Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

உறுதி

அங்கு நிலவிய அமைதி, அவனை பயமுறுத்தியது. எப்பொழுதும் கலகலவென இருக்கும் அந்த இடம் நிசப்தத்தின் பிடியில் இருந்தது. தான் சொன்ன செய்தி, இத்தக...

அங்கு நிலவிய அமைதி, அவனை பயமுறுத்தியது. எப்பொழுதும் கலகலவென இருக்கும் அந்த இடம் நிசப்தத்தின் பிடியில் இருந்தது. தான் சொன்ன செய்தி, இத்தகையதொரு அமைதியை விளைவிக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இதற்கு முற்றிலும் எதிர்விதமான சூழ்நிலையையே எதிர்பார்த்து, அதற்கு தன்னை தயார்படுத்தி இருந்தான். அதனால், இப்பொழுது என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தான்.

மைதிலி, அவனுடைய அம்மா, கண்களில் எப்பொழுதும் கரை உடைந்து பாயக்கூடிய நிலையில் தளும்பும் கண்ணீருடன் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் அப்பாவோ, எந்த உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாமல் தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பவரைப் போல் அமர்ந்திருந்தார். அவனின் தங்கை அம்ருதா, அங்கு நடந்துக் கொண்டிருந்த மவுனப் போராட்டத்தில் தான் பேசலாமா இல்லை பேசினால் தவறாகுமா என்றுப் புரியாமல் விழித்தாள்.

பல மணி நேரம் போல் கழிந்த பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அவன் தந்தை நரசிம்மன் நிதானமாகப் பேசத் துவங்கினார்.

"ஆல்ரைட், ரைட்டோ தப்போ நீயா முடிவு பண்ணிட்ட. அந்தப் பொண்ணை ஆத்துக்கு அழைச்சிண்டு வா. பேசிப் பாக்கலாம்."

இடையில் பேசத் துவங்கிய தன் மனைவியை, "வேற என்ன பண்றது ? அந்தப் பொண்ணுக்குதான் வேற யாரும் இல்லைன்னு சொல்றான். அப்ப அந்தப் பொண்ணுகிட்டதான பேசியாகணும்" என்று சொல்லி அமைதியாக்கி விட்டு" அவசரப்பட்டு நாளைக்கே கூட்டிண்டு வராத, நல்ல நாளா பார்த்து சொல்றேன், அன்னிக்கு அழைச்சிண்டு வா" என்று கூறி நிறுத்தி, பின் "அழைச்சிண்டுதான் வரச் சொன்னேன்" என்று மீண்டும் ஒருமுறை அழுத்திக் கூறி, இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல் அங்கிருந்து எழுந்து சென்றார்.

அவர் அங்கிருந்து செல்வதற்காகக் காத்திருந்தவள் போல், புலம்ப ஆரம்பித்தாள் மைதிலி. "இந்தக் காலத்தில் பெத்தவா பேச்செல்லாம் யாரு கேக்கறா? நாலு எழுத்து படிச்சிட்டா எல்லாம் தனக்கேத் தெரியும்னு ஒரு மிதப்பு உங்களுகெல்லாம். உன்னைச் சொல்லி பிரயோஜனம் இல்லைடா, அவளை அழைச்சிண்டு வரச் சொன்னாரே இந்த பிராமணன், அவரைச் சொல்லணும்."
"என்ன அங்க சத்தம் ?" வெளியில் மைதிலியின் குரல் கேட்டு, உள்ளிருந்து ஒலித்தது நரசிம்மனின் குரல்.

"நான் ஏதோ புலம்பிண்டு இருக்கேன். அதுக்குக் கூட இந்தாத்தில் நேக்கு உரிமை இல்லையா?" மகனின் காதலியைத் தன் கணவன் வீட்டுக்கு அழைத்து வர சொல்லி விட்டாரே, அதைத் தடுக்க இயலவில்லையே என்ற ஆதங்கம் குரலில் வெளிப்பட்டது.

