ஆகஸ்ட் 20, 2011

விடைத் தெரியாக் கேள்விகள்

சென்ற ஆட்சியில் தலைமை செயலகத்துக்காகக் கட்டப்பட்ட கட்டிடத்தை பல் துறை உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்போவதாக நேற்று சட்டசபையில் முதல்வர் அறிவித்துள்ளார். நல்ல விஷயம்தான் . பல கோடி மக்கள் வரிப்பணம் கொண்டு கட்டப்பட்ட கட்டிடத்தை வீணடிக்காமல் எதாவது ஒரு வகையில் பயன்படுத்தப்போகின்றார்கள் . மக்களுக்கு உபயோகம் ஆகும் வகையில் அந்தக் கட்டிடம் இருக்கும் என்ற வகையில் மகிழ்ச்சியே. மேலும் அங்கு தலைமை செயலகம் வந்தபொழுது, அருகில் இருக்கும் ரிச்சி ஸ்ட்ரீட் கடைக்காரர்கள் பாதுகாப்புக் காரணங்களால் தங்களை அங்கிருந்து அகற்றிவிடுவார்களோ என்று அஞ்சினர். இப்பொழுது அது நடக்காது. அந்த வகையிலும் மகிழ்ச்சியே.

ஆனால் , சிலக் கேள்விகள் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை .

அந்தக் கட்டிடம் கட்டியதில் ஊழல் என்று சொன்னார்கள். அது சம்பந்தமான விசாரணை நிலுவையில் இருக்கும் பொழுது எதற்கு இந்த முடிவு ?

மருத்துவமனையாக மாற்றவேண்டும் என்றால் அதற்கு இன்னும் பல மாற்றங்களை செய்யவேண்டி இருக்கும். ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையில் இருக்கும் அரசு இதற்கு நிதிக்கு எங்கே செல்லப்போகிறது ?

ஏற்கனவே கட்டப்பட்டக் கட்டிடத்தை மாற்றியமைத்தல் மிகக் கடினம். புதியக் கட்டிடத்தை கட்டுவதை விட இருக்கும் கட்டிடத்தை மாற்றியமைத்தல் சிரமங்கள் அதிகம். அதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் ?

இப்படி பலக் கேள்விகள் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளன. இதற்கு முதல்வர் விடை சொல்வாரா ?

அன்னா ஹசாரே

ஏற்கனவே அன்னா ஹசாரே முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார் என்று சொல்லியிருந்தேன். நேற்று மீண்டும் அதை நிரூபித்துள்ளார். பதினைந்து நாட்கள் உண்ணாவிரதம் இருப்போம் என்று ஒத்துக்கொண்டு சிறையில் இருந்து வெளியே வந்த அன்னா ஹசாரே இப்பொழுது லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதம் என்று சொல்லியுள்ளார். இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசுபவரை நம்பி பலர் அவர் பின் செல்கின்றனர். அவர்கள் நிலைமை ???

தனிமனிதராகப் பார்த்தால் அன்னா ஹசாரே மிக நல்லமனிதர்தான். ஆனால் அவரைச் சுற்றி இருக்கும் கோமான்கள் அவரை குழப்பித் தவறானாப் பாதையில் அழைத்து செல்கின்றனரோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

அதீதத்தில் படிக்க http://tinyurl.com/3tybeob
 

11 கருத்துகள்:

கவிதை காதலன் சொன்னது…

எத்தனையோ கோடிகள் செலவழித்து கட்டப்பட்ட கட்டிடத்தை அருங்காட்சியாக மாற்றிவிடாமல் ஏதோ ஒரு நல்லகாரியத்துக்காக மாற்றினால் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது..

RAMVI சொன்னது…

பல கோடி ரூபாய் செலவழித்து கட்டிய கட்டிடத்தை வீணாக்காமல் ஏதாவது செய்தால் பரவாயில்லை.

//தனிமனிதராகப் பார்த்தால் அன்னா ஹசாரே மிக நல்லமனிதர்தான். ஆனால் அவரைச் சுற்றி இருக்கும் கோமான்கள் அவரை குழப்பித் தவறானாப் பாதையில் அழைத்து செல்கின்றனரோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.//

எனக்கும் நீங்க சொல்லுவது சரியென தோன்றுகிறது.

