ஆசிர்வாதத்துடன் தான் தருவார். அதுதான் பொருத்தமாக இருக்கும்.

சரிதான். அம்மாதிரி குங்குமம் வைத்திருப்பது பிற நேரங்களில் வரும் பக்தர்கள் எடுக்க வசதியாக.. அதாவது கோவிலுக்கு வந்து விட்டு குங்குமம் இல்லை என்று வருத்தமாய்ப் போக வேண்டாம் என்றுதான். அர்ச்சகர் இருக்கும் நேரங்களில் அவரே தருவது மனசுக்கு ஆறுதல்.

LIC SUNDARA MURTHY சொன்னது…

கார்த்திக் பதிவு அருமையாக உள்ளது நேரில் தரிசித்த ஆத்மா திருப்தியும் கிடைத்தது தொடரட்டும் தங்கள் பணி தங்கள் புதல்வி இச்சிறு வயதிலேயே பெரிய கேள்விகள் கேட்டு உண்மை நிலையை எடுத்துரைக்க முடியாமல் உள்ளது பற்றிய ஆற்றாமையும் புலப்படுகிறது திருத்தன் தயார் ஆனால் திருந்துவது யார் ? ? ? ? ? ?
licsundaramurthy@gmail.com
www.salemscooby.blogspot.com

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பல கோவில்கள் இப்போது மாடர்னாக ஆகிவிட்டது கார்த்திக்... :)

திவ்யா கேட்ட கேள்வி நியாயமானதே... பதில் சொல்லத்தான் முடிவதில்லை... :(

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அவர் குங்குமம் தரும்பொழுது ஏதவாது ஆசிர்வாதத்துடன் தான் தருவார்

அந்த ஆசீர்வாத்திற்குத்தானே மனம் நிறைகிறது!

அப்பாவி தங்கமணி சொன்னது…

Well said... Smart Dhivya..:)

ஸ்ரீராம். சொன்னது…

ந. ந ஆஞ்சநேயர் கோவிலில் குங்குமம் எடுக்கும் அந்த முறை நீண்ட நாட்களாக இருந்து வருகிறதே...கையில் தேவைக்கு அதிகமாய் உள்ள குங்குமத்தை 'வீண் செய்யக் கூடாது, ஆகாது' என்று மனச் சமாதானம் சொல்லி அங்கிருக்கும் தூண் சுவர்களை வீணடிப்பது நமது வழக்கம். அது இங்கே நிறுத்தப் பட்டிருக்கிறது. இட்டுக் கொள்ளுமளவுதான் குங்குமை விரலில் வரும்!

குப்பை உள்ளே இல்லை சரிதான், ஆனால் வெளியில் வந்த உடன் பிரசாதத்தைச் சாப்பிட்டு விட்டு தொன்னைகளைக் கூடையில் போடாமல் தெரு முழுக்க இறைத்திருப்பதைக் காணலாம்!

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

அண்ணா , நான் ரொம்ப நாள் கழித்து சமீபத்தில்தான் போனேன் .

புதுகைத் தென்றல் சொன்னது…

இங்கேயும் கோவிலில் குங்குமத்தை போட்டு வைத்துவிடுவதை பார்த்திருக்கிறேன்.

திவ்யா கேள்விக்கு பதில் சொல்லிவிட முடியாது. :(

RAMVI சொன்னது…

நான் நங்கநல்லூர் கோவிலுக்கு போய் ரொம்ப நாட்கள் (வருடங்கள்) ஆச்சு.
தற்போது கோவில் எப்படி இருக்குன்னு தங்களின் பதிவிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்த்தது.

திவ்யா கேள்விக்கு பதில் சொல்ல்வது ரொம்ப கஷ்டம்தான்,நாம ஏதாவது சொன்னாலும் அதிலிருந்து இன்னொரு கேள்வி வரும்.

பாலா சொன்னது…

இது இந்தியா கலாச்சாரம் என்று குழந்தைக்கு சொல்லி இருக்கலாமே?

thirumathi bs sridhar சொன்னது…

கோவிலுக்கு போனால் மனதார தரிசிச்சு,வணங்கி,தியானிச்சிட்டு வந்தாலே போதும்னு நினைப்பேன்.காரணம் பல கோவில்களில் பக்தர்கள் சமர்ப்பிக்கும் மாலை போன்றவைகள் சில நிமிடங்களில் அகற்றப்பட்டு பக்கத்தில் குவிக்கப்படும் அல்லது வீசப்படும்.அந்த பொருளை வாங்கின பைசாவிற்கு யாருக்காவது ஒரு வேளை சாப்பாடு வாங்கி கொடுத்தாலாவது ப்ரயோசனம் இருந்திருக்கும்னு நினைத்ததுண்டு.

பல கோவில்களில் சும்மா வருபவர்களுக்கெல்லாம் பூசாரி திருநீறு குங்குமம் கொடுப்பதில்லை.சாமி குங்குமம் கொடுங்கன்னு கேட்டாலும் அதோ அங்கிருக்கு எடுத்துக்கங்கன்னு பதில் வந்ததை பார்த்துள்ளேன்.(மனசாட்சி உள்ள பூசாரி எழுந்து தரலாம்)அடுத்த நபர் அர்ச்சனை அல்லது மற்ற சமர்ப்பணம் கொண்டுவந்தால் பூசாரி உபசரிப்பு தீபாராதனை எல்லாம் நடைபெறும்.இப்ப கடவுள் யாருக்கு அருள் தருவார். இன்னும் பல பிரச்சனை.இதெல்லாம் பேரும் புகழும் பெற்ற கடவுளுக்கும்,கோவிலிலும் நடைபெறுகிறது.

நமக்குன்னு குங்குமம் வச்சுருக்காங்கன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.

நீங்க சொல்லிக்கொடுத்ததை கரெக்ட்டா புரிஞ்சிட்டிருக்காள்.சோ நீங்க ரெண்டு பேரும் பாஸ்.திவ்யாவின் கேள்விக்கு பதிலும் பாஸ்.

சாகம்பரி சொன்னது…

நான் சென்னை வரும்போதெல்லாம் நங்கநல்லூர் ஆஞ்சனேயரைத்தான் தரிசிப்பேன். பிரமிப்புடன் இருப்பதால் இது போன்ற கேள்விகள் எழவில்லை. இது எல்.கே சார் ஸ்பெஷல். குங்குமம் பற்றி குறிப்பிட்டது சரியென்றாலும், வேறுபட்ட பார்வையும் என்னிடம் உண்டு. தட்டில் பணம் விழும் அளவிற்கு வாழ்த்துக்கள் வழங்கும் அர்ச்சகர்களை தவிர்க்க முடிகிறது அல்லவா?. நன்றி

எல் கே சொன்னது…

அனைவருக்கும் நன்றி..

ஒரு சில விஷயங்களை நான் பார்க்கும் கோணம் வேறு. அதுவும் குறிப்பாய் அர்ச்சகர் விஷயத்தில். அவர்கள் செய்வதை சரிஎன்ன்று சொல்ல வரவில்லை.

அரசாங்கம் நிர்வகிக்கும் கோவில்களில் அர்ச்சகர்களுக்கு சம்பளம் வெகு குறைவு. அர்ச்சனை சீட்டு காசிலும் ஒரு பகுதி அரசாங்கத்துக்கு சென்று விடும்.

ஆக தட்டில் விழும் காசை நம்பியே அவர்கள் உள்ளனர். அதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளவும்

புதுகைத் தென்றல் சொன்னது…

எல்கே,

உங்க கருத்தை நான் ஆமோதிக்கிறேன். இங்கே (ஆந்திராவில்) பல கோவில்களில் தட்டில் விழும் பணம் கூட கோவிலுக்குத்தான் சேர்ந்தது. அதை உடனே எடுத்து கோவில் உண்டியலில் போட்டு விடுவதை பார்த்திருக்கிறேன்.

பிரசாதம் கொடுக்கும் அர்ச்சகர் கையில் கொடுக்கப்படும் பணம் தான் அவருக்கு சொந்தமானது.