வெங்கட், மைதிலி, நரசிம்மனின் சீமந்தப் புத்திரன் அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அப்பா, வீட்டுக்கு அழைச்சிண்டு வரச் சொன்னதே பாதிக் கிணறைத் தாண்டியதைப் போல் உணர்ந்தான். எப்படியும் அம்மாவை, அப்பா சரிகட்டி விடுவார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதனால் அம்மாவின் புலம்பலைக் கண்டு கொள்ளாமல் அவன் பாட்டுக்குத் தன் அறையினுள் புகுந்தான்.

"வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, அவளை மொதல்ல ஒருத்தன் கைல பிடிச்சுக் கொடுக்கணுமேன்னு இந்த வீட்ல யாருக்காவதுக் கவலை இருக்கா", மைதிலியின் புலம்பல் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

"அம்மா! இப்ப எனக்கு கல்யாணம் பண்ணுங்கன்னு நான் கேட்டேனா? அதான், இன்னும் ஒரு வருஷம் இருக்குல்ல படிப்பு முடிய? அப்புறம் ஏன், இப்பவே ஆரம்பிக்கற. அதெல்லாம் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் தெரியம். அவங்க பார்த்துப்பாங்க."  பட்டாசாய் வெடித்து விட்டு அங்கிருந்து, தன் அண்ணனின் அறைக்குள் புகுந்தாள், எம் பி ஏ படித்துக் கொண்டிருந்த அம்ருதா.

வெங்கட்டின் அறைக்குள் புகுந்தவள், " டேய் யாருடா அது ? போட்டோவ காமிடா."

"போட்டோலாம்  இல்லை"

"எனக்கு சின்ன வயசிலேயே காது குத்தியாச்சு. ஒழுங்கா மன்னியோட போட்டோவைக் காட்டு இல்லை..."

"விட மாட்டியே! பார்த்துக்கோ" என்று சொல்லித், தன் செல்போனில் இருந்த அவனோட காதலி ஸ்வர்ணாவின் போட்டோவைக் காண்பித்தான்.

"பேருக்கேத்த மாதிரியே தங்க விக்ரகம் மாதிரி இருக்காடா மன்னி. ஆமா, உன்னை போய் எப்படி லவ் பண்ணா மன்னி. பாவம்டா உன்கிட்ட மாட்டிக்கிட்டு..."

"பார்த்து பேசுடி. அம்மா காதில் நீ மன்னினு சொல்றது விழுந்தது, நீ காலி. அம்மாக்கு இதில இஷ்டம் இல்லை."

"அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே, அதெல்லாம் அப்பா பார்த்துப்பா."

"எனக்கென்னவோ கொஞ்சம் பயமா இருக்குடி, என்ன சொல்வாரோன்னு."
"நீ ஏன்டா கவலைப்படற... அதெல்லாம், ஸ்வர்ணா பார்த்துப்பா. "

"என்னமோ ரொம்ப நாள் தெரிஞ்சமாதிரி சொல்ற?"
"உன்னையே லவ் பண்ணி சமாளிச்சிட்டு இருக்கா. இவாளையெல்லாம் சமாளிக்க மாட்டாளா என்ன?"
"உனக்கு எல்லாமே ஜோக்தான். நீ நினைக்கற மாதிரி அவ்ளோ சுலபம் இல்லை."

"சரி சரி, ரொம்ப பீல் பண்ணாத, எல்லாம் நல்ல படியா நடக்கும்"

"நடந்தா நல்லது."

அவள் சென்றுவிட, வெங்கட்டின் நினைவுகள் சில வாரங்களுக்கு முன் நடந்ததை அசை போட்டது.

இரண்டு வருடக் காதலை, அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டியக் கட்டாயத்தில் இருவரும் இருந்தனர்.

"ஒரு வேளை எங்க வீட்ல ஒத்துக்காட்டி வீட்டை விட்டு வெளியே வந்துக் கல்யாணம் பண்ணிக்கலாமா? உனக்கு அது ஓகேவா?"