ஆமினா சொன்னது…

//எத்தனையோ கோடிகள் செலவழித்து கட்டப்பட்ட கட்டிடத்தை அருங்காட்சியாக மாற்றிவிடாமல் ஏதோ ஒரு நல்லகாரியத்துக்காக மாற்றினால் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது..//

Lakshmi சொன்னது…

எத்தனையோ கோடிகள் செலவு பண்ணி
கட்டிய கட்டிடத்தை நல்ல காரியத்துக்
காக மாற்றினால் நல்லதுதான்.

kggouthaman சொன்னது…

அன்னா ஹசாரே என்பவர் - ஊழலை எதிர்ப்பவர்களுக்கு ஒரு பொதுவான ஐகான். மற்றபடி - அவர் பேசுவது, பதில் அளிப்பது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். உண்ணா விரதத்திற்கு முதல் தகவல் படி - மூன்று நாட்களே போலீஸ் அனுமதி என்று செய்தி வந்தது. பிறகு அது, பதினைந்து நாட்கள் என்று யாராலோ மாற்றிக் கூறப்பட்டது. இப்போ மசோதா நிறைவேறும் வரை என்று கூறப படுகின்றது. மத்திய அரசு இந்தக் கோரிக்கை உண்ணாவிரதத்தை நமுத்துப் போகவைக்க சில முயற்சிகள் மேற்கொள்கின்றனரோ என்னும் சந்தேகமும் வராமல் இல்லை.

சேட்டைக்காரன் சொன்னது…

//அந்தக் கட்டிடம் கட்டியதில் ஊழல் என்று சொன்னார்கள். அது சம்பந்தமான விசாரணை நிலுவையில் இருக்கும் பொழுது எதற்கு இந்த முடிவு ?//

ஊழல் குறித்து இன்னும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அப்படியே பதிவு செய்தாலும், அதற்காக கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் சொல்ல எவ்விதமான காரணமும் இல்லை.

சேட்டைக்காரன் சொன்னது…

//மருத்துவமனையாக மாற்றவேண்டும் என்றால் அதற்கு இன்னும் பல மாற்றங்களை செய்யவேண்டி இருக்கும். ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையில் இருக்கும் அரசு இதற்கு நிதிக்கு எங்கே செல்லப்போகிறது ?//

இன்றைய இந்து பத்திரிகையில் இதுகுறித்து விபரமாக எழுதியிருக்கிறார்கள் கார்த்தி! நடைமுறையில் சாத்தியம் தான்!

ஏற்கனவே செலவழித்த பணம் வீணாகாமல் இருக்க, மேலும் கொஞ்சம் செலவழித்து அதை மக்களுக்குப் பயன்படும் விதமாக மாற்றியமைப்பது எவ்வளவோ நல்லது தானே?

சேட்டைக்காரன் சொன்னது…

அண்ணா ஹஜாரேயைப் பற்றி எழுதுற அளவுக்குக் கார்த்திக்கு துணிச்சல் வந்திருச்சா? சொல்லுங்க, காங்கிரஸ் எம்புட்டுக் கொடுத்தாங்க? :-))))

//இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசுபவரை நம்பி பலர் அவர் பின் செல்கின்றனர். அவர்கள் நிலைமை ???//

அதைப் பற்றி அண்ணாவோ, அவர்களேயோ கூடக் கவலைப்படவில்லை. :-)

அண்ணா ஹஜாரே நடத்திக்கொண்டிருப்பது ஒரு கேலிக்கூத்து! அதில் கோமாளிகளுக்குப் பஞ்சமில்லை! பார்த்துச் சிரிச்சிட்டு ஜாலியாப் போவோம் கார்த்தி! :-)))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மாற்றி மாற்றி அடித்துக் கொள்ளவே இவர்களுக்கு நேரமில்லை. பல கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடம் நல்ல வகையில் உபயோகப்பட்டால் மகிழ்ச்சி தான்...

அன்னா ஹசாரே.... அவரும் ஒரு சிறந்த அரசியல்வாதி ஆகிக்கொண்டு வருகிறார். அரசியல்வாதியை நம்பக்கூடாது என்பது தெரிந்த விஷயம் தானே கார்த்தி.

பத்மநாபன் சொன்னது…

இரண்டு பிடிவாதங்கள்……
ஒன்று… கட்டிய காரணத்துக்கு பயன்படுத்தக்கூடாது எனும் கொள்கை தான் முன்னிலை
அடுத்து மத்திய அரசின் பிடிவாதம்…. நாட்டு நலனை முன்னிட்டு அந்த மசோதா கொண்டு வருவதற்க்கு ஏன் வறட்டிழுப்பு ….

ஸ்ரீராம். சொன்னது…

கட்டிடம் சும்மா கிடககாமல் ஏதோ பயன் படுத்துவது நல்லதுக்குதான். (இதுவும் என் ஐடியா தான் என்கிறார் கலைஞர்!) அன்னா மக்கள் மனதில் ஊழலைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருப்பது மட்டுமே பார்க்கக் கூடியதாக இருக்கிறது.