ஆகஸ்ட் 07, 2011

கிரிக்கெட் ரவுண்ட் அப்


இங்கிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்றுத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ராகுல் திராவிட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். எதற்காக அவரை இப்பொழுது அணியினால் சேர்த்துள்ளனர் என்றுப் புரியவில்லை. ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே ஏற்றவாறு இருந்த திராவிட் ஒருதினப் போட்டிகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டாலும், இப்பொழுது இருக்கும் பவர் ப்ளே நேரங்களுக்கு ஏற்றவாறு ஆட இயலுமா அவரால் என்றுத் தெரியவில்லை. அதேப்போல் பீல்டிங் அவரால் ரைனா கோஹ்லி போன்றோருக்கு ஈடு கொடுக்க இயலாது. மைதானத்தில் சுறுசுறுப்பாக பந்தைத் தடுப்பாரா என்றும் தெரியவில்லை. அடுத்த உலகக் கோப்பைக்கு அணியை தயார் செய்யாமல் இந்தத் தொடரை மட்டுமே மனதில் வைத்து தொலைநோக்குப் பார்வை இல்லாத அணித் தேர்வு. 


தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/௩ஒக்க௨௫ந்
அன்புடன் எல்கே

7 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

முதல் ரசிகன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

திராவிட் நல்ல வீரர்... மனசளவிலும் நல்லவரே...
அதனால்தான் தான் திரும்ப ஒருதின போட்டியில் சேர்க்கப்பட்டது குறித்து சந்தோஷப்படாமல் இனி என்னை ஒருதின போட்டியில் சேர்க்காதீர்கள்... நான் டெஸ்ட் போட்டிகளுக்காக மட்டுமே பயிற்சி எடுக்க நினைக்கிறேன் என்று பெருந்தன்மையாக சொல்லியுள்ளார்....
நான் நேசிக்கும் வீரர்களில் ஒருவர் திராவிட்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எல்லா விதத்திலும் சரியில்லாத ஒரு தேர்வு. பார்க்கலாம் என்ன நடக்கிறது என....

ஸ்ரீராம். சொன்னது…

டிராவிட்டுக்கே அது ஆச்சர்யமளித்ததாக சொல்லியுள்ளார். ஓய்வும் அறிவித்து விட்டார். ஜாகீர் இந்த டெஸ்ட்டிலும் விளையாடப் போவதில்லை என்றும் முடிவாகி விட்டது. வீரு உண்டு.... வீறு கொண்டு எழ முடியுமா, முயற்சியாவது செய்வார்களா....பார்ப்போம்!

GEETHA ACHAL சொன்னது…

என்ன ஆச்சு...ஒரே கிரிக்கெட் பதிவாக எழுதி கொண்டு இருக்கின்றிங்க..

வீட்டில் அனைவரும் நலமா..

பாலா சொன்னது…

கிரிக்கெட் பற்றிய நல்ல ரவுண்டப். டிராவிட் கடைசியாக விளையாடவேண்டும் என்பதால் அணியில் சேர்த்திருக்கலாம்.

vanathy சொன்னது…

இப்பெல்லாம் கிரிக்கெட் டச் விட்டுப் போச்சு. இந்தியாவில் பார்த்ததோடு சரி. உங்க பதிவை வாசிச்சு கொஞ்சம் தெரிச்சுக்கிறேன்.