"என்ன பேசற வெங்கட்? உன்னைப் பெத்து வளர்த்தவங்க அவங்க. கண்டிப்பா எதிர்ப்புச் சொன்னாலும் நாமதான் போராடி சம்மதிக்க வைக்கணும்."

"ஒரு வேளை, போராடியும் சம்மதம் கிடைக்காட்டி.."

"அதெப்படி கிடைக்காம போகும்? நம்பிக்கைதான் வாழ்க்கை. அவங்கச் சம்மதம் இல்லாமல் நம்ம கல்யாணம் இல்லை."

"அப்ப உன் முடிவுல எந்த மாற்றமும் இல்லை"

"கண்டிப்பா இல்லை."

ஒரு பக்கம் ஸ்வர்ணாவின் பிடிவாதம், மற்றொரு பக்கம் அம்மாவின் பிடிவாதம். இரண்டுப் பெண்களின் பிடிவாதத்துக்கு இடையில் தன் வாழ்வு ஊசலாடுவதாய் வெங்கட் நினைத்தான்.

நடுவில் இருந்த இரண்டு நாட்களும் விரைந்தோட, சனிக்கிழமை மாலை.

"நாலு மணிக்கு முன்னாடி வீட்ல இருக்கணும். நான் வந்து பிக்கப் பண்ணிக்கவா? லேட்டா வந்தா அப்பாவுக்குப் பிடிக்காது. அதுவுமில்லாமல் முதல் முறை வீட்டுக்கு வர..." வெங்கட் பேசிக்கொண்டேப் போக, ஸ்வர்ணா இடைமறித்தாள்.

"நீ வர வேண்டாம். உன் வீட்டு அட்ரெஸ் இருக்கு. ஷார்ப்பா நாலு மணிக்கு வீட்ல இருப்பேன் போதுமா? "

"சரியா வந்திருவதானே?"

"அதெல்லாம் சரியா வந்திருவேன். தொலைஞ்சு போறதுக்கு நான் என்ன சின்னக் குழந்தையா?"

"ஹ்ம்ம் சரி சரி."

வழக்கமாய் விரைந்து முடியும் ஞாயிற்றுக் கிழமை அன்று ஏனோ மிக மெதுவாய் சென்றுக் கொண்டிருந்ததைப் போல் வெங்கட்டிற்கு எண்ணம். மாலை என்ன நடக்குமோ என்ற பயம் மனதை பிரட்ட, நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.


தொடர்ந்துப் படிக்க அதீதம்  




11 கருத்துகள்

ஸ்ரீராம். சொன்னது…

இயல்பான நடையில் பண்பட்ட எழுத்துகளில் அழகான கதை.

சுசி சொன்னது…

நல்ல கதை. வாழ்த்துகள் கார்த்திக்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

தலைப்பும் அதற்கான கதையும்
சொல்லிச் செல்லும் விதமும்
மிக மிக அருமை
நல்ல கதையைப் படித்த நிறைவு
தொடர வாழ்த்துக்கள்

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//நம்பிக்கைதான் வாழ்க்கை. அவங்கச் சம்மதம் இல்லாமல் நம்ம கல்யாணம் இல்லை."//
ஆம் நம்பிக்கைதான் வாழ்க்கை.

அருமையான கதை.

middleclassmadhavi சொன்னது…

இளைய தலைமுறையின் உறுதிக்கு வாழ்த்துக்கள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Nice one Karthi

raji சொன்னது…

உறுதியான கருவுடன் கூடிய கதை

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல கதையைப் படித்த நிறைவு.

அப்பாதுரை சொன்னது…

கொக்கி போட்டு நிறுத்திட்டீங்களே நைனா? அதீதம் லேசுல நினைவேற மாட்டேங்குதே.

மோகன்ஜி சொன்னது…

அழகாய்ச் சொல்லிவருகிறீர்கள். கதைக்கு பொருத்தமாய் தலைப்புகளை எங்கு பிடிக்கிறீர்கள் கார்த்திக்? அருமை!

Jaleela Kamal சொன்னது…

மிக அருமையான சிறுகதை.
தலைப்பும் சூப்பர்