செப்டம்பர் 09, 2011

குண்டுவெடிப்பும் மற்றவையும்

இந்திய மக்களுக்கு குண்டுவெடிப்புகள் சாதாரண நிகழ்வாய் மாறிக் கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த மும்பை வெடிகுண்டுகள் பற்றிய விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்று தெரியாத நிலையில் இப்ப்பொழுது டில்லி ஹைகோர்ட் வாசலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. வழக்கமான கண்டனங்களும் , இதை உறுதியுடன் எதிர்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோள்களும் வாசிக்கப்பட்டு விட்டன. இன்னும் சிலநாட்கள் பஸ்,ரயிலில் செல்வோர் அனைவரும் சோதிக்கப்படுவார்கள் . அதன்பின் மீண்டும் ஒரு முக்கியப் பண்டிகையோ இல்லை ஒரு குண்டுவெடிப்போ நிகழாத வரை ரயில்வே ஸ்டேஷன்களில் சோதனை செய்வதற்கென்று நிறுத்தப்பட்டிருக்கும் போலீசார் அருகில் இருக்கும் நாற்காலிகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பர். அங்கிருக்கும் மிஷின்கள் வேலை செய்கிறதா என்றுக் கூடத் தெரியாது. அப்படிப்பட்ட நிலையில்தான் அவை இருக்கின்றன.

மீண்டும் நான்கு மாதம் கழித்து மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நிகழும்.இப்ப முதலில் இருந்து படிச்சு பாருங்க மறுபடியும்.

உக்கடத்தில் புதைந்த வீடுகள்

உக்கடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் பூமிக்குள் புதையத் துவங்கியுள்ளன. மொத்தம் 2904 வீடுகள் 21 ப்ளாக்களாக கட்ட திட்டமிடப்பட்டது. அதில் இது வரை மூன்று ப்ளாக் இதுபோல் மண்ணில் புதையத் துவங்கியுள்ளது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது.

அங்கு வீடுகட்ட துவங்கும் முன் ,அங்குள்ள மண் எத்தகையது என்று முறையாக பரிசோதிக்கப்பட்டதா என்றுத் தெரியவில்லை.கல்லூரியில் இருப்பவர்களை வைத்துப் பரிசோதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது . அந்த ஆய்வு எந்த அளவு நம்பிக்கையானது என்றுத் தெரியவில்லை. 15 செ மீ அளவிற்கு வீடுகள் பூமியில் இறங்கியுள்ளன. அங்கு யாரும் வசிக்கததால் உயிரிழப்பு நிகழவில்லை.

இப்பொழுது அண்ணா பல்கலைகழக பேராசிரியர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து அங்குள்ள அணைத்து வீடுகளும் பரிசோதிக்கப்படும் என்று சொல்லியுள்ளனர். இனியாவது பொதுமக்கள் உயிரோடு விளையாடுவதை அரசாங்க அதிகாரிகள் நிறுத்திக் கொள்வார்களா ??

சட்டசபை

தினமும் சட்டசபை கூடுவதும் தி மு க வினர் வெளிநடப்பு செய்வதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. சபாநாயகர் இரண்டுக் கட்சியினரையும் சமமாக நடத்தவேண்டும். ஆளும் கட்சியினருக்கு மட்டுமே வாய்ப்புகள் அளிக்கக்கூடாது. அதேபோல் திமுகவினரும் சிறு சிறு விஷயங்களுக்கும் வெளிநடப்பு செய்வதைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.

அதீதத்தில்

பாஞ்சாலி சபதம்: பகுதி 1: பாடல்- 2

அன்புடன் எல்கே

12 கருத்துகள்:

சேட்டைக்காரன் சொன்னது…

//மீண்டும் நான்கு மாதம் கழித்து மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நிகழும்.இப்ப முதலில் இருந்து படிச்சு பாருங்க மறுபடியும்.//

ஏன் கார்த்தி இப்படியொரு குரூரம் உங்களுக்கு? நாமல்லாம் சென்னையிலே இருக்கோம். அதுனாலே மும்பை,தில்லியிலே செத்தவன் குடும்பத்துலே அழுற சத்தம் நம்ம காதுலே விழலியோ? :-((

எல் கே சொன்னது…

சேட்டை குரூரம் இல்லை ... அதுதானே நடக்குது ??? அதைத்தானே சொன்னேன். மும்பை குண்டுவெடிப்பு என்னாச்சு ? இதுவரைக்கும் நோ இன்பார்மேஷன் :(

RAMVI சொன்னது…

ஆம் பாதிப்பு ஏற்பட்டதற்கு அப்புறமா செய்யப்படும் வேலைகள் ஏற்பாடுகளினால் பயன் ஏதும் இல்லை. முன்னதாகவே விழிப்புடன் இருக்க வேண்டாமா?

பத்மநாபன் சொன்னது…

தீபாவளி, கார்த்திகை மாதிரி குண்டு வெடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.. பயங்கரவாதத்திற்கு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்..

உக்கடம் கட்டிடங்கள் இறங்குவது கொடுமை.. செம்மொழி காலத்தில் அவசர அவசரமாக அள்ளி தெளித்துக் கொண்டிருந்தார்கள்…. இப்படி அம்மன்குளத்தில் கூட அவசரக் கோலம் போட்டார்கள்… எல்லாவற்றையும் ஆராய்வது நல்ல முடிவு……

சுசி சொன்னது…

எப்போதான் இந்த உயிர்களோடு விளையாடும் விளையாட்டை அரசு நிறுத்தப்போகின்றதுவோ :((((

ஸ்ரீராம். சொன்னது…

உயிரோடு விளையாடும் வாக்கு வங்கி அரசியல்.உயிரை விட பதவி பெரிது. வாழ்க ஜன நாயகம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குண்டு வெடிப்பு - மக்கள், அதுவும் தில்லி மக்கள் இதை சர்வ சாதாரணமாக, எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்... அன்று மாலையே கூட மார்கெட் பகுதிகளில் எப்போதும் போலவே ஆள் நடமாட்டம் அதிகம்...

அரசாங்கம் மட்டுமல்ல, குண்டு வெடிப்பால் எதையும் சாதிப்போம் என்று நினைப்பவர்களும் மாறும் வரை இது நிகழத்தான் செய்யும்.

புதையும் வீடுகள் - லஞ்சம், ஊழல், பணம் --- எல்லாம் பல அடி பாயும் என்று நிரூபிக்கிறார்கள்...

RVS சொன்னது…

எல்.கே... குண்டுவெடிப்பு...

பாம் வச்சுட்டீங்களே எல்.கே!!

சே.குமார் சொன்னது…

உயிரை விட பதவி பெரிது.

வாழ்க ஜன நாயகம்.

அப்பாதுரை சொன்னது…

திமுகவில் வெளிநடப்பு சுவாரசியமாக இருக்கிறது. அவர்களுக்கு வெளியிலேயே ஒரு பந்தல் போட்டுக் கொடுத்துவிட வேண்டியது தானே?

அப்பாதுரை சொன்னது…

கல்லூரியில் ஹிந்தி வகுப்பு. (அப்லாம் களக நாலுங்க). முதல் வருடம் முழுதும் தினம் attendance முடிந்ததும் வெளிநடப்பு செய்துடுவோம். இரண்டாம் வருடம் ஒரு தடவை வெயிலுக்கு அஞ்சி நாங்கள் உள்ளே இருந்த போது பண்டிட் பக்கத்தில் வந்து ஆங்கிலத்தில், "எதுக்கு உங்க ரெகார்டை பாழ் படுத்துக்கிறீங்க?" என்றார். வெளிநடப்பைத் தொடர்ந்தோம்.

ஹுஸைனம்மா சொன்னது…

//மீண்டும் நான்கு மாதம் கழித்து மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு//

படிக்க பக்கென்று இருந்தாலும், நிலவரம் அப்படித்தான் இருக்கிறது. பல குண்டுவெடிப்புகளுக்கு இன்னும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை. இதிலே தொடரும் வெடிப்புகள், பல அப்பாவிகளின் வாழ்வில் விளையாடுகின்றன.

உக்கடம் - வீடு புதைவது - இது கொஞ்ச வருஷம முன்னேயே நடந்ததாச்சே? இல்லை அதேபோல இப்ப நடந்த இன்னொண்ணா? :-(((((((

சட்டசபையும், பார்லிமெண்டும் - விடாக்கொண்டன்கள், கொடாக்கொண்டன்கள் நிறைந்திருக்கும் சபைகளாகிவிட்டன. அனுப்பிவைத்த நாம் எப்பவும்போல மகாமடையர்களாய் வெளியே